Naan kadavul--songs not available in audio CD
these 2 songs r not not available in tamil audio CD.
these r available in telugu version(NENU DEVUDNI) audio cd...
1.maa ganga...(title song)
singer: kunal ganjawala
lyrics : bharat acharya
link:http://rapidshare.com/files/19971527...-Maa_Ganga.mp3
2.song : aham brahmasmi...
singer : bhupinder singh
lyrics : yoga mohan
link :http://rapidshare.com/files/19971552..._Brahmasmi.mp3
....songs r ripped from audio cd.....very good quality...download and enjoy..
சாரு
சாரு ஒரு ஞானசூன்யம் என எல்லா நேரங்களிலும் நிரூபித்து வருகிறார்.
ராஜாவின் பின்னணி இசையைவிட யுவனின் பின்னணி இசை மேலானது என சில வருடங்களுக்கு முன்பு பிதற்றினார். ஏதாவது ஒரு வகையில் ராஜாவை குற்றம் சொல்லியாக வேண்டும் சாருவுக்கு. இவர் ஒரு சாதாரண பத்தி எழுத்தாளர் மட்டுமே. இலக்கியம், கதை எல்லாம் இவருக்கும் காத தூரம். அப்படியிருக்க, இசையை பற்றி ஒரு எழவும் தெரியாத ஒருவன் ஒரு இசைமேதையின் ஞானத்தை விமர்சிக்கும் பாங்கையே நாம் இங்கே சாருவிடத்தில் காண்கிறோம்.
முரண்பாடுகளின் உச்சம் சாரு. எல்லாரும் சூரியன் கிழக்கே உதிக்கிறது எனச் சொன்னால், "இல்லை வடக்கில் தான் உதிக்கிறது" எனச் சொல்வார். குறைந்த பட்சம் கிழக்கிற்கு எதிர்திசையான மேற்கில் உதிக்கிறது என்ற கோணத்தில் கூட யோசித்து சொல்லும் அளவுக்குக் கூட சிந்தனை ஆற்றல் இல்லாதவரே சாரு.
தயவு செய்து, இசை யென்றால் என்ன? சத்தம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவையாவது சாரு கற்றுக்கொண்ட பிறகு ராஜாவை விமர்சனம் செய்யப் புறப்படலாம்.
இவர் அமேரிக்காவில் பிறந்திருந்தால் ஜான் வில்லியம்ஸ் இசை குப்பை என பிதற்றுவார். மைக்கேல் ஜாக்ஸன் இசையே உன்னதமானது என கிறுக்குவார். இவருக்கு வேண்டியது எப்படியாவது இளைஞர்கள் மத்தியில் புகழ்.
தாடி வைத்தவனெல்லாம் திருவள்ளுவர் என்றால் ஆட்டுக்கு கூட தாடி முளைக்கிறது. உடனே அதையும் வள்ளுவன் என அழைக்கமுடியுமா என்ன? அதுபோல, பேனா பிடித்தவரெல்லாம் விமர்சகரும், எழுத்தாளருமாக முடியாது.