தினத்தந்தி -25/02/2017
http://i66.tinypic.com/14j9hmt.jpg
http://i66.tinypic.com/j5wfaw.jpg
Printable View
தினத்தந்தி -25/02/2017
http://i66.tinypic.com/14j9hmt.jpg
http://i66.tinypic.com/j5wfaw.jpg
http://i67.tinypic.com/v45n6f.jpg
நாங்கள் எல்லாம் அசந்தாலும், சற்றும் அசராமல் புரட்சித் தலைவரின் புகழ் பாடி 14 ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனை செய்துள்ள நண்பர் லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து புரட்சித் தலைவருக்கு தொண்டாற்றி சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
எல்லா பத்திரிகைகளிலும் புரட்சித் தலைவர் பற்றி வரும் செய்திகளை உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு கொண்டு செல்லும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
#உழைக்கும்கரங்கள் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்தது.
ஒரு காட்சியில் கதாநாயகன், கதாநாயகிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கவேண்டும்.
எம்ஜிஆர் தண்ணீர் எடுத்து லதா வைத்திருந்த பாத்திரத்தில் ஊற்றினார். அந்த ஷாட் முடிந்ததும் லதா பாத்திரத்தில் இருந்த நீரைக்கொட்டி விடும்படிச் சொல்ல, உதவி இயக்குனர் நீரைக் கொட்டப் போனார்.
அப்போது நடந்த நெழிச்சியான சம்பவம்...!
அங்கு கூடியிருந்த மக்கள் நீரைக் கொட்டவிடாமல் தடுத்து ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்து குடித்தனர். இதைக் கண்டு திடுக்கிட்ட எம்ஜிஆர், அந்தக்கூட்டத்தில் முதலிடம் வகித்து நீரைப்பகிர்ந்து கொடுத்தவரைக் கூப்பிட்டு "என் கை பட்டு அழுக்கா இருக்கிற தண்ணியை ஏன் கொடுக்கற. கிணத்து நிறைய தான் தண்ணி இருக்கே. அதை எடுத்துக்கொடுக்கலாமே" என்றவரை இடைமறித்து,
"உங்க கை பட்டதால தானே நாங்க இந்த தண்ணிய பிரசாதமா நினைச்சு குடிக்கிறோம்... இங்கே தண்ணியா இல்ல..." என்றார்.
எம்ஜிஆரால் பேசமுடியவில்லை. கண்கள் பனித்தன.
#எம்ஜிஆருக்கும், #ரசிகர்களுக்கும் #உள்ள #தொடர்பு...#இறைவனுக்கும் #பக்தனுக்கும் #உள்ள #தொடர்பு #என்பது #யாராலும் #மறுக்கமுடியாத #உண்மை
http://i68.tinypic.com/2nw0rqb.jpg
நன்றி - பால சுப்பிரமணியன் அவர்கள் முகநூல்
24.02.2017 முதல்
கோவை ராயல்
திரை அரங்கில்
மாட்டுக்கார வேலன்
Makkalthilagam's photos, documents with take too effort level. Our thread... One of the Super Participate fellow Mr. Loganathan proudly gets superior milestones 14001 postings... Hats off...
1980-ம் வருசம் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நடிகர் பிரசாரம் செய்ததால்தான் அதிமுக தோற்றது என்று சிரிப்பே வராமல் பச்சையாக பொய் சொல்லி ஒரு திரியிலே பதிவிடுவார்கள். அது அவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாது. இது உண்மையானால் 1989-ம் வருசம் தேர்தலில் திருவையாறு தொகுதியில் அந்த நடிகரை எதிர்த்து நின்ற எல்லாருக்கும் டெபாசிட் போயிருக்க வேண்டுமே. நடந்தது என்னவென்று தமிழ்நாடே பார்த்தது. அந்த நடிகரை அழித்தது காங்கிரஸ்தான். அவர் கட்சியிலேயே அவரை மதிக்கவே மாட்டார்கள். அந்தக் கோவத்தில்தான் அவர் பின்னர் இப்படி பேசினார்.
