-
ஒரே ராகத்தில் உருவானதாக சொல்ல பட்டாலும்,இவ்வளவு வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன?
இங்குதான் இசையமைப்பாளர்களின் மேதமை நிற்கிறது.(கீழ்கண்டவற்றை இசையின் தன்மை கெடாமல் மக்களின் ரசனையை அடிநாதமாய் பிடித்து அவர்களை கேட்ட உடனே அல்லது கேட்க கேட்க (acquired )அடிமை கொள்ள வேண்டும்)
1)ராகத்தின் tempo எனப்படும் metre மாற்றுவது.
2)சுருதி (Tonic )மாற்றி பாடலின் tone மாற்றுவது.
3)ஸ்வரங்களின் அணிவகுப்பில் விளையாடி,கமகம் (ornamentation ),கற்பனை (kalpana ) என்று ஒரு பிடி பிடிப்பது.
4)பல கலப்பு ராகங்கள் உருவாக்கி விளையாடுவது.
5)Musical arrangements மற்றும் interludes விளையாட்டுக்கள்.
6)தாளங்களில் மாற்றங்கள் மற்றும் புத்திசாலி கலப்படங்கள்.(rhythm Arrangement )
தாளங்களை(Clap ) பற்றி சுளுவாக சொல்லலாம்.
1)ஒரு தட்டு தொடையில் தட்டினால் அனுத்ருதம்(U ) ஒரு அக்ஷரம்..
2)ஒரு தட்டு தொடையில் தட்டி ,ஒரு வீச்சு காற்றில் வீசினால் த்ருதம் .(0) 2 அக்ஷரங்கள்.
3)ஒரு தட்டு தொடையில் தட்டி சுண்டு விரல்,மோதிர விரல்,நடு விரல் என்று கணக்காக்கி விளையாடுவது லகு(1) .(ஒரு தட்டு இரு விரல் என்றால் 3 அக்ஷர திச்ர ஜதி.ஒரு தட்டு மூன்று விரல் என்றால் சதுச்ர ஜதி 4 அக்ஷரம்.ஒரு தட்டு நான்கு விரல்கள் என்றால் கண்ட ஜதி 5 அக்ஷரங்கள்.ஒரு தட்டு 6 விரல்கள் என்றால் மிஸ்ர ஜதி 7 அக்ஷரங்கள். ஒரு தட்டு 8 விரல்கள் என்றால் சங்கீர்ண ஜதி 9 அக்ஷரங்கள் )
4)சதுஸ்ர ஜதி அடிப்படையில் 4 அக்ஷரங்கள் கொண்ட லகு என்று எடுத்து தாளங்களை அலசினால் சுலபம்..
ஆதி தாளம் என்பது 100(ஒரு தட்டு மூணு விரல் எண்ணி ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு ஒரு வீச்சு)- 8 அக்ஷரங்கள்.
ரூபக தாளம் என்பது U 0 (ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு)-3 அக்ஷரங்கள்.
மிஸ்ர சாப்பு என்பது ஒரு தட்டு இரண்டு விரல் ,ஒரு தட்டு ஒரு வீச்சு,ஒரு தட்டு ஒரு வீச்சு .7 அக்ஷரங்கள்.
இது மாதிரி நிறைய.
தாளத்தில் விளையாடி ஒவ்வொரு பாட்டுக்கும் புது மெருகு கொடுக்கலாம்.
இசை மிக சுலபம். கற்பனை வார்த்தைகளாக திரிந்து கெட்டு போகாமல் சுருதி சுரமாகவே பிறவியில் அமையுமென்றால்.
-
காப்பி ராகம் /பிலு ராகம்.
மேற்குறிப்பிட்ட இரண்டு ராகங்களுமே அண்ணன் தம்பி போன்றவை
காப்பி ராகத்தை பொறுத்த வரை light classical என்ற வகைக்கே ஏற்படுத்த பட்ட ராகம். அமைப்பிலேயே பலவித கற்பனைகளுக்கு இடமளித்து ,இசையமைப்பாளர்களை மகிழ்விக்கும் மாலை தென்றல்.
