https://www.youtube.com/watch?t=58&v=8xPaKDCzPEg
Printable View
முகநூலில், அய்யா நடிகர் திலகத்தின் புகழ்,பெருமைகளை
எனக்குத் தெரிந்த வரை பேசும்
பொருட்டு நான் துவக்கிய
"சிவாஜி பக்கம்" (Page)
இன்றுடன் தன் ஓராண்டினை
நிறைவு செய்கிறது.
இந்த நிமிஷம் வரை 745 விருப்பங்களைப் பெற்று
நாளுக்கு நாள் முன்னேறி
வருகிறது ..."சிவாஜி பக்கம்".
அதில் நான் தொடர்ந்து எழுதி
வரும் "ஒரு விசிறியின் கவிக்காற்று" எனும் தலைப்பிலான கவிதைகளுக்கு
சிவாஜி பேரவையின் தலைவர் மதிப்பிற்குரிய திரு.சந்திரசேகரன் அவர்கள் தீவிர
ரசிகர் என்பது எனக்குப் பெருமையான விஷயம்.
அது போன்றே
நமது நடிகர் திலகம் திரிக்கும்,
முகநூலுக்கும் பொதுவான
அய்யா திரு.ராகவேந்திரா,
அய்யா.திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
திரு.சுந்தரராஜன்,திரு.செந்தில்வேல் உள்ளிட்டோரின்
பலத்த ஆதரவு சிவாஜி பக்கத்தின் பெரும் பலம்.
சிவாஜி பக்கத்தில் நானெழுதும்
"நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்" எனும் தலைப்பிலான
படைப்புகளை நம் திரியிலும்
தொடர விருப்பம்.
வாழ்த்துங்கள்..வளர்வேன்.
உங்கள் மனமென்னும்
சோலைக்குள்
மலர்வேன்.
-------
என்றும் சிவாஜி புகழ்
இருக்கும்.
எங்கும் எங்கள் கொடி
பறக்கும்.
ஆதவன் ரவி-
மணிமண்டப அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதற்கு இவ்வளவு நன்றியறிவிப்புக்கள் அதிகப்படியோ என்று தோன்றுகிறது (நன்றி சொல்வது அவரவர்கள் இஷ்டமாயினும்).
2001 முதல் 2006 வரை நாலரை ஆண்டுகள், 2011 முதல் 2015 வரை நாலரை ஆண்டுகள், மொத்தம் ஒன்பது ஆண்டுகளில் ஏன் மணிமண்டபம் கட்டப்படவில்லை என்று கேள்வி வராவண்ணம் நடிகர்சங்கத்தின் மேல் பாரத்தை போட்டாச்சு.
(இடையில் 2006 - 2011ல் கருணாநிதி புகுந்து சிலை வைத்து பெயர் தட்டிக்கொண்டார் என்ற எரிச்சல் ஒருபக்கம். அந்த சிலையை அகற்றும் ஆயுதமாக முதல்வர் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் மணிமண்டப அறிவிப்போ என்ற சந்தேகம் இன்னும் தீரவில்லை).
நடிகர்திலகம் காங்கிரஸ்காரர் என்று உரிமை கொண்டாடிய விஜயதாரணியின் வாயை அடக்க 'அவர் எல்லோருக்கும் சொந்தமானவர்' என்ற வார்த்தையை போட்டாச்சு. (காங்கிரஸ்காரர் என்று உரிமை கொண்டாடினார்களே தவிர அவருக்காக ஒரு துரும்பைக்கூட அசைத்ததில்லை, சத்யமூர்த்தி பவனில் அவர் படத்தை வைக்க காங்கிரசாருக்கு துப்பில்லை என்பது வேறு விஷயம்) . சட்டமன்றத்தில் எல்லா பெண் உறுப்பினர்களும் பொம்மைகளாய் அமர்ந்திருக்க இந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ. மட்டும் தனக்கு சரிநிகராக சட்டமன்றத்தில் வாதிடுவது முதல்வருக்கு இன்னொரு எரிச்சல்.
