-
வாசுதேவன் சார்,
எனக்கு எதற்கு நன்றியெல்லாம்? நான் செய்தது வெறும் ஒரு மொழி பெயர்ப்புதானே! நீங்கள் இன்று கொடுத்திருக்கும் தர்த்தி சுட்டிக்கு நாங்களல்லவா நன்றி சொல்ல வேண்டும்!
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மறைந்து கொள்ளும் புரட்சி வீரன் பேச்சுக் குரலின் மூலம் வந்திருப்பவன் தன் நண்பன் பாரத் என தெரிந்தவுடன் அந்த profile போஸில், தன் கண்கள் வழியாக அந்த நட்பையும் வாஞ்சையையும் வெளிப்படுத்துகிறாரே, அந்த ஒரு காட்சி போதும் படத்தில் நடித்த அனைவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு போக!
சதீஷ்,
தர்த்தி மதுரையில் வெளியாகவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. சென்னையிலே மிக தாமதமாகத்தான் வெளியானது. 1970 பிப்ரவரி 6 அன்று வட இந்தியாவில் வெளியான இந்தப்படம் [அதே நாளில்தான் விளையாட்டுப் பிள்ளை தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் வெளியானது] சென்னையிலேயே 1971 ஜூன் 4 அன்றுதான் வெளியானது. மிட்லாண்டில் வெளியான இந்த ஸ்ரீதர் படம் ஜூன் 18 அன்று அதே ஸ்ரீதரின் அவளுக்கென்று ஓர் மனம் படத்திற்காக மாறிக் கொடுத்தது.
[இந்த நேரத்தில் நமது மதுரையின் பெருமையையும் சொல்லி விடலாம். பிராப்தம் படத்தை பற்றி ராகவேந்தர் சார் குறிப்பிட்டார். அந்த பிராப்தம் திரைப்படம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக நமது மதுரை சென்ட்ரலில்தான் 65 நாட்கள் ஓடியது. அதுவும் அவளுக்கென்று ஓர் மனம் படத்திற்காகத்தான் மாற்றப்பட்டது].
பாலா,
அருமையான புகைப்படங்கள். குறிப்பாக மூன்று படங்களைப் பற்றி சொல்ல வேண்டும். விழா மேடையில் இரு பக்கமும் என்,டி.ஆரும் ஏ.என்.ஆரும் அமர்ந்திருக்க நடுவில் கம்பீரமான நடிகர் திலகம். இரண்டாவது ப்ரெஸ்டிஜ் பத்மநாபன். மூன்றாவது அந்த ஜிப்பா அணிந்த அந்த புகைப்படம். அது கூட சிவந்த மண் வெளியான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம். நன்றி!
அன்புடன்
-
டியர் வாசுதேவன் சார்,
கிடைத்தற்கரிய "தர்த்தி" ஒலி-ஒளிக் காட்சிகளுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !
தாங்கள், திலகத்தின் திரைக்காவியக்களஞ்சியம் என்பதனை ஊர்ஜிதப்படுத்திவிட்டீர்கள் !
தங்களின் வீடியோ பதிவைப் பாராட்டிய கோல்டுஸ்டார் சதீஷ் வினவிய வினாவுக்கு பதிலாக, 'சித்ராலயா' இதழில் வெளியான "தர்த்தி"யின் மிக அரிய சென்னை வெளியீட்டு விளம்பரத்தை வழங்கிய ராகவேந்திரன் சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !
"தர்த்தி" பற்றி மேலும் ஒரு பத்திரிகை ஆவணம்:
தர்த்தி(ஹிந்தி)
வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1968
http://i1094.photobucket.com/albums/...EDC4351a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4353a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4354a-1.jpg
குறிப்பு:
1. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் நடிகர் திலகம் "தர்த்தி"யில் முக்கிய கதாபாத்திரத்தில்[ஆனந்த்] நடித்தார். ஆனால் நடிகர் ராஜேந்திரகுமார் "சிவந்த மண்"ணில் நடிக்கவில்லை. அந்த ஆனந்த் பாத்திரத்தை முத்துராமன் ஏற்று சிறப்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன காரணத்தினால் ராஜேந்திரகுமார் தமிழ்ப்பதிப்பிலிருந்து நடிக்காமல் விலகினார் என்பது அவருக்கே வெளிச்சம் !
