http://i48.tinypic.com/2ryszg3.jpg
Printable View
மக்கள் திலகத்தின் நான்காம் பாகத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி. திரு வினோத் திரு ஜெய்சங்கர், திரு.ரவிச்சந்திரன், திரு சைலேஷ் பாபு, திரு. செல்வகுமார்..எம்ஜிஆர் ரூப் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி...அன்பு நண்பர் ராம மூர்த்தியின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை..தாமதமாக இந்த பகுதிக்கு வந்தமைக்கு மன்னிக்கவும்....
புதுவையில் புதுமை படைத்த புரட்சித்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
http://i45.tinypic.com/24e1ago.jpg
எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழத்தமிழர் பால் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பது அவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் கண்டனக் குரல் கொடுத்து இந்திய மத்திய அரசையும் விழிப்படையச் செய்தாரென்பதும் அகில உலகும் அறிந்த உண்மையே! தவிர அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இந்திய நாணயத்தில் ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான பெறுமதி மிக்க நூல்களை வழங்கினார். அந்த நூல்கள் இன்றும் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளன. அமரரைக் கௌரவிக்கும் முகமாக அன்னாரின் பெரியதொரு புகைப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தை அலங்கரிக்கின்றது.
லாஸ்பேட் பகுதியில்
http://i47.tinypic.com/314e3us.jpg
http://i46.tinypic.com/era0ea.jpg
KAMARAJ NAGAR
http://i49.tinypic.com/28s4gol.jpg
KAVIYARASVUIN PAADAL - ANALYSIS.- NET
பாசம் படத்தில் ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்றொரு பாடல் வரும். மிக சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் ஒரு இளைஞனுக்கேயுரிய வேகத்துடனும் மலர்ச்சியுடனும் இயற்கை வெளிகளில் எம்ஜிஆர் பாடி ஆடிக்கொண்டு வரும் பாடல் அது. ஒரு எம்ஜிஆர் ரசிகனுக்கு மிகவும் உவப்பான காட்சியாய் அது படம்பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆர் நடிப்பும் இசையும் கண்ணதாசன் வரிகளுமாக பார்க்கிறவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும் பாடலாக அது இருக்கும். அந்தப் பாடலின் வரிகள் இவை;
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக-அன்னை
மடியை விரித்தாள் எனக்காக.... ஆஹா, எம்ஜிஆருக்கேற்ற அருமையான வரிகள் என்றுதானே தெரிகின்றன? சரணம் வருகிறது பாருங்கள்-
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகைப் பதித்த மணிமகுடம்
குயில்கள் வாழும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்......
ஆரம்ப காலத்தில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் இலக்கியப்பரிச்சயம் எல்லாம் ஏற்பட்டபிறகு இந்தப் பாடலைக்கேட்ட மாத்திரத்தில் தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில் தவழும் நிலவும் தங்கரதமும் தாரகைப்பதிக்கப்பட்ட மணிமகுடமும் குயில்கள் வாழும் கலைக்கூடமும் ஒரு கவிஞனுக்கு மட்டுமே சொந்தமான கற்பனை வடிவம். பாரதி காணிநிலம் வேண்டும் என்று ஆசைப்பட்டதுபோல் கவியரசரின் ஆசைக்கனவு இந்த வடிவம். அதனை அடுத்த வரியில் தெளிவாகவே சொல்கிறார் கவிஞர்- இவை அத்தனையும் கொண்டது ‘எனது அரசாங்கம்’ என்று!
எம்ஜிஆரை அந்தக் கதாபாத்திரத்தில் இயற்கையை வர்ணிக்கும் நாயகனாக உருவகித்துப் பாடல் புனையப்பட்டிருக்கிறது அதனால் அப்படிச்சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரும் பூசிமெழுக முடியாது. ஏனெனில் எம்ஜிஆர் படங்களில் அதற்கெல்லாம் இடமில்லை. அது எம்ஜிஆரின் voice – ஆகத்தான் இருக்குமே தவிர வேறு யாருடைய வாய்ஸுக்கும் அங்கே இடமில்லை. அப்படி எதையும் அனுமதிக்க மாட்டார் எம்ஜிஆர். ஏனெனில் வசனம் பாடல்வரிகள் உட்பட யாவும் எம்ஜிஆரால் ஒப்புதல் தரப்பட்டே படமாக்கப்படும். அப்படிப் படமாக்கப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இதுவும். விஷயம் என்னவென்றால் தன்னுடைய பாடலில் தன்னுடைய ‘ஆளுமையை’ நிலைநிறுத்தும் வலிமையும் கம்பீரமும் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.
MUDALIARPET
http://i45.tinypic.com/rsgf3a.jpg