மாலையில் காப்பி குடித்து கொண்டே கேட்டு மகிழலாம்.பக்தி,நெகிழ்ச்சி,காதல்,உருக்கம்,உல்ல ாசம் எல்லாமே இந்த ராகம் தன் note களில் உள்ளடக்கியது.நிறைய இசையமைப்பாளர்களின் ,நிறைய தமிழ் பாடல்களில் புகுந்து புறப்பட்ட ராகம்.
எனக்கு சிறு வயதில் டி.எம்.எஸ் ரசிகனாக இருந்ததனால்தானோ என்னவோ உரத்த ஓங்கார இசை பிடித்தே இருந்தது.அப்போது இலக்கிய மொழி ஈடுபாட்டினால் பாடல்களில் சங்கம் தேடும் இயல்பினால் ஒரு பாடல் என்னை ஸ்தம்பிக்க வைத்தது."சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே". கண்ணதாசன் முதல் முதலில் தான் வசனகர்த்தா அல்ல கவிஞனே என்று ஸ்தாபிக்க தன் நண்பர்களை துணை கொண்டு (விஸ்வநாதன்-ராமமூர்த்தி)மாலையிட்ட மங்கை எடுத்தார்.(நன்றி சிவகங்கை சீமை,முழு கவிஞன் நமக்கு கிடைத்தான்).ஒரு ஆணின் சிருங்காரமும் ஒரு பெண்ணின் உரத்த குரலும் இணைந்த வினோத குரலான் டி.ஆர்.மகாலிங்கத்தின் "செந்தமிழ் தென் மொழியாள் ".
அந்த காதல் செவிலி மங்கையோ ,ஒரு மருத்துவனை மணந்து இனிய இல்வாழ்க்கை கண்டு மகிழுங்கால் ,அய்யகோ க்ஷயம் வந்து நொந்து கணவன் கடமை துறந்து அவளே கதியென கிடக்க (உயிர் போச்சா இருக்கா,ஐ அம கமிங் ,ஐயம் கமிங்),கணவனை கடமைக்கு இழுக்க தன்னை துறந்து சென்று வெளிநாட்டில் நோய் குணம் கண்டு கணவனை எண்ணி பாடும் தெய்வ திருப்பாடகி அம்மா சுசிலாவின் "காதல் சிறகை காற்றினில் விரித்து".
கல்லூரி மூன்றாம் வருட படிப்பின் போது ,ஒரு தீபாவளியை முன்னிட்டு ஹாஸ்டல் சிறைவாசம் துறந்து ,நெய்வேலி ஊர் சென்றேன். வழக்கம் போல நண்பர்களுடன் மெயின் பஜார் என்று சொல்ல படும் ஊரின் ஒரே ஷாப்பிங் மால் அருகேயான ஒரு டீக்கடையில் (பட்டாசுடன்)ஒரு பாடல்.(அப்போது ரிலீஸ் ஆகாத)அப்படியே உலுக்கி போட்டது அந்த தாள கட்டும் பாடலின் அமைப்பும் கருவிகளின் துல்லியமும். உடனே அந்த இசை தட்டில் பட பெயர் பார்த்தேன் .பிரியா-ஸ்டீரியோ போனிக் என போட பட்டிருந்தது. இன்று வரை என்னை அடிமை கொண்ட அந்த பாடல் "ஏ பாடல் ஒன்று ராகம் ஒன்று ".
காப்பியில் என்னை கவர்ந்த மற்ற காப்பி கானங்கள்.
அன்னையும் தந்தையும் தானே- ஹரிதாஸ்.
மதுரா நகரில் தமிழ் சங்கம்- பார் மகளே பார்.
அந்த சிவகாமி மகனிடம்-பட்டணத்தில் பூதம்.
