நண்பர் எஸ்வி அவர்களுக்கும்,நண்பர் கலை வேந்தர் அவர்களுக்கும்
நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் . எங்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும்
Printable View
நண்பர் எஸ்வி அவர்களுக்கும்,நண்பர் கலை வேந்தர் அவர்களுக்கும்
நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் . எங்கும் சகோதரத்துவம் தழைக்கட்டும்
அலுவலக சங்க மாநாடு விஷயமாக ஆக்ரா, புது டெல்லி
சென்றிருந்ததால் , ஒரு வார காலமாக திரி நண்பர்களுடன்
தொடர்பு கொள்ள இயலவில்லை . ,மீண்டும் நண்பர்களுடன்
இணைந்ததில் மகிழ்ச்சி.
ஆர். லோகநாதன்.
நேற்றைய மாலை மலர் நாளிதழில் வெளியான செய்தி.
http://i61.tinypic.com/9k9z4n.jpg
இந்த வார சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளிவந்த செய்தி.
http://i60.tinypic.com/de8gw4.jpg
http://i62.tinypic.com/ibx9vb.jpg
http://i57.tinypic.com/k5279l.jpg
பொது வாழ்க்கையில் மக்களுக்கு தொண்டு செய்ய ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது என்று தெரிந்தவுடன் சினிமாவைத்
தூக்கி எறிந்து முழு நேர அரசியல் தலைவர் ஆனவர் எம்.ஜி.ஆர்.
திரு.கோபால்,
நீங்கள் எதுவேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போங்கள். அதுபற்றி கவலையில்லை. ஆனால், எங்களுக்கும் நண்பரான திரு.கிருஷ்ணா அவர்களை அதுவும் தலைவர் நடித்த விக்ரமாதித்தன் படத்தை அவர் பாராட்டியதற்காக வசை பாடுவதாலும், பல்லாண்டு வாழ்க படத்தையும் தலைவரையும் கிண்டல் செய்வதாலும் பதிலளிக்க வேண்டி வருகிறது.
ஒரு நல்ல ரசிகன் எல்லாரையும் எல்லாவற்றையும் ரசிப்பான். திரு.கிருஷ்ணா அவர்கள் தலைவரைப் பாராட்டியதற்காக இரட்டை வேடம் போடுகிறார் என்று கூறுகிறீர்களே. நாடோடி மன்னன் படத்தை பாராட்டி நீங்கள் விமர்சனம் எழுதவில்லையா? அவ்வளவு தூரம் போவானேன்? இன்று கூட எங்க வீட்டு பிள்ளையில் தலைவரின் எனர்ஜியை நீங்கள் பாராட்டவில்லையா? இது இரட்டை வேடம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பல்லாண்டு வாழ்க படத்தில் தலைவரின் நகம் வெட்டாமல் இருப்பது பற்றி திரு.ரூப் குமார் கூறியது பற்றி எனது கருத்தை கூறியிருந்தேனே தவிர, திரு.சிவாஜி கணேசன் அவர்களையோ காவல் தெய்வம் படத்தை ஒப்பிட்டோ நான் எதுவுமே கூறவில்லையே. புரட்சித் தலைவரின் உடலமைப்பை தேக்குமரம், புளிய மரம் என்றும் wooden facial expression என்றெல்லாம் கூறி ஏன் இப்படி வீணாக வம்பு வளர்க்கிறீர்கள்? ஒருவேளை, இரு திரிகளின் நண்பர்களுக்குள்ளே இணக்கமான சூழல் ஏற்படுவதை நீங்கள் விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.
யாரையும் புகழ்வதற்காக சொல்லவில்லை. அப்படி புகழ்ந்து எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. யாரிடமும் உதவி கோரும் நிலையிலும், இடத்திலும் நான் இல்லை. இனியும் ஆண்டவன் அப்படிப்பட்ட நிலையில் என்னை வைக்கமாட்டான். ஆணவத்தால் சொல்லவில்லை. யாரையும் புகழும் நிர்ப்பந்தம் எனக்கில்லை என்பதற்காக சொல்கிறேன். கருத்து மாறுபாடுகளால் விவாதங்கள் ஏற்படும்போது நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அளிக்கும் பதில்களில் காயப்படுத்தாத குத்தல்கள் இருந்தாலும் அதையும் மீறிய நகைச்சுவையும் வரம்பு மீறாத கண்ணியமும் இருக்கும். நான் எழுதியிருந்ததையே திரு.கிருஷ்ணா சாருக்கு அவர்தான் கூறியுள்ளார். மேலும், சிலர் உணர்ச்சி வசப்பட்டாலும் நியாய, தர்மங்களுக்கு கட்டுப்படுவார்கள். உங்களிடம் அந்த பண்பையும் கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியாது.
திரு.கிருஷ்ணா சார், ஒரு நல்ல ரசிகத்தன்மை உள்ளவரை இழக்க விரும்பவில்லை. தொடர்ந்து எங்கள் திரியில் பங்களிப்பை வழங்குமாறு அன்போடு கோருகிறேன். திரு.கிருஷ்ணா மட்டுமல்ல, புரட்சித் தலைவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் கருத்துக்களையும் ஆவணங்களையும் அவர்கள் எந்த முகாமைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தாராளமாக இங்கே பதிவிடலாம்.
திரு.கோபால், எப்போதுதான் இடதுகாலால் எழுதுவதை விட்டு விட்டு கையால் அதுவும் வலதுகையால் அழகாக எழுதப் போகிறீர்களோ?
‘காட்டுப் புலியை வீட்டில் வெச்சாலும்
கறியும் சோறும் கலந்து வெச்சாலும்
.......... கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வெச்சாலும்
மாறாதைய்யா மாறாது; மனமும் குணமும் மாறாது...’
என்று குடும்பத் தலைவன் படத்தில் சும்மாவா பாடினார் தலைவர்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு நண்பர் கலைவேந்தர் சார்
உங்கள் அழைப்பிற்கு நன்றி. ஏற்கனவே சில பதிவுகள் இங்கு பதிந்து உள்ளேன் . நல்ல தகவல்கள் கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.
http://i62.tinypic.com/npmdev.jpg
Courtesy: Tmt. Sheela, Johor Bahru Malaysia