கலைவேந்தன் புகழ்பாட காவேரி கண்ணனே வருக! வெல்க!!
Printable View
கலைவேந்தன் புகழ்பாட காவேரி கண்ணனே வருக! வெல்க!!
நன்றி ஜோ அவர்களே..
நீங்கள், சாரதா, பம்மலார், முரளி ஸ்ரீனிவாஸ் மற்றும் நம் நண்பர்கள் இங்கே கட்டிவரும் மெய்நிகர் கலைக்கோயிலை சில நாட்களாய் தினம் தரிசித்து வருகிறேன்.
பதிந்து பலநாள் கழித்து இன்றுதான் பதிய அனுமதி கிடைத்தது.
சித்ராவில் புதிய பறவை, மேகலாவில் தில்லானா மோகனாம்பாள், பாண்டியனின் கீழ்வானம் சிவக்கும், சாந்தியில் முதல் மரியாதை, கிரவுனில் வெள்ளை ரோஜா, கபாலியில் நீலவானம், பாரத்தில் என்னைப்போல் ஒருவன், நடராஜாவில் நீலவானம், அசோக்கில் வடிவுக்கு வளைகாப்பு - என நாலாபக்கமும் ஓடித் தேடி அடைந்த 80 -களின் நினைவுகள் முழுதாய் மீட்டெடுத்தேன்.
என் பல பரிமாணங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பதிவதாய், பரிமாறுவதாய் பரகாயப்பிரவேச பரவசம் எனக்குள்.
நல்ல இடம் நான் வந்த இடம்..
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
மரகதம் படத்தின் முகப்பில் ஒலிக்கும் இப்பாடல் வரிகளுக்கேற்ப காவிரிக் கர்ணனாய் நடிகர் திலகத்தினைப் பற்றிய நினைவுகளையும் எண்ணங்களையும் அள்ளித் தரவந்திருக்கும் காவிரிக்கண்ணன் அவர்களுக்கு நமது அனைவர் சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துக்கள். திக்கெட்டும் திரிந்தலைந்து திரும்புகின்ற திசையெல்லாம் அவர் திருவுருவத்தை மட்டும் காட்சியாய்க் கண்டு ரசித்த பல கோடிக் கண்களில் இரண்டு கண்களுக்கு சொந்தக்காரனான உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்வுறுகிறோம்.
வருக வருக வருக
ராகவேந்திரன்
மதிப்புக்குரிய ராகவேந்திரா அவர்களே..
உங்கள் இரசனை என்னும் மேரு முன் நான் சிறு மண்மேடு.. அவ்வளவே..
நடிகர்மன்னினின் திரைக்காவியங்கள் காட்டப்பெறும் இடங்கள் நமக்கு தலங்கள்.
அவரைச் சிலாகித்து மகிழ்வது நம் மதம்..
இளையவயதின் சக்தியை ஒரு கலைக்கோட்டில் பயணிக்கவைத்த கலாச்சார இயக்கம் நம் நடிப்பின் தலைவர்.
படம் தொடங்குமுன், இடைவேளைகளில் -
சக மதத்தவருடன் ஆராதிக்கும் சேதிகளைப் பகிரவே பலமுறை விஜயம்...
நம்மைவிடவும் நுணுக்கமாய் நடிப்பரசரை ரசிப்பவரைக் கண்டால், உடன் நட்பு, நெருக்கம், மதிப்பு..
காட்சிகளின்போது அரங்கத்தவர் எப்படி இரசிக்கிறார்கள் என அவதானிப்பதே நம் விழிகளுக்கு முதல் பொறுப்பு...
உங்களைப் போன்றோரை அணுகவைத்த இத்திரிக்கு நன்றி..
அன்பு நண்பர் காவிரிக் கண்ணன் அவர்களே,
நம் அனைவரையும் ஒரு சேர சங்கமிக்க வைத்துள்ள இத்திரிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். நம் அனைவரின் உள்ளத்தையும் பிரதிபலித்துள்ள தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
வசந்த் தொலைக்காட்சி சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியில் இவ்வாரம் மனோ - பாடகர் அல்ல - மனோகர் - நடிகர் திலகத்தின் மூத்த சகோதரர் அவர்க்ளின் புதல்வன் - இவ்வாரம் பங்கு பெறுவார் எனத் தெரிகிறது. வசந்த் தொலைக்காட்சியின் முன்னோட்டத்தில் அவர் பேச்சைக் காட்டும் போது, நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை மற்றும் உதவும் மனப்பான்மையைப் பற்றிய தகவல்கள் இடம் பெறும் எனத் தெரிகிறது.
காத்திருப்போம், புதன் வரை.