இதுவரை 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட ரூ. 84.000 கோடிக்கான பல்வேறு திட்டங்களில் இதுவரை ரூ. 11.000 கோடிக்கான திட்டங்கள் மட்டுமே செயல்வடிவம் பெற்றிருப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தின்போது ஆளுங்கட்சி சப்போர்ட் எம்.எல்.ஏ.வான செ.கு.தமிழரசனே ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே மணிமண்டபம் கட்டி முடிந்து நாளை திறப்புவிழா என்று வரும்போது முதல்வரை நமது பாராட்டுக்கடலில் மூழ்கடிப்போமே.
கடலா தெரண்ட சனம்
கண்ணு சொக்கி நிக்காதோ?
விரிச்ச கண்ணு அம்புட்டையும்
உம்ம மேலே வைக்காதோ?
இனிப்பு மேலே ஈ போல
கூட்டம் உம்ம மொய்க்காதோ?
கிழிஞ்சு போன மனசுகளை
ஒங்க திறமை ஊசி தைக்காதோ?
நீங்கள் கருதறுக்கும் அருவாளா
புருவத்த ஏத்துறத..
கைவீசி நடப்பதையே
நாட்டியமா மாத்துறத..
ஓங்க திறம் பாத்து
ஊர் அசந்து நிக்கிறதை..
உசுரயே அவுக எல்லாம்
ஒங்க மேலே வைக்கிறத..
எங்கனயோ ஒளிஞ்சிருந்து
எமப் பய பாத்துருக்கான்.
இந்தாளு ஆட்டத்தை
நம்மாளுகளும் பாக்கட்டும்னு
மேலே கொண்டு சேத்துருக்கான்.
-ஆதவன் ரவி-
Rks,
நீங்க ஒருத்தர் தான் இந்த ரணகளத்துலயும் வீரபாண்டிய கட்டபொம்மன் நிலவரம் குறித்து அப்பப்ப சொல்லிட்டிருந்தீங்க .. தொடர்ந்து செய்யுங்க .
"சரஸ்வதி சபதம்".
கணிசமான கால
இடைவெளிக்குப் பிறகு,
வீட்டில் போட்டுப் பார்த்தேன்.
விடுமுறை நாளின் ஓய்வு
சந்தோஷத்தை அதிகமாக்கிற்று
திரைப்படம்.
நமக்கு மிக,மிகப் பிடித்து
விட்டவிஷயங்கள் எத்தனை
காலமானாலும் நம்மை
விட்டு கொஞ்சம் கூட
விலகுவதில்லை.
தவிர, அந்த விஷயத்துடனான
நம்முடைய மகிழ்வான
ஈடுபாட்டை அந்தக் கால
இடைவெளி அதிகமாக்கிக்
கொண்டுதானிருக்கிறது.
இந்தப் படத்தின் ஒரு காட்சி
அதற்கு உதாரணம்.
பிறப்பிலிருந்தே வாய் பேச
முடியாத அப்பாவியாய்
அறிமுகமாகி,
திருடனென்று தவறாக
நினைத்த நந்தவனக்
காவலாளிகளிடம் அடிவாங்கி,
அழுது கலங்கி ஒடி வந்து,
அன்னை கலைவாணியின்
அருள் வடிவத்திற்கு
முன்னமர்ந்து,
"என் குறை போக்கு.. என்னைப்
பேச வை."-என்பதைக் கூட
பேச மொழியின்றி,
வேதனைக் குரலையும்,
விம்மலையுமே
கோரிக்கைகளாக்கி,
நடுங்கும் விரல்களால் மலர்
தூவிக் கசிந்து,
கசிந்த கண்முன்னே
கருணையுடன் கலைவாணி
தோன்றி.. குரல் தந்து, கவி
தந்து மறைந்து விட,
கருத்த முகமும், கலங்கிச்
சிவந்த விழிகளும், நெற்றியில்
திருநீற்றுப் பட்டையும்,ரத்தம்
வழியும் வலப்புறக்
கன்னமுமாய்
அலங்கோலமாயிருந்த தோற்றம் மாறி..
