அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உண்மையான அன்னமிட்ட கை.
http://i125.photobucket.com/albums/p...ps0c9d08b9.jpg
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை . நன்றி ஆனந்த விகடன் 18-07-1982
தகவல் Madakulam Prabhakaran