கண்ணே கலை மானே- மூன்றாம் பிறை.
காதல் ரோஜாவே- ரோஜா .
என் மேல் விழுந்த மழைத்துளியே-மே மாதம்.
அன்ப அன்பே கொல்லாதே-ஜீன்ஸ்.
உருகுதே உருகுதே ஒரே பார்வையாலே-வெய்யில்.
பிலு ராக அதிசயங்கள்-
உனது மலர் கொடியிலே -பாத காணிக்கை.
மலர்களிலே பல நிறம் -திருமால் பெருமை.
கேட்டதும் கொடுப்பவனே- தெய்வ மகன்.
அண்ணன் ஒரு கோவில் என்றால்-அண்ணன் ஒரு கோவில்.
-
காபி ராகத்தில்
சமையல்காரன் திரைப்படத்தில் நான் பாடிடும் கவிதையின் சந்தம்
http://youtu.be/mUXxMUwtR2Y
-
ஒரு வித்தியாசமான முதலிரவு பாடல். இந்த திரி அதிகம் அறியாத,அறிய படாத வித்தியாச பாடல்களை அலச நான் ஆசை படுகிறேன்.அந்த வகையில் மெல்லிசை மன்னரின் அற்புத composition .இந்த வெற்றி படத்தின் வெற்றி பாடல்களின் நடுவே கவனிக்க படாமல் போயிற்று.
இந்த பாட்டு அளவிற்கு அழகழகான துணை நடிகைகளை (நல்ல உடை)எந்த பாட்டிலும் பார்த்ததில்லை. கதாநாயகி (வேண்டாம். எல்லோரையும் மூட் அவுட் பண்ண விரும்பவில்லை.)பேசாமல் விட்டு விடுகிறேன்.
அந்த பாடல் அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம்.
படத்தின் பெயர் பாட்டிலேயே.
-
https://www.youtube.com/watch?v=1u9C_ZLG5AU
Song has been loaded.Suddenly it is not appearing. cant make out.Sorry.
-
இன்றைய ஸ்பெஷல் (15)
http://www.thehindu.com/multimedia/d...jp_621228g.jpg
இன்றைய ஸ்பெஷலில் நாம் பார்க்கப் போகும் பாடல் எல்லோருக்கும் மிகவும் தெரிந்த பாடல்தான். அபூர்வம் இல்லை. இப்பாடலைத் தெரியாவிடில்தான் அது அபூர்வமான விஷயம்.
'பின் தெரிந்த பாடலை ஏன் எடுத்தாய்?' என்கிறீர்களா... சொல்கிறேன். எல்லோருக்கும் இப்பாடலின் அர்த்தம் புரியும்தான். இருந்தாலும் ஒரு பாடலிலேயே படத்தின் முழுக் கதையையும் நமக்கு உணர்த்திவிடும் கவிஞரின் வரிகள், இயக்குனர் சிகரத்தின் இயக்கம், வி.குமார் அவர்களின் பிரத்தியோக தனி ஸ்டைல், சௌகார், ஜெயந்தியின் உள்வாங்கல், என்று இப்பாடல் என்னையறியாமல் என்னை எழுதத் தூண்டிற்று.
பொதுவாகவே பாலச்சந்தர் படங்களில் இரு பாடகிகள் பாடுவதாக (அதில் சாமர்த்தியம் பாருங்கள்... இருவருமே கதையின் நாயகிகளாகவே இருப்பார்கள், படம் பார்ப்பவர்களுக்கு இரு பெண்மணிகள் மீதும் பச்சாதாபமும், பரிவும் ஏற்படும். 'இவள் சொல்வது சரிதானே....இல்லை இல்லை.... அவள் செய்வதும் சரிதானே'! என்று நம் மனம் யார் பக்கம் சாய்வது என்று திண்டாடும். அதுதான்பா பாலச்சந்தர்) வரும் பாடல்கள் அருமையோ அருமை. பாடலின் வரிகளும், பாடலின் படமாக்கலும் அந்தப் படத்தின் கதையையே நமக்கு வெகு இலகுவாக உணர்த்தி விடும்.
