Originally Posted by joe
ராகவேந்திரர் சார்,
கமலோ ,ரஜினியோ எம்.ஜி.ஆர் சிவாஜியின் நட்பை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு படவில்லை.
கமல் ,ரஜினி இருவரும் தொழில் முறையில் உறவு கொண்டவர்கள் .அதைத் தாண்டி கொள்கை ரீதியாக அல்லது ஒருவரை ஒருவர் தொழில் தாண்டி முரண்படுகிற சந்தர்ப்பம் நல்ல வேளையாக அவர்களுக்கு இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவருடைய பேச்சில் குறிப்பிட்டது போல கமல் ,ரஜினி இருவரையும் பல இயக்குநர்கள் ,தயாரிப்பாளர்கள் ஒரே நேர்த்தில் கையாண்டிருக்கிறார்கள் .ஆனால் அந்த அளவுக்கு சிவாஜி - எம்.ஜி.ஆர் காலத்தில் அந்த அளவுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை .. நடிகர் திலகத்தை இயக்கும் இயக்குநர்கள் எம்.ஜிஆரை இயக்கினால் அவர் முகாம் மாறிவிட்டார் எனும் படியான தோற்றம் இருந்ததை மறுப்பதற்கில்லை ..நடிகர் திலகத்திற்கும் மக்கள் திலகத்திற்கும் தனித்தனியே ஒரு இயக்குநர் வட்டம் இருந்தது உண்மை ..இது போதாதென்று அவர்கள் எதிர் அரசியல் இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டதால் ,இயக்கத்திற்காக கருத்து முரண்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன ..அவர்களின் ரசிகர்கள் சினிமாவையும் தாண்டி கொள்கை ரீதியாகவும் எதிர் முனைகளில் நின்று பணியாற்றும் சந்தர்பங்கள் அமைந்தன.
நடிகர் திலகமும் ,மக்கள் திலகமும் ஒருவர் மேல் ஒருவர் உள்ளார்ந்த அன்புடன் இருந்தாலும் ,சுற்றியுள்ளவர்கள் அவர்களை தூண்டி விட்டு குளிர்காய நினைத்தார்கள் என்பது உண்மை ..மக்கள் திலகம் டாக்டர் பட்டம் பெற்ற போது திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா ஒளிக்காட்சியை நான் பார்க்க நேரிட்டது .அதில் எம்.ஜி.ஆர் பேசும் போது சிலர் தன்னை சிவாஜியை பற்றி தவறாக புரிந்து கொள்ளும் படி தவறான தகவல்களை சொல்லி தூண்டி விட்டதாக ஒப்புக்கொண்டார்.
எனவே இதிலிருக்கும் வேறுபாட்டை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.