ஆதவன் ரவி
நன்றி தெரிவித்தல் தமிழ்க்கலாச்சாரமாகும். அதை நீங்கள் அருமையாக தங்கள் கவிதையில் எடுத்தியம்பியுள்ளீர்கள். இதன் மூலம் நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகன் என நிரூபித்துள்ளீர்கள். தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை தங்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, முழுமையான அபிமானம் உள்ளிட்ட பல நற்குணங்கள். தங்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து தங்கள் உள்ளத்துணர்வுகளைத் தயங்காமல் தங்கள் கவிதைகளில் படைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.