-
கற்பகம்-1963
விமர்சன ஆய்வு மரபின் படி கதை என்ற prelude தவிர்க்க முடியாதது என்பதால் அந்த மரபை பின்பற்றுகிறேன்.
மனைவியை இழந்த நல்லசிவம் பிள்ளை என்ற தர்ம சிந்தனை கொண்ட பெரும் பண்ணையார் ,தன் ஒரே மகள் கற்பகம் மற்றும் பட்டணத்தில் படிக்கும் மகன் ராஜாங்கம் என்ற இரு வாலிப செல்வங்களுடன் தனியாக,விசுவாசமான கணக்க பிள்ளையுடன் நல்வாழ்வு வாழ்பவர்.சுந்தரம் என்ற அநாதை சிறு விவசாயி ,தன்னுடைய தொழிலில் அக்கறை காட்டி நேர்வாழ்வு வாழ்பவன்.இந்த இரு நல்லிதயங்களும் கற்பகத்தை சுந்தரத்துக்கு மணமுடிப்பதில் வாழ்வில் இணைகிறது.மகன் ராஜாங்கம் ,தந்தையுடன் பிணங்கி,தாண்டவன் என்ற குணகேடு,மற்றும் சுயநலம் கொண்டவனின் பெண் பங்கஜத்தை திருமணம் செய்கிறான்.
நல்லசிவம் தன் பொறுப்புகளை சுந்தரத்திடம் ஒப்புவித்து அவனை வாரிசாகவே கருதுகிறார்.இதனால் கருத்து வேற்றுமை அதிகமானாலும்,பங்கஜம்-ராஜாங்கத்தின் பெண் குழந்தை கற்பகம்-சுந்தரத்தாலேயே போற்றி வளர்க்க படுகிறது.ஒரு மாடு முட்டி விபத்தில் கற்பகம் இறக்க,துயரத்தில் வாடும் சுந்தரத்தின் விருப்பமின்றியே தன் நண்பன் மகள் படித்த பண்புள்ள அமுதாவை சுந்தரத்திற்கு மறுமணம் செய்வித்து,குழந்தை மீனாட்சியின் அன்பை பெற்றால் சுந்தரத்தை அவள் மணவாழ்வில் நேர்செய்து விடலாம் என்றும் அமுதாவிற்கு,நல்லசிவம் ஆலோசனை சொல்கிறார்.சிறிது முரண்டுகள் மற்றும் பிரச்சினைகள் (தாண்டவன் உண்டாக்குபவை)முடிவில் சுந்தரம்-அமுதா-மீனாட்சி இணைந்து ,நல்லசிவத்தின் ஆசை படி நிறைவாக முடியும் படம்.
இந்த திரைக்கதையை படிப்பவர்கள் எப்படி இதனை சுவாரஸ்ய படமாக்க முடியும் என்று வியப்பர். சுவாரஸ்யம் மற்றுமல்ல இது ஒரு superhit படம்.அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இன்று வரை ஒரு cult classic என்றே பேண படுகிறது.(இதன் சாயலில் வந்த முந்தானை முடிச்சும் மெகா வெற்றி)
இந்த படத்தின் highlights என்றால் கே.எஸ்.ஜியின் வசனங்கள்,ஜெமினி-ரங்கராவ் ஆகியோரின் அபார நடிப்பு,விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பாடல்கள்(வாலி எழுத்தில்),நான்கு பாடல்களும் சுசீலா சோலோ(ஆண் பாடகரே கிடையாது),கர்ணனின் நல்ல படபிடிப்பு .புதுசாக இளசாக விஜயா.
இதன் தனி பட்ட சிறப்புகளை விரிவாக அலசுவோம்.
தொடரும்.
-
கற்பகம் திரைப்படத்திற்காக முத்துராமன்-ஷீலா ஜோடிக்கு ஒரு டூயட் பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி பாட பதிவு செய்யப் பட்டதாகவும் ஆனால் படத்தில் பயன் படுத்தப் பட வில்லை என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தப் பாடல் தான் சந்திப்போமா பாடலா என்பது தெரியவில்லை.
-
Less possible, because
Karpagam - Viswananathan Ramamoorthy
Chiththi - M.S.Viswanathan alone.
