-
புரட்சி தலைவருக்கு புகழ் மாலை
96 வது பிறந்த நாள் -17-1-2013.கதம்ப மாலை
115 படங்களில் -ஒரே மொழியில் - நிரந்தர கதாநாயகனாக
30 ஆண்டுகள் [1947-1977] இந்திய திரைப்பட வரலாற்றில்
ஆட்சி புரிந்தீர்கள் .
அமெரிக்காவில் வெளியான உலக சினிமா வரலாற்று புத்தகத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே இந்திய நடிகர்களில் தேர்வு செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளீர்கள் .
நீங்கள் நடித்து 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் உங்கள் படங்கள் மட்டும் தொடர்ந்து திரை அரங்கில் பவனி வருகிறது .
எல்லா தலைமுறை ரசிகர்களையும் உங்கள் பக்கம் வர செய்த உங்களின்
திரைப்படங்கள்
திரைப்பட பாடல்கள்
இயற்கையான நடிப்பு
பொழுது போக்கு அம்சங்கள்
சமுதாய சீர் திருத்த கருத்துக்கள்
கொள்கை -அன்பு - பரிவு -நேயம் -கெட்டவர்களுக்கும் நன்மை - போன்ற பட காட்சிகள்
உலகில் எந்த ஒரு நடிகரும் செய்திராத புரட்சியாகும் .
1947 முதல் 2013 -இன்று வரை 66 ஆண்டுகளாக உனது பெயரை உச்சரிக்காத நாளே இல்லை .
உனது முகமும் - பெயரும் - படங்களும் -புகழும்
உலகில் உள்ள கடைசி ஏழை உள்ளவரை
சூரியன் - சந்திரன் - mgr
மூன்றும் அழிவில்லை .
-
-
கோவை ராயல் திரை அரங்கில் விவசாயி திரைக்காவியம் திரையில் மலர்ந்த போது எடுத்த படம்.
http://i45.tinypic.com/2usetrl.jpg
-
-
-
-
-
-
-
எம்.ஜி.ஆர் வேடத்தில் ஸ்ரீகாந்த்!
பாகன் படத்திற்கு வரவேற்பு கிடைத்ததில் உற்சாகமாக இருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் நடித்த எதிரி எண் 3 விரையில் திரைக்கு வர உள்ளது. அதற்கு பிறகு ஸ்ரீகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் நம்பியார். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞன் ராமச்சந்திரன். அவர் செய்யும் நல்லதையெல்லாம் கெடுப்பவர் நம்பியார். இதில் ராமச்சந்திரனாக நடிப்பவர் ஸ்ரீகாந்த், எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடிக்காவிட்டாலும் அவரது குணங்களை எதிரொலிக்கும் கேரக்டரில் நடிக்கிறார். நம்பியாராக நடிப்பவர் சந்தானம். நம்பியார் மேனரிசங்களோடு நடிக்கிறார். வித்தியாசமான இந்த கதைக்கு எம்.ஜி.ஆர் அல்லது நம்பியார் என்ற பெயர் வைக்க முடிவு செய்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தலைப்பை சுந்தர்.சி வைத்து விட்டதால் நம்பியார் என்று பெயர் வைத்து விட்டார்கள். இதற்காக ஸ்ரீகாந்த் நம்பியார் குடும்பத்தினரை சந்தித்து தலைப்புக்கான அனுமதியை வாங்கி விட்டனர்.