ராகவேந்திரன்
நேற்றுதான் குறிப்பிட்டேன். நமது திரிக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்று. அதை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் நண்பர் காவேரிக் கண்ணன் வருகை புரிந்திருக்கிறார். திரிக்கு புதியவர் ஆனால் அவரது எழுத்துக்களைப் பார்த்தால் மிகுந்த அனுபவம் உடையவர் என்பது புரிகிறது. அவரே சொன்னது போல் நல்ல இடம் நீங்கள் வந்த இடம். உங்கள் பதிவுகளால் இந்த திரிக்கு மேலும் மெருகூட்டுங்கள்.
அன்புடன்
கலைக்குரிசிலின் திரி என்னும் இக்கடலில், காவிரியாய், கண்ணனாய் மொத்தத்தில் காவேரிக் கண்ணனாய் கலக்க வந்திருக்கும் திரு.காவேரிக் கண்ணன் அவர்களே, வருக! வருக! தங்களின் வரவு நற்றமிழின் நல்வரவு!
நடிகர் திலகத்தின் நிரந்தர ரசிகரே, தங்களின் பயணம்,
புதுமைத் திலகத்துக்கு புதுவெள்ளம் பாய்ச்ச காவிரியாய்ப் பிரவாகிக்கும்!
வான்புகழ் வேந்தருக்கு வெண்சாமரம் வீச கண்ணனாய் விஸ்வரூபமெடுக்கும்!
பார்த்து படித்து மகிழப் போகும் நாங்களோ பாக்கியசாலிகள்!
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
நடிகர்திலகத்தின் புகழ்பரப்பும் இத்திரியின் இன்னொரு வைரமாய் வந்திருக்கும் காவேரிக்கண்ணன் அவர்களே, வருக.
உங்களின் ஆரம்பப்பதிவுகளே, இனிவரும் பதிவுகளின் சுவைக்கு கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன. குறிப்பாக 80-களின் காலகட்டத்தில் நீங்கள் அலைந்தோடி பார்த்து மகிழ்ந்த படங்கள் மற்றும் அரங்குகளின் பட்டியல் அக்கால நினைவுகளுக்கு அள்ளிச்செல்கிறது.
முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் (ரங்கன்), செந்தில், ராகேஷ், பாலா போன்ற இத்திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் நீங்களும் இடம்பெறப்போவது தெள்ளத்தெளிவு. நடிகர்திலகத்தின் காவியப்படங்களுடனான உங்கள் அனுபவங்களை அழகுற அள்ளித்தெளியுங்கள். அனுபவித்து மகிழ காத்திருக்கிறோம்.
ஆஹா! வாங்க வாங்க! வந்து ஜோதியில் ஐக்கியமாய்டுங்க. :)Quote:
Originally Posted by kaveri kannan
திரைப்படம் மட்டும் இன்றி, ஓவியம், எழுத்து, மேடைப்பேச்சு என பன்முகப் படைப்பாளியாக திகழுபவர் திரு. சிவகுமார்.... "என்னை முழுவதுமாக ஆட்கொண்ட தேவகுமாரன் சிவாஜி தான்" இப்படி துவங்குகிறார் - ராணி வார இதழில் அவர் எழுதி வரும் உங்களோடு பேசுகிறேன் என்ற கட்டுரையில்.
அவர் முதல் மூன்று முறை சிவாஜியை சந்தித்த சம்பவங்களை விளக்குகிறார். ராயப்பேட்டையில் சிவாஜி இருந்த ( தற்போது இது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் என்று நினைக்கிறேன்) வீட்டில் முதல் சந்திப்பு. " சிவாஜியை பார்த்த அந்த நொடிகளில் உணர்ச்சி குவியலாகிப் போனேன். பார்ப்பவர்க்ளை ஊடுருவும் அழகிய லேசர் கண்கள், அம்சமான சின்ன உதடுகள், நேர்த்தியான நீண்ட மூக்கு - பசி மறந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம்" என்கிறார் திரு. சிவகுமார் . சிவகுமார் வரைந்த "உத்தமபுத்திரன்" பட சிவாஜி ஓவியத்தைப் பார்த்து பாராட்டிய சிவாஜி மோகன் ஆர்ட்சில் வேலைக்கு சேர சொல்லி சிபாரிசு செய்கிறார். ஓரு வருடம் அங்கே பேனர் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்துள்ளார் சிவகுமார்.
இரண்டாவது சந்திப்பு, கோவை மாதம்பட்டியில் கல்யாணியின் கணவன் பட ஷூட்டிங்கின் போது.
மூன்றாவது சந்திப்பு மோட்டார் சுந்தரம் பிள்ளை படப்பிடிப்பில். " அந்த படப்பிடிப்பு தளத்தில் சிவாஜியை பார்க்கும் போது அசந்து விட்டேன். கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்து பேசிய பாவனை அவ்வளவு அற்புதமாக இருந்தது... அடடா.. ஒரு மனிதன் பிறக்கும் போதே இத்தனை ஸ்டைல் ஆக பிறக்க முடியுமா? என்று எண்ணத் தோன்றியது" என வியக்கிறார் திரு. சிவகுமார்.
