http://youtu.be/Dovf8t3S-Oc
ஓரிடம்.. உன்னிடம் - டி.எம்.எஸ்.,வாணி ஜெயராம் - வீட்டுக்கு வந்த மருமகள்
Printable View
http://youtu.be/Dovf8t3S-Oc
ஓரிடம்.. உன்னிடம் - டி.எம்.எஸ்.,வாணி ஜெயராம் - வீட்டுக்கு வந்த மருமகள்
பொங்கும் பூம்புனல்
இந்தப் பாடலை முதன் முதலில் கேட்ட பொழுது, அதுவும் பொன்னூஞ்சல் திரைப்படத்தில் என்று அறிந்த பொழுது மனம் துள்ளி எழுந்தது.. தலைவரை எவ்வளவு விதம் விதமான காஸ்ட்யூம்களில் மனம் கற்பனை செய்து பறந்தது. அதில் ஒன்று குர்தா செட்டும் ஒன்று... உஷா நந்தினி பாடப் பாட தலைவர் அவரைப் பார்த்து புன்னகை புரிய ...
ஹ்ம்... அத்தனையும் பணால்..
பாட்டு கட்...
அத்தனை கனவும் கனவாகவே போய் விட்டதே...
எத்தனை முறை கேட்டாலும் எப்போது கேட்டாலும் அலுக்காத, ஜானகியின் வாழ்நாளில் சிறந்த பாடல்களில் ஒன்றான வருவான் மோகன ரூபன் பாடல் நமக்காக..
http://www.inbaminge.com/t/p/Ponnoonjal/
பொங்கும் பூம்புனல்
இசையரசியின் இனிமையான பாடல்களில் மறக்க முடியாத பாடல் பெண்ணை நம்புங்கள் படத்தில் இடம் பெற்ற டூயட் நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ..
சென்னை விவித்பாரதியில் இப்படத்திற்காக 10 செகண்ட் விளம்பரத்தை இரவு 8.30 மணி சுமாரில் ஒலிபரப்பும் போது இப்பாடலின் பல்லவிதான் இடம் பெறும்..
மெல்லிசை மாமணியின் பரவசமூட்டும் மெட்டு இப்பாட்டை நம் நெஞ்சில் நிலைக்கச் செய்து விடும்.
http://www.inbaminge.com/t/p/Pennai%20Nambungal/
பொங்கும் பூம்புனல்
இசையரசியின் குரலில் இன்னொரு இனிமையான பாடல் சங்கர் கணேஷ் இசையில் வாக்குறுதி திரைப்படத்திலிருந்து..
தண்ணீரில் மேனி கொதிக்குதடி..
http://www.inbaminge.com/t/v/Vakkuruthi/
அடுத்த தாக்குதல். முதல் தாக்குதலிலேயே நிலை குலைந்து போய் விட்டேன். அதற்குள் இன்னொரு பிடித்தம்.
கோபால் சாருக்கு பிடித்தமான ஹலம் என்ற ஆலம் அல்லது ஆலம் என்ற ஹலம் ஆடினால் அந்த ஆட்டத்தில்
ஒரு வகை போதையில் பலவகை மனிதரும்
கூடவே ஆடுவார்.
ராகவேந்திரன் சார்,
ஒன்று பார்த்தீர்களா?
70 களில் வெளிவந்த அத்தனை கிளப், காபரே பாடல்கள் அனைத்தும் அப்போது எப்படியோ இப்போது கேட்க அவ்வளவு இனிமை. இந்தப் பாடல்களில் முதலிடம் பிடித்தவர் ராட்சஸி. அவர் இடத்தை நிரப்ப ஆள் இல்லை. அதன் பிறகு இந்த மாதிரி ஒருமாதிரி பாடல்களை ஜானகி, சுசீலாம்மா இன்னும் சிலர் சொற்பமாகவே பாடியிருப்பார்கள்.
இந்த மாதிரி பாடல்களில் 70 களிலேயே கவர்ச்சி சற்று தூக்கல்தான். வீட்டில் அணிவருடனும் அமர்ந்து பார்க்க முடியாது. ஆனால் கேட்டு ரசிக்க முடியும்.
ஹலம், ஜெயகுமாரி, சி.ஐ.டி.சகுந்தலா, எல்.காஞ்சனா, வடக்கத்திய ஹெலன், பிந்து அருணா இராணி, இன்னும் பிறரின் பாடல்களை அனைத்தும் மொத்தமாக ஒரே இழையில் தர முயற்சி செய்யலாம்.
'நான் ஆடினால்' - மணிப்பயல்
http://www.youtube.com/watch?v=2nRmd...yer_detailpage
பொங்கும் பூம்புனல்
இந்த மாதிரி இனிமையான பாடல்களைக் கேட்டால் மனம் ஏன் துள்ளல் போடாது, தூண்டில் போடாது...
தலைப்பிரசவம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்.பி.பாலா, இசையரசியின் குரல்களில் கண்ணோடு மீனைக் கண்டு...
http://www.inbaminge.com/t/t/Thalai%20Prasavam/
வாசு சார்
தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி...
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல நல்ல பாடல்கள் படமாக்கப் பட்ட விதம் காரணமாகவே மக்களிடம் சென்று சேராமல் போய் விட்டன.. இந்த மாதிரி பாடல்களில் தான் குரலில் முழுத் திறமையையும் கொண்டு வர முடியும். அந்த விதத்தில் பார்த்தால் இன்னும் பல ஆண்டுகளானாலும் ஈஸ்வரிக்கு ஈடாக இன்னொருவர் வர முடியாது.