Singam - MGR Version
https://www.youtube.com/watch?v=vjqVxmR1KeM
Printable View
Singam - MGR Version
https://www.youtube.com/watch?v=vjqVxmR1KeM
http://i62.tinypic.com/x3v86a.jpg
மையம் திரியில் மாபெரும் சாதனை.
எல்லா புகழும் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கே ..
நம் நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு 60,000 பதிவுகள் கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கும் , பார்வையாளர்களுக்கும் , பதிவாளர்களுக்கும் என்னுடைய அன்பு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் .
1947-2015
68 ஆணடுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்பட விளம்பரங்கள் திரைப்பட செய்திகள் , நிழற் படங்கள் , மக்கள் திலகத்தின் சினிமா , அரசியல் , மனித நேயம் பற்றிய பல் வேறு தொகுப்புகள் மறு வெளியீடு முழு தகவல்கள் , என்று வரலாற்று பொக்கிஷமாக நம் திரியில் இடம் பெற்று ஒரு இணைய தள நூலகமாக அமைந்திருப்பது மிகவும் ,மகிழ்ச்சி தருகிறது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்கள் இன்னும் உத் வேகத்துடன் திரியில் தங்களின் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ..நமக்கு மேலும் பல நல்ல செய்திகள் கிடைக்க உள்ளது . மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா , மலர் மாலை - 2 புத்தக வெளியீடு விழா. பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் ....
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிகளில் இடம் பெற்ற ஆவணங்கள் பற்றிய சிறு தொகுப்பு
1950 - 1977 ஆண்டுகளில் வெளிவந்த மாத,வார , தின இதழ்களில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் சினிமா பதிவுகள் .
முத்தாரம்
முல்லை
உமா
தென்றல்
நடிகன் குரல்
சமநீதி
மதி ஒளி
திரை உலகம்
கலை
திரைச்செய்தி
பேசும் படம்
பொம்மை
பிலிமாலயா
சித்ராலயா
தினத்தந்தி
முரசொலி
நவமணி
தென்னகம்
தினமணி
சுதேசமித்திரன்
அண்ணா
அலை ஓசை
அனைவருக்கும் வணக்கம்.
பணிகள் காரணமாக சில நாட்களாக வரமுடியவில்லை. மன்னிக்கவும். அனைவரின் பதிவுகளும் அற்புதம்.
தலைவரின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், ஆதாரபூர்வமான ஆவணங்கள், அவற்றின் சாட்சிகளாய் புத்தகங்கள், வார இதழ்களின் பக்கங்கள், அவற்றில் வெளியாகியுள்ள பேட்டிகள், நாளிதழ் செய்திகள், அபூர்வ தகவல்கள், பழைய படங்களின் காணக்கிடைக்காத விளம்பரங்கள், தலைவரின் படங்களின் வசூல் சாதனை புள்ளி விவரங்கள்.. என 60,000 பதிவுகளோடு கலைக் களஞ்சியமாக நமது திரி புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 6-ம் தேதி தொடங்கப்பட்ட நமது திரியின் இந்த பாகத்தை இப்போது, வரை 16,025 பேர் பார்வையிட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர். அனைவருக்கும் நன்றி.
ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில் தலைவரை இழிவுபடுத்துவதுபோன்ற காட்சியை நீக்க முயற்சிகள் மேற்கொண்ட பேராசிரியர் திரு.செல்வகுமார், திரு.மயில் ராஜ், திரு.பி.எஸ்.ராஜூ, திரு.சைலேஷ் சார் உள்ளிட்டோருக்கு நன்றிகள்.
என்ன செய்வது? மீனவ நண்பன் படத்தில் தலைவர் சொல்வார்..... ‘‘என்னை அவமானப்படுத்தறதா நினைக்கிறவங்க தன்னைத் தானே ஏமாத்திக்கிறாங்க’’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘செல்வர்கள் நீதி நன்றோ?’