2. "தர்த்தி"யில் ஆனந்த் பாத்திரத்தில் சில மணித்துளிகளே வந்தாலும், அதில் வாழ்ந்து காட்டியுள்ள நடிகர் திலகம், அப்பாத்திரத்தின் ஹிந்தி வசனங்களை அதியற்புதமாக முன்னணியில் உச்சரித்தார். பின்னணியில் வேறொரு கலைஞர் அவருக்கு குரல் கொடுத்தார்.
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
"ராமன் எத்தனை ராமனடி" நிழற்படங்களின் பதிவு, தங்களின் பசுமையான நினைவுகளை தூண்டிவிட்டதென்றால் அது நடிகர் திலகத்தின் கிருபைதான்.
தங்கள் மகிழ்ச்சி நான் பெற்ற பாக்கியம்.
தங்களின் பாராட்டுக்கு பணிவான நன்றி !
[1972-ம் ஆண்டு 'சிவாஜி பேட்ஜ்' மிக மிக அரியதொரு கலைப்பொக்கிஷம்].
டியர் பாலா சார்,
அபூர்வ புகைப்படங்களுக்கும், அருமையான சுட்டிகளுக்கும் அற்புத நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
அன்பு பம்மல் சார்,
தங்களின் அன்புக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி! "தர்த்தி" பற்றிய தங்களது பங்களிப்பும் என்ன சும்மாவா?.. 'பொம்மை' இதழின் கட்டுரையை வெளியிட்டு பழைய நினைவுகளைக் கிளர்ந்து எழச் செய்து விட்டீர்கள். இந்த அரிய வரலாற்றுப் பக்கங்களை அன்பிற்குரிய என் தாயார் சேகரித்து வைத்திருந்தார்கள். அசந்தர்ப்பமாக தவறி விட்டது. ( என் தாயார் அவர்கள் அண்ணலின் பரம ரசிகை. சிறு வயதில் எனக்கு சாப்பாடு ஊட்டும் போது கூட நடிகர் திலகத்தின் பெயரைச் சொல்லிச் சொல்லித்தான் அவர்கள் என்னை ஊட்டி வளர்த்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் தங்கள் சார்பாகவும், நம் 'ஹப்' அங்கத்தினர்கள் சார்பாகவும் நன்றி கூறிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்).
அற்புதமான அந்த வரலாற்று ஆவணத்தை அளித்ததற்கு நன்றி!
டியர் முரளி சார்,
தங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் அந்த குறிப்பிட்ட profile போஸை நீங்கள் வர்ணித்திருக்கும் விதமே அலாதி. அது மட்டுமல்ல..தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது , கதவு தட்டப் பட்டவுடன் தட்டை வைத்துவிட்டு, படு கேஷுவலாக சாப்பிட்ட கையை பின்னால் சட்டையில் அவர் துடைத்துக் கொண்டே நடக்கும் அழகே அழகு!..என்ன ஒரு திறமை! எப்படிப்பட்ட ஒரு உடல் மொழி!
நன்றியுடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
hats of to you pammal sir
-
Nantri
Thanks a lot Ragavendran and Pammalar and Murali sir.
As usual, "Naanga ellu entru sonna neenga yennaiya vanthu alli tharreenga".....
In English simply I say "Thank You"...
Cheers,
Sathish
-
அன்புள்ள பம்மலார் சார், ராகவேந்தர் சார், மற்றும் வாசுதேவன் சார்.....
