http://i58.tinypic.com/25kog7d.jpg
Printable View
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு கோவை -ராயல் மற்றும் டிலைட் அரங்குகளில் 2014-ல் வெளியான புரட்சிதலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் பட பட்டியல் வெளியிட்டு மக்கள் தலைவரின் பிறந்த நாள்
வரும் வேளையில் சிறப்பு சேர்த்ததற்கு நன்றி.
நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் மூத்த மகனின் 2 வது பிறந்த நாளுக்கு
இனிய நல்வாழ்த்துக்கள் .
தங்களின் ரகசிய போலீஸ் பட பதிவுகள் நன்று. படத்தில் நாகேஷின் காமெடி நன்றாகத்தான் இருந்தது. தங்கை செண்டிமெண்ட்தான் விறுவிறுப்பை குறைக்கும் காட்சிகள்.
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் பணத்தோட்டம், ரகசிய போலிஸ் பதிவுகள்
மற்றும் இதர பட பதிவுகள் சிறப்பானது .
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் பணத்தோட்டம் விர்சனம் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு எழுதிய விதம் பிரமாதம்.
நண்பர் திரு. சி.எஸ். குமார். அவர்களின் பணத்தோட்டம், ரகசிய போலீஸ் -சிறு விமர்சனங்கள் நச்ச்.... தங்களின் வேண்டுகோளான மறு பதிவுகள் தவிர்ப்பு
நல்ல யோசனை.
நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்கள் அட்வான்சாக மக்கள் தலைவரின் மகத்தான
98 வது பிறந்த நாள் பேனர்கள் பதிவு செய்ய ஆரம்பித்ததற்கு நன்றி. தங்களின்
புதுடெல்லி பயணம் ரத்து ஆனது செய்தி குறித்து மகிழ்ச்சி.
நண்பர் திரு. சத்யா அவர்களின் எம்.ஆர். ராதா சுட்ட வழக்கு படிப்பதற்கு
சுவாரஸ்யமாக இருந்தது.
நண்பர் திரு. செல்வகுமார் அவர்களின் பதிவான தலைவரின் தாய்க்கு தலைமகன்
பழைய பாட்டு புத்தகத்திற்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
மதுரை - ஷா அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் '' பறக்கும் பாவை '' திரையிடப்பட்டுள்ளது .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பதிவு , விஜய் டிவி. திரு கோபிநாத் அவர்கள் மூலம் நேற்று காலை 11/01/2015 காலை முதல் மாலை வரை பிரசாத் படப்பிடிப்பு நிலையத்தில் இடைவிடாது நடைபெற்றது.
சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, வேலூர், கோவை, திருப்பூர் , ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் /பக்தர்கள்
கலந்து கொண்டனர். பெரும்பாலான ரசிகர்களில், படிப்பாளிகள், பட்டதாரிகள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் , அரசு பணியாளர்கள் ஆகியோரை காண நேர்ந்தது .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நாளன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகக் கூடும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் விவரம் :
வேலூர் பல்கலை கழக வேந்தர் திரு. ஜி.விஸ்வநாதன், சத்யபாமா பல்கலை கழக
வேந்தர் ஜேப்பியாரின் மகள் மரியா , முருகன் தியேட்டர் அதிபர் பரமசிவ முதலியார் மகன் சுப்ரமணியம் , பி.ஆர். பந்துலு மகள் விஜயலட்சுமி, தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் , இசை அமைப்பாளர் கணேஷ் , இயக்குனர் மோகன் காந்திராமன்,
இயக்குனர் கரு. பழனியப்பன் , உயர் அரசு அதிகாரி ஞான ராஜசேகரன், பிரபல நடிகர் ஜெமினிகணேசனின் மகள்கள் மூவர் , நடிகர் அசோகனின் மகன் வின்சென்ட் ,
இதயக்கனி ஆசிரியர் விஜயன், உடைஅலங்கார நிபுணர் எம். ஏ. முத்து ஆகியோர்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்றோரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் .
மன்னாதி மன்னன் எம்.ஜி. ஆராக மக்கள் திலகம் ஏன் போற்றப்படுகிறார்.
