சந்திரனை அழைக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கும் முன்னே,
தக்ஷனுக்கு கோபம் தலைக்கேறிவிடுகிறது. அது பற்றி மற்றவர்களின் யோசனையைப்
புரக்கணிக்கிறான்.
தாஷாயணியின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது.
மணமகள் அழகாய் அலங்கரிக்கப் பட்டு அழைத்து வரப்படுகிறாள். தேவர்களும் மூவர்களும்
புடை சூழ, தஷன், தாஷாயணியை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் நேரம், அவன்
சித்தமெல்லாம் பூரிக்கிறது. இறைவன் ஈசன் தன் மருமகன் என்ற மகிழ்ச்சியால் அல்ல.
அத்தனைக்கும் அதிபதியாம் உலக நாயகனாம் ஈசன், உயர்ந்தவன் ஈசன், இந்த ஒரு க்ஷணம்
கையை கீழேந்தி, என்னிடம் யாசிக்கிறான். இந்த ஒரு நிமிடம், என் கை உயர்ந்திருக்கிறது.
இந்த ஒரு நிமிடம், நான் கொடுப்பவனாகவும் அவன் கேட்க்பவனாகவும் இருக்கிறான்.
இந்த ஒரு நிமிடம் நான் உயர்ந்தவன் என்ற மமதை தக்ஷனுக்கு ஏற்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும்
பரம்பொருள் எண்ணித்திலும் இருப்பவர் அல்லவா, அதனால் அவருக்கும் அவனின் எண்ணம்
தெரிந்து விடுகிறது. உடனே மணமேடையை விட்டு மாயமாய் மறைந்து விடுகிறார்.
தக்ஷன் மிகுந்த கோபம் கொள்கிறான். காபலிகன், சுடலையில் உறைபவன், சாம்பல் தரிப்பவனுமான
இவனுக்கு என் அருமைப் புதல்வியை திருமணம் செய்து கொடுக்க எண்ணியது என் தவறு.
மணமேடையில் காரணமேதும் கூறாமல் அவமதித்து சென்ற இவனை யாருமே இனி வழிபடக்கூடாது.
இவனின் இந்தச் செய்கைக்கு மனம் வருந்தி வெட்கப்படவேண்டும் என்று ஆத்திரம் பொங்க
கர்ஜிக்கிறான்.
தஷனைப் பெற்றவனாம் பிரம்மனும், சிவனின் செய்கை தனக்கு மிகுந்த மனவருத்தத்தையும்
குழப்பத்தையும், தருவதாக வருந்துகிறார். மனக்குறை ஏதேனும் நேர்ந்திருக்கவேண்டும், அதனாலேயே
இறைவன் மறைந்து விட்டான் என்று எண்ணுகிறார்.
தாஷாயணி மிகுந்த மனத்துன்பத்திற்காளாகிறாள். யாராலும் அவளின் துன்பத்தை ஆற்றமுடியவில்லை.
'தன் பூஜையில் சிரத்தையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ' என்று அவள் தனிமையை அழுகிறாள்.
என்ன தவறு, என்ன குற்றம் நேர்ந்தது என்று தெரியாமலே இப்படி புலம்பும்படி ஆகிவிட்டதற்கு
கண்ணீர்வடிக்கிறாள்.
தஷனால் தாஷாயணியின் வருத்தத்தை தாங்க முடியவில்லை. 'எல்லாம் என் குற்றம் தான்,
சிவனின் தரம் தெரியாமல் சிறு வயது முதல் உனக்கு பக்தி செய்ய பழகி கொடுத்தது என் குற்றம்.
அதற்குத் துணை போனது உன் தாயின் குற்றம்' என்று அரற்றுகிறான்.
(தொடரும்)
இக்கதை இதுவரை நான் கேட்டறியாதது. தஷன் யாகம் கதையைத் தான் கேட்டிருக்கிறோமே தவிர,
தாஷாயணியின் திருமணம் பற்றிய தகவல்கள் நமக்குப் புதுமையாக இருக்கின்றன.
நம் திருமணங்களில் மணமகளுக்கு ஆயிரம் அலங்காரங்களும், முத்துக்களும் ரத்தினங்களும் பட்டும்
ஜரிகையும் அலங்கரிக்க, மணமகனுக்கு பட்டு வேட்டியுடன் கச்சிதமாய் முடிந்து விடும். சிவனுக்கு
அதுவும் இல்லை. சடா முடியன். புலித்தோல் போர்த்தியவன். அவனுக்கு திருமணம் என்றால்
எவ்வாறு அலங்காரம் செய்வது? சரியென்று விசேஷமாக வெள்ளைப் புலித்தோலுடன்
காட்சித் தருகிறார் (bengal tiger)! :D
தாஷாயணி வருத்தப்படும் சோகக் காட்சிகளில் பின்னணி இசையாக "புத்தம்புது பூ பூத்ததோ" என்ற
"தளபதி" திரைப்படத்தின் பின்னணி இசையை சேர்த்தது போல் தோன்றுகிறது!!
"பெண்ணாகப் பிறந்தவளுக்கு இப்படித் துன்பங்கள் வரத்தான் செய்யும், பெண்கள் பொருத்துக் கொள்ள
வேண்டும்" என்று வேதவல்லி சொல்வது நாடக வசனம்!
திருமணப்பாடலில் "இந்திரன் சந்திரன் வேதம் முழங்க" என்று வருகிறது. சந்திரனை திருமண மண்டபத்தில்
காணோம்! :?
இறைவனாகவே இருந்தாலும், கோபித்துக் கொண்டு மணமேடையை விட்டு ஓடிவிடுவது எந்த விதத்தில்
நியாயம்!! இப்புனைவுக் கதாநாயகன் சிவன் என் முன் தோன்றினால் சட்டையைப் பிடித்து (சரி புலித்தோலை பிடித்து ) காரசாரமாக கேட்டுவிட வேண்டும்! அந்த பயத்தில் தான் என் போன்ற சாதார்ணர்களுக்கு இறைவன் காட்சியளிக்க மறுக்கிறார்!