http://i68.tinypic.com/w70vg5.jpg
Printable View
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் , திண்டுக்கல் திரை அரங்கு உரிமையாளருமான திரு நாகராஜன் அவர்களின் சீரிய முயற்சியால் இந்திய திரைஉலகின் பொற்கால காவியங்களான நாடோடி மன்னன் , அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் மூன்று படங்களும் சினிமாஸ் கோப் மற்றும் 2k -டிஜிடல் வடிவில் நம் கண்களுக்கு விருந்தாக வர உள்ளது . இந்த அரிய முயற்சியில் ஈடு பட்டுள்ள திரு நாகராஜனுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக வாழ்த்துக்களையும் , நன்றியினையும் தெரிவித்து கொள்கிறோம் .
முதல் முயற்சியாக ''உலகம் சுற்றும் வாலிபன் '' 2016ல் வர உள்ளது .விரைவில் பல நல்ல செய்திகள் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் .
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்
காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்
மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !
மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்
பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்
தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்
courtesy
சக்தி சக்திதாசன்
மக்கள் திலகத்தின் நினைவு நாளை தமிழகம் மற்றும் உலகமெங்கும் வாழும் ரசிகர்கள் மிகவும் பேரன்புடன் அனுசரித்தார்கள் .
தனியார் ஊடகங்களில் மக்கள் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு பல நிகழ்சிகளை தொடர்ந்து ஒளி பரப்பினார்கள் .
பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல்களை தொடர்ந்து ஒளி பரப்பினார்கள் .
மக்கள் திலகத்தின் முக்கனியான நாடோடி மன்னன் - அடிமைப்பெண் - உலகம் சுற்றும் வாலிபன் விளம்பரம் இன்று விளம்பரங்கள் வந்தது மிகப்பெரிய சாதனையான செய்தி . ஒரே நேரத்தில் மூன்று பழைய படங்களின் மறுவெளியீடு விளம்பரம் வந்தது இதுவே முதல் முறை .
http://i67.tinypic.com/2u5b95l.jpg
இந்த வாரம் கோவை , திருச்சி நகரங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் திரை அரங்குகளில் நடை பெறுவது மிக்க மகிழ்ச்சி .
எங்கள் குடும்பத்தின் சார்பாக நமது தங்க தலைவனின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி
http://i64.tinypic.com/9s5kyr.jpg
எங்கள் குலதெய்வத்திற்கு எங்கள் குழந்தைகளின் அஞ்சலி
http://i65.tinypic.com/2drdh87.jpg