பிடித்த பாடல்கள்:கொள்கை / காதல் /தாய்மை
பிடித்த சண்டை காட்சிகள் எவை . மிகவும் பிடித்த கதாபாத்திரம் ,
மிகவும் பிடித்த அம்சங்கள், குண நலன்கள் , எந்த ஸ்டைல் நன்றாக இருந்தது
பொது இடத்தில எம்.ஜி.ஆர். வரும்போது எப்படி அழைப்பீர்கள் ,
மக்களால் ஏன் பெரிதும் கவரப்பட்டார் . யார் யாருக்கு எந்த ரிங்க்டோன் பிடிக்கும்,
ஆட்சியில் செயல்பாடுகள் எப்படி இருந்தது . எந்த தலைவருடன் ஒப்பிடலாம் .
அவருக்கு நிகர் அவர்தான் ஏன் . அதிக நாட்கள் ஓடிய படங்கள் / சாதனைகள் /
வசூல் சக்கரவர்த்தி பெயர் நிலைக்க காரணம் . அதிகம் முறை பார்த்த படங்கள்
யார் யார். என்ன காரணம். எம்.ஜி.ஆர். படம் முதல் நாள் வெளியீட்டின்போது
உங்கள் மனநிலை எப்படி /ஆர்வம் . அன்றைய காலகட்டத்தில் தியேட்டரில்
எம்.ஜி.ஆர். பட வெளியீடுகள் .ஏழைகள் மனதை கவர்ந்த விதம்
ஜி.விஸ்வநாதன் : தமிழ் நாட்டில் சுயநிதி கல்லூரிகள் உருவாக முழுமுதல் காரணம் எம்.ஜி.ஆர்.தான். கல்வி அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரை வெளிநாட்டிற்கு அனுப்பி, விபரம் அறிந்து, நிறைய படிப்பாளிகள், பட்டதாரிகள் உருவாக எம்.ஜி.ஆர் காரணமாக திகழ்ந்தார். பெருமளவில் சுயநிதி கல்லூரிகள்
பெருகுவதற்கு வழிவகை செய்தவர் அவரே.வேலூரில் பல்கலைகழகம் துவங்க அனுமதியளித்தார். 1984 அக்டோபரில் துவங்க அழைத்தபோது, வருவதாக சொன்னவர் ,நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா சென்றவர், குணமாகி திரும்பி வந்தபோதும் பல்கலை கழகத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது. இருப்பினும் இறுதி வரை பாசத்துடன் நேசமாக பழகினார்.அவரது நினைவாக முழு உருவச்சிலை பல்கலை கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா, பிரதமர் இந்திர காந்தி ஆகியோரின் குணங்கள், செயல்பாடுகள் ஒருங்கே அமைந்திருந்தாலும்
யாருடனும் ஒப்பிட முடியாத நிகரற்ற தலைவர். கலையுலகிலும், அரசியலிலும்
சிகரங்களை தொட்டவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே. என்று
பெருமை படுத்தியும் பேசினார்.
மரியா : சத்யபாமா பல்கலை கழக வேந்தர் திரு. ஜேப்பியார் அவர்களின் மகள்
அன்பு நிலா என்கிற மரியா பேசும்போது, ஒருமுறை ரயில் பயணத்தின் போது, எம்.ஜி.ஆர். அவர்கள் கத்தி வீச அதை தடுத்து காப்பாற்றியவர் எனது தந்தை
ஜேப்பியார் . அதனால் அவருக்கு மாவீரன் என பெயர் சூட்டி எம்.ஜி.ஆர். அவர்கள்
புகழ்ந்தார்கள் எனக்கு மரியா என்ற பெயர் வைத்தது எம்.ஜி.ஆர். அவர்கள்தான் எங்கள் குடும்ப தெய்வமாக திகழும் எம்.ஜி.ஆர். அவர்களின் உருவப்படம் மட்டுமே பல்கலை கழகத்தின் 6 கேண்டீன்களில் வைக்கப்பட்டு
மரியாதை செய்யப்படுகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் இருந்தபோது அனைவருக்கும் உணவளிக்கும் பாங்கினை எங்கள் பல்கலைகழகத்தில் நாங்கள் தொடர்கின்றோம் அவரது நினைவாக.
