மனக்கிலேசங்களுக்கும் - meaning ?????
Printable View
மனக்கிலேசங்களுக்கும் - meaning ?????
சஞ்சலங்கள்/குழப்பங்கள் என்று பொருள் கொள்ளலாம். Disturbance.
நன்றி அக்கா :DQuote:
Originally Posted by Shakthiprabha
கிலேசம் தமிழ்ச்சொல்லா ???
hw to pronounce it ? kilEsam or kilEcham ?
'k(i)lEsam'
I think its sanskrit :? not sure. Ive heard people using it.
April 22 nd
________
பசு ஒன்று நம் தொடரில் தலைகாட்டுகிறதே, கதையின் படி அதற்கு உடம்பு சுகமில்லை. அதனால் பிரயோஜனப்படாது எனத் தெரிந்து கசாப்பு கடைக்காரனிடம் விற்றுவிட எண்ணுகிறார் நீலகண்டன். அதற்கு மனம்வருந்தி தானே அப்பசுவை பராமரிக்க ஒப்புக்கொண்டு பணத்தை கொடுத்து விலைக்கு வாங்குகிறார் சாம்பு. அவர்க்கு பணம் கொடுத்து உதவுவது நாதன்.
பசுவை ஏன் உசத்தி வைத்திருக்கிறோம்? கோ-மாதா என்ற பெயரும் வழங்குவதுண்டு. பசு என்றால் சிறப்பு என்பதால், த்வாபர யுக முடிவில் அல்லலுற்ற பூமாதேவி தன் முறையீட்டை தெரிவிக்க இறைவனிடம் பசுவின் வடிவில் சென்றாளாம். பசு என்றால் என்ன சிறப்பு? நடைமுறை வாழ்வில் பசு என்ற பிராணி மட்டுமே பிறர்க்கு உதவும் பொருட்டு தன் செல்வத்தை செலவிடுகிறது. அதன் பால், நமக்கு பாலாய்-தயிராய்-வெண்ணையாய் நெய்யாய் உருக்கி பயன்பட உதவுகிறது. அதன் சாணம் கூட வீணாக்கப்படாமல் உபயோகிக்கப்படுகிறது. மேலும் தன் கன்றுக்கு பாலூட்டிய பின் பிறருக்கு பால்வழங்கும் ஜீவன் பசு. இப்படி சிறந்த குணங்கள் கொண்டதால் பசுவை உயர்வில் வைத்திருக்கிறோம்.
வாழை மரமும் என் நினைவில் வந்தது. வாழை தன்னை முழுமையாய் பிறர்க்கு தந்துதவும் தாவரம். அதனால் அதன் சிறப்பேற்றி, நல்ல சமய சந்தர்பங்களில் வாழையை நற்-சகுனம் அறிவிக்க பயன்படுத்துகிறோம். வாழையும் அதனுடைய தண்டு-நார்-பூ- பழம்-காய்-இலை முதற்கொண்டு தன்னை முழுமையாய் பிறர்க்கு அர்பணிக்கிறது.
வேம்புவின் மகள் ஜெயந்திக்கு வரன் அமைகிறது. ஆனால் ஈன்ற தாய் மட்டுமே பிராமண வகுப்பில் பிறந்தவள், அவள் கலப்புத் திருமணத்தில் ஈடுபட்டாலும் பிள்ளையை பிராமணனுக்குறிய பழக்கங்களுடன் வளர்த்திருக்கிறாள். தனக்கு வரும் மருமகளும் தான் பிறந்த வகுப்பை சேர்ந்தவளாக இருக்கவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டுள்ளாள். வெம்புவின் வீட்டில் அவரைத் தவிர அவர் மனைவிக்கும், அக்காளுக்கும் இச்சம்பந்தம் பிரியமாய்ப் படவில்லை. ஜெயந்திக்கு அந்தவீட்டுப் பையனை (கிரி) பிடித்திருக்கிறது.
பல வீடுகளில் நடக்கும் சம்பவம். மீண்டும் தலைப்புக்கே வருவோம். யார் பிராமணன்? பூணூல் போட்டால் அவன் பிராமணனா? பிராமண வகுப்பில் பிறந்ததால் மட்டும் அவன் பிராமணனா? பூணூல் என்பது அக்காலத்தில் மூன்று வர்ணத்தவரும் அணிந்து வந்தனர். மந்திரங்கள் மூன்று வகுப்பு மக்களும் சொல்லி வந்தனர்.
பிரமணீயம் பிறப்பாலல்ல தகுதியால் பெறப்படுவது. சத்யகாமன் என்பவனின் தாய் ஜபலா. அவள் பல இடங்களில் பலபேர்களின் சம்பந்தம் வைத்திருந்ததால், சத்யகாமன் யாருக்கு பிறந்தவன் என்று அவளால் கூற முடியவில்லை. சத்யகாமன் கௌதம முனிவரிடம் பாடம் பயில சென்ற போது அவன் பிறப்பைக் கேட்டு மற்ற மாணாக்கர்கள் எள்ளி நகையாடினர். ஆனால் கௌதமரோ "நீ உண்மையை பேசினாய். நீயே பிராமணன்" என்றார். பிராமணத்துவம் ஒரு தகுதி. தங்களின் நடத்தையால் எவரும் அதைப் பெறலாம்.
ஒரு முனிவன் தவத்திலிருக்கும் போது பறவை அவன் மேல் எச்சமிட்டுவிட்டது. அதனை கண்ணாலேயே சுட்டெரித்தார். அதன் பின் பிட்சைக்கு சென்ற இடத்தில், அவ்வீட்டுப்பெண்மணி, கணவனுக்கு பணிவிடை செய்த பின், பிட்சை இட்டாள். இவர் மீண்டும் முறைக்க "என்னையும் பறவை என்று நினைத்தாயோ" என்றாள் அவள் ("கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா") இதைக் கேட்டதும் ஆச்சரியமுற்று அவன் உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம் என்றான். என் கணவனுக்கு பணிவிடை செய்வதே என் கடமை. நான் பத்தினி தர்மத்தை கடைபிடிக்கிறேன் என்றாள். தனக்கும் உபதேசம் செய்விக்க அவர் வேண்டுகோள்விடுக்க. "இன்ன ஊரில் ஒரு கசாப்பு கடைக்காரன் இருக்கிறான் அவனிடம் போய் பாடம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறாள்.
