http://www.youtube.com/watch?v=-9eJKCdNeGw
Printable View
http://www.gallipeautheatre.com/uplo...64199_orig.gif
Makkal Thilakam gets an exclusive forum!
Please go here and discuss several matters to your heart's content:
http://www.mayyam.com/talk/showthrea...w-forum-on-MGR
p/s: this current thread will also be moved to the new section over the next few days.
Thanks.
http://www.youtube.com/watch?v=pug-Avnshyk
http://i59.tinypic.com/rhk1nm.jpg
http://i59.tinypic.com/dvr23k.jpg
Thanks to Mr. BSR [Urimaikural] and Ponmanachemmal SRI MGR Welfare Association for their co-operation in making Mr. Minnal Priyan's event a grand success!
Just now received a message from B.S.Raj that Divya films Chockalingam has erected 102 Feet wide banner in AVM Rajeswari theatre.
Any body taken the photo please share.
அது 1950 ஆம் வருடம். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ரிகர்சல் ஹாலுக்குப் பக்கத்திலுள்ள ஒரு வீட்டில் பிரதான நடிகருக்கும் உதவி இயக்குநருக்கும் இடையே ஏதோ கலவரம் என்று தோன்றுகிறது.
உதவி இயக்குநர் எவ்வளவு கெஞ்சியும் நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார். உதவி டைரக்டருக்கோ படப்பிடிப்புக்கு நேரமாகிறதே என்ற கவலை. சில மைல்களுக்கு அப்பாலுள்ள ஸ்டுடியோவுக்குச் சென்ற பிறகு தான் பாக்கி ஏற்பாடுகள், மேக்கப், டிரஸ் முதலியன கவனிக்க வேண்டும்.
மறுபடியும் உதவி டைரக்டர் வேண்டுகிறார். நடிகரின் பதிலிலிருந்து தான் காரணம் ஓரளவு தெரிகிறது.
உங்கள் முக வாட்டத்திற்குக் காரணம் சொல்லாவிட்டால் நான் வரமாட்டேன். இது உறுதி என்கிறார் நடிகர். உதவி டைரக்டர் வேறு வழியின்றி உண்மையைச் சொல்கிறார். ஒன்றுமில்லை. வீட்டு வாடகை போன வாரமே கொடுக்க வேண்டும். கொடுக்க முடியவில்லை. எனக்குள்ள சொற்ப சம்பளத்தில் குடித்தனம் நடத்த முடியவில்லை. அதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. நேற்று வீட்டின் சொந்தக்காரர் கொஞ்சம் காரமாகப் பேசிவிட்டுப் போய்விட்டார். அவ்வளவு தான் , சரியா? ஷூட்டிங்கிற்கு நேரமாகிறது புறப்படுங்கள். என்றார்.
இதைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாக கோபித்துக் கொண்டார் நடிகர். எவ்வளவு வாடகை என்றார். ரூபாய் பதினைந்து என்றார் உதவி டைரக்டர்.
நடிகர் உள்ளே ஓடினார். ஒன்றை ரூபாய் வெள்ளி நாணயங்களாக பதினைந்து ரூபாய் கைநிறைய கொண்டுவந்தார். உதவி டைரக்டரின் கையில் கொடுத்து முதலில் இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள். அதற்குள் நான் ரெடியாக இருக்கிறேன் என்று அவரை அனுப்பினார். அதோடு நின்றாரா? அவர் வீட்டிற்குப் போகிறாரா இல்லையா என்று ரோடு திருப்பம் வரை பார்த்துக் கொண்டே நின்றார்.உதவிக்குக் கிடைத்த உதவியால் ஒன்றும் புரியவில்லை. கண்ணீர் முட்டுகிறது. இவரிடம் இன்று நம் நிலையைச் சொன்னதில் பாரம் தீர்ந்ததே என்று ஆனந்தப்பட்டார்.
இன்று நினைத்தாலும் அன்று உதவிடைரக்டராக இருந்த அவருக்கு இச்சம்பவர் பசுமையாக உள்ளது அவர் உள்ளத்தில்.
கதாநாயகர் திரு. எம்.ஜி.ஆர்.
