http://s4.postimg.org/3xptcc7il/fssa.jpg
Printable View
மக்கள் திலகத்தின் பல அரிய நிழற் படங்களை பதிவுகள் செய்த இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
நன்றி .
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார் விரைவில் கோவை நகருக்கு வர உள்ள மக்கள் திலகத்தின் படங்கள் -பட்டியல் மிகவும் அருமை .
மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் எத்தனை சத்தியமான வார்த்தைகள் . அவர் வழி நடப்பவர்கள் இந்த பாடல்களை
நினைவில் வைத்து அதன் படி நடந்திருந்தால் .....
தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவை இல்லை
இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
எடுப்பவர் யாரும் இல்லை
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை...
வார்த்தையில் அடங்கவில்லை...
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது
சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும் கிடையாது
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது
பெரும் தொல்லையில் சிரிக்கும்
தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
பிற மொழிகளில் மக்கள் திலகத்தின் படங்கள் . இதுவரை பார்த்தறியாத விளம்பரங்கள். பொக்கிஷங்கள். நன்றி திரு வினோத் சார். முடிந்தால் அவற்றின் வீடியோக்களை பதிவிடவும்.
பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட அரிய மக்கள் திலகத்தின் புகைப்படங்களை அவற்றுக்கான விளக்கங்களுடன் பதிவிட்ட பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
1967 ஜனவரி 12-ந்தேதி பிற்பகல் சென்னை நகரம் பதட்டத்தில் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் -எம்.ஆர்.ராதா குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு
அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... ஆட்டோக்களும் ஆங்காங்கே
நிறுத்தம். ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து எம்.ஜி.ஆரை பொது மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.
டாக்டர்களே உள்ளே நுழைய திணறினார்கள். நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள், வி.ஐ.பிக்கள் படைபடையாக ஆஸ்பத்திரியில் முற்றுகை. யாரும் தலைவரைப் பார்க்க அனுமதி இல்லை. விசிட்டர் புத்தகம் கையெழுத்துக்களால் நிரம்பி வழிந்தது.
ஐந்தாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து எம்.ஜி. ஆர் அவர்களை நெருங்கினேன்.
உயிர் போகும் சோதனையை தாண்டிய மனிதர்- இரண்டு நாள் 'காவல்காரன்'-
படப்பிடிப்பில் மட்டுமே என்னைப் பார்த்தவர்- என் முகத்தையே தாமதமாக அடையாளம் கண்டவர் - ஊருக்குப் போனேன் என்று சொன்னதும், விழிகளை விரித்து -'அம்மா சௌக்கியமா'- என்று பாசத்துடன் கேட்டபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .
55 வயதில் விபத்தில் கை ஒடிந்த நிலையில் கூட - 'மகன் படிப்பு கெட்டுப்போகும், யாரும்
அவனுக்கு தந்தி அடிக்கக் கூடாது'- என்று நண்பர்களுக்கு 6 மாதம் கடுமையான
உத்தரவு போட்டவர் - 30 வயதிலேயே 3 பிள்ளைகளுடன் கணவரையும் பறி கொடுத்தவர் - அம்மா, என்று படப்பிடிப்பின் போது நான் சொன்னது- எம். ஜி.ஆர் மனதில் ஆழமாகப்
பதிந்து விட்டது. அதனால் தான் இத்தனை களேபரங்கள் நடுவிலும் என தாயை நினைவில் வைத்து விசாரித்தார்.
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி . தெலுங்கு பட டப்பிங் வீடியோ -இணைய தளத்தில் கிடைக்கவில்லை .
மக்கள் திலகம் நடித்த 67 படங்களின் பேப்பர் விளம்பரம் மற்றும் சில படங்களின் தெலுங்கு பாட்டு புத்தகம் இடம் பெற்று உள்ளது .
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், உலகம் சுற்றும் வாலிபன் பற்றிய நினைவலைகள் அருமை. வாலிபனைப் பற்றிய திரு.ராமமூர்த்தி சார் அவர்களின் நாளிதழ் பதிவுகள் அற்புதம். அதிலும் ஹாங்காங்கில் தலைவருக்கு வரவேற்பு என்ற செய்தியில், நாகேஷ் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர் வைரமோதிரம் பரிசளித்த தகவல் இடம் பெற்றுள்ளது. நாகேஷின் பிறந்த நாளில் அந்த பதிவை வெளியிட்டு அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்.