அவன் பெயர் தர்மவியாசன். "ஒஹொ அந்த பெண் அனுப்பினாளா" என்று வந்த விஷயத்தை முன்னமே உணர்கிறான் அக்கடைக்காரன். எப்படி இந்த ஞானம் என முனிவன் கேட்க. "என் பெற்றோர்க்கு பணிவிடை செய்வதே சிறந்த தர்மம் என நான் கொண்டிருக்கிறேன்" என்கிறான்.
உடனே முனிவன் "நீ தான் பிராமணன்" என்று தெளிந்து அவனடியில் பாடம் பெறுகிறான்.
யார் பிராமணன் என்ற கேள்விக்கு தோராயமான விளக்கம் கிடைத்துவிட்டதாய் எண்ணி அடுத்த பகுதிக்கு செல்வோம்
(வளரும்)
April 23rd
________
இராமர் மிகுந்த விரக்தியின் விளிம்பில் புரியாது நின்ற போது வசிஷ்டர் அவருக்கு சில விளக்கங்களை வழங்கினார். அதன் சாராம்சம் "யோக வாசிஷ்டம்" என்ற நூலில் புனையபட்டிருக்கிறது என்பதை முன்னமே பார்த்தோம். முயற்சி பற்றி விளக்கும் போது,
"மனிதன் முயன்று கொண்டே இருக்க வேண்டும். எந்த நல்ல காரியத்திற்கும் மனம் சோர்ந்து விடாது, தளராது முயன்று கொண்டே இருக்க வேண்டும். முயன்றால் எதையும் சாதிக்கலாம். சிறு காரியங்கள் முதல் பெரிது வரை இடைவிடாது முயலும் போது தன்-முயற்சி சாதிக்காதது எதுவும் இல்லை" என்று அறிவுறுத்துகிறார்.
அப்படியெனில் முயற்சி ஒன்றே போதுமே, இறைவன் என்ற ஒன்று ஏன் தேவை? எதற்கு இருக்கிறது? - இது ராமன்
அதற்கு வசிஷ்டர் "முன் வினை கடுமையாய் இருக்கும் பட்சத்தில், முயற்சி வீணாகும் வாய்ப்பிருக்கிறது. அதனால் மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும். முன்வினைப்பயன் நல்லதாக இருந்தால், அல்லது கடுமை குறைந்து இருந்தால், சிறு முயற்சியும் கைகூடும்." என்கிறார்.
முன்வினை என்பது தான் சிலருக்கு சிறுமுயற்சியின் அதிர்ஷ்டமும், வேறு சிலருக்கு பல முயன்றும் தோல்வியும் தோன்றக் காரண்மாய் உள்ளது.
Its all the question of balancing our account to reflect credit. Then we reap benefits. When there is neither debit or credit, (வினைகள் அற்றுவிடும் போது - (நல்ல வினையோ, தீவினையோ) we stand nil and hence merge with the supreme. (so they say)
நீலகண்டனின் உதவியுடன், 'மார்கபந்து' என்ற மனநிலை மருத்துவரிடம் அஷோக்கை பரிசீலனை செய்ய முடிவெடுக்கின்றனர். இதைத் தவிர இன்றைய பகுதியில் வலியுறுத்தி எழுதும் அளவு விஷயம் ஏதும் இல்லை.
(வளரும்)
April 24th
________
அஷோக் மருத்துவரை அணுக மறுக்கிறான். என் தேவை என்னவென்று எனக்குத் தானே தெரியும் என்று
மெதுவாக வாதிட்டும் கூட நாதனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. பாகவதரை விட்டு பேசச் சொல்லலாம் என்றால் இஷ்டமில்லை என்று அவரும் மறுத்துவிடுகிறார். அவர் நல்லது சொன்னாலுமே நாதன் தம்பதியர் மனம் இசையவில்லை. நமக்கு பிடிக்காததை நம் நன்மையைக் கருதி சொல்பவர்கள் அரிது என்று விபீஷணன் இராவணனிடம் மனமிசையாத விஷயத்தை பற்றி பேசும் போது கூறுகிறான். அப்படி சொல்பவர்கள் அரிது. அப்படி சொன்னாலும் அந்த அறிவுரையின் படி கேட்டு நடப்பவர்கள் இன்னும் அரிது என்பது வழக்கு.
கவனிக்கத் தக்க விஷயம் ஒன்று. நாதனுக்கு என்றைக்கும் இல்லாத பொல்லாத கோபம் வருத்தம் வருகிறது. பொதுவாகவே நம் கோபங்கள் ஆத்திரங்கள் எல்லாமே பிறரின் நன்மைக்காக வருபவை அல்ல. அதனால் அது நியாயமான கோபமாக இருப்பது அரிது. அஹங்காரத்தால் மட்டுமே கோபம் வரும் வாய்ப்பு அதிகம். இவர் ஏன் கோபப்படுகிறார். தன் மகன் வர மறுக்கிறான் என்ற வருத்தம் ஒருபுறமிருக்க...
1. இவனால் நான் படும் அவமானம் நிறைய
2. என் சொல் பேச்சை மதிக்க மறுக்கிறானே (அஹங்காரம்)
3. நாளை நான் நீலகண்டனுக்கு என்ன பதில் சொல்வேன். அவமானமாக ஆகிவிடுமே.
4. இவனுக்காக இன்னும் எத்தனை நாள் எனக்கு கஷ்டம்.
அஷோக்-கிற்காக அவர் படும் வருத்தமும், நியாயமான கோபமும் சிறிது இருந்தாலும், அதை மிஞ்சிவிடுகிறது, அவரின் சுயத்தை திருப்தி படுத்தாததால் அவர் கொள்ளும் கோபம்.
இன்னொருவரின் மேல் கோபம் ஏன் வருகிறது?
இவன், எனக்கு பெருமை சேர்க்கவில்லை. என்னை மதிக்கவில்லை. என் அஹத்தை புண் படுத்திவிட்டான்.
ஆக, முன்னே ஜம்-மென்று "என்" எனும் அஹங்காரமே வீற்றிருக்கிறது.
உபநிஷத் கூறும் விளக்கம் உண்டு. உலகில் அன்பு செலுத்துபவனுள்ளும் "தன்னுடைய" என்ற அஹங்காரமும், எண்ணமும், இருப்பதே அன்புக்கு அடிப்படை.