நன்றி – முகநூல்.
http://i65.tinypic.com/s1ry15.jpg
காமராஜரை மட்டம் தட்டி கட்சியிலிருந்து தூக்கி எறிந்து அழிச்சது இந்திரா காந்தி. திராவிட இயக்கத்தினர் இல்லை. கடைசியில் அதே இந்திர காந்தியிடம்தான் அந்த நடிகரும் போய் சேர்ந்தார்.
சென்னையில் பாதி நாட்கள் கூட்டம் வராமல் காட்சி ரத்தாகிய படத்தை 100 நாள் ஓடியதாக சொல்லி அதற்கு விழா கொண்டாடுவார்கள். முதல் வெளியீட்டில் சென்னையை தவிர வேறு எங்கும் 50 நாள் கூட ஓடாத அந்தப் படம் 250 நாட்கள் ஓடியதாக பச்சை பொய் வேறு (ஆண்டவா. கேட்க ஆளே இல்லியா?)
http://i64.tinypic.com/2ed76ll.jpg
http://i64.tinypic.com/syavt2.jpg
புரட்சித் தலைவரைப் புகழ்ந்து டைரக்டர் கரு.பழனியப்பன் பேச்சை விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு பார்க்கும் அரிச்சந்திரனின் பேரக் குஞ்சுங்கள் அவருக்கு அறிவுரை வேறு சொல்வார்கள். தங்கள் பக்கத்தில் இருந்து பொய்கள் வரும்போது ஐந்து புலன்களையும் இறுக்கி மூடிக் கொள்வார்கள். அங்கே 100% பொய்தான்.
நன்றாக சொன்னீர்கள் சார்.
தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள இந்திரா காந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்தபோது, நான் மிகவும் மதிக்கும் பெருந்தலைவர் காமராஜர் மனம் நொந்து வேதனைப்பட்டார். உடல் நிலையும் சரியில்லை. அதிகம் வெளியிலேயேயும் வரவில்லை. போராட்டம் எல்லாம் நடத்தவில்லை. மனம் நொந்துபோய் 3 மாதங்களில் இறந்துபோய் விட்டார். (ஆனால், அப்போது தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் மீதும் அதிமுகவினர் மீதும் அராஜகத்தை ஏவிய ஊழலில் ஊறிய திமுக ஆட்சியைவிட நெருக்கடி நிலையே மேல் என்ற நிலைமை. அதனால்தான் புரட்சித் தலைவர் நெருக்கடி நிலையை ஆதரித்தார்)
காமராஜரின் சரிவுக்கு இந்திரா காந்திதான் காரணம். நாகர்கோயிலில் ரயில் சேவை விழாவில் பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் கருணாநிதியுடன் தொகுதி எம்.பி. என்ற முறையில் காமராஜரும் கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ஓரமாக நாற்காலி போட்டு அவமானப்படுத்தினார்கள். காமராஜரை இந்திரா காந்தி திரும்பிக் கூட பார்க்கவில்லை.
காமராஜர் மறைந்த 4 மாதத்துக்குள் அவரது சீடர்கள் இந்திரா காங்கிரஸில் சேர்ந்துவிட்டார்கள். என் மதிப்புக்குரிய மூப்பனார் அய்யா மீது கூட எனக்கு இதில் வருத்தம் உண்டு. அவர், பா.ரா. போன்ற மூத்த தலைவர்கள் ஸ்தாபன காங்கிரஸை நடத்தியிருக்கலாம்.
இன்னொன்று, இப்போது சென்னையில் ஒரு சிலையை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள் தி.க.,திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர் ஒரு காங்கிரஸ்காரர். தியாகி என்கிறார்கள். அவர் இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறார். சிலைக்காக வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்காரர்கள், வழக்கு போட்டவரை கட்சியை விட்டு நீக்கவில்லை. இதுதான் காங்கிரஸ் பாரம்பரியம்.
http://i63.tinypic.com/14uf446.jpg
எனது 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அறிவித்த அன்பு நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கும், திரு. சுஹாராம் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் முதல் தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் போட்ட திண்டுக்கல் மாநகரில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா எளிமையாகவும், மிக சிறப்பாகவும் , திண்டுக்கல் திரு. மலரவன் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிறு அன்று (26/02/2017) திண்டுக்கல், பழனி சாலை அருகில் உள்ள நாகலட்சுமி திருமண மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது . நிகழ்ச்சி ஏற்பாடு : திண்டுக்கல், திருச்சி மாவட்ட மனித நேய மாணிக்கம் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, மற்றும், மனிதநேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக் கட்டளை .
