வாசு சார்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மிகவும் அபூர்வமான பாடல்களின் தொகுப்பில் இளையராஜாவின் இசையமுதைப் பருகவைத்த தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். அதுவும் இசையரசியின் குரலில் அட்டகாசமான பாடலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
Printable View
வாசு சார்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மிகவும் அபூர்வமான பாடல்களின் தொகுப்பில் இளையராஜாவின் இசையமுதைப் பருகவைத்த தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். அதுவும் இசையரசியின் குரலில் அட்டகாசமான பாடலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
முரளி தரன் சார்
வருக வருக தங்கள் பங்களிப்பினைத் தருக தருக
கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த கஸ்தூரி நிவாசா - என்ற கன்னட படம் 1971ல் வந்த .கருப்பு வெள்ளை படம் .
2.5 கோடி செலவில் முழு வண்ணப்படமாக்கபட்டு கடந்த வெள்ளிகிழமை பெங்களுர் நகரில் 13 அரங்கிலும் மற்றும்
கர்நாடக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் திரையிடப்பட்டு உள்ளது ..புதுமையான முயற்சி . படத்தின் தரமும்
நன்றாக உள்ளது .முதல் மூன்று நாளில் பெங்களூர் - மைசூர் - ஹாசான் போன்ற இடங்களில் ரசிகர்கள் ஆதரவு
அதிகமாக இருந்தது . படத்தின் வெற்றி பற்றி அடுத்த வாரம்தான் தெரிய வரும் .
கருப்பு வெள்ளையில் இருந்த பாடல் .
http://youtu.be/dZjen3-el2s
வண்ணத்தில் அதே பாடல் .
http://youtu.be/_IW35sLC6n0
celebration - super song
http://youtu.be/Yg41RTMHP3o
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 16)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
இளையராஜா தொடரில் இன்று அருமையான பாடல்கள் நிறைந்த ஒரு அபூர்வ படம்.
எஸ்பி.வி. பிலிம்ஸ்
'துணையிருப்பாள் மீனாட்சி'.
http://www.photofast.ca/files/products/6499.jpg
சிவக்குமார், விஜயகுமார் போன்ற குமார்கள், சுஜாதா, அபர்ணா, மௌலி, மனோரமா ஆகியோர் நடித்தது. கே.என்.சுப்பையா தயாரிக்க வலம்புரி சோமநாதன் இயக்கியிருந்தார்.
இதுவும் ஒரு கருப்பு வெள்ளைப் படம்தான். சிவக்குமார் பத்தினியாக சுஜாதா சோகமான பாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். வறுமையில் வாடும் குடும்பம். சுஜாதாவின் மாமியார், நாத்தனார் கொடுமைகள், வறுமைக்கு பயந்து சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி சாமியார் ரேஞ்சுக்கு வாழ்தல், மாமியாரால் கற்புக்கு வீண்பழி, சுஜாதாவும் பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றம், பிள்ளைகளுடன் பட்டினிப் போராட்டம், பணக்கார சொர்ணாவின் விஜயகுமார் மீதான காதல், விஜயகுமார் மாமனாரின் (தங்கவேலு) தயவால் உயர்வு, நடுவில் லண்டன் தேங்காய் ஸ்ரீனிவாசனின் குடி, காம வில்லத்தனம், அப்பா மகன் உறவு தெரியாமலேயே சிவக்குமார் அவர் மகனின் உணர்வுப் பாசம், இறுதியில் கணவன் மனைவி தனித்தனியாக பல்வேறு சிரமங்கள் பட்டு, பிள்ளையின் உதவியால், மீனாட்சியின் அருளால் ஒன்று சேர்வதுதான் கதை. அரைத்த, புளித்த, நல்ல தங்காள் மற்றும் சந்திரமதி கதைகள் சாயல் போலத்தான். முடிவு 'மீனாட்சி' டைட்டிலில் 'துணை'யாய் இருந்ததால் சுபம்... சுகம்.