-
அது மட்டுமல்ல. சித்தி பாடல்கள் கண்ணதாசன் என்று நினைவு. இன்னொன்றும் கேள்வி பட்டேன். வாலியின் பேட்டியில். கைகொடுத்த தெய்வம் படத்திற்கு பதிவு செய்ய பட்ட பக்கத்து வீட்டு பருவ மச்சான் பாட்டில் இம்ப்ரெஸ் ஆகி இயக்குனர் திலகம் (இரு படங்களின் பொது இயக்குனர்) தன்னுடைய சொந்த படத்திற்கு கடத்தி விட்டாராம்.(கங்கையில் வெள்ளம் வந்ததையும் பொருட்படுத்தாமல்).அந்த பாடல் சாவித்திரிக்கு பாத்திரத்துடன் ஒட்டவே ஒட்டாது.இந்த படத்திலே நாகைய்யா பாத்திரத்தை கலெக்டர் ஆக சித்திரித்தது தேவையற்ற ஒன்று.நாகைய்யா மற்றும் சாவித்திரி பாத்திரங்கள் கதையுடன் ஒன்றாமல் துருத்தி தெரிய,இந்த கலெக்டர் தேவையற்ற ஒரு உறுத்தல்.கே.எஸ்.ஜியின் சருக்கல்.மன்னிக்க படலாம். ஆனால், மன்னவனே அழலாமா,அத்தை மடி,ஆயிரம் இரவுகள்,பக்கத்து வீட்டு எல்லாமே பீ.சுசிலா-வாலி-விசு-ராமு இணைவின் சாதனை கற்கள்.
-
My all time fav Naan avan illa & KArpagam..
arumai arumai.. Gopal sir vaazhthukkal
-
கற்பகம்-1963.
நடிகர்திலகம் நடிப்பு,அதன் வீச்சு,வேறு படும் நேர்த்தி இவையெல்லாம் அளவற்ற பிரமிப்பை தந்து ,அவரை உயர பீடத்தில் வைத்து தொழ செய்து விடும்.ஆனால் ஜெமினியின் நடிப்பு வேறு விதம்.உங்களுக்கு சிறு வயதில் உங்களை பார்த்து புன்னகைத்து,உங்களுக்கு அவ்வப்போது சாக்லேட் தரும் பக்கத்து வீட்டு பாந்தமான மாமாவை நினைக்கும் தோறும்,மனதில் ஒரு ரம்மிய உணர்ச்சி பெருக்கு உடைத்து வருமே?அந்த ரகம்.
அதுவும் இந்த படத்தில் ரங்காராவ் இணைவில் அவர் தந்த இதத்தை எழுத்தில் வடிப்பது இயலுமா?முயற்சிக்கிறேன்.
இந்த படத்தில் அவரை தவிர வேறு யாரேனும் பொருந்த முடியுமா என்று பார்த்தால்,எல்லோருமே நடித்து ஊதி விட கூடிய சாதாரண பாத்திரமே.ஆனால் இந்த பாத்திரத்திற்கு அவர் அளித்த அமரிக்கையான மெருகை,ஒளியை,உண்மை தன்மையை வேறொரு நடிகர் கனவு கூட காண முடியாது.ஒரு சாதாரண நல்லிதயம் கொண்ட விவசாயியாக,மற்றோருடன் மென்மையான அணுகு முறை,ஒத்திசைவு-சலசலப்பு சூழ்நிலையில் அவர் குடும்பத்தில் காட்டும் யதார்த்தமான இதமான அணுகுமுறைகள்,மனைவியிடம் ஒரு மென்மையான பரிவுடன் கூடிய நிஜ காதல்,குழந்தையை போற்றி அனைத்து வளர்க்கும் இயல்பான கொஞ்சல் கலந்த அன்பு,மனைவியை இழக்கும் அதிர்ச்சி,தொடர்ந்த பற்றற்ற விரக்தி,பெரியவருக்கும் மன சஞ்சலம் தராமல்,இரண்டாவது வாழ்க்கையில் ஒட்டவும் முடியாத தடுமாற்றம் என்று நண்பர்களே ,இந்த அற்புத நடிப்பை பார்த்து மட்டும் மகிழாதீர்கள் அதனுடன் உணர்ச்சி பூர்வமாக ஒன்றி அந்த நிமிடங்களில் உண்மையாக வாழ்ந்து பாருங்கள்.என் எழுத்தின் விகசிப்பு புரியும்.