வர வர நம்ம திரி 'ஜெட்' வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து அசத்தலோ அசத்தல் என்று அசத்துகிறீர்கள்.
ஆகஸ்ட் 14-லிருந்து அள்ளித்தெளிக்கப்பட்ட காவியங்களின் ஆவணங்கள்தான் எத்தனை எத்தனை...
** 'மூன்று தெய்வங்கள்' விளம்பரங்கள், வீடியோ கவர், மற்றும் துக்ளக் விமர்சனம்.
** 'சாரங்கதாரா' விளம்பரங்கள் மற்றும் விமர்சனம்
** 'ராமன் எத்தனை ராமனடி' வெளியீடு, 50வது நாள், 75வது நாள், 100வது நாள் விளம்பர வரிசை, டிவிடி உறைகள் மற்றும் அபூர்வ புகைப்ப்படங்கள்
** 'ஒரு யார்த்ரா மொழி' பட விளம்பரம், அது தொடர்பான செய்தித்தொகுப்புகள்
** 'முதல் மரியாதை' பட விளம்பர வரிசை, புகைப்படத் தொகுப்பு, மற்றும் கட்டுரை.
** 'கட்டபொம்மன்' நினைவுக்கோட்டை, அதன் உட்புறத்தோற்றம், நடிகர்திலகம் அமைத்த கட்டபொம்மன் சிலை, படத்தில் அவரது ஆக்ரோஷமான தோற்றம். (ராகவேந்தர் சார், இவ்வளவு உயரமான சிலைப்பீடம் தமிழ்நாட்டில் கிடையாது. அதற்கு முன் உயரமானதாகக் கருதப்பட்ட சென்னை தாமஸ் மன்றோ சிலையின் பீடத்தை கட்டபொம்மன் தோற்கடித்தார். இதிலும் வெள்ளையனைத் தோற்கடித்த பெருமை அவருக்கே).
** 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. சிறை வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம். அவர் இழுத்த செக்கு இவற்றின் காணக்கிடைக்காத புகைப்படங்கள். (இந்த சுதந்திர நாளை மிகச்சிறப்பாக கொண்டாடியது நமது திரிதான் என்பதில் மகிழ்ச்சி).
** 'சிவாஜி ரசிகன்' இதழின் சுதந்திர தின சிறப்பிதழ் அட்டைப்படம், உள்ளே நடிகதிலகத்தின் சிறப்புக்கட்டுரை, கண்கவர் சிவாஜி ரசிகன் பேட்ஜ்.
** பொன்விழாக் கொண்டாட்டத்தின் நிறைவுப்பதிகள்.
** 'தர்த்தி' படத்தின் காணக்கிடைக்காத விளம்பரம், அதில் நடிகர்திலகத்தின் பாத்திரம் பற்றிய 'பொம்மை' இதழின் கிடைத்தற்கரிய அரிய தகவல் பொக்கிஷங்கள்.
** இதுபோக, 'பாலா' அவர்கள் அள்ளியளித்த ஏராளமான வீடியோ தொகுப்புகள்.
அடேயப்பா.... அடேயப்பா.... அடேயப்பா....
சர்க்கஸில், ஒருபக்கம் பார் விளையாட்டு, ஒருபக்கம் சைக்கிள் சாகசங்கள், இன்னொருபக்கம் மிருகங்களின் சாகசங்கள், பிறிதொருபக்கம் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டம் அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கும்போது, எதைப்பார்ப்பது என்று காலரியில் உட்கார்ந்து விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் ரசிகனாக இருக்கிறேன் நான்.
எவ்வளவு ஆதாரங்கள், எவ்வளவு ஆவணங்கள்..... எல்லோரும் ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கிறீர்கள்.
நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி...., நன்றி....