குறிப்பாக, திரு. செல்வகுமார் சார் அவர்களின் தலைவரைப் பற்றிய அரிய புகைப்படங்களின் அணிவகுப்பு அபாரம். அதிலும் கையில் பச்சை குத்திக் கொண்டு அவர் போஸ் கொடுக்கும் படம் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.
அதிமுக கட்சி ஆரம்பித்த புதிதில் தொண்டர்களிடம் உணர்வுபூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தவும் பார்த்தவுடன் இவர் நமது ஆள் என்று தெரிந்து கொள்ளும் வகையிலும் தொண்டர்கள் கையில் கழகக் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று தலைவர் ஆணையிட்டார். மேலும், இரண்டாம் கட்ட தலைவர்கள் அளவில் பார்த்தால், பச்சை குத்திக் கொள்பவர்களுக்கு கட்சி மாற உளவியல் ரீதியாக ஒரு தயக்கம் இருக்கும். அதற்காகவும் ராஜதந்திரத்துடன் கட்சியினர் அனைவரையும் பச்சை குத்திக் கொள்ளச் சொன்னார் தலைவர். தொண்டர்களுக்கு மட்டுமே உபதேசம் என்றில்லாமல் தானும் கையில் பச்சை குத்திக் கொண்டார்.
ஆனால், பச்சை குத்திக் கொண்ட பின்னும், தலைவரின் முதல் ஆட்சிக் காலத்தில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு பின்னர், நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் பச்சையுடனேயே திமுகவில் சேர்ந்தனர். 1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மனோகரனை மாவீரன் டி.கே.கபாலியை அதிமுக வேட்பாளராக்கி தலைவர் தோற்கடித்தது வரலாறு.
அய்யாவும் பேரறிஞர் அண்ணாவும் வளர்த்த திராவிட இயக்கக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க தலைவர் தொடங்கிய அதிமுக தலைமையிலான அரசின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும், ஆரம்ப காலத்தில் இருந்தே தலைவரின் விசுவாசியும் பச்சைத் தமிழ் மறவனுமான திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
now telecasting in sunlife -channel MGR.,'S evergreen meha hit movie ENGA VEETTU PILLAI...
வஞ்சகர்களின் மொத்த உருவத்தின் சதிராட்டம்- குள்ளநரித்தனம் தற்பொழுது வென்றிருக்கிறது என சொல்லலாம்...குற்றசாட்டுகள் யார் வேண்டுமானாலும் கூறலாம்... ஆனால்...அந்த குற்றங்கள் ஏதும் நம்மிடம் இல்லாமல் இருக்க வேண்டும்!!! அந்த அருகதை நாம் பெற்றிருக்க வேண்டும் ... அதுதான் மனசாட்சி படி நியாயமான செயலாகும்...இதை மக்கள்திலகம் - "விவசாயி" - காவியத்தில் தெளிவாக உணர்த்தி இருப்பார்...தர்மம் மீண்டும் வெல்லும்...
http://i62.tinypic.com/1rsr6d.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i60.tinypic.com/mptgw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i60.tinypic.com/2ppwy0y.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i57.tinypic.com/hx9buu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i58.tinypic.com/20rnrj8.jpg
http://i60.tinypic.com/2d0nz0k.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i1170.photobucket.com/albums/...ps6bfa78c2.jpg
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
http://i60.tinypic.com/35cinnl.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i62.tinypic.com/2wd6g51.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Thendral Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
https://www.youtube.com/watch?v=qo-ZLA_mjG4
thanks sailesh sir
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா
அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
http://i1170.photobucket.com/albums/...ps3ae75893.jpg
http://i1170.photobucket.com/albums/...psc7d0f094.jpg
'மரகதத்தீவில் மக்கள் திலகம்'
- சி-.சு.-
இலங்கையில் எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி...[நூலகத் தளத்தில் ஈழத்துப் படைப்புகள், சஞ்சிகைகளையெல்லாம் சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு இம்முயற்சி பெரிதும் பயன்படும். ஈழத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களில் முக்கியமானதொன்று சுன்னாகத்திலிருந்து வெளிவந்த 'கலைச்செல்வி' இதழ். இவ்விதழின் கார்த்திகை 1965 இதழில் அச்சமயம் ஈழத்துக்கு நடிகை சரோஜாதேவியுடன் வருகை தந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி 'மரகத்தீவில் மக்கள் திலகம்'என்னுமொரு கட்டுரை சி.சு. என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளன.]