ரங்கா ராவ் ,ஒரு மனைவியை இழந்து சொந்தங்களில் தோய்ந்து ,உண்மையை நேசித்து,ஊர் உறவுகளுக்கு உண்மையாய்,உபயோகமாய் நெறி வாழ்வு வாழும் நிஜ மனிதராய் அவ்வளவு நேர்த்தியாய் தன் இயல்பு நடிப்பை தந்து,படத்தினை நடத்தி செல்லும் சூத்திரதாரியாய் பரிமளிப்பார்.மற்ற பாத்திரங்களை ஒளியூட்ட வைக்கும் ரங்கராவ் அவர்களின் பங்களிப்பு.அவர் சூரியனாய் ,மற்ற நிலவுகளுக்கு ஒளி கொடுத்து பரிமளிக்க வைப்பார்.
பெண்ணிடம் காட்டும் பரிவு,உண்மை மனிதர்களை நேசிக்கும் நேர்மை,உண்மையற்றவற்றை சுடும் பிடிவாத நிராகரிப்பு,மகன் ஸ்தானத்தில் மருமகனை நேசித்து அவன் நலனில் காட்டும் பிடிவாத அன்பு,தன்னுடைய கொண்டு வந்த மருமகள் உறவை ஓட்ட வைக்க முயற்சிக்கும் தவிப்பு,அந்த முயற்சி தோற்கும் போது உருகியோடும் தன்னிரக்கம்,என்று வாழ்ந்திருப்பார்.என்னவொரு இதயத்தை பிளக்கும் இதமான வன்மையான தென்றல்!
கே.ஆர்.விஜயா நடித்து பரிச்சயம் காணா புது மொட்டு.ஆனால் இந்த கபடம் ,சூது தெரியாத கிராமத்து இள மொட்டு பாத்திரத்திற்கு,இந்த மங்கள கரமான rawness அவ்வளவு பாந்தம்.
வீ.கே.ஆர் இவ்வளவு நல்ல தன்மையுடன் இதமாக நடிக்கவும் செய்வாரா என்று ஆச்சரியம் தரும் ,இணைப்பு பாலமாய் செயல் படும் விசுவாச கணக்க பிள்ளை.
முத்துராமன்,ஷீலா இருவருமே வில்லத்தனம் இல்லாத குடும்ப பிணக்கத்தை ,வேறுபாடுகளை ,முரண்டுகளை காட்டுவார்கள்.எம்.ஆர்.ராதா வழக்கம் போல்.
இந்த படத்தில் ஒட்டாதவர்கள் நாகைய்யாவும் ,சாவித்திரியும்.பாத்திர படைப்பின் குழப்பத்தில்,நடிகையர் திலகத்தின் உழைப்பும்,தேர்ச்சியும் வீணாகி விடும்.
(தொடரும்)
-
கற்பகம்-1963
கற்பகம் படத்தில் மிக முக்கிய அம்சம் வசனம்.என்னதான் கே.எஸ்.ஜி படத்தில் வசனங்கள் அதிகம்,அவரே எல்லா பாத்திரத்தின் வாயிலாகவும் பேசி விடுவார்,எல்லா பத்திரங்களும் நல்ல தன்மையில் லீட் எடுக்கும்,அதிக பிரசங்கம் இருக்கும் என குற்றசாட்டுக்கள் வந்தாலும் நான் அதை கசக்கி தூக்கி எரிந்து விட்டு, அவர் வசனங்களில் வந்த தெய்வ பிறவி,படிக்காத மேதை,குமுதம்,சாரதா,கற்பகம்,கை கொடுத்த தெய்வம்,செல்வம்,பேசும் தெய்வம்,பணமா பாசமா ,சித்தி போன்ற படங்களை எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்த்தும் ,கேட்டும் மகிழ்வேன்.