http://i.ytimg.com/vi/h5xGfZkPBR8/hqdefault.jpg
ஆனால் சுஜாதா என்ற அற்புதம் நம்மை ஆட்கொண்டது விடுவதால் அனைத்தும் மறந்து விடுகிறது. சிவா வழக்கம் போல ஒரே மதிரி. அவர் தம்பியாக விஜயகுமார் கிராமத்தானாக வந்து பணக்கார நங்கை சொர்ணா வைக் (பட்டினப் பிரவேசம் புகழ்) காதலிக்கிறார். அதே போல கொடுமைக்கார மாமியாருக்கு சி.கே.சரஸ்வதி. நாத்தனாருக்கு விஜயசந்திரிகா.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
இதிலே கூட ராஜாவின் சாதனை அத்தனை விஷயங்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது வழக்கம் போல். மொத்தம் 6 பாடல்களில் லட்டு லட்டாய் 4 பாடல்கள். சுஜாதாவுக்கு படுபாந்தமாய்ப் பொருந்தும் இசையரசியின் குரல். அந்தக் குரலுக்கேற்ற பாவங்களை அழகாகத் தரும் சுஜாதா. பாடல்களைப் பார்ப்போம்.
1. வறுமை சற்றே குடும்பத்தைத் தாக்க ஆரம்பிக்க கணவன் சிவக்குமார் சோர்ந்து போக வீணை எடுத்து இசை மீட்டி மனைவி சுஜாதா கணவனுக்கு நம்பிக்கையூட்டி பாடும் பாடல்.
சுகமோ ஆயிரம்
உறவோ காவியம்
அந்தக் கலைவாணியே வீணை எடுத்து மீட்டினால் என்ன சுகம் வருமோ அந்த சுகத்தை இசையரசி பாடும் போது உணரலாம்.
வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு
அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு
வளர்ந்தாலும் குறைந்தாலும்
நிலவொன்று ஒளி வீசும்
அதைக் காணும் பலம் வேண்டும்
விளையாடும் மனம் வேண்டும்
மிக அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள். மென்மையான வீணையின் இசை சுகம். மந்திரக் கயிறு போட்டு கட்டுண்டது போல மனம் மயங்கும்.
https://www.youtube.com/watch?v=F_zo...yer_detailpage
2. சுஜாதா வீட்டை விட்டு வெளியேறி தங்க இடமில்லாமல், பசியால் வாடும் குழந்தைகளுடன், கொட்டும் மழையில் வீராணம் சிமெண்ட் குழாயில் அழுதபடியே பாடும் சோக கீதம். உள்ளத்தை அழுத்தும் இமயமலை பாரம். சுசீலாவின் சோகத்தைப் பிழிந்தெடுக்கும் குரல். இதயத்தின் அடித்தளத்தில் நங்கூரமாய்ப் பதியும் ராஜாவின் இசை, மேக்-அப் இல்லாத சுஜாதா.
சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வரி தெரியவில்லை
என்று சோகமாய் இசையரசி இழுக்க, அதற்கு சுஜாதா தரும் பாவங்கள் அருமையோ அருமை! (சே!என்ன மாதிரி நடிகை இவர்!) ஆனால் இவரும் பின்னால் வந்த படங்களில் உப்பு சப்பில்லாமல் ஏனோ தானோ என்று 'தேமே' என்று நின்று ஒரே மாதிரி நடிக்க ஆரம்பித்ததுதான் வருத்தம். அதற்கு அவருடைய உடல்நிலை காரணமாயும் இருந்திருக்கலாம்.
மனதைக் குடையும் பாடல்.
நீரின்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
இசையரசி கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுவார்.
ராஜேஷ்ஜி!