உதாரணத்திற்கு
'வெள்ளிவிழா'வில் 'கை நிறைய சோழி... கொண்டு வந்தேன் மாமி... காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி' பாடல்.
ஜெயந்தி vs வாணிஸ்ரீ
'அடிப் போடி பைத்தியக்காரி' அன்புச்சண்டை நடப்பது 'தாமரை நெஞ்ச'த்தில்.
வாணிஸ்ரீ vs சரோஜாதேவி
இப்போது நாம் பார்க்கப் போவது
இதுவும் பரிதாபமான சக்களத்தி சண்டைதான்.
'புன்னகை மன்னன்... பூவிழிக் கண்ணன்... பாடல் 'இரு கோடுகளி'ல்
இரட்டை நாயகிகள் (ஜெயந்தி, சௌகார்)
கலெக்டரான சௌகார் ஜானகி தன்னிடம் பணிபுரியும் ஜெமினி கணேசன் வீட்டின் கொலு விழாவிற்கு செல்லுகிறார். (கதை வேண்டாம். அனைவரும் அறிந்ததே!)
நவராத்திரியில் கொலுமண்டபத்தில் நாயகன் ஜெமினியின் இரு நாயகிகள்.
முதல் மனைவி சௌகார்
http://i1098.photobucket.com/albums/...odugal0006.jpg
இரண்டாவது மனைவி ஜெயந்தி.
http://i1098.photobucket.com/albums/...odugal0001.jpg
இருவருமே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் புரிந்தவர்கள் அடுத்தவர்களுக்கு அதிகம் தெரியாத வகையில்.
கொலுப் பண்டிகையில் இரண்டாவது மனைவி பாட ஆரம்பிக்கிறாள் இல்லை இல்லை கேள்விக்கணைகள் தொடுக்க ஆரம்பிக்கிறாள் தன் கணவனைப் பங்கு கேட்க வந்திருக்கும் முதலாமவளைப் பார்த்து.
indirect ஆக.
நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும்
என்று அவள் (ஜெயந்தி) நைஸாக ஆரம்பிக்கிறாள்.
அதற்கு முதலாமவள் (சௌகார்)
நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே ஒரு பதில் மறைந்திருக்கும்.
(நீ கேட்க வேண்டியதைக் கேள்...என்ன கேட்கப் போகிறாய் என்றும் எனக்குத் தெரியும். நான் அதற்கு நியாயமான பதிலைத் தருகிறேன். ஆனால் அந்த பதிலை ஏற்றுக் கொள்வாயா)
இனி நடிகைகளின் பெயரிலேயே வாக்குவாதங்கள் தொடரும்
'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும்
கண்மணிக்காக'
என்று கணவன் ஜெமினி 'இந்த ஜெயந்தி ருக்மணிக்கே' என்று எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு (சூடு) போடுகிறார்.
சௌகார் என்ன சளைத்தவரா?!
'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக
இந்த பாமாருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக'
என்று பதில் சூடு போடுகிறார். ஆனால் முதலாமவளைப் போல அல்ல. விட்டுக் கொடுத்து. 'நாம் இருவருமே அவர் ஒருவருக்குத் தானே!' 'என்னையும் சேர்த்துக்கோயேன்' பரிதாபக் கெஞ்சல்.
ஜெயந்தி
தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
சௌகார்
அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே!
கதைக்கும், இப்பாடல் வரிக்கும் அப்படி ஒரு சம்பந்தம். (வட இந்தியா சென்றிருக்கையில் சௌகாரை காதல் மன்னன் சொக்க வைத்து திருமணம் செய்து கொண்டதை முருகன் குன்றத்திலே தேவானையை மணந்ததற்கு சமாக ஒப்பிட்ட இந்தக் கவிஞனின் திறமை!)
