http://i58.tinypic.com/2v8ml9t.jpg
Printable View
Hearty Congratulations Mr. Muththaiyan Ammu Sir for crossing 6K postings in an engrossing way of presentations on NT and MT!! Continue your good works....Kudos!
senthil
http://i1146.photobucket.com/albums/...psmqpz7m81.jpg
அன்பு நண்பர் முத்தையன்,
தங்கள் அபிமான நடிகரின் பால் தங்களுக்குள்ள ஈடுபாடு, அவருடைய புகழ் பரப்பும் பணியில் தாங்கள் சற்றும் காலம், நேரம், சிரமம் பார்க்காமல் தரும் அர்பணிப்பு நிறைந்த உழைப்பு, அதன் பின்னாலுள்ள தங்களின் திறமை இவையெல்லாம் இங்குள்ளவர்களுக்கு ஒரு உதாரணமாய் விளங்குகின்றன. இம்மய்யத்தில் தாங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் இணைந்துள்ளீர்கள். ஆனால் அதற்குள் தங்களின் பங்களிப்பில் 6000 பதிவுகளுக்கு மேல் இங்கு இடம் பெற்றுள்ளன. இது சாதாரமான விஷயமல்ல. இவ்வளவு ஈடுபாட்டிற்கும் காரணம் தங்களுக்கு எம்.ஜி.ஆரின் மேல் இருக்கும் ஆழமான அபிமானமே. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். புன்னகை தவழும் மதிமுகம் கொண்ட எங்கள் மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் அழகிய அபூர்வமான நிழற்படங்களையும் பல நூறு பதிவுகளில் பகிர்ந்து கொண்டு எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள். இதற்கும் என் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடரட்டும் தங்கள் பங்களிப்புகள் இரு திரிகளிலும்.