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்களுக்கான 5 ஆண்டுகால ஊதிய மாற்று ஒப்பந்தம் 31-12-2011-ல் முடிந்து விட்டது. 2012 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆகியும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவரை 22 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் 20-ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மின்பற்றாக்குறை இருக்கும் நிலையில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மக்களுக்கும் கஷ்டம். ஆனாலும், என்.எல்.சி. நிர்வாகம் ஊதிய உயர்வு கிடையாது என்று விடாப்படியாக உள்ளது. தொழிலாளருக்கான ஊதியம் மற்றும் இதர சலுகைக்கான தொகை இப்போது ஆண்டுக்கு ரூ.1,330 கோடி. ஊதியத்தை உயர்த்தினால் அது ரூ.1,500 கோடியாக உயரும் என்று கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால், ‘‘பாவம்.....என்.எல்.சி. நிறுவனமும்தான் என்ன செய்யும்? ரூ.1,500 கோடிக்கு எங்கு செல்லும்?’’ என்று தோன்றும். ஆனால், இப்போது செலவாகும் 1,330 கோடியுடன் ஒப்பிட்டால் வெறும் ரூ.170 கோடி மட்டுமே ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும் என்பதே உண்மை..
என்.எல்.சி. நிறுவனத்தின் ஆண்டு லாபம் எவ்வளவு? 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.170 கோடி தொழிலாளருக்காக ஊதியம் அளித்தால் என்ன? ஊழியர்கள் 24 சதவீத ஊதிய உயர்வு கோருகின்றனர். ஊழியர்கள் கேட்பது ஊதிய மாற்று ஒப்பந்தம். அது 5 ஆண்டுகளுக்கானது. இப்போது, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் அது, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும். அப்படிக் கணக்கிட்டால் ஊதிய உயர்வு ஆண்டுக்கு தோராயமாக 5 சதவீத்துக்கும் குறைவாகவே இருக்கும்.
ஒரு வாதத்துக்கு நஷ்டம் என்றே வைத்துக் கொள்வோம். தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கி, மக்களுக்கும் சேவை செய்யத்தான் அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளனவே தவிர, லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளரையும் மக்களையும் சுரண்டுவதாக அவை இருக்க முடியாது.
நிலக்கரி நிறுவனம் செயல்படுவது தமிழ்நாட்டில். அங்கு கிடைக்கும் லாபம் மத்திய அரசுக்கு. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ராயல்டி தொகை மட்டுமே கொடுக்கிறது. அதுவும் பல கோடி ரூபாய் நிலுவை. இங்கிருந்து அண்டை மாநிலத்துக்கு மின்சாரம் செல்லும். ஆனால், அவர்கள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் செல்லும். ஆனால், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள். தெலுங்கு சினிமா உலகமே சென்னையில் இருந்து செயல்பட்டது ஒரு காலம். ஆந்திராவின் பொருளாதார மையமாகவும் சென்னை திகழ்ந்தது. ஆனால், பாலாற்றின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாது. ‘நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து இருவரும் ஊதி ஊதி தின்னலாம்’ என்பதற்கு பெயர்தான் தேசியம் நண்பர்களே.
அதற்காக, நான் பிரிவினை பேசவில்லை. சீன ஆக்கிரமிப்பின்போதே பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரிவினையை கைவிட்டு விட்டார். அப்போது நாடாளுமன்றத்தில் அவர் பேசிய வரலாற்று சிறப்பு மிக்க உரையில், ‘‘நாம் ஒன்றாக இருந்தால் நமக்குள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக நாம் ஆக்கிரமிக்கப்பட்டால் நிலைமை என்னாகும்? எனவே, நாட்டு நலன் கருதி பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால், பிரிவினை கோருவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’’ என்றார். பேரறிஞர் அண்ணா சொன்ன அந்தக் காரணங்கள் 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்கின்றன... வலுவாக.. என்பதுதான் வருத்தம்.
என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அதனால், ஏற்படும் நஷ்டம் எவ்வளவு? அதை தொழிலாளர்களுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக பணியாற்றுவார்களே? சென்னையில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. நெய்வேலியில் நாளை உண்ணாவிரதம் இருக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
மக்கள் திலகம் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ திரைப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் ‘சித்திரச் சோலைகளே..’ பாடல் தொழிலாளர்களின், உழைத்து உருக்குலைந்து போன அவர்களின் நிலையை, அப்பட்டமாக சொல்லும்.