ஜெயந்தியின் ஆதங்கம்
மாலையிட்டால் அது ஓர் முறைதான் என நினைப்பது பெண்மையன்றோ!
சௌகாரின் சூசகம்
ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ!
ஜெயந்தி பஞ்ச்
'அது ஏட்டில் உள்ள கதை'
(புராண இதிகாச கதைகள் பொய்க் கதைகள் தானே! அந்தக் கதையெல்லாம் இங்கு விடாதே அம்மாயி)
இதற்கு சௌகாரின் பரிதாப பதில்
'இது இன்றும் தொடரும் கதை'.
(ஏன் நீயும், நானும் இப்போது இல்லையா? இதெல்லாம் கதையா?)
ஜெயந்தி
'அது பொம்மைக் கல்யாணம்'
(சாமியாவது மண்ணாவது..... ச்சும்மா கதை விட்ருக்காங்க... பொம்மை விளையாட்டுதானே! விளையாட்டோடு மறந்துடணும்...)
(கணவனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற உறுதியில் ஒரு கணம் சாமி கல்யாணத்தைக் கூட பொம்மைக் கல்யாணம்தானே என்று அலட்சியப் படுத்தும் (பக்தியாய் இருந்தாலும் கூட) அற்புதமான சராசரி மனைவியின் மனோபாவம் இரண்டாமவளுக்கு)
சௌகார்
'இது உண்மைக் கல்யாணம்'
(பாவி! உனக்கு முன்னாலேயே உன் புருஷன் எனக்குப் புருஷனாயிட்டாருடி, புரிஞ்சுக்கோடி! படுத்தாதே! உண்மையிலேயே எங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி)
ஜெயந்தி
கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
சௌகார்
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமாவது இருவரின் நெஞ்சினிலே!
ஜெயந்தி
ஈருடல் என்றும் ஓருடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
சௌகார்
ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை வைத்த இயற்கையில் தவறுண்டோ
(ஒரு முகத்துக்கு இரண்டு கண்கள் இருக்கும் போது அந்த மனுஷனுக்கு நாம ரெண்டு பேருமே மனைவியாய் இருந்தா என்னம்மா! தப்பே இல்லைதானே!)
ஜெயந்தி
இந்தக் கேள்விக்கு பதிலேது?
(இப்படியே வளர்த்திகிட்டே போனா வேலைக்கு ஆகாது. இதுக்கு ஆண்டவன்தான் பதில் சொல்லணும்.)
சௌகார் (வெறுத்துப் போய்)
சிலர் வாழ்வுக்குப் பொருளேது?
(அர்த்தமில்லாமல் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?)
ஜெயந்தி (கோபமாகவே)
அது உறவின் மாறாட்டம்
(நீ cheat பண்ற! என் புருஷனைப் பறிச்சிகிட்டு என்னை நட்டாத்துல தவிக்க விடப் போறதுக்கு பிளான் பண்ற! உறவை மாத்தப் பாக்குறியே! இதெல்லாம் நல்லாவா இருக்கு!)
சௌகார்
இது உரிமைப் போராட்டம்.
(இல்லம்மா! நான் கேட்பது உரிமைதான். உன் கணவர் என் கணவர் இல்லையா? அதுவும் உனக்கு முன்னாலேயே! என் கணவர்ன்னு அவரை சொல்ற உரிமையையாவது எனக்குக் கொடு. போராடிகிட்டு இருக்கேன். இனி நீதான் முடிவு செய்யணும்)
ஒரு பாடலிலேயே எத்தனை வார்த்தை ஜாலங்கள்! உரிமையை விட்டுக் கொடுக்காத ஒரு பெண். உரிமைக்காக போராடும் ஒரு பெண். அவள் சூழ்நிலையை அவள் சொல்லிவிட்டாள். இவள் நிலைமையை இவள் சொல்லி விட்டாள்.