நிமிர்ந்த நன்னெஞ்சு, நேர்
கொண்ட பார்வையுடனொரு
ராஜகம்பீரத் திருவுருவாய்ப்
பேசத் துவங்குவாரே..
அந்தக் காட்சி உதாரணம்.
கடவுளே நேர் வந்து குறை
தீர்த்தாயிற்று.
"கொஞ்சங் கொஞ்சமாகத்தான்
உனக்குப் பேச்சு வரும்" என்று
இறைவி, நிபந்தனையெல்லாம்
விதிக்கவில்லை.
என்றாலுங் கூட..
பிறந்தது தொட்டு,
வாலிபமாய்
நிமிர்ந்திருக்கிற இந்த நிமிஷம்
வரைக்கும் பேச்சின்றிக் கிடந்த
ஒருவன், தான் பேசும் முதல்
வார்த்தையை எத்தனை
ஆசையாய், எத்தனை காதலாய்
வெளிப்படுத்துவான் என்பதற்கு,
அய்யா நடிகர் திலகம் கண்கள்
சுருக்கி, ஆழ் மனதிலிருந்து
முதல் வார்த்தை தேடி,"ம்மா"
என்று ஆர்வ ஓசையுடன்
சொல்வதற்கு எடுத்துக்
கொள்கிற கால அவகாசத்தில்
நாமுணர்கிற அவரது கலை
ஈடுபாடு, கலைவாணியை
அவர் வணங்குதல் போல்...
நாம் அவரை வணங்கத் தக்கது.
********
இன்னொன்று..
நிறையத் தடவைகள் பார்த்துப்
பார்த்துப் பழசான
காட்சிகளானாலும், அய்யா
நடிக்கையில் ஒவ்வொரு
முறையும் ஒவ்வொன்று
புதுசாய்த் தெரியும்.
இந்த முறை நான் பார்த்து
வியந்தது..இதே காட்சியில்.
காட்சியின் துவக்கத்தில், அவர்
அன்னை சரஸ்வதியின் முகம்
பார்த்து, அழுது தேம்ப
வேண்டும்.பின், அன்னையின்
முகத்திலிருந்து பார்வையை
விலக்கி, அருகிலிருக்கும்
பூக்கூடையைப் பார்த்து,
அதிலிருந்து பூக்களை அள்ளி
வீச வேண்டும்.
சொல்லும் போது சுலபமாய்த்
தெரியும்.
கடவுள் சிலை பார்த்து அழும்
போதே அதிலிருந்து
பார்வையை விலக்கி,
பூக்கூடையைப் பார்த்து,
அதிலிருந்து பூக்களை
அள்ளும் போதே மீண்டும் அன்னை சிலை பார்த்து அழுது
நடிக்கையில் கொஞ்சம்
செயற்கை இருந்தாலும் அது
மிகவும் கேலிக்குரியதாய்ப்
போகும்.
ஆனால், அய்யா கடவுள்
சிலையிலிருந்து
பார்வையை
விலக்கி, அழுகை மாறாமல்
அந்தப் பூக்கூடையைப்
பார்க்கிற யதார்த்தத்தை..
அய்யோ..
யாராவது பார்த்து விட்டு
எழுதுங்களேன்!
*********
ஆலயமொன்றில் நின்று
அழகுறப் பாடுகிறார் அய்யா..
இதே படத்தில்.
"இசையில்..
கலையில்..
கவியில்..
மழலை மொழியில்
இறைவன் உண்டு."
-இவற்றில் மட்டுந்தானா?
இவர் நடிப்பிலும்தானே?
*********
பட்டிக்காடா பட்டணமா?
http://i1065.photobucket.com/albums/...sndch2ff1.jpeg
அவன்
வேட்டி கட்டிய சிங்கம்
குணத்திலோ தங்கம்.