ஒயிட் & ஒயிட்டில் ஒளிமயமாக தலைவர். பாடலின் ஆரம்பத்தில் பியானோ வாசித்துவிட்டு ஸ்டைலாக இருக்கையில் இருந்து (வலது புறம் மேடை இருக்க, நாம் எதிர்பாராமல் இடதுபுறம் அழகாக) அரைவட்டமாக திரும்பி, எழுந்து, இசையினூடே ரிதத்துடன் மேடையின் படிகளில் ஏறி அசால்டாக மைக்கை பிடித்து ‘சித்திரச் சோலைகளே....’ என்று ஆரம்பிக்கும்போது காலப் பிரமாணம் ஒரு விநாடி கூட தவறாமல் .... என்ன ஒரு டைமிங் சென்ஸ்.
பாதாம் அல்வாவை நாவில் எச்சில் ஊற பார்ப்பதுபோல, மக்கள் திலகத்தின் அழகையும் சுறுசுறுப்பையும் மகிழ்ச்சி பொங்க விரியும் விழிகளால் விழுங்கும் காஞ்சனாவை குறை சொல்ல முடியாதுதான். மக்கள் திலகத்தைப் பார்த்தால் அந்த நிலைதான் ஏற்படும். படம் வெளியாகும்போது மக்கள் திலகத்துக்கு 55 முடிந்து 56 வயது என்றால்... வெளிநாட்டினர் நம்புவது கடினம்.
ஒரு இடத்தில் குழந்தைகளிடம் தனக்கு உள்ள அன்பையும் ஆசையையும் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு மேஜையாக பரிமாற கேக்கை எடுத்துச் செல்லும்போது புயல் வேகமாகச் செல்பவரின் கண்களில் ஒரு குழந்தை பட, அப்படியே நிதானித்து, வேகம் குறைத்து கண்களில் கருணை வழிய குழந்தைக்கு கேக் கொடுக்கும் பாசமும் அழகும்.... ஏதோ படத்துக்காக நடிப்பது போலவே தெரியாது.
மத்திய அரசின் நவரத்தினா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த அளவுக்கு அந்நிறுவனத்தை உயர்த்தியிருப்பது யார்? படத்தில் மக்கள் திலகம் பாடும் வரிகளில் சொன்னால்...
ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதியந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்யல்லவோ?...
ஏற்கனவே வறுமையால் மக்கள் வாடிய நிலையில், பிரான்சில் புரட்சி வெடிக்க காரணமாக அமைந்தது ஆணவம் பிடித்த அரசியின் கிண்டல். ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? மக்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள்’ என்ற வார்த்தைகள்தான் பிரெஞ்சுப் புரட்சியை தவிர்க்க முடியாததாக்கி விட்டன. அந்த அரசியைப் போன்ற செல்வந்தர்களின் நிலையை புரட்சித் தலைவர் தோலுரிக்கிறார், புரட்சிக் கவிஞரின் பாடல் வழியாக....
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீயன்றோ?, பசி தீரும் என்றால்,
உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?
....செல்வர்கள் நீதி நன்றோ?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நாளை முதல் கோவை
டிலைட் திரை அரங்கில்
தர்மம் தலை காக்கும்
திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர் அவர்கள்
1962ல், நடிகர் திலகம் கலைத் தூதராக அழைக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவப்படுத்தப்பட்டார். இதற்காக, சிவாஜி அமெரிக்கா சென்று திரும்பிய போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலே எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது அவ் விழாவில்தான். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவ்விழாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது
நல்ல குணங்களுள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம் பெறுவது இயற்கை. ஆனால் மக்களால் வெறுக்கப்படும் பாத்திரங்களைத் தாங்கி, மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்ற படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார் சிவாஜி. . ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார் அவர். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ‘ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்த பாத்திரங்களைப் போலவே அவர் நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படம் எடுத்த போது) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும் தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்!
courtesy net