http://i1098.photobucket.com/albums/...odugal0005.jpg
(ஆனா எல்லாத்துக்கும் காரணம் அந்த காதல் மன்னன் தான். எங்க போனாலும் இந்த ஆளு சும்மா இருக்க மாட்டாரா? அங்க ஒன்ன பிக்-அப் பண்ணிக்கிட்டு அப்புறம் இங்க ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு தானும் அவதிப்பட்டு, அந்த இரண்டையும் அழவைத்து. இதே வேலையா இந்த ஜெமினிக்கு. 'பார்த்தால் பசிதீரும்'ல சாவித்திரியை காதலிச்சிட்டு சௌகாரை கல்யாணம் பண்ணிப்பார். வழக்கம் போல மூவரும் அவஸ்தைப் படுவார்கள். அதுல சௌகார் ரெண்டாந்தாரம்.)
நாம யார் பக்கம் பேசறது. சொல்லுங்கோ! தெரியாமத்தான் கேக்குறேன்.
இந்தக் கேள்விக்கு பதிலேது?
வள்ளியும், தேவானையும் மோதுவதைப் பாருங்க. (பாடியவர்களைப் பற்றி பேசுவது தேவையே இல்லாதது)
http://www.youtube.com/watch?feature...&v=hCR7rD4-K7c
-
Nil Gavani Kathali (1969) Movie Details
Nil Gavani Kathali
Name: Nil Gavani Kathali
Tamil Name: நில் கவனி காதலி
Director: C.V.Rajendran
Music Director: MS Viswanathan
Producer: Reenaa Films
Released year: 1969
Nil Gavani Kathali Film Songs
Song Name Duration Singers Lyricist
Jillendra Kaatru 04:21 P.Susheela , TM.Soundararajan Kannadasan
Engeyo Paarthamugam 02:56 LR.Eswari , PB.Srinivas Vaali
Kangalukkenna LR.Eswari Vaali
Nil Gavani Kathali a nice movie of my schooldays .Rajakutti naan yeppadi is another song from this movie.Can anybody uploadthat song? (I wish as per original plan C.V.R made this movie with Ravichandran. )
-
-
Well tuned and rendered by ilayaraja(different) in an unreleased film pudhiya swarangal??
https://www.youtube.com/watch?v=h352qL6CxFM
-
https://www.youtube.com/watch?v=FIyNMADSFxo
இந்த ராகத்தை பற்றி பின்னால் எழுத போகிறேன். ஆனால் இந்த ஆபோகியில் வந்த தமிழின் மிக சிறந்த composition marvel என்ற இந்த அதிசயத்தை பாருங்கள். டி.கே.ராமமூர்த்தி அவர்களை ஏன் தலையில் வைத்து கூத்தாடுகிறேன் என்பது விளங்கும்.எவ்வளவு படங்கள் இசையமைத்தோம் என்பதை விட,எப்படி என்பது முக்கியம். இதைத்தான் ஏ.எம்.ராஜா,டி.கே.ராம மூர்த்தி (தனியாக) செய்து காட்டி நெஞ்சில் நிலைத்தார்கள். 70 களில் சரக்கு தீர்ந்து போய் ,திறமைசாலிகளை தனியாக்கி, டா டா டா என்று கத்தி கொண்டிருந்த ஒரு ஆளை வைத்து, டப்பா தட்டி, எல்லாரையும் ஹிந்தி பக்கம் ஒருவர் விரட்டினார்.நிறைய எண்ணிக்கை பாடல்களும் ,ஓடிய ஆட்களும்!!! சிவந்த மண்ணுடன் சரக்கு காலி.அப்புறம் அங்கங்கே ஒரு முத்து. சுமதி என் சுந்தரி,அவளுக்கென்று ஓர் மனம்,அவன்தான் மனிதன்.அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை,நிழல் நிஜமாகிறது.