சுப்பிரமணியம் (முருகன் தியேட்டர் )மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த நேரத்தில், சென்னையில் தியேட்டர் அதிபர்கள் அவரது படம் வெளியிட பயந்த சூழ்நிலையில் எங்கள் தியேட்டரில் மட்டுமே எங்கள் தந்தை பரமசிவம்
அவர்கள் துணிந்து வெளியிட்டார். அதற்கு காரணம், வடசென்னையில் எம்.ஜி.ஆர்.
அவர்கள் வசித்தபோது முதல் என் தந்தை அவருக்கு நெருங்கிய நண்பர்.
எங்களது குடும்ப நிகழ்ச்சி அனைத்திற்கும் எம்.ஜி.ஆர். பங்கேற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியபோது பல கோயில்களில் பிரார்த்தனை செய்து
பிரசாதங்களை என் தந்தை நேரில் சென்று அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். படங்கள் எங்கள் தியேட்டரில் வெளியிடும்போது எப்போதுமே வசூல் குவிக்க தவறியதில்லை. ஆனந்த ஜோதி, கலங்கரை விளக்கம்
போன்ற வெற்றி படங்கள் எங்கள் தியேட்டரில் முதல் வெளியீட்டில் வெளியாகி
வெற்றி நடை போட்டன. என் தந்தைக்கும், எங்கள் குடும்பத்திற்கும் பல உதவிகள்
செய்த எம்.ஜி.ஆர். அவர்களை எங்கள் இதயங்களில் வைத்து பூஜிக்கிறோம்.
பி.ஆர். விஜயலட்சுமி : ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகும்போது நான்
சிறுமியாக இருந்தேன் . அப்போது எம்.ஜி.ஆர். அவர்களை வெகுநேரம் பார்த்து கொண்டே இருப்பேன். அவ்வளவு அழகாகவும், ரோஜா கலரிலும் ஜொலிப்பார்.
நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, ஆகிய படங்கள் என் தந்தை எடுத்தவை. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், படம் எடுக்கும்போது ,என் தந்தை இறந்துவிட்டார்..
எம்.ஜி.ஆர். தேர்தலில் ஈடுபட்டு , வெற்றி பெற்று, முதல்வராக பதவி ஏற்க இருந்த சூழ்நிலையில் , எங்களுக்கு ஆறுதல் கூறி, பொருளாதார நிலையை ஆராய்ந்து ,
அவரே இயக்கி, நின்றுபோன படத்தை 5 ஒளிப்பதிவாளர்களை வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளை முடித்து , படத்தை முடித்துவிட்டுதான் முதல்வரானார்.
அந்த வகையில் அவர் செய்த உதவி சாலச் சிறந்தது.
தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் : எம்.ஜி.ஆர். அவர்கள் என் தந்தையாருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர்கள் நட்பானது எம்.ஜி.ஆர். அவர்கள் சிறு வேடங்களில் நடித்தபோது தொடங்கியது என்று என் தந்தையார் கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர். காதாநாயகன் வேடத்தில் நடித்த ராஜகுமாரி படத்தில் சண்டை காட்சிகளுக்கு
என் தந்தையை சிபாரிசு செய்தார். அந்த நட்பின் விளைவாகத்தான் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து 16 படங்கள் தேவர் பிலிம்ஸ் தயாரித்தது மருதமலை கோயிலில் ஒளி விளக்குகள் ஏற்ற என் தந்தை, எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒப்புதல்
வாங்கி , அவர் கைகளால் வெளிச்சம் தர ஏற்பாடு செய்தார்.
இசை அமைப்பாளர் கணேஷ் : எனது வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றியவரும் ,
வாழ்க்கை துணைவியை அடைய உதவியவரும் எம்.ஜி.ஆர். அவர்களே.