ஒரு தாய் "இவன் என்னுடையவன், என் இரத்த்தில் ஜனித்தவன், என்னில் பாதி" என்று பிள்ளைகளிடம் அன்புற்றிருக்கிறாள்.
கணவன் மனைவியிடம், இவள் எனக்கு இல்லற சுகம் தருகிறாள். எனக்கு பிள்ளை பெற்று, என் தேவைகளை கவனிக்கிறாள் என்று அன்புற்றிருக்கிறான்.
மனைவி கணவனிடம் இவனால் எனக்கு பாதுகாப்பு, இருக்க இடம், உடை, உணவு எனக்கு இடுகிறான் என்று அன்புற்றிருக்கிறாள்.
இவை இல்லாமலேயே இன்னொரு ஜீவனிடம் "எனக்காக" என்ற எதிர்பார்ப்பு இன்றி அன்பு செலுத்தபடுவது மிகவும் அரிது.
ஆகவே, love has its selfish motive- மறுக்க முடியாத உண்மை.
(வளரும்)
//உலகில் அன்பு செலுத்துபவனுள்ளும் "தன்னுடைய" என்ற அஹங்காரமும், எண்ணமும், இருப்பதே அன்புக்கு அடிப்படை//
:bow: Superb ka... :bow:
நன்றி விராஜன், ஆனா :)
____
April 27th
_______
சாம்புவின் மனைவி செல்லம்மாள், அஷோக்கின் ஒப்புதல் பெற நீலகண்டன் மகள் உமாவை விட்டு பேசச் சொல்லுமாறு யோசனை கூறுகிறாள். அறிவுரைகள் / யோசனைகள் முவ்வகைப் படுமாம்.
1. ப்ரபு சம்ஹிதே:- அதாவது அரசன், எஜமானன் முதலியோரின் அறிவுரை, ஏறக்குறைய கட்டளை
2. சுகுருத் சம்ஹிதே:- நண்பனின் அறிவுரை. சக தோழன் கூறும் யோசனைகள்.
3. காந்தா சம்ஹிதே:- பெண் - சம வயதையொத்தவள்- பார்யை அல்லது மனைவி- தோழி - ப்ரியத்துடன் நேரம் பார்த்து, அஃதாவது இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்லப்படும் யோசனைகள்.
சமயோசிதமாக பெண்கள் செயல்படுவதால், சில நேரம் அவர்கள் கூறும் அறிவுரைகள் எடுபட்டுவிடும் வாய்ப்பு உண்டு.
குருவின் பெருமைகளை அருமைகளைப் பற்றி மீண்டும் சில கருத்துக்கள் கூறுகிறார் சோ. குரு என்பவன் உயர்ந்தவன். மேம்பட்ட தகுதிகள் உடையவனே குரு. கல்லூரி ஆசிரியர்கள், வித்தைகளை கற்றுவிப்பவர்களை குருவின் ஸ்தானத்தில் உயர்த்த தகுதியில்லை.
ஒரு முறை சிறந்த குரு ஒருவர் தம் சிஷ்யனுக்கு பரீட்சை வைத்தார். "நீ மாடும் மேயும் போது பாலைக் கறந்து உண்ணாதே" என்று உத்தரவிடுகிறார். அவன் பிட்சை எடுத்து உண்கிறான். "பிட்சை எடுக்காதே" என்கிறார். திடீரென ஒரு நாள் கிணற்றில் அவன் விழுந்துவிட்ட செய்தி எட்டுகிறது. "உங்கள் ஆணைப்படி நான் பிட்சை எடுக்காமல், எருக்கம்பூவை உண்டு வந்தேன், அதனால் என் பார்வை குன்றிவிட்டது, கண் தெரியாது கிணற்றுள் விழுந்து விட்டேன்" என்றான். எப்பேற்பட்ட குரு பக்தி! என்று மெச்சி, அவனுக்காக அஸ்வினி தேவர்களிடம் வேண்டி பார்வை மீட்டுத் தந்து பின் ஞானமும் உபதேசித்தார்.
குருபக்தி என்பது அப்பேற்பட்ட விஷயம். அப்படிப்பட்டனை குருவாக கொண்டதால் அந்த பக்தி தலை சிறந்து விளங்கியது. இங்கு குருவும் உயர்ந்தவராய் இருத்தல் மிக அவசியம். உண்மையான குருவின் ஞானம் சிஷ்யனின் பக்தியுடன் சேரும்போது ஜொலிக்கிறது. குருவிற்கு சிஷுருஷை செய்து ஞானம் பெற்றுக்கொள்ள வேண்டும். குருவின் பால் பக்தி இருத்தல் வேண்டும். குரு என்பவன் சிறந்த "ஞானி" ஆக இருத்தல் அவசியம்.
உத்தாலகன் என்பவன் குருவின் ஆணைப்படி வெள்ளம் கரைபுரண்டு கிராமத்தை அழிக்காமல் இருக்க, தன் உடலைக் கொண்டு அணைக்கட்டுகிறான். (casabianca :???!!) அப்படிப்பட்ட குருபக்தியை மெச்சி அவனுக்கு ஞானம் புகட்டுகிறார் குரு.
மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற வரிசைக் கிரமத்திற்கு,
ஒருவன் மாதா-பிதா ஆகியவருடன், குருவின் துணை கொண்டு, ஞானமெய்தி இறைவனின் ஷரண் புகுகிறான் என்ற விளக்கமும் உண்டு.
(வளரும்)
SP :)
what you have narrated about other jeevans, so called animals, is absolutely true. I have come across people who can converse with them eg, elephants in temples and i was amazed by the way the elephants respond also. I am reminded of Shri Mahalinga swamy temple of Thiruvidaimarudur.
nammaku oru vishayam puriyalenna, athu illave illanu solrathum, athai kindal panrathum, inraya nadaimurai.
your explanation on "naan factor" was :clap:
illa shankar. adhu aadhe kaalathulerndhE irukku. :cry:Quote:
Originally Posted by wrap07
Well said ... :thumbsup:Quote:
Originally Posted by wrap07
but idhai innikki seiravanga othupAngaLA ? for instance ... ennala pArka mudiyalai, ennAla feel panna mudiyalai ... idhu illAma iruppadhai namba mAtten nnu solravangala eppadi thappu nnu prove pannuveenga ?