பிறந்தது ஒரு சிற்றூரு
சோழவந்தான் என்பதே அதன் பேரு
அந்த மண்
அவனுக்கு கண்.
ஏரை மதிப்பவன்
ஊரை காப்பவன்
ஊருசனம்
அவன் நடந்தால் நிற்கும்
பேசினால் கை கட்டும்.
மூக்கையாத் தேவன் அவன் பேரு
அவன் சொல்லை மதிக்கும் ஊரு.
தேவனுக்கு ஒரு மாமன் உண்டு
மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு
அவருக்கு ஓர் மகள் உண்டு.
மாமன் மகள் மெத்தப்படித்தவள்
மேலை நாகரீகத்தில் திளைத்தவள்
ஆனால்
தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள்.
கல்பனா என்பது அவள் நாமம்
அம்மாவே அவளுக்கு வேதம்.
மகளின் மணம்
மூக்கையாவே வேண்டும்
இதுவே மாமனின் குணம்.
முறைமாமன் தானிருக்க
வேறொருவன் தாலியெடுக்க
மாமன் மூலம்வருகிறது சேதி
மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி
முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி
ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை
எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை
கேட்கிறான் நியாயம்
செய்கின்றனர் வாதம்.
இனியும் ஆகாது தாமதம்
முடிவெடுக்கிறான் அக்கணம்.
தூக்கி வருகிறான் முறைப்பெண்ணை மாட்டுவண்டியில்
துரத்தி வருகின்றனர் எதிரிகள் பின்னால்
மூக்கையாவின் வீரம்
எதிரிகளுக்கு காரம்
அவனது கோபம் மிகவும் காட்டம்
ஆடி விடுகிறது எதிரிகள் கூட்டம்.
கல்பனாவுடன் வந்து சேர்கிறான் கிராமத்துக்கு...
சிந்தனை செய்கிறது அவள் மனம்
புரிகிறது தேவனின் குணம்
செய்து கொள்கிறாள் திருமணம்.
அவர்களின் வாழ்க்கை
ஆட்டமும் பாடமுமாய் சில காலம்
பின் ஆரம்பிக்கிறது கலி காலம்.
நகரங்களுக்கே ஆகாது சில மேல்தட்டு நாகரீகங்கள்
கிராமங்கள் தாங்குமா?
பிறந்த நாள் கொண்டாட கேட்கிறாள் சம்மதம்
விருப்புடன் இசைகிறான் அக்கணம்.
உற்சாக பானங்களுடன் ஆடல்,பாடல்கள்
தோழன்.,தோழிகளோடு கல்பனாவின்
கும்மாளங்கள்.
திகைக்கிறது மூக்கையாவின் வீடு
இதை ஏற்குமா அவன் கூடு.
தேவன் வருகிறான்
பார்த்ததும் கொதிக்கிறான்.
பின் வெடிக்கிறான்.
கல்பனாவை சாடுகிறான்
சாட்டையை சுழற்றுகிறான்.
மூக்கையாவின் சினம்
அவள் மேனியில் ரணம்.
தாய்வீடு ஓடுகிறாள்!
தனக்கு நேர்ந்ததை
தாயிடம் கூறுகிறாள்.
நல்ல தாய் தவறை எதிர்ப்பாள்.
நாகரீக தாய் அதை ஆமோதிப்பாள்.
கல்பனாவின் தாய்
நாகரீக தாய்.
கடிதம் மூலமாக கேட்கப்படுகிறது பிரிவினை
மூக்கையாவிற்கு ஏற்படுகிறது வேதனை
அவன் மறத்தமிழன் மரபு
மானமுள்ள பிரிவு
முயற்சி செய்கிறான் சேர
கல்பனாவிடம் செல்கிறான் பிரச்சினை தீர
கீதா உபதேசம் அர்ச்சுனனுக்கு
தாயின் உபதேசம் கல்பனாவுக்கு
அந்த உபதேசம் தேசத்துக்கும் ஆனது
இந்த உபதேசம் நாசத்துக்கு ஆவது
மூக்கையாவோ போராடினான் இணை சேர
அவள் தாயோ சதியாடினாள்
இணையை பிரிக்க
விதி யோசித்தது
நீதி யாசித்தது
சதி ஜெயித்தது.
