-
இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்
ஸ்ரீ ரங்கம் இடைதேர்தல் -2015
நீங்கள் முன் கூட்டியே நேற்று 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று சொல்லி இருந்தீர்கள் . எப்படியோ சற்று முன் கிடைத்த செய்தி- வாக்கு வித்தியாசம் 70,000 தாண்டி விட்டது .
இன்னும் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது .அநேகமாக இதே நிலை தொடர்ந்தால் 80,000 வாக்குகள் மேல் வித்தியாசம் செல்ல வாய்ப்பு உள்ளது .
-
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தை பற்றிய நக்கீரனில் வெளியான தவறான கட்டுரைக்கு நீங்கள் அனுப்பிய விரிவான விளக்க கடிதம் மிகவும் அருமை . உடனுக்குடன் நீங்கள் அளித்த பதில் பாராட்டுக்குரியது
நன்றி .
-
புரட்சித்தலைவர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் ."இரட்டை இலை " வெற்றியும், முக்கிய பிரமுகரின் பிர்ச்சாரமில்லாமல், "மதுரை கிழக்கு" மற்றும் "மருங்காபுரி " (1989) இடைத் தேர்தல்களை தொடர்ந்து, திருவரங்கத்திலும் தொடர்கிறது.
பொதுவாக, " இடைத்தேர்தல்" என்றால் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிதான் வெற்றி பெறும் என்பது, தமிழகத்தை பொருத்தவரை, வழக்கத்திலிருந்து வருகிறது. இதற்கு ஆதாரமாக,
================================================== =======================
2006-2011 (ஏப்ரல்) காலத்தில், தி.மு. க. ஆட்சியிலிருந்த பொழுது, நடைபெற்ற
1. மதுரை (மத்திய தொகுதி) (அக்டோபர் 2006)
2. திருமங்கலம் (09-01-2009)
3. கம்பம் (18-08-2009)
4. ஸ்ரீ வைகுண்டம் (18-08-2009)
5. இளையான்குடி (18-08-2009)
6. பர்கூர் (18-08-2009)
7. தொண்டாமுத்தூர் (18-08-2009)
8. திருசெந்துர், வந்தவாசி (19-12-2009)
9. பெண்ணாகரம் (27-03-2010).
சட்டமன்ற தேர்தல்களில், தி. மு. க. வே வெற்றி பெற்றது .
2011 - 14 (மே 2011 முதல் ஏப்ரல் 2014 வரை) நடைபெற்று வரும் அ தி. மு. க. ஆட்சியில்
1. திருச்சி - மேற்கு (13-10-11)
2. சங்கரன்கோவில் (18-03-12)
3. ஏற்காடு (09-12-13)
4. ஆலந்தூர் (24-04-14)
சட்டமன்ற தேர்தல்களில், அ. தி. மு. க. வே வெற்றி பெற்று வந்துள்ளது.
================================================== ============================
வாக்கு வித்தியாசங்கள்தான் மாறுபாடே தவிர, ஆட்சியிலிருக்கும் கட்சிகள் வெற்றி பெறுவது சகஜமாகிவிட்ட ஒன்று.
ஆளுங்கட்சி சந்தித்த இடைத்தேர்தலில், எதிர்கட்சி சார்பில், முதன் முதலில், வெற்றிக்கனியை பறித்த பெருமை, பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.
1963 ல் "திருவண்ணாமலை" தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழநி பிள்ளை அவர்கள் காலமானதால் ஏற்பட்ட இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி. மு. க. வேட்பாளர் திரு. ப. உ. சண்முகம் அவர்கள், நம் மக்கள் திலகத்தின் தீவிர பிரச்சாரத்தாலும், பேரறிஞர் அண்ணாவின் எழுச்சி மிக்க உரைகளினாலும் இந்த வெற்றியை பெற முடிந்தது.
அவருக்கு பின்பு, அந்த பெருமையை, பேரறிஞர் அண்ணாவின் உண்மைத்தம்பியாக அவரின் வழி வந்த நம் புரட்சித்தலைவர் அவர்கள் "திண்டுக்கல்" பாரளுமன்ற இடைத்தேர்தல் (1973) மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் (1974) மூலம் பெற்றார்.
புரட்சித்தலைவர் மறைவுக்குப்பின்பும், அவர் உருவாக்கிய "இரட்டை இலை " சின்னம், மதுரை கிழக்கு (1989) , மருங்காபுரி (1989) மற்றும் நத்தம் (1999) ஆகிய தொகுதிகளில், கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது, அ.தி.மு.க. விற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.
இரட்டை இலை, வெற்றி தந்த இலை, உயர் லட்சியம் காத்திடும் இரட்டை இலை.
எல்லாப்புகழும் நான் வணங்கிடும் எங்கள் குல தெய்வம் ஆலயம் கண்ட ஆண்டவன் மக்கள் திலகத்துக்கே !
-
-
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தின் காந்த சக்தி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 27 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் அவருடைய புகழ் ,அவருடைய படங்களின் மறு வெளியீடுகளின் வசூல் தாக்கம் , அவர் பெயரால் வெளிவரும் புத்தகங்களின் அமோக விற்பனை , தினசரி , வார , மாத இதழ்களில் எம்ஜியாரை பற்றிய குறிப்புகள் மற்றும் எம்ஜிஆரை பற்றிய புதிய தகவல்கள் , அவர் துவக்கிய கட்சியின் தொடரும் வெற்றிகள்
என்று எங்கும் எதிலும் எம்ஜிஆர் என்ற நிலை உலகில் எந்த ஒரு நடிகருக்கும் , அரசியல் தலைவருக்கும் கிடைத்திராத இமாலய புகழ் என்பதை அறிய முடிகிறது .
-
திரு.வினோத் சார்,
நண்பர் திரு.ரவிகிரண் சூரியா ஏன் இப்படி அநியாயம் செய்கிறார்? இது நியாயமா? அவர் வந்து விளக்கம் கேட்டால் சொல்லத் தயார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
http://i60.tinypic.com/1ya9mt.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''இரட்டை இலை ''
மீண்டும் நிரூபணம் .
இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் 96417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .
-
கலைவேந்தன் சார்
நீங்கள் மிரண்டு போய் இருப்பது தெரிகிறது .
வாய் மொழி தகவலை உள் வாங்கி தினத்தந்தி யில் வரும் நேரில் பார்த்த எமது நிருபர் செய்தியை போல் வார்த்தை அலங்காரத்துடன் எழுத நமக்கு தெரியாது ..விட்டு விடுங்கள் நண்பரே .
-
வினோத் சார்,
இல்லை சார். நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்களோ எனக்கு தெரியவில்லை. ஆனால், இதை விட முடியாது. எப்படியும் நண்பர் திரு.ஆர்.கே.எஸ். வந்தால் அதை கேட்டே தீர வேண்டும். வரட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
வினோத் சார்,
நண்பர் ஆர்.கே.எஸ். லாக் இன்னில் இருந்தார். வருவார் என்று பார்த்தேன். கவனிக்கவில்லை போலிருக்கிறது. சரி வரும்போது வரட்டும். கேட்கலாம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்