பட்ப்பிடிப்பு தளத்தில்.....
"என்னை உங்களுக்கு நினைவு இருக்கா?. நான் தான் சிவகுமார். ஓடையகுளம் கண்ணு மச்சானுடன் உங்களை ராயப்பேட்டை வீட்டில் சந்தித்து இருக்கேன்"
" ஓ அப்படியா!. சாரிப்பா, எனக்கு நினைவு இல்லை. வெரி புவர் மெமரி" என்கிறார் சிவாஜி.
சிறிது மனம் வருந்தும் திரு.சிவகுமார், பின்பு பெரிய நடிகன் ஆன பிறகு கோவை ரயில் நிலையத்தில் தன்னை பத்து வருடம் முன்பு ஒரே ஒரு முறை பார்த்த ஒருவர் "என்னை நினைவு இருக்கிறதா?" என்று கேட்டதைப் பற்றியும், தான் நினைவுக்கு வராமல் தவித்ததை பற்றியும் சொல்கிறார்.
அப்போதுதான் மோட்டார் சுந்தரம் பிள்ளை படப்பிடிப்பில், சிவாஜியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனான நான் (சிவகுமார்) "என்னை நினைவு இருக்கா?" என்று அவரிடம் சர்வ சாதரணமாக கேட்டதையும், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தேன், என்று சொல்கிறார்.
உண்மையில் சிவாஜி போல நினைவாற்றல் கொண்ட ஒரு நடிகனை காணவே முடியாது. காட்சி, வசனங்கள் தேவையற்ற எதையுமெ அவர் நினைவு வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் கடைசி வரை அந்த கம்பீரம் குறையாமல் சினிமவில் அவரால் வலம் வர முடிந்திருக்கிறது" என்கிறார் சிவகுமார்.
சிவாஜியின் நுட்பமான நினைவாற்றலுக்கு ஒரு சம்பவதை அடுத வாரம் ( இது ஒரு தொடர்) எழுதுவதாக கூறி முடித்து உள்ளார் திரு. சிவகுமார்.
Dear venkiram, thanks for those wonderful pictures of NT. Just superb !!! Pls convey our wishes to Mr. Jeeva.
Dear Kaveri Kannan, warm welcome to NT's thread.
Pammalar sir, what a great news about Pasa Malar. Surprise after surprise. First thing I'm going to do is to share this with my F-I-L. Meet you all @ Mahalakshmi theatre this weekend.
As Murali sir said, it's been very heartening to see more and more NT related news & events happening in the city.
உங்கள் அனைவரின் அன்பான வரவேற்பைக் கண்டதும் - பிறந்த ஊர் வந்த மனநிலை எனக்கு..
வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே....
------------------------------
நண்பர் மகேஷின் பகிர்வுக்கு நன்றி..
----------------------
அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்
-- நன்றி திரு. மோகன்காந்தி அவர்களுக்கு..
-------------------------------------------------------------------------
சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.
சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.
சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.
சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .
குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .
அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . ஒரு தடவை அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னவுடன் உடனே கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார் . அதன் பிறகு பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த வாட்ச்சை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் என்ரு சொன்னார் .
ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார் ) .லட்சக்கணக்கான மக்களை மெய் மறக்கச் செய்த அந்த சிம்ம கர்ஜனையை நேரடியாக கேட்ட பாலச்சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு சிறுநீர் கழித்து விட்டார் என்கிறார் லால்.
இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று
அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .
வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை . ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .
நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .
இந்த வார விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து --
நடிப்பாசிரியர்!
டைரக்டர் பீம்சிங்குக்கு, படத் தின் பெயர் 'ப'வில் துவங்கவேண் டும் என்று ஆசை. தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பாவுக்கோ 'ஆ'வின் மேல் ஆசை! ஆலயமணியும், ஆனந்தஜோதியும் வந்து போயிற்று. இப்போது 'ஆண்டவன் கட்டளை' தயாராகிறது.
அப்படத்தில் கல்லூரிப் பேரா சிரியராக நடிக்கும் சிவாஜிகணே சன், அன்று செட்டில் இடைவேளை யின்போது புதுமுகம் ராஜனுக்கு ஏதோ சொல்லிக்கொடுத்துக்கொண் டிருந்தார். அருகில் சென்று பார்த்த போதுதான், விஷயம் புரிந்தது. சிகரெட் ஒன்றைக் கையில் வைத் துக்கொண்டு, "இதை விரல்களுக் கிடையில் வைத்துக்கொள்ளும் தினுசிலிருந்தே ஒருவனின் குணச் சித்திரத்தைச் சொல்லிவிடலாம். சிகரெட் பிடிக்கும் பாணியிலி ருந்தே ஒருவன் கதாநாயகனா, வில்லனா, காமெடியனா என்று காட்டிவிட முடியும்" என்று சொல்லி, பல 'ஸ்டைல்'களