Originally Posted by
venkkiram
கோயில்களை சுற்றிப்பார்ப்பதில் ஆர்வம் இருக்குமாயின், எங்கள் கிராமத்திற்கு - (நன்னிலம் தாலுகா) மூன்று கிலோமீட்டர் அருகே திருமியச்சூர் என்ற ஊரில் அமையப் பெற்ற சரஸ்வதி அம்மன் கோயிலுக்கு வருகை தரலாம். தமிழ்நாட்டில் சரச்வதிக்கேன்றே பிரத்யேகமாக ஒரு கோயில் என்றால் அது இதுதான். குழந்த்தைகளுக்கு கல்வியை ஆரம்பித்து வைக்க, இங்கு அழைத்து வரும் பெற்றோர்கள் நிறைய. திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்கினால் முக்கால் கிலோ மீட்டர் நடைபயணத்தில் இந்தக் கோயிலை அடையலாம்.