பிரபல தயாரிப்பாளரான திரு. ஜி.என். வேலுமணி அவர்களின் மகளை எனக்காக
எம்.ஜி.ஆர். அவர்களும், ஜானகி அம்மையாரும் பேசி திருமணம் செய்ய வைத்தனர். எனது மனைவியிடம் திருமணம் முடிந்ததும், ஜி.என்.வேலுமணி என்கிற பணக்கார பெண் என்கிற மமதை இன்றி கட்டிய கணவன் பேச்சைக் கேட்டு நடக்கும்படி அறிவுறுத்தினார். .நான் ஏன் பிறந்தேன் திரைப்படம் இசைஅமைக்க எம்.ஜி.ஆர். அவர்களை அணுகியபோது , விவரம் அறிந்த என் மாமனார் ஒத்துக் கொள்ளவில்லை .ஏனென்றால் விஸ்வநாதன் அவர்கள்தான் இசைஅமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்.
இதனால் படப்பிடிப்பு வேலைகள் தாமதம் ஆகின . எம்.ஜி.ஆர். அவர்களின் தொடர்ந்த ஆதரவினால் ஒருவழியாக என் மாமனார் ஒத்துக்கொண்டு பாடல்கள்
பதிவாகின. சித்திர சோலைகளே எனும் பாரதிதாசன் பாடல் படத்தின் சிறந்த பாடல்களில் ஒன்று. அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்ததில் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு பெருமகிழ்ச்சி. இதயவீண படத்திற்கு, இசைஅமைக்க வாய்ப்பு கேட்டபோது இசைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில்
அன்றைய காலகட்டத்தில் ரூ.40,000/- வாங்கி கொடுத்தார். ஆனால் பொன்னந்தி மாலை பொழுது பாடலின்போது கம்போசிங் செய்தபோது பல ட்யூன்கள் போட்டும்
சரிவராமல் திணறிபோனோம் . அப்போது பாடல் கம்போசிங் தாமதம் குறித்து விவரம் அறிந்து , எங்களை அழைத்து எல்லா ட்யூன்களையும் போட்டு காட்ட செய்து , தன்னுடைய நுட்பமான இசை ஞானத்தால் பாடல் உருவாக பெரும்
உதவி செய்து, பிரச்னைக்கு தீர்வளித்தது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.
வெடிகுண்டு விபத்தில் கை கால்கள் சிதைந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட என்னை பார்க்க
விரைந்தோடி வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் (மருத்துவர்கள் ஆலோசனையின்படி
ஒரு காலை எடுக்கவேண்டிய நிலையில் ) மருத்துவர்களிடம் பேசி, எவ்வளவு
செலவாகினும் நான் பார்த்து கொள்கிறேன் , என்று சொல்லி, எனக்கும் தைரியம்
கூறி, வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். இன்று நான் நடமாடுகிறேன்,
பணி செய்கிறேன் என்றால் , நான் உலவுவதற்கு காரணம் யாரென்றால் அந்த
மன்னாதி மன்னனாம், எனது இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்கள் தான்.
அவர் புண்ணியத்தில்தான் நான் வாழ்க்கை நடத்துகிறேன்.என்றார்.
மோகன் காந்திராமன் : என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் .ராயபேட்டையில் தாய்வீட்டில் வசிக்கும்போது அருகில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.. நான் சிறுவனாக இருக்கும்போது காலையில் நான்தான் எடுப்பேன்.
அப்பா இருக்கிறாரா என்று கேட்பார்.குரலை வைத்து கண்டுபிடித்து அப்பாவிடம்
சொல்லுவேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும் ஆர்லிக்ஸ், ஓவல் போன்ற பானங்கள் குடிப்பார். எங்கள் வீட்டில் அது கிடைக்காது . ஆகவே, அவர் வீட்டில் இருந்து வரவழைத்து எங்கள் வீட்டில் இருந்து தருவது போல் ஏற்பாடு செய்து
கொள்வார். எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பின் அவர் நினைவாக காலத்தை
வென்றவன் படம் வெளியிட்டு பெருமை சேர்த்தோம்.
