Originally Posted by RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் பற்றிய மலரும் நினைவுகளை நினைவூட்டிய பம்மலாருக்கு நன்றி.
தொலைக்காட்சி என்னவென்றே தெரியாத காலங்களில் வளர்ந்த சிறுவரகள் நாம். வியட்நாம் வீடு படம் வெளியான நேரம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இரவு சென்னை வானொலி விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் தேன்கிண்ணம் நிகழ்ச்சி, இரவு 7.45 மணிக்கு. ஜெயமாலா நிகழ்ச்சி எப்போது முடியும் என்று ஆவல் ( ஜெயமாலா நிகழ்ச்சிக்கு ரசிகனாக இருநதது அது ஒரு காலம்.). ஒரு மணி நேரம் நடிகர் திலகத்தின் குரலை வானொலியில் கேட்டுக் கொண்டே இருந்த போது ஆஹா இதை இன்னும் ஒரு மணி நேரமாவது ஒலிபரப்ப மாட்டார்களா என்ற ஏக்கம். அருமை சகோதரர் எம்.ஜி.ஆர். படப்பாடலையும் ஒலிபரப்பினார் நடிகர் திலகம். அந்த நிகழ்ச்சியில் தான் சுயநலம் கலந்த பொது நலம் மற்றும் பொது நலம் கலந்த சுயநலம் இவற்றைப் பற்றி விளக்கினார். தம்முடைய நாடக அனுபவங்கள், யதார்த்தம் சின்ன பொன்னுசாமி பிள்ளை அவர்கள் மீதான குருபக்தி, யாவையும வெளிப்படுத்தினார். வெளிநாட்டில் பரிசு பெற்றது, அமெரிக்காவில் கௌரவிக்கப் பெற்றது, இவற்றையெல்லாம் விளக்கினார். ஓரளவு நினைவுள்ளது. ஆனால் அத்தனை பாடல்களும் நினைவில்லை. புதிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆயிரம் நிலவே வா பாடலைப் பற்றிப் பாராட்டியது நினைவுள்ளது.
ராகவேந்திரன்