Quote:
ரோஜா
மெகா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர்,"ரோஜா''
முரடன் லட்சுமிராஜ் அப்பாவிப்பெண் சுஜிதாவை திருமணம் செய்கிறான். அவன் தன் மனைவியை ஏமாற்றி விட்டு, புவனேஸ்வரியுடன் வாழ்கிறான். ஆனால் புவனேஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக லட்சுமிராஜிடம் இருக்கும் செல்வங்களை அபகரித்துக் கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து, லட்சுமிராஜ் தனது மனைவி சுஜிதாவை துன்புறுத்துகிறான். சுஜிதாவுக்கு, ஐஸ்வர்யா உதவுகிறாள். அவள் கொஞ்சம், கொஞ்சமாக புவனேஸ்வரியின் சுயரூபத்தை லட்சுமிராஜக்கு புரிய வைக்கிறாள். இதே நேரம் லட்சுமிராஜின் தாயார் தன் மகனை சுஜிதாவிடம் இருந்து பிரித்து பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள். அது நடந்ததா இல்லையா?
சுஜிதா, ஐஸ்வர்யா, லட்சுமிராஜ், பிந்துமாதவி, ராஜ்குமார், நளினி, புவனேஸ்வரி, பானுபிரகாஷ் நடிக்கிறார்கள். சுதாகர் ஒளிப்பதிவில் பத்மநாபனின் கதை, திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள இத் தொடரை சில்வர் டார் கிரியேசன் தயாரித்துள்ளது.
இயக்கம்: பச்சில் சிவா.