Certain things have to be felt, experienced. Cannot prove it. Spiritualism, God, the Faith, Love, idhellam anubavicha thaan adhOda magimai puriyum.Quote:
Originally Posted by bingleguy
adha anubavikka oru muyarchi kooda edukkaama, prove pannina thaan i will try'nu solravangala onnume panna mudiyadhu vasanth :)
may be VR.Quote:
Originally Posted by viraajan
blinda ethayum brush aside pannathu kidayathu. nammala muzumaiyaa unara mudiyatha, namma sakthikku apparpatta vishayangal irunkkunu unarnthuthaan avangaloda response irunthirukku.
agreed VR :-)
but ellarukkum andha anubavam varanum nnu avasiyam illayE .... for instance ... Love need not come to all ... orutharaiyumE pudikkAma, ulagam per la virakthiyA irundha makkaL illiyA enna :-)
but neenga sonna mAdiri ... step edukkAma irukkiravanga, ignore panravanga .... ivanga karuthai muzhumaiyA eduthukka mudiyAdhu ... avangalai thiruthara porumai namakku illai :P
:) faith thaan niraya vishayangalum base. nambikkaiyotu entha vishayathaiyum anukinaal thaan, athan arumaiyai unara mudiyum. It is for ones own betterment.Quote:
Originally Posted by bingleguy
wrap :-) andha nambikkai seri ... andha nambikkaiyodu adhai aNuginAl nnu sonneenga pAtheengala :) anga dhAne dandanakka :-) adai thAnE seyya mAtengrAnga ..... heheheh ... but as such, VR sonna maadiri andha kAlathulendhu irundhirukkalAm ... oruvar tharum bodhanaiyai nambiya kAlam adhu ... inraikku oruvarai oruvar nambavadhE illai :-) apram engendhu avanga solra karuthai eduthukkardhu :-)
thanks for the whole update
specially the bold letters give prominent of your idea
:ty:
well wriiten
நன்றி ஆனா, ஷங்கர் :)
___
April 28th
________
வெம்புவின் பெண் வரனையொட்டி சாம்புவின் கருத்தைக் கேட்கிறார். சாம்பு, அந்த சம்பந்தத்தினால் வரும் நன்மை தீமைகளை எடுத்து சொல்லி, சாம்பு இரு பக்கத்து நியாயங்களையும் வைக்கிறார். எல்லா பொருத்தங்களையும் விட 'மனப்பொருத்தம்' அமைந்தால் அதுவே திருமணத்திற்கு முக்கியமான ஒன்று என்கிறார்.
பழங்கால வழக்குகளில் 8 விதமான திருமணங்கள் விளக்கப்பட்டிருக்கிறது.
1. ப்ரம்ம முறை: பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் மணமுறை
2. தெய்வ முறை: யாகம் செய்யும் ஒருவனுக்கு அவன் ஒப்புதலின் பெயரில் பெண் கொடுப்பது.
3. ஆர்ஷ முறை: பசு, தானியங்கள் கொடுத்து பெண் கொடுப்பது
4. ராஜாபத்திய முறை: பெண்ணும் ஆடவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட பின், பெரியவர்கள் பேசி மணமுடித்து, வாழ்த்துவது
5. ஆஸ்ருவ முறை: பெண்ணுக்கு பணம் சீதனம் கொடுத்து (வாங்கி அல்ல) திருமணம் செய்து கொள்வது
6. ராக்ஷச முறை: பெண்ணை அபகரித்து கொண்டு போய் மணம் செய்வது
7. வைஷாச முறை: பெண் தூங்கும் போது அல்லது சுயநினைவு இல்லாத போது அவளுக்கு மாலையிடுவது.
(பெயர்களை சரியாக உள்வாங்கியிருக்கிறேனா எனத் தெரியவில்லை)
விவாதிக்கும் அளவு வேறு விஷயம் இல்லை.
(சிங்காரம்-வையாபுரி நினைவிருக்கிறதா? சிங்காரம் கைதியாக சிறையில் இருக்கும் போது அவன் மனைவி இறந்துவிடுகிறாள். அவன் மகனை வையாபுரி தம் வீட்டில் வைத்திருக்கிறார். அவனை வையாபுரியின் மனைவி வேலைகள் ஏவுவதால் அங்கிருக்க பிடிக்காமல் அவன் ஓடி விடுகிறான். சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்பு, இதெயெல்லாம் அறிந்த சிங்காரம், அவனுக்கு ஒரே துணை இனி வையாபுரி என்று தலைவன் மடியில் படுத்து அழுகிறான். )
(வளரும்)
April 29th (பகுதி 1)
_________________
உமாவின் வாதங்களுக்கு அஷோக் செவி சாய்க்கிறான்.
பதிலொன்றும் சிக்காததால், "சரி" என்று ஒப்புக்கொள்கிறான்.Quote:
உனக்கு கல்லூரி படிப்பு தேவைப்பட்டதா ?
இல்லை.
சூட்டும் கோட்டும் பூணூல் விழாவின் பின்பு யாருக்காக போட்டுக்கொண்டாய் ?
மௌனம்.
இன்றைக்கு மருத்துவரிடம் செல்ல ஏன் மறுக்கிறாய். உன் பெற்றோருக்காக செய்யக்கூடாதா? யாருக்காக/எதற்காக பயம்?
பயம் இல்லை.
பின் ஏன் செல்ல மறுக்கிறாய்?மற்றோரும் உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு அல்லவா?
இதையறிந்த பாகவதர் "வினாச காலே விபரீத புத்தி" என வருத்தப்படுகிறார். அதாவது ஒருவனுக்கு கேடு காலம் நெருங்கும் போது புத்தி அதற்கேற்றாற் போல் புரளும். சீதா லக்ஷ்மியின் அவதாரம். அவளுக்கு பொன்மானைக் கண்டு மயக்கம் ஏன் வரவேண்டும். இராமனோ பகவானின் ஸ்வருபம். அவருக்கு தெரியாதா "பொன்மான் என்பதே படைப்பின் அபத்தம்" என்று. எதைத் துரத்திக் கொண்டு ஓடினார்? அதுதான் விதி. வல்லது. கேடு நேரிடவேண்டிய நேரத்தில் புத்தி மழுங்கிப் போகிறது என்பதற்கு அவதாரங்களே சாட்சி. பின் நாமெல்லாம் எம்மாத்திரம்!
மார்கபந்து என்ற மருத்துவரிடம் அஷோக் பரிசீலனைக்கு செல்கிறான். மருத்துவரிடம் செல்வதற்கு முன் சட்டென பொறிதட்டி "Power of NOW" என்ற புத்தகத்தை எடுத்துச் செல்கிறான்.