-
டியர் கார்த்திக் சார்,
நமது திரியை ஆகஸ்ட்14-வரை திரும்ப ரீவைண்ட் செய்து பார்க்க வைத்தது உங்கள் அழகான விமர்சனம்.அதற்காக இதோ பிடியுங்கள் ஒரு சபாஷ்.....நன்றி சார்!....திரு.ராகவேந்திரன் சார் சொன்னது போல நமது திரி பல சாதனைகளைப் படைக்கப் போவது உறுதி. அந்த மனமகிழ்வோடு 'பண்பாளர்' திரு.பம்மலார் அவர்கள் சார்பாகவும், 'ரசிகவேந்தர்' திரு, ராகவேந்திரன் சார் அவர்கள் சார்பாகவும், என் சார்பாகவும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
வழக்கம் போல், நடிகர் திலகத்தின் காவியங்களின் ஆவணப் படங்களையும், செய்திதாள் சாதனை விளம்பரங்களையும், வீடியோ பதிவுகளையும் பதிவிட்டு அசத்திக் கொண்டிருக்கும் திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.
சிவந்த மண்ணின் ஹிந்தி வடிவம் "தர்த்தி"-இல் இடம் பெற்ற நடிகர் திலகம் இடம் பெரும் காணக் கிடைக்காத வீடியோ காட்சிகளைப் பதிவிட்ட திரு. நெய்வேலி வாசுதேவன் சாருக்கு தனிப்பட்ட முறையில் மிக்க நன்றி. எப்போதெல்லாம் வட இந்தியாவுக்கு வேலை நிமித்தமாக செல்கிறேனோ அப்போதெல்லாம் இந்தப் படத்தின் இந்தி வடிவத்தைப் பெற முடிந்தவரையில் பிரயத்தனம் செய்தும், இது வரை வெற்றி அடைந்ததில்லை. இப்போது, நீங்கள் அந்தக் காட்சிகளைப் பதிவிட்டவுடன் சொல்லொணா மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி. திரு. முரளி அவர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை (அந்த சைட் போஸ் முக பாவம்!) வர்ணித்த விதம் அருமை.
திரு. கார்த்திக் அவர்கள் குறிப்பிட்டது போல், இந்தத் திரி அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
சென்ற வாரம், என்னுடைய கசின்கள் அனைவரும் ஒரு நிகழ்வுக்காக ஒன்று கூடினோம். எல்லோரும் ஒன்று கூடினால், பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில், சினிமாவில் வந்து நிற்கும். சினிமாவில் வந்து கடைசியில், நடிகர் திலகத்தில் வந்து மையம் கொள்ளும். என்னுடைய அண்ணன் மகன், "போன வாரம் ஏதோ ஒரு சிவாஜி படத்தின் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்; உடனே, உன் நினைவு வந்து விட்டது" என்று சொன்னான். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, கலைஞர் டிவியின் தேனும் பாலும் நிகழ்ச்சியில், "அவன் தான் மனிதன்" படத்தில் வரும் "ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி" பாடல் ஆரம்பித்தது. இது அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் பிடித்த பாடலாயிற்றே! நான் அவனிடம் சொன்னேன் "இந்தப் பாடலின் கடைசி சரணத்தில், அவர் மெரூன் கலரில் சட்டை அணிந்து கொண்டு வருவார். "இலக்கிய ரசத்தோடு என்று ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு மாதிரியான போஸில் ஆரம்பிப்பார். பாடிக் கொண்டே, கடைசியில், "ஓவிய சீமாட்டி .." எனும்போது, ஒரு ஸ்டைல் பண்ணுவார். பார்" என்று கூறி, வீட்டில் இருந்த அனைவரும், நினைவுகளில் மூழ்கி, சரியாக அந்தச் சரணம் துவங்கி முடிந்தவுடன், அந்த ஸ்டைல் வரவும், எல்லோரும் தங்களை மறந்து வீட்டிலேயே கைத்தட்ட, வீட்டிலிருந்த மற்றவர்கள் ஓடி வந்து பார்க்க, சுவையாக அந்தப் பகல் கழிந்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி