Gopal neenga nallavara kettavara ?
Printable View
Gopal neenga nallavara kettavara ?
நடிப்பை பற்றி ஓரளவு தெரியும் ,புரியும் என்ற மமதை கொண்டிருந்தேன். ஒருவர் எனக்கு சாட்டையடி கொடுத்து விட்டார். shuttle acting என்பதை சொல்லி. நான் கேள்வி படாத புதுமை. நன்றி ராகவேந்தர் ஐயா. நான் subtle acting என்று நம்பி கொண்டிருந்தேன். மன்னிக்கவும். திருத்தி கொள்கிறேன்.
இந்தக் காட்சியில் பல்வேறு உணர்ச்சிகளுக்கு இடையில் ஆடை நெய்வது போல் மனம் அங்கும் இங்கும் அல்லாடுவதைத் தான் ஷட்டில் என்று நான் குறிப்பிடுகிறேன். முதலில் அறையில் நுழையும் போது புன்னகையுடன் நுழைவார் .. அங்கு முதலிரவு அறைக்குள் நுழையும் ஒரு மகிழ்வு ... எல்லோருக்கும் இயல்பான உணர்வு ... திடீரென தன்னையும் அறியாமல் அவள் ஊனம் ஒரு நொடியில் அவருடைய உணர்வினைத் தாக்குகிறது.. இந்த இடத்தில் ஒரு சராசரி மனிதனுக்குண்டான உணர்வுக்குள் இருக்கிறார். முகத்தில் மலர்ச்சி மறைகிறது ... பின் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். வேறொரு இடத்தில் செல்லும் போது நடையில் தளர்வு ஏற்படுகிறது. சாவித்திரி அவரைப் பின் தொடர்கிறார். மலர்ந்த முகத்துடன் இருந்த சாவித்திரி அவருடைய முக வாட்டத்தைக் கண்டவுடன் தன் முகத்திலும் வாட்டம் வருவதை உணர்கிறார். வெறித்துப் பார்த்த படி நின்று கொண்டிருக்கும் நடிகர் திலகத்திடம் தன்னுடைய உள்ளத்தில் உள்ள நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். இப்போது ஒரு வித பெருமிதம் நடிகர் திலகத்தின் முகத்தில் லேசாக எட்டிப் பார்க்கிறது. நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்து திரைக்கு முதுகைக் காட்டிய படி நிற்கிறார். [இதையெல்லாம் அவருக்கு யார் சொல்லித் தந்தார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்]. பறவைகளின் பாஷைகளைப் பற்றி சாவித்திரி கூறும் போது சற்றே கவனம் தந்து தன் உணர்வை திசை திருப்புகிறார். அவருடைய இசை அறிவை அறிந்து பாடச் சொல்லும் போது உணர்ச்சிகளில் மாற்றம் ஏற்பட்டு அந்த சூழலை மாற்ற முயல்கிறார். தொகையறா தொடங்க அப்படியே திரையீட்டு அறைக்கு வருகின்றனர். அங்கே சாதாரணமாக ஒரு திரைப் படத்தைப் பார்க்கும் மனோபாவத்தில் நிற்கிறார். சாவித்திரி ஆடிப் பாடும் காட்சி தொடங்கிய வுடனேயே அவரையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு அங்கே ஏற்படுகிறது. திரையில் ஆடும் சாவித்திரியா இவர் என மனதில் ஒரு பச்சாதாபத்துடன் பார்க்கும் போது வேறு உணர்வு ஏற்படுகிறது. இந்தப் பாடலின் போக்கில் உணர்ச்சிகள் மெல்ல அன்பாய் மாறி மனைவியைக் காதலிக்கத் தொடங்குகிறார். இந்த transportation தான் இந்தக் காட்சியை விவரிக்க ஷட்டில் என்ற வார்த்தையில் பயன் படுத்தப் பட்டு இருக்கிறது.Quote:
The original meaning of the word shuttle is the device used in weaving to carry the weft. By reference to the continual to-and-fro motion associated with that, the term was then applied in transportation and then in other spheres. Thus the word may now also refer to:
-from wikipedia-
subtle acting என்பதையும் நடிகர் திலகம் காண்பித்திருக்கிறார். அது வேறொரு காட்சியில் இந்தப் படத்திலேயே இருக்கிறது. அது ரங்கா ராவ் அவர்களுடன் விவாதம் செய்யும் போது.
அரூர் தாசிற்கு இவ்வளவு போட்டியா? oscilatting or shuttling or switching emotions என்று சொல்லலாம். shuttle acting என்பது தவறான பிரயோகம்.தங்கள் கூற்று படி விமரிசகர்கள் இதை உபயோகிக்கிறார்கள் அதுவும் முதுகை திருப்பி கொண்டு நிற்பதில் என்று கூறியுள்ளீர்கள்.
நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.
பிரயோகம் என் உரிமை. அது தவறு அல்லது சரி என்பதும் என் தீர்மானம். நடிகர் திலகம் என்கிற அட்சய பாத்திரம் நடிப்பு என்னும் அமுதை அள்ள அள்ளக் குறையாமல் தருகிறது. அதை நாம் எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். அதற்கு எந்த எல்லையும் இல்லை. வரைமுறையும் இல்லை. அது போல் எனக்கு நெற்றியும் இல்லை கண்ணும் இல்லை. எனக்கு எதிரே நிற்பது சிவனும் இல்லை.
இருந்தாலும் Shuttle மற்றும் Subtle இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்புத் தரவேண்டாம் என்கிற எண்ணத்தில் தலைப்பு மாற்றப் பட்டுள்ளது.
கோச்சுக்காதீங்க பாஸ். ஞானத்தை ஒழித்தவநெல்லாம் இப்படித்தான் பேசுவான் என்று விட்டு விடுங்கள்.