7 வருடங்களுக்கு முன்பாகவே இசையரசியின் மேல் தங்களுக்கிருக்கும் இணையற்ற பற்றுதலால் இந்தப் பாடலை யூ டியூபில் அப்லோட் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=h5xGfZkPBR8&feature=player_detailpage
3. சரி சோகம் போதும். ஒரு ஜாலி டூயட்டிற்கு வந்திடுவோம். சிவக்குமாரின் விவசாயி தம்பி விஜயகுமாருக்கும், கையகலக் கருப்பு கண்ணாடி அணிந்த நாகரீக சொர்ணாவுக்கும் அருமையான காதல் பாடல்.
சேற்றில் ஒரு செங்கழநீர்
திங்கள் ஒரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூப்பறித்து
போற்றி உன்னைத் துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
பெண் குரலுக்கு ஜானகி. அழகாகவே இருக்கும். ஆனால் இந்தப் பாடலுக்கு ராஜா மிகச் சரியாக ஆண் குரலுக்கு பிடித்தார் பாருங்கள் 'பாடகர் திலக'த்தை. டி .எம்.எஸ் அற்புதமாக ஜானகியுடன் சேர்ந்து தந்து அனுபவத்தை அப்பட்டமாகக் காண்பிப்பார் ஹை-பிட்சில் பிடி பிடி என்று படிப்படியாகப் பிடித்தபடியே. கொடைக்கானலின் குளுகுளு சுகம் இந்த folk டைப் பாடலில் கிடைப்பது நிஜம்.
https://www.youtube.com/watch?v=9wt7jpwinEw&feature=player_detailpage
4. இதுவல்லாமல் சுஜாதாவின் இந்திரா உள்ளிட்ட குழந்தைகள் தெருவில் பிச்சை எடுத்து பாடும் பரிதாபப் பாடல். (சசிரேகா மற்றும் கோஷ்டிகளின் குரல்களில்)
அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்துக் கும்பிடுவோம்
5. மற்றும் ஒரு 'ஹரிச்சந்திரா' நாடகப் பாடல். நாடகம் பார்க்க வரும் சிவக்குமாரும், சுஜாதாவும் தங்களை ஹரிச்சந்திரனாகவும், சந்திரமதியாகவும் கற்பனை செய்து கொண்டு பார்க்கும் நாடகப் பாடல். 'மலேஷியா' வாசுதேவனின் கம்பீரக் குரலில்.
சத்திய சோதனை எத்தனை ஆயினும்
சகிப்பவன்தானே சத்தியவான்.
6. 'தாயவளின் திருத்தாள் பணிந்தேன்' என்ற ராஜாவின் குரலில் கோரஸ் குரல்களுடன் ஒலிக்கும் பாடல். இது சுமார் ரகம்தான்.
மீனாட்சி துணை இருக்கிறாளோ இல்லையோ
பல பேருக்கு இளையராஜா துணையிருந்தார் என்று மீண்டும் நிரூபித்த படம்.
//. அரைத்த, புளித்த, நல்ல தங்காள் மற்றும் சந்திரமதி கதைகள் சாயல் போலத்தான். முடிவு 'மீனாட்சி' டைட்டிலில் 'துணை'யாய் இருந்ததால் சுபம்... சுகம். // nice write up vasu sir. I didnt see this movie. But I heard only one song sEtril oru sengaLuneer thingaL our poo malarum.. nalla paattu.. Other pattus i will hear and let you know.. Thanks vasu sir.. :)
நன்றி கல்நாயக் சார் மற்றும் சின்னக் கண்ணன் சார்.
கோ,
'நடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி' தொடருக்கு வாழ்த்துக்கள் என்றெல்லாம் எழுதப் போவதில்லை.
தங்களின் 'நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிக'னின் பிரமிப்பே இன்னும் அடங்காத நிலையில் அடுத்த பிரமிப்பை தாங்கள் அளிக்கத் தயாராகி விட்டது எங்களின் அதிர்ஷ்டத்தையே காட்டுகிறது. அனுபவிக்கக் காத்திருக்கிறேன். திசை மரபின் எழுச்சி திசை எட்டும் புகழ்க்கொடி நாட்டும் தங்கள் முந்தைய தொடரைப் போல.