தமிழ் நாட்டில் வள வளவென்று உரக்க பேசும் மனிதர்கள்தானே அதிகம்?நம் படங்கள் அதைத்தானே பிரதிபலிக்க வேண்டும்?அதைத்தான் அருமையான லாஜிக் கொண்டு,சுவையாக ,சுத்தமாக,நற்தன்மையோடு கே.எஸ்.ஜி தந்தார்.
கற்பகம் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் என்றால் அனைத்துமே. குறிப்பாக ஆரம்ப ஜெமினி சம்பந்த பட்ட விருந்துக்கு வரும் காட்சி,கல்யாண சம்மந்தம் பேசும் காட்சி, ஜெமினி-விஜயா அன்னியோன்ய காட்சிகள்,குழந்தையை வைத்து வரும் காட்சிகள்,ஜெமினி மற்ற குடும்பத்தாருடன் அனுசரிக்கும் காட்சிகள்,ரங்கா ராவ் ஜெமினியை மறு கல்யாணம் செய்ய வற்புறுத்தும் காட்சிகள்,ரங்கராவ்-சாவித்திரி காட்சிகள் எல்லாமே ஒரு அன்பான நட்பான குடும்பத்துடன் வாழும் இதத்தை தருபவை.
சுசிலாவின் தேன் குரலில் மன்னவனே இதயத்தை துளைக்கும். ஆயிரம் இரவுகள் முதலிரவு மனநிலை இன்றும் தரும்.அத்தை மடி நம்மை குழந்தையாக்கி விடும்.பக்கத்து வீட்டு நல்ல பாட்டு.ஆனால் படத்தில் ஒட்டாது.(மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் பிடிச்சான்)
இந்த படத்தில் melodrama ,செண்டிமெண்ட் எல்லாமே நல்லிதயங்கள் சம்பத்த பட்ட ,நடக்க கூடிய ஒன்று என்பதால் படத்தில் ஒன்றுவதில் எந்த தடையும் இருக்காது.
கர்ணனின் கேமரா படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.படத்தின் தன்மை,மனநிலைகள் ஆகியவற்றுடன் ஒன்றும்.கருப்பு-வெள்ளை படங்களின் சுவை ,அவை நம் மனதிற்கு தரும் இதம் அலாதி.(ஒன்று தெரியுமா?நம் அத்தனை பேரின் கனவுகளும் கருப்பு-வெள்ளையே.பத்தாயிரத்தில் ஒருவருக்கே கலர் கனவு யோகம்)
நான் மிக விரும்பி ரசிக்கும் ஜெமினியின் படங்களில் ஒன்று.
(முற்றும்)
-
கற்பகம் ரொம்பச் சின்ன வயதில் பார்த்தது..பின் என்னவோ இன்று வரை மறுபடியும் பார்க்கவில்லை - ஏனோ தெரியவில்லை.. பாடல் கள் மட்டும் திருப்பித் திருப்பிக் கேட்டிருக்கிறேன்..ம்ம் உங்கள் நல்ல எழுத்தோவியத்தைப் பார்த்த பின் மறுபடி பார்க்க வேண்டும்..யூ ட்யூபில் தேடணும்..:) அடுத்து என்னவாக்கும் எழுதப் போறீங்க..? மாடர்ன் தியேட்டர்ஸ் ஏதாவது த்ரில்லர் பத்தி எழுதறது (ஜெமினி அல்லாத திரியில்)
-
naan avan illai
Dear gopal sir
"Nan avanillai" oru arumaiyana movie
ungal writing was excellant .
unfortunately today only am able to read your writing in gemini's thread
Best performance of gemini
idharku piragu gemini balachanderin "unnal mudiyum thambi" padathil than thondirinar endru ninekiren
"ink" iruku padil aaga tamil mattrum english irandum ungal penavil nirambi ulladhu
regards
gkrishna
-
Karpagam - I had always felt, the roles between KRVijaya and Savithri should have been swapped..... 2nd wife character konjam young ah (pakkathu veetu paruva machan paadara maathiri) and karpagam role is the heavier one.... balance between unconditional mother love, romance and a matured wife... ithu senior artist ku koduthiruntha nalla irunthirukkum enbathu en karuthu