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
சோடை போன மனிதன் மரணம் அடைந்த மனிதன்.
இதுவே தமிழ் கலாச்சார மாண்பு
இதை ஏற்பதில்லை மேலை பண்பு
ஊருக்கு திரும்பினான் வெறுங்கையோடு
மானம்போனதாய் நினைத்தான் அந்த
இரவோடு
ஊர் பார்த்தது
உள்ளுக்குள் சிரித்தது.
"வெட்டிவிடு மனையாளை" பஞ்சாயத்தில்கேட்டான் ஒருவன்
பெண்டாள வக்கில்லையோ என்றான் மூக்கையாத்தேவன்
கேட்டான் அவன்
"உமக்கு என்ன அருகதை"
மானமே போனது தேவன் கதை
மாமனுக்கு கொடுக்கிறான் பத்திரிக்கை
அதிலே இருக்குது
வேடிக்கை
"மூக்கையாவுக்கு கல்யாணம்"
இடையில்,
கல்பனா ஆகிறாள் தாய்
அது மூக்கையாவின் சேய்
மாமியாருக்குஅது வேப்பங்காய்
கல்பனா ஈன்றெடுக்கிறாள் மகவை
மூக்கையா எடுத்து வருகிறான் தன் சிசுவை
கன்று பிரிந்தது பசுவை
உணராவிட்டாலும் கல்பனா தமிழச்சி
உணர்த்தி விட்டது தாயின் சூழ்ச்சி
பத்துமாத பந்தம்
மறக்க முடியுமா ஒரு தாய்
சுடுமே அது தீயாய்
தாய் சேய் பிரிவு அது சொல்லொணாத் துயரம்
எழுத்தில் வடிப்பது கடினம்
உதிரம் கொதிக்கின்றது
தாய்மையை உணர்கின்றது
பாலூட்ட துடிக்கின்றது
உண்மையை அறிகின்றது
சேய் அதன் தகப்பனிடம்
கல்பனா அறிகிறாள் சேதி
புரிந்து கொண்டாள் மீதி
விரைகிறாள்தாய்மையடைந்த ஜோதி
சோழவந்தான் மூக்கையா வீடு
--------------------------------------------------------
அங்கே கல்யாண கொண்டாட்டம்
அவளுக்கு இது திண்டாட்டம்
பார்க்கிறாள் மூக்கையாச் சேர்வையை
புரிகிறான் தாய்மையடைந்த பார்வையை
பாலூட்டத் துடிக்குது அவள் நெஞ்சம்
உரிமையை தடுக்கவில்லை தமிழ்ச் சிங்கம்
கொடுக்கிறாள் சேய்க்குப் பாலை
அடைகிறாள் நிம்மதியின் எல்லை
புது மாப்பிள்ளையாய்
முக்கையா
பார்க்கிறாள் சேர்வையை
வீசுகிறாள் பார்வையை
கேட்கிறாள் தனக்கொரு தீர்வை
மாறிவிட்டது அவள் மனம்
தெளிந்துவிட்டது அவள் குணம்
ஊரார் மெச்சுகின்றனர் மறுகணம்
மூக்கையாவிற்கோ மகிழ்ச்சி இக்கணம்
இதுவே தமிழ்மண்ணின் மணம்.
கல்யாணம் ஒரு நாடகம்
அவளுக்கு புகட்டுமே பாடம்
அது
மூக்கையா போட்ட வேடம்
தாலிதான் மகத்துவம்
தாய்மைக்கு அதுதான் சிறப்பிடம்
இனிமேல் எல்லாமே புகுந்தஇடம்
கல்பனாவுக்கு மகிழ்ச்சி
எல்லோருக்கும் நெகிழ்ச்சி
*************சு ப ம்*************************