கோபால் ஜி, பாடகர்களின் முதல் பாடல் தொகுப்பு அருமை
சுஜாதா எனக்கு மிகவும் பிடித்த குரல் ..(இசையரசிக்கு அப்புறம்).. இன்னும் நிறைய பாடியிருக்க வேண்டியது ... என்ன செய்ய ....
Printable View
கோபால் ஜி, பாடகர்களின் முதல் பாடல் தொகுப்பு அருமை
சுஜாதா எனக்கு மிகவும் பிடித்த குரல் ..(இசையரசிக்கு அப்புறம்).. இன்னும் நிறைய பாடியிருக்க வேண்டியது ... என்ன செய்ய ....
ராஜேஷ்ஜி
வணக்கம். வணக்கம். நலமே! தாங்களும் நலம்தானே! நைட் ஷிப்ட் முடிந்து இப்போதுதான் வந்தேன். சில நாட்களாக மேச் ஆக முடியவில்லை. எங்கே...சூப்பரான இசையரசி பாடல் ஒன்றைத் தந்து கலக்குங்கள் பார்ப்போம். இன்று அதிலேயே பொழுதை ஓட்ட வேண்டும்ஜி.
தமிழில் வாணி ஜெயராம் பாடி வெளிவந்த முதல் படம் வீட்டுக்கு வந்த மருமகள். இதைப் பற்றி நம் திரியில் முன்னர் விவாதித்ததாக நினைவு.
அவரைத் தமிழில் அறிமுகப் படுத்தியதோடு மட்டுமின்றி அதிக அளவில் அவரைப் பாடவைத்த இசையமைப்பாளர்கள் என்ற பெருமையும் சங்கர் கணேஷுக்கு உண்டு.
ஓரிடம் ஓரிடம்... பாடகர் திலகம் டி.எம்.எஸ்.ஸுடன் வாணி ஜெயராம் பாடிய பாடல். தமிழ் சினிமாவில் அவருடைய முதல் பாடல்
http://www.inbaminge.com/t/v/Veettuk...a%20Marumagal/
பொங்கும் பூம்புனல்
கடந்ததை நினைத்து எந்த பயனில்லை.. என்றுமே நல்லதையே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. என்ற இந்த பாஸிடிவ் அப்ரோச்சுடன் இன்றைய தொடர் துவங்குகிறது. இசையரசியின் இனிமையான குரலில் மெல்லிசை மாமணி குமாரின் இசையில் கட்டிலா தொட்டிலா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைக் கேளுங்கள்..
நான் நல்லவர் இல்லறம் நலம் பெற வேண்டுகிறேன்.
http://www.inbaminge.com/t/k/Kattila%20Thottila/
பொங்கும் பூம்புனல்
ஒரு தமிழ்ப் பெண்ணின் அன்றாட வேண்டுதல் இறைவனிடம் இது தானே இருக்க முடியும்...
மல்லிகைப்பூ திரைப்படத்திலிருந்து இசையரசியின் குரலில் பக்திப் பரவசத்துடன்..
http://www.inbaminge.com/t/m/Malligai%20Poo/
ராஜேஷ் ஜி
'வாழ்ந்து காட்டுகிறேன்' படத்திலிருந்து ஒரு பாடல்.
முத்துராமனும், சுஜாதாவும் பங்கு பெரும் பாடல். பாலாவும், இசையரசியும் அமைதியாகப் பாடியிருப்பார்கள்.
கொட்டிக் கிடந்தது கனியிரண்டு
எட்டிப் பறித்தது கையிரண்டு
கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு
தட்டிப் பறிப்பதில் சுகமும் உண்டு
இசையரசியின் பகுதி
'இலைகள் உண்டு
மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு'
அருமை ஜி.
சுஜாதா சிம்பிள் அழகு. முத்து வழக்கம் போல.
அழகான வரிகள். நல்ல மெலடி.
http://www.youtube.com/watch?feature...&v=U4pi3JomENs
பொங்கும் பூம்புனல்
மணிப்பயல் திரைப்படத்தில் எஸ்.ஜானகியின் குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல்..
நான் ஆடினால் ஒரு வகை போதையில் பல வகை மனிதரும் கூடவே ஆடுவார்..
http://www.inbaminge.com/t/m/Manipayal/
வாசு சார்
சூப்பர்... தொடக்கமே.. அட்டகாசம்...
ராகவேந்திரன் சார்,
எனக்கு மிகவும் பிடித்த 'கட்டிலா தொட்டிலா' படத்தின்
'நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்'
பாடலைத் தந்து இன்றைய பொழுதை இனிமையாய்க் கழிக்க வழி செய்து விட்டீர்கள்.
மிக மிக அருமையான பாடல். கல்பனாவும் கலக்கல்.
நன்றி சார்.
http://www.dailymotion.com/video/x16ss72_kattila-thottila-1973-naan-nallavar-illam_shortfilms