இயக்குனர் கரு.பழனியப்பன் : எம்.ஜி.ஆர். அவர்களது படங்கள் இன்றைய தலைமுறையினருக்கு பாடங்கள்.ஜனரஞ்சகமான படங்கள் அளித்தார்.மக்களுக்கு
நிறைய சமுதாய சீர்திருத்த கருத்துக்கள், தன்னால் முடிந்த அளவில் படங்கள் மூலம் போதித்தார். அவர் ஒரு phenomenan .அவர் ஒரு encyclopedia
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் " பெற்றால்தான் பிள்ளையா ". இதை அவரே பல சமயங்களில் சொல்லி இருக்கிறார் . அப்போது நடிகை சரோஜாதேவி அவர்களுடன் நல்லுறவில் இல்லாத நேரம் . இதை உணர்ந்த இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் காட்சிகளை விவரித்தபோது , நான் நடிகன், நீங்கள் இயக்குனர் , என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்களோ , அது நிச்சயம் கிடைக்கும் . என்று கூறி நடித்தார்.
இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாத அந்த சமயத்தில் , சக்கரைக்கட்டி
ராஜாத்தி காதல் பாடலில் இருவரும் நெருங்கி நடித்து , அந்த காதல் பாடல்
இனிதே அமைந்து வெற்றி அடைய இருவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இந்த படத்தில், எம்.ஜி.ஆர். அவர்கள் தன் குணச்சித்திர வேடத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன் அத்தனை திறமைகளையும் கொட்டி தீர்த்ததோடு சோக காட்சியில் எம்.ஜி..ஆருக்கு நடிக்க வராது என்பவர்களை
யோசிக்க வைத்தார். படம் பெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது.
ஞான ராஜசேகரன் (அரசு உயர் அதிகாரி ): நான் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்கள் அதிகம் பார்த்ததுண்டு . எம்.ஜி.ஆர். படங்கள் அவ்வளவாக பார்த்தது
இல்லை.ஒரு சமயம் என்னை நாடி வந்த நண்பர் ஒருவர், எம்.ஜி.ஆர். அவர்களிடம்
உதவி கேட்டு கடிதம் எழுதி தரும்படி வேண்ட , போஸ்ட் கார்டில் எழுதி நான்தான்
போஸ்ட் செய்தேன். சினிமாவில் தான் எம்.ஜி.ஆர். நல்லவர், நிஜத்தில் அப்படி இல்லை என்று பலபேரிடம் நான் வாதம் செய்துள்ளேன் . இந்த காலத்திலும்
சினிமா நடிகர்களை நம்பி இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்களே என்று சொல்லி
திரிவேன். என்ன ஆச்சர்யம் என்றால், ஒரு வாரம் கழித்து, கணிசமான தொகை
மாதா மாதம் , மணிஆர்டர் மூலம் அந்த நபருக்கு பல ஆண்டுகள் வந்துகொண்டு இருந்தது . அந்த நபர் என்னிடம் கூறியதும் வாயடைத்துப் போனேன் .அன்றைய சூழ்நிலையில், அவருடைய தகுதிக்கு, அந்த கடிதத்தை பொருட்படுத்தி இருக்க வேண்டாம் . இருப்பினும் அடுத்தவருக்கு உதவும் குணம் இன்றைக்கு யாருக்கு இருக்கு.தன்னிடம் உதவி என்று கேட்டு எந்த வடிவில் வந்தாலும், அதை ஏற்று , அந்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள் அறிந்து நெகிழ்ந்து போனேன். அதன்பிறகு தான் நிறைய எம்.ஜி..ஆர். படங்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்து, அவருடைய வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் அப்பால் தனித்து நிற்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த மனிதநேய பண்பாளர் .
நடிகர் ஜெமினிகணேசன் மகள்கள்: எங்கள் தந்தை நடித்து வந்த காலம் , எம்.ஜி.ஆர்.
சிவாஜி, ஜெமினி எனும் மூவேந்தர்கள் நடித்த பொற்காலம் .எம்.ஜி..ஆர். அவர்கள் பற்றி என் தாய் தந்தையர் கூறி கேட்டதைவிட , எங்கள் வீட்டில் வேலை செய்யும் நபர்கள், உறவினர்கள், நண்பர்கள் கூறத்தான் அதிகம் கேட்டு தெரிந்துள்ளோம் .