கண் பார்த்த இடமெல்லாம் கணக்கற்ற சனக்கூட்டம்; வீதியோரங்களிலே, வெளியான இடங்களிலே, மாடிவீடுகளிலே, மதிற்சுவர்களிலே, சந்துபொந்துகளிலே, சன்னல் விளிம்புகளிலே, வாசற்படிகளிலே, வாகனக்களின் மேலே எங்கெல்லாம் ஒற்றக்காலிலாவது நிற்கலாமோ அங்கெல்லாம் அப்படியே நிற்கிறார்கள். ஆடவரும், அரிவையரும் அணியணியாய் நிற்கிறார்கள். சிறுவரும், சிறுமியரும் சீராக நிற்கிறார்கள். சிங்களரும், தமிழரும், சோனகரும் நின்றார்கள். தொழிலாளியும் முதலாளியும் தோளோடு தோள் நின்றார்கள். கொதி கொதிக்கும் வெயிலிலும் கொடகொடக்கும் குளிரிலும் கூட்டமாய் நின்றார்கள்.
வைத்த விழி வாங்காது, நின்ற இடம் நகராது யாருக்காக நின்றார்கள்? எதற்க்காக நின்றார்கள்?
நாடாளும் மன்னனுக்காக நிற்கவில்லை; நாட்டின் பிரதமருக்காக நிற்கவில்லை; அரசியல் தலைவருக்காக நிற்கவில்லை; சமயத்தின் காவலருக்காக நிற்கவில்லை. சர்வாதிகாரிக்காகவும் நிற்கவில்லை.
'கலைச்செல்வி' இதழ்; கார்த்திகை 1965.பின், யாருக்காக நின்றார்கள்? ஒரு மனிதனின் வரவை எதிர்பார்த்து நின்றார்கள்; எம்.ஜி.ராமச்சந்திரனை எதிர்பார்த்து நின்றார்கள், ஆம்! எம்.ஜி.ஆர். ஒரு மனிதன். மனித உருவில் மிருகங்கள் உலாவும் இவ்வுலகில் - மனிதரைப் போன்ற கயவர்கள் மலிந்துள்ள இவ்வுலகில் - ;மனிதம்' என்ற உணர்ச்சி நிறைந்த , உயர்ந்த பண்புகளும் சிறந்த குண்நலன்களும் நிறைந்து விளங்கும் மனிதன் என்ற நிறைகுடம் எம்.ஜி.ஆர். அந்த மனிதனை எதிர்பார்த்துத்தான் ஆயிரம் ஆயிரமாகக் கூடி நின்றார்கள் மக்கள். கண்டவுடன் களிபேருவகை கொண்டார்கள்; கடவுளைத் தொழுவதைப்போல் கை கூப்பி வணங்குகின்றார்கள்.
கொழும்பிலும், கண்டியிலும், மட்டுநகரிலும், மாத்தளையிலும், யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும் இதே காட்சி; இதே நிகழ்ச்சி! சரித்திரம் கண்டறியாத சனத்திரள் ஒவ்வொரு நகரத்திலும் கூடியது.... மேலும் வாசிக்க
மேலும் சில காட்சிகள்....
கொழும்பில் மக்கள் திலகம் மற்றும் அபிநய சரஸ்வதி.மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் 'சொல்லின் செல்வர்' செ.ராஜதுரையுடன்...
நன்றி: நூலகம் http://noolaham.net/
http://i60.tinypic.com/6gegif.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பின் " மாட்டுக்கார வேலன் " படப்பிடிப்பின் இடைவேளையில் மக்கள் திலகத்துடன், நடிகை லட்சும், இயக்குனர் ப. நீலகண்டன் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் :
http://i59.tinypic.com/2rw1d15.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்