உதவி பெற்றவர் டைரக்டர் திரு. கே. சோமு.
டைரக்டர் திரு.கே.சோமு அவர்களது வலைத்தளத்திலிருந்து.... ... ... ...
திரை உலகம் பத்திரிக்கையிலிருந்து பல அபூர்வ பதிவுகள், ஆயிரத்தில் ஒருவன் மணிமாறனின் வருகைக்கான கட்டியம், மக்கள் திலகத்தின் அசத்தலான மாறுவேடப் பாடல் பதிவு 2014லிலும் தொடரும் வள்ளலின் வசூல் சாதனைகள் பற்றிய பதிவுகள் என்று அசத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.
International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.
http://www.youtube.com/watch?v=VsKnOUaqJP4
International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.
http://www.youtube.com/watch?v=Al-7ePA9IqA
http://www.youtube.com/watch?v=2HdZvXbqrhQ
International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.
http://www.youtube.com/watch?v=KoixvrIMVp4
http://www.youtube.com/watch?v=F3fkiXLwW30
உலக மகளிர் தினத்தில்......
மக்கள் திலகத்தின் குலேபகாவலி -1955ல் வந்தபடத்தில் இடம் பெற்ற அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பும் - அரசவையில் பெண்கள் ராஜ்ஜியத்தில் பெண்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகம் அளிக்கும்
பதில்கள் எல்லாமே சூப்பர் .
http://youtu.be/VRj_Cfl_Dl0
1979 இந்திய நாடாளுமன்றத்தில் காபந்து அரசு சரண்சிங் தலைமையில் கூட்டணி அரசு அமைத்த நேரத்தில் அண்ணா திமுக சார்பாக மத்திய மந்திரியாக திருமதி சத்தியவாணிமுத்து இடம் பெற்றார் .
திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள் ஆரம்ப கால திமுக உறுப்பினர் . பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும் , மாநில மந்திரியாகவும் பதவி வகித்தவர் .
அதே போல் 1977 தமிழ் நாடு மந்திரி சபையில் பி.டி . சரஸ்வதி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
இருவரும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர் .
இன்று மகளிர் தினம் . மக்கள் திலகம் அவர்கள் பெருமை படுத்திய பெண்கள்
http://i58.tinypic.com/2qis2n4.jpg
http://i62.tinypic.com/2lu7swl.jpg
http://i57.tinypic.com/14muvme.jpg
இன்று காலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஏ.வி.எம் திரை அரங்கம் முன்பு வெய்க்கப்பட்ட புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றி படைப்பான ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட பிரம்மாண்ட 107 அடி கட்டவுட்
திரி நண்பர்களுக்காக
ஆர்.லோகநாதன்
http://i62.tinypic.com/nds9pv.jpg
ஏவி.எம்.ராஜேஸ்வரி திரைஅரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவரின் பிரம்மாண்டத்தின் மகுடமான
"ஆயிரத்தில் ஒருவன் " பேனர் -கட்டவுட் -107 அடி நீளம்
இன்று காலை புகைப்படமாக எடுக்கப்பட்டு , நமது திரி நண்பர்களுக்காக
பதிவிடப்பட்டது.
இதுபற்றி நேற்று இரவு தகவல் அளித்த திரு.எஸ்.ராஜ்குமார் (இறைவன்
எம்.ஜி.ஆர். பக்தர்கள் தலைவர் ), மற்றும் திரி மூலம் தகவல் கொடுத்த
திரு. ரூப்குமார் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.
ஆர். லோகநாதன்.