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களை, கூட்டத்தோடு, கூட்டமாக முதல்நாள்
பார்த்து ரசித்துள்ளோம் . ஒரு சமயம், எங்க வீட்டு பிள்ளை படம் பார்த்து வந்த பின்
இரண்டு மாடிகள் , பெல்ட்டால் சுழற்றிக்கொண்டு , கீழே விழாத குறையில்
அம்மா கண் எதிர்ப்பட்டு ஓடியதும் உண்டு. எம்.ஜி.ஆர். மாமா படம் பார்த்தீர்களா
என்று கேட்டு பின்னர் அறைக்குள் சென்று குலுங்கி குலுங்கி சிரிப்பார்.
மது அருந்தாத காட்சிகள், புகை பிடிக்காத காட்சிகள், , ஏழை எளியோர்க்கு உதவும் காட்சிகள், அவரது சண்டை காட்சிகள், நீதி, நியாயம், தர்மம்,போதிக்கும், காட்சிகள், உரிமைக்குரல் எழுப்பும் காட்சிகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்திற்கும், என் தந்தை உடல்நலமில்லாதபோதும் பல உதவிகள் செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அவர்கள். முகராசி என்கிற படத்தில் எங்கள் தந்தை
எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்துள்ளார்.
வின்சென்ட் அசோகன் : என் தந்தை அசோகன் அவர்களுடன் திரையுலகில் பல ஆண்டுகள் , பல படங்களில் நடித்ததோடு, நெருங்கிய பழகியவர் எம்.ஜி.ஆர்.
அவர்கள். என் தந்தை மறைந்தபின் எங்கள் குடும்பத்திற்கு பல உதவிகள் செய்துள்ளார்.. எனது பட்டபடிப்பிற்கு கோவையில் அனுமதி வாங்கி தந்தவரும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே.
எம்.ஏ. முத்து (உடைஅலங்கார நிபுணர்): நான் இளைஞனாக இருந்தபோதில் இருந்தே எம்.ஜி.ஆர். அவர்களுடன் பழக்கம் உண்டு. அப்போது நான் வெளியூரில்
இருந்து அடிக்கடி சென்னைக்கு வருவேன். என்னை நிரந்தரமாக சென்னையில்
தங்க சொன்னபோது, நீங்கள் சொந்த படம் எடுத்தால் அதன் பிறகு நிரந்தரமாக
தங்குகிறேன் என்று கூறி, நான் வரமுடியாத சூழ்நிலையை தெரிவித்தபோது,
உன்னையும், உன் குடும்பத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம்
அளித்து, நிரந்தர வருவாய் அளித்து காப்பாற்றியவர் . நீ எப்படி உடை தைத்தாலும்
சிரமம் பார்க்காது நான் போட்டுக்கொள்கிறேன் என்று கூறி ஊக்குவித்தவர்.
அதே போல பல படங்களில் மக்கள் ரசனைக்கு தகுந்தாற்போல் உடைகள் அணிந்து பல்வேறு கஷ்டங்களை தாங்கி, மக்களின் பாராட்டை பெற்றவர் . என்னுடைய
பேருக்கும், புகழுக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் காரணம்.
இதயக்கனி விஜயன் : இறுதியாக திரு. விஜயன் அவர்கள் பேசும்போது,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் பாதுக்காக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் .
அரசு அவற்றை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனது இதயக்கனி மாத
இதழ் மூலமாக அவருடைய அருமைகள், பெருமைகள், திறமைகள், கொடைமைகள், வள்ளல்தன்மைகள் , ஆளுமைகள் , குணநலன்கள்
ஆகியன இன்றைய இளைய தலைமுறையினருக்கு சென்றடைய வேண்டும்
என்பதே எனது அவா !. என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
என்னுடன், திருவாளர்கள் தெனாலி ராஜன், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார், திருநின்றவூர் கோயில் நிர்வாகி கலைவாணன் ,,,
ஆழ்வார்திருநகரி ராஜப்பா வெங்கடாச்சாரி, ஆகிய நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்ந்தவர் கோடி ! நடித்தவர் கோடி ! மறைந்தவர் கோடி !
மக்கள் மனதில் நிற்பவர் என்றும் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். ஒருவரே.!
ஆர். லோகநாதன்.
.