கார்த்திக்காக காத்திருக்கும் நயனதாரா!
லிங்குச்சாமியின் படத்தில் நடிக்க நாயகன் கார்த்தி இன்னும் வராததால், அவருக்காக நாயகி நயனதாரா உள்ளிட்ட ஒட்டுமொத்த யூனிட்டும் காத்திருக்கிறதாம்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. இப்படம் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில்தான் லிங்குச்சாமியின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கார்த்தி. அவருக்கு ஜோடியாக நயனதாரா புக் ஆனார். இப்படத்தில் நயனதாராவுத்து ரூ. 1 கோடி சம்பளம் பேசியுள்ளனர்.
எல்லாம் ரெடியானாலும், படத்தின் நாயகன் கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து விடுபட முடியாமல் இருப்பதால் லிங்குச்சாமியின் படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், நயனதாரா இந்தப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்து விட்டதால், வேறு படத்திற்கு போகாமல் காத்திருக்கிறார்.
எப்போது கார்த்தி வருவார், காத்திருப்பு முடியும், மேக்கப்பைப் போடலாம் நயனதாரா காத்திருக்கிறாராம்.
http://thatstamil.oneindia.in/movies...or-karthi.html