( பி.கு: 29th april பகுதியை இரண்டாக பிரித்திருக்கிறேன். மருத்துவரிடம் அஷோக் உரையாடுவதை தனியான சிறு பகுதியாய் எழுத நினைத்ததால் இரு பகுதிகள் )
( அடுத்து பகுதி 2 )
April 29th (பகுதி 2)
_________________
மார்கபந்து - அஷோக் உரையாடல்
_______________________________
வணக்கம் டாக்டர். இந்த புத்தகம் உங்களுக்காக கொண்டுவந்தேன்.
"Power of NOW" அடடா! இப்புத்தகத்தை நான் ரொம்ப நாளா தெடிட்டு இருந்தேனே. What a co-incidence!
co-incidence-ன்னு ஒண்ணுமே இல்லை டாக்டர். நிகழ்வு எல்லாமே திட்டமிட்டபடி நடக்கிறது, தற்செயலானது அல்ல.
உனக்கு ஏதோ ப்ராபளம் என்று உன் அப்பா சொல்றாரே.
Then that is his problem.
நீ மற்றவர்களை போல ஏன் இல்லை?
மத்தவர்கள் அறியாமை- என்ற இருளில் இருக்கா. நான் அந்த இருளில் இருந்து மீண்டு வர நினைக்கறேன்.
தூக்கம் எல்லாம் சரியாக இருக்கா?
Do u mean conscious sleep? யோக நித்திரை?
Conscious sleep? அது என்ன?
உங்களோட jung adler க்கு இதெலாம் தெரியாது. :)பதஞ்சலி என்ற முனிவர் சொல்லிருக்கார்.
அவர் டாக்டரா?
Doctor of spirits. அவர் யோக நித்திரை பத்தி எழுதிருக்கார்.
தூக்கம் என்பது unconcious state தானே?
yes.
அப்போ concious sleep-ன்னா?
என்னோட கொஞ்சம் வரேளா! (நாதன் ஏதோ சிந்தனையில் கண்மூடி உட்கார்ந்திருப்பதை காண்பிக்கிறான்) என் அப்பா என்ன பண்ணிண்டு இருக்கார்?
கண்மூடிட்டு ஏதோ சிந்தனைன்னு சொல்லலாம்.
தூங்குகிறாரா?
இல்லை.
தூங்கும் பாவனை-ன்னு சொல்லலாமா?
ஹ்ம்ம்...
இதே பாவத்துடன் தூங்கினால், அது conscious sleep.......Is he aware?
Ofcourse.
அதே தான் யோக நித்திரையின் போதும்.
அதை நாங்கள் sub-conscious state என்று சொல்வோம்.
அது sigmund freud theory. அவர் யோகி இல்லையே!
ஹ்ம்ம் :)
super conscious state-ன்னு ஒன்று உண்டு. அது தான் divine state.
conscious state - நாம இருக்கும் விழிப்பு நிலை
sub-conscious state- என்பது விழிப்பு நிலையின் கீழ் உள்ள நிலை.
---
நாம் இறையை நோக்கி ஏறி அதன் நிலைக்கு செல்ல வேண்டும். ஞானிகள் உயர்கின்றனர். உயர்ந்த நிலை என்பதும் அதைத் தான் குறிக்கிறது.
(வளரும்)
கொசுறு தகவல்கள்
________________
Sigmund freud :
http://en.wikipedia.org/wiki/Sigmund_Freud
alfred alder:
http://en.wikipedia.org/wiki/Alfred_Adler
carl jung:
http://en.wikipedia.org/wiki/Carl_Jung
(பொறுமையாய் படிக்க விருப்பமிருப்பவர்களுக்கு)
____
உறக்கத்தைப் பற்றியோ அல்லது பொதுவாய் மனிதனின் நிலைகள் (state of consciousness) கூறும்போது 4 நிலைகள் கூறப்படுகிறது.
State of being awake: விழிப்பு நிலை.
State of sleep: உறக்க நிலை ஆழ் உறக்க நிலை
State of dream: கனவு நிலை . மனம் மட்டும் செயல்படும் நிலை.
thuryam: இதையெல்லாம் தாண்டிய இத்தனைக்கும் அப்பாற்பட்ட நிலை. பொதுவாக ஞானிகளுக்கு சித்திக்கும் நிலை.
Conversation between Dr and Ashok :clap: :bow:
andha scene appadiyE kan munnadi nadakkura madiri ezhudhi irukkeenga. I can visualise the scene and imagine the tone of Ashok and Dr. Thanks SP akka. :bow:
நன்றி வி.ஆர். எனக்கும் அந்தக் காட்சி மிகவும் பிடித்த ஒன்று. அஷோக் என்ற பாத்திரத்தின் மேல் அபரீமிதமான அன்பு-காதல் ஊற்றெடுக்கிறது என்றால் அது மிகையல்ல. இப்படிப்பட்டவர்களுக்கு பத்தினியாய் இருப்பவர்கள் (ரிஷிப்பத்தினிகள்) கொடுத்து வைத்தவர்கள். ஞான போதனைகளை தன் கணவனிடமிருந்து அவரையே குருவாய்க் கொண்டு பெறுவதென்பது மிகவும் ஆனந்தமான விஷயம். But then, they need to watch what they talk or how they behave இல்லையென்றால் பொசுக் பொசுக் என்று சாபம் கொடுத்து விடுவதாக கதைகள் இருக்கே :P :shaking:
True ka... Romba anubavichu ezhudhi irukkeenga. :bow:Quote:
Originally Posted by Shakthiprabha
:lol: @ Last line :shaking:
April 30th
_______
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் "உன் மகனைப் போல் புத்திசாலி, ஞானி உலகில் இல்லை" என்று நாதனிடம் கூறிவிட நாதனுக்கு திருப்தி ஏற்படவில்லை. மனித மனம் எத்தனை விந்தைக்குறியது! நாமே ஒன்றைக் கற்பித்துக்கொண்டு, அதன் படி செய்திகள் இருந்தால் மனம் ஒப்புகிறது, இல்லையேல் திருப்தி கொள்வதில்லை. அவனுக்கு இலேசானா கோளாறு என்று இரண்டு மாத்திரைகள் எழுதி கொடுத்தால் உடனே நாதன் குடும்பத்தினருக்கு திருப்தியாய் இருந்திருக்கும்.