முழுக்க, முழுக்க மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் / தொண்டர்கள்/ரசிகர்கள் மட்டுமே அரசியல் சார்பற்ற முறையில் பங்கேற்ற நிகழ்ச்சி.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், நெய்வேலி பாண்டிச்சேரி ,தூத்துக்குடி ,ஆரணி, சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
திண்டுக்கல் பழனி சாலையில் ஆங்காங்கே புரட்சி தலைவர் உருவம் பொருந்திய பேனர்கள் / பதாகைகள் /சுவரொட்டிகள் நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபம் வரையில் ,வருகை தந்த பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன .
காலை 10 மணியளவில் திரு. மலரவன் அவர்கள் தலைமை ஏற்று , அனைவரையும் வரவேற்று பேச நிகழ்ச்சி துவங்கியது .
பின்னர் , பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் / தொண்டர்கள்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் வகையில், அருமை, பெருமைகள்
உரையாற்றும் வண்ணம் பேச பின்வருமாறு ,,வரிசையாக அழைக்கப்பட்டனர் .
திருவாளர்கள் : மனோகரன், மின்னல் பிரியன், துரைசாமி, வெங்கடராமன் தியாகு ,கலியபெருமாள் , அர்ச்சுனன் , சந்திரசேகரன், லோகநாதன் ,
பின்பு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த , திரு. துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ) பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தொடர்பு கொண்டது
பற்றி விரிவாக பேசியும், பத்திரிகைகளில் அவரை பற்றி எழுதி வருவதை தெளிவுபடுத்தியும் அனைவரையும் கவர்ந்தார்
பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் சுமார் 300 பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது .
உணவு இடைவேளைக்கு பின் , வேந்தர் டிவியில் ஒளிபரப்பான தடம் பதித்தவர்கள் பட்டியலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.-தொடர் சிறிய வெள்ளித்திரையில் பக்தர்கள் கண்டுகளிக்க காண்பிக்கப்பட்டது .இந்த தொடர் காண்பிக்கப்பட்டபோது ,பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன்,பலத்த கரகோஷத்துடன் கண்டு ரசித்தனர் .
மாலை 5 மணியளவில் அனைவருக்கும் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக ,மேலும் சில முக்கிய பக்தர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் உரையாற்ற அழைக்கப்பட்டனர் . அவர்களின் விவரம் :
திருவாளர்கள்: ரவிச்சந்திரன் , ரவிசங்கர் , ம.சோ.நாராயணன், ராஜப்பா சுவாமி ,
கிருஷ்ணன், பிரேம்ராஜ்(தடம் பதித்தவர்கள் -வேந்தர் டிவி ), சிரஞ்சீவி அனீஸ் (பத்திரிகை ஆசிரியர் ) , சிவகுமார் (பொன்மனம் பண்பலை வரிசை புகழ் ),
கோவை தொழிலதிபர் லீமா ரோஸ் ஆகியோர்.
உடல்நல குறைவு காரணமாக ,முன்னாள் கல்வி அமைச்சர் திரு. அரங்கநாயகம் ,அவர்கள் பங்கேற்க்க இயலவில்லை என்று கூட்டத்தில் திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ) அறிவித்தார் .திரு.கே.பி.ஆர். கோவிந்தராஜன், மற்றும் திரு. ஸ்ரீதர்
சுவாமிநாதன் ஆகியோர் சொந்த காரணங்களால் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது .
நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ,பங்கேற்ற முக்கிய பக்தர்களுக்கும், சிறப்பு
விருந்தினர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , விழாவினை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு அளித்து வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து
திரு. மலரவன் நன்றியுரை வாசித்து முடித்தார் .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
நாளை பதிவிடப்படும்