LOGANTHAN SIR
SUPERB COVERAGES- AYIRATHIL ORUVAN BANNER AND POSTERS .A.V.M RAJESWARI
http://i57.tinypic.com/155l850.jpg
பயத்தோட உச்சக்கட்டம் எது தெரியுமா? எம்ஜிஆர் நினைவிடம் முகப்பில் உள்ள இரட்டை இல்லை சின்னத்தை மறைக்க சொல்வது.அது ஒன்றும் ஊர் ஊராக வரப்போவதில்லை. அங்கு செல்பவர்கள் தான் அதை பார்க்க போகிறார்கள்.ஆனாலும் கருணாநிதி கூட்டம் அதை கண்டு பயப்படுகிறது. எம்ஜிஆர் பக்தன் என்ற முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என் தலைவன் மறைந்து 26 ஆண்டுகள் ஆகியும் அவர் பெயரை கேட்டாலே திமுக கும்பல் நடுங்குகிறது என்பதை நினைக்கும் போது- courtesy net
இன்று இரவு சன் லைப் தொலைகாட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் தனி பெருந்தலைவர் மக்கள் திலகம் செல்வமாக வாழ்ந்து காட்டிய காவியம் ரிக்க்ஷாகாரன் ஒளிபரபபடுகிறது .
http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg
http://i59.tinypic.com/2vv6mbd.jpg
கோவை ராயல் திரை அரங்கில் திரையிட்டபோது கோவையில் ஒட்டப்பட்ட சுவர் விளம்பரம்.
மகளிர் தின வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?v=4feyBDQALQs
http://www.youtube.com/watch?v=I7W9IR6iHM0
மதுரை நகரில் திமுக மாநாட்டில் மக்கள் திலகம் - 1972......
நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மக்கள் திலகத்தின் அசத்தலான பதில்கள் ...
1957 ,,, திருவண்ணாமலை தேர்தலில் மக்கள் திலகத்தின் அனுபவம் ....
மக்கள் திலகத்தின் ஆவணங்கள் விரைவில் ........
நான் ஏன் பிறந்தேன்' (1972)
"நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.
அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.
மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.
படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.
கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'
"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'
"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'
"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'
"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'
"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'
இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,
"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.
எனினும் திருமணம் ஆகாமல் காதலியுடன் டுயட் பாடும் காட்சிகளிலேயே நடித்து வந்த எம்ஜிஆர் இந்த படத்தில் வித்தியாச மான வேடம் . இந்த படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.
courtesy - malaisudar
1.நான் காற்று வாங்க போனேன்(கலங்கரை விளக்கம்)
2.நான் ஆணையிட்டால்(எங்க வீட்டு பிள்ளை)
3.நான் பார்த்ததிலே உன்(அன்பே வா)
4.நான் ஏன் பிறந்தேன் (நான் ஏன் பிறந்தேன்)
5.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)
6.நான் மாந்தோப்பில் (எங்க வீட்டு பிள்ளை)
7.நான் ஒரு குழந்தை நீ (படக்கோட்டி)
8.நான் அளவோடு எதையுமே ரசிப்பவன்(எங்கள் தங்கம்)
9.நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்(நான் ஆணையிட்டால்)
10“நான் செத்துப்பொழச்சவண்டா”
11.”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்”
hit songs by valiba vali to our makkal thilagam mgr movies.
http://www.youtube.com/watch?v=sjUUPXaS9XU
http://www.youtube.com/watch?v=x8YtKBtSnvY
http://www.youtube.com/watch?v=q2T2CLz6OiE
http://www.youtube.com/watch?v=ft44mIGumqY
http://www.youtube.com/watch?v=oqjBSIAodHs
http://www.youtube.com/watch?v=Mfu7l1IK2ZU
http://www.youtube.com/watch?v=xDTbETzE69E
http://www.youtube.com/watch?v=IACqSG0qUgg
http://www.youtube.com/watch?v=ByXABmm5OM4
http://www.youtube.com/watch?v=ZdwICt5hPUI
http://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM
எல்லா பதிவுகளும் நன்று... ஆயிரத்தில் ஒருவன் சுமார் 100 - 150 திரை அரங்குகளில் வெளிவரும் என தகவல்... சென்னையில் avm ராஜேஸ்வரியில் வைக்கப்பட்டுள்ள பேனர் அட்டகாசம்...
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் '' 10.3.1972
இன்று 42 ஆண்டுகள் நிறைவு . தேவர் தயாரித்த 16 படங்களிலே அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த படம் .
1972ல் சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் நல்ல நேரம் .
http://i58.tinypic.com/241jls6.jpg
செல்லமஹால் Colombo , வின்சர் யாழ்ப்பாணம் ஆகிய திரைகளில் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம்.