நம் வீடுகளிலும் கூட அப்படித்தானே. வியாதி வந்தால் பகவானை நாடுகிறோம். "ஆஹா கடவுளே எனக்கு ஒன்றும் இருக்கக் கூடாது, இருந்தாலும், வெறும் மாத்திரைகளில் குணமாகிவிடவேண்டும்" என்று வேண்டுதல். "உனக்கு இன்ன வியாதி, இந்தா மருந்து" என்று கூறினால் தான் திருப்தி, அவனே ஆப்பரேஷன் என்றும் கூறிவிடக்கூடாது. மனம் உடைந்துவிடும். பயம் ஏற்படும். இறைவன் சிந்தனை தொடரும். சில டாக்டர்கள் இதையறிந்து வெறும் விட்டமின் மருந்து நம் மனத்திருப்திகாக எழுதித் தருவார்கள்.
ஒருவேளை அவர் அவர் பரிசோதித்து விட்டு "உனக்கு ஒன்றுமில்லையப்பா" (அப்படி இக்கால டாக்டர்கள் சொல்வதே அரிது) என்றால், நாம் உடனே ஒருவேளை "blood test செய்தால் வேறு எதாவது தெரியவருமோ? ஒருவேளை இந்த டாக்டர் நல்ல டாக்டர் இல்லையோ" என்று அடுத்த கவலைக்கு போய்விடுகிறோம். அதே மருத்துவன் அவன் வாங்கி வைத்திருக்கும் மருத்துவபரிசோதனை பொருட்களுக்கெல்லாம்
இயந்திரங்களுக்கெல்லாம் வேலை கொடுத்து, அ முதல் ஃ வரை அனைத்து பரிசோதனையும் செய்ய சொல்லி பிறகு "ஒன்றுமில்லை" என்று சொன்னாலும் அவனுக்கு வசவு. அவன் பணம்-பிடுங்கி ஆகிவிடுகிறான். மருத்துவர்கள் பாவம்.
இத்தனைக்கு பின்னும் மறு பரிசீலனை என்று "second opinion" கேட்க செல்கிறோம். மருந்து பேரிலும் நம்பிக்கை இல்லை. மருத்துவன் பேரிலும் நம்பிக்கை இல்லை. இறைவன் பேரிலும் நம்பிக்கை இல்லை. நம் தலையெழுத்தின் பெயரில் அசாத்திய அவநம்பிக்கை!
ஆக, அஷோக்கிற்கு நாத்திகவாதியான இன்னொரு டாக்டரிடம் செல்ல ஏற்பாடாகிறது.
அஷோக்கிற்கு கிரி பள்ளித்தோழன். அவனே வேம்புவின் வீடு சென்று திருமணத்திற்கு சாதகமாக பேசுகிறான். இங்கே ஒரு நெருடல்.
"அவா பையனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சு, அவாளை உசத்திவிடுவோமே" என்று அசோக் சொல்வது போல் ஒரு வசனம். உசத்தி தாழ்த்தி என்பது பிறப்பில் இல்லை. ஒருவனின் நடத்தையை வைத்தே தான் அவன் உயர்கிறான் என்று கூறிவருகிறோம். பிரமணப்பெண்ணை சம்பந்தம் செய்தாலும், அதே வகுப்புக்கு திரும்பி வருவதாலும், எப்படி உயர்ந்து விட முடியும்?!? அதுவும் அஷோக் என்ற பாத்திரம் அக்கருத்தை பேசுவது பிடித்தமாக இல்லை.
(வளரும்)
May 1st
_______
பாகவதரின் மருமகளுக்கு நீலகண்டன் உயரதிகாரியாக இருக்கிறார். "பாகவதர் சாக்ரடீஸைப் போல் வசிகரித்தே இளைஞர்களை கெடுத்துவிடுவார்" என்று நீலகண்டன் கூறுவது அவளுக்கு பயத்தை உண்டு பண்ணுகிறது. பாகவதரும் அவர் மனைவியும் தன் மகனை பார்க்க வந்து போகக்கூடாது என கடிதம் எழுதி, தன் கணவனின் கையெழுத்தையும் அவளே இட்டு hostel warden-னிடம் கொடுத்துவிடுகிறாள்.
ஒருவனின் மோசடி செய்கையிலும் கூட, மனம் வெளுத்திருந்து, பிறரை துன்புறுத்தும் நோக்கம் இல்லாமல் இருந்தால் அதற்கு இறைவனும் கூட ஒத்துழைக்கலாம் எனக் கொள்ளலாம். இறைவனே மோசடி பத்திரம் கொண்டு நாடகமாடியது சுந்தரர் வரலாற்றில் உள்ளது.
ஆலகாலவிஷத்தை யார் எடுத்து வருவது? அருகே சென்றாலே அது தகிக்கிறது. அப்போது சிவன் தன் பிம்பத்தை பார்க்க, அங்கிருந்து தோன்றுகிறார் சுந்தரர். வசீகரிக்கும் சுந்தர ரூபம் உடையவர் என்பதால் சுந்தரர். அவர் பூலோகத்தில் தோன்றும் போது இரு பெண்களை இச்சித்து மணந்து கொள்ள ஆசைப்படுகிறார். அவரின் திருமணம் வேறொருத்தியான மூன்றாமவளுடன் நிச்சயிக்கப்படுகிறது. இவ்விடத்தில் அவரை சிவனே, வயோதிக வேடத்தில் வந்து ஆட்கொண்டதாய் கூறப்படுகிறது. சுந்தரன் தனக்கு அடிமை என்று அவன் முன்னோர்கள் சாசனம் எழுதியதாய் கூறுகிறார். அதை காண்பிக்கும் போது சுந்தரர் அதை கிழித்து எறிந்து விட, வெண்ணைநல்லூரில் அவர்களின் வழக்கு தொடர்கிறது. வழக்கு கிழவருக்கே சாதகாக முடிந்துவிட்டது. அவருடன் தன் வினையை நொந்து கொண்டு சுந்தரர் செல்லும் போது கிழ உருவை விடுத்து இறைவனும் இறைவியுமாய் தோன்றினராம். நாத்தழுதழுக்க இறைவனை பாட முற்பட்ட போது, "என்னை பித்தா என்றல்லவா தூஷித்தாய், அதையே முதற் சொல்லாய் வைத்து உன் பாட்டை துவக்கு" என்று இறைவன் அருள....அப்போது தோன்றிய பாடல்
"பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா"
அக்காலத்திலுஇம் மூன்று வகையான சான்றுகளுள் ஒன்றேனும் தேவைப்பட்டது.
1. ஆட்சி - முறை சரியானதா என்ற சான்று (sticking to the custom)
2. ஆவணம் - documental evidence
3. அயலார் காட்சி - eye-witness to the incident
__
அஷோக்கைக் காண அடிக்கடி மார்கபந்து வந்து போகிறார். அவருக்கு அஷோக் நிறைய உபதேசங்கள் செய்கிறான். அதன் தோராயமான சாராம்சம்.
நம் மனமே நமக்கு முதல் பகை அல்லது நண்பன். நாம் மகிழ்ச்சியாய் இருக்க எண்ணினாலும், இருப்பதில்லை. ஏனெனில் நம் மனத்தையே நமக்கு பகைவனாக மாற்றிவிடுகிறோம். மற்றோருக்கு கெடுதல்-ஊறு விளைவிக்கிறோம், புண்படுத்துகிறோம், அவை யாவும் நாம் நமக்கே ஊறு விளைவித்துக் கொள்வதாகும். ஒருவன் தன்னுள் இருக்கும் ஆன்மாவை நேசித்தால், தன்னை நேசித்தால், அவனால், வன்முறை-போதை மருந்துக்கள் போன்ற வஸ்துக்களில் ஈடுபட முடியாது. அவனே தன்னை அவமதித்து தனக்கு வியாதியை உண்டுபண்ணிக்கொள்கிறான். அவனுள் இருக்கும் காழ்புணர்ச்சி - தாழ்ச்சி எண்ணங்கள்-முதலியனவற்றால் ஊறு விளைவித்துக்கொள்கிறான். அவனை அவனை நேசிக்க வேண்டும். இதைத் தான் க்ருஷ்ணன் "love thyself" என்கிறார். மனோவியாதி என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மனமே வியாதி என்கிறான் கண்ணன்.
(வளரும்)
May 4th
_______
கதை மளமளவென நகர்ந்தது.
வேம்பு தன் மனைவியுடன் கிரியின் வீட்டுக்கு சென்று சம்மதம் தெரிவிக்கிறார். அவன் தந்தை தனியாக வெம்பு வீட்டிற்கு சென்று வரதக்ஷிணை கேட்க, தன்னால் கொடுக்க முடியாது என்று வெம்பு கிரியின் தாயிடம் கூறி, சம்பந்தத்தை ரத்து செய்கிறார். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் மனமுவந்த ஒப்புதல் இல்லை என்பதாலேயே, சம்பந்ததை ரத்து செய்ய நான் அப்படி நடந்து கொண்டேன் எனக்கூறுகிறார் கிரியின் தந்தை.
ஹம்ஸா என்ற வேறொரு மருத்துவரிடம் அஷோக்கை அழைத்து செல்கின்றனர். "neurosis, depression, hallucination" எனப் பல disorders இருப்பதாக அவள் அபிப்ராயம் தெரிவித்து, மருந்து எழுதிக்கொடுக்கிறாள். மின் அலைகளை செலுத்தும் shock treatment கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறாள். வரும் வழியில் அவள் எழுதிக்கொடுத்து வாங்கிய மருந்து தொலைந்து போகின்றது.
(வளரும்)
May 5th
_______
மார்கபந்து பாகவதரை நேரில் அணுகி ஆன்மீக விளக்கங்கள் கேட்கிறார். எந்த சந்தேகம் வந்தாலும் தான் தீர்த்துவைப்பதாக பாகவதர் கூறுகிறார். அஷோக்கிற்கு இன்னொரு மருத்துவர் மருந்துகள் கொடுத்துள்ளார் எனக்கேட்ட மார்கபந்து திகைக்கிறார். நல்ல மனநிலையில் உள்ள மனிதன் அதை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது எனக்கூறி தான் எப்படியும் அவன் மருந்து உட்கொள்வதிலிருந்து காப்பாற்றுவதாக வாக்களிக்கிறார்.
பாகவதர் "உங்கள் சந்தேகங்களை நான் நிவர்த்தி செய்கிறேன்" என உரைப்பது தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் செர்வதால். 'தனக்கும் எல்லாமும் தெரியும்' என்ற எண்ணம் பலரிடம் மலிந்திருக்கிறது. ராஜா பத்ருஹரி என்பவர் நீதி சதகம்((on virtues), ஸ்ருங்கார சதகம்(on romance), வைராக்ய சதகம் (finally dismissing all others are useless except the abode of god) என ஒவ்வொரு தலைப்பிலும் 100 ச்லோகங்கள் இயற்றியிருக்கிறார். அவற்றில் வைராக்கிய சதகத்தில், நீதி அறிந்தவன் இருப்பான், விதியைப்பற்றி அறிந்தவன் இருப்பான், சாஸ்திரம் அறிந்தவன், ஏன் பிரம்ம ஞானம் அறிந்தவனைக் கூட கண்டுவிடலாம். ஆனால், தனக்கு என்ன தெரியாது என அறிந்தவன் அரிது என்கிறார். எப்பேற்பட்ட அறிவாளிக்கும் கூட, தனக்கு என்ன தெரியாது என்பது தெரிவதில்லை.
என்னைப் போல் எல்லாம் தெரிந்தும், சிலருக்கு அடக்கம் உண்டு என்று சோ கூறுவதும், உதாரணமாக எனக்கு உங்களை எப்படி convince செய்வது என்பது தெரியாது என்று கூற, தயாரிப்பாளர் மேலும் கீழும் தலையாட்டுவது ரசிக்கத்தக்கதாய் இருந்தது. சோவைப் பற்றியே தயாரிபாளர் மேலும் கேள்வி
கேட்கிறார். "உங்களுக்கு எப்படி சார் இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது" என வினவ.
'ஹிந்து மஹா சமுத்திரம்' என்ற புத்தகம் எழுதி வருகிறார் சோ. அதற்காகவும், அவர் முதலில் எழுதிய வால்மீகி இராமாயணம், வியாச மஹாபாரதம், எங்கே பிராமணன், முதலியவற்றிற்கும், இப்போது தொடர் இயக்குவதற்காகவும் அவர் பல நூல்களை ஆராய்ந்துள்ளார் எனக் கூறினார். க்ருஷ்ணப்ரேமியின் வேத விஞ்ஞானம், யோக வாசிஷ்டம், இராமக்ருஷ்ணா -mutt-ன் உபநிஷதம், மனுஸ்ம்ருதி, எளிய முறையில் அரும்பெரும் ஞானத்தை உறைக்கும் காஞ்சிப் பெரியவரின் தெய்வத்தின் குரல், சானக்கிய நீதி, ஆகிய நூல்களும் இன்னும் பல நூல்களும் ஆராய்ந்து எழுதுவதால், "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற அபிப்ராயம் எளிதில் பரவ உதவுகிறது. மற்றபடி எனக்கு ஒன்றுமே தெரியாது என கூறி நகைக்கிறார் சோ.
(வளரும்)
May 6th
_______
அசோக் தனக்கு வீட்டில் இருப்பதே ஹிம்சையாக இருப்பதாகவும், நாளை shock treatment கொடுக்கவிருப்பது தனக்கு விருப்பமில்லை என்பதால் தான் சாம்புவின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்க அனுமதி கேட்கிறான். மிகுந்த குழப்பத்துடன் சாம்பு தம்பதியர் ஒப்புக்கொள்கின்றனர்.
மார்கபந்து அடிக்கடி அஷோக்கைப் பார்ப்பது நாதனுக்கும் அவர் மனைவிக்கும் பிடிக்கவில்லை. அஷோக்கிடம் யோகத்தை பற்றி விளக்கம் கேட்கிறார் மார்கபந்து. இன்றைக்கு யோகா வகுப்புக்களில் பயிற்றுவிக்கும் சீரான மூச்சு என்பது யோகத்தின் அடிப்படை மட்டுமே. அதனால் மனம் சற்றே சாந்தப்பட்டு இருக்க முடியும். மேலும் உடலுக்கும் ஆரோக்கியம். மற்றபடி இவற்றை செய்வதால் ஒருவன் யோகி ஆகிவிட முடியாது.
யோகம் என்பது பெரியதாக பேசப்படும் ஒன்று.
தபஸ்வியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஞானியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஆகவே அர்ஜுனா நீ யோகியாக இரு
என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். அப்படிப்பட்டவன் யோகி. இரட்டை நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். ஸ்திதப்ரக்ஞன். இன்பம்-துன்பம், மானம்-அவமானம், துக்கம்-மகிழ்ச்சி என எல்லா நிலையிலும் அசங்காது ஆடாது நிற்பவன்.
துளசிதாசர் பற்றி கூறவரும்போது துளசிதாசர் சிறந்த பக்தர், ஆனால் அவர் வால்மீகியைப் போல் முதலில் வேறு பாதையில் சென்றுகொண்டிருந்தவர், திடீரென பாதை மாறியவர். துளசிதாஸருக்கு மனைவியின் மேல் மிகுந்த அன்பு, காதல் தாண்டிய மோஹம் உண்டு. அவள் துணையே கதி என்றிருந்தார். அவள் எங்கு சென்றாலும், அவள் பிரிவைத் தாங்காது பின் சென்றுவிடுவார். ஒரு முறை அவள் "என்னிடம் வைத்திருக்கும் மோஹத்தில் ஒரு பகுதியேனும் இறைவனிடம் செலுத்தி இரமனை தியானியுங்கள்" என்கிறாள். உடனே அவருள் மாற்றம் ஏற்படுகிறது. சிவபெருமான் அருள் புரிந்து அவரை "ராம சரித மானஸ்" எழுதுமாறு பணிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு இராமனின் பால் பிராட்டி சீதையின் பால் மிகுந்த பக்தியிருப்பதால், இராவணன் சீதையின் கூந்தலைப்பிடித்து அழைத்துப் போனதை எழுத மனமின்றி, அவள் சீதையே அல்ல, அது மாயா-சீதா எனக் கதையை சற்றே கதையை திரித்து எழுதியதாய் கேள்வி.
ஹனுமனைத் துதித்து அவர் எழுதிய "ஹனுமான் சாலிசா" நாற்பது ஸ்லோகங்களைக் கொண்டது (வடமொழி ஹிந்தியில் உள்ளது). அதை 21 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் 7 முறை கூறி வந்தால், நினைத்த காரியம் ஜெயம், வியாதிகள் அற்றுவிடும் என்பது நம்பிக்கை. அப்பேற்பட்ட மஹான் அவர் எழுதியதால் அந்த ஸ்லோகத்தின் மகிமையும் பலனும் அதிகம். நிச்சயம் சித்திக்கும்.
(வளரும்)
நாளை முதல், முடிந்தவரையில் அன்றைய பகுதி அன்றன்றே எழுதப்படும். :bow:
Actually I wanted to lessen your burden by writing the present episodes so that you can finish off the pending episodes. But, 8'o clock veetula cricket pOttuduranga :oops: I'm not able to watch it. :(
I will try to watch it tomorrow and write it tomorrow itself :) :bow:
btw onlines links kodungalaen :oops:
well doneQuote:
Originally Posted by Shakthiprabha
:ty:
Quote:
Originally Posted by Thirumaran
thanks to ISAITAMIL NET - PRABHU
May 05
[html:6bc8209bb4]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13321502&vid=5007617&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8730/84980599.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13321502&vid=5007617&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8730/84980599.jpeg&embed=1" ></embed></object>
</div>
[/html:6bc8209bb4]
May 06
[html:6bc8209bb4] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13339249&vid=5014518&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8747/85045192.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13339249&vid=5014518&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8747/85045192.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:6bc8209bb4]
May 07
[html:6bc8209bb4] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13356047&vid=5021217&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8764/85106042.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13356047&vid=5021217&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8764/85106042.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:6bc8209bb4]
enjoy
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
keep up with your writing
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
நிறையவே எழுதியுள்ளீர்கள்
நன்றி என்று சொல்லி .....
இருந்தும் நன்றி
Although mythological examples are insufficient to prove a statement as fact,Quote:
Originally Posted by Shakthiprabha
http://en.wikipedia.org/wiki/The_Secret_Life_of_Plants
Love and Light.
How is the above question and answer related?Quote:
Originally Posted by Shakthiprabha
I think its the other way. When you merge with the Supreme, all Karma is burnt away in the fire of this Merger. Man cannot stop acting, therefore this 'nil balance' does not occur until Man transcends Action.Quote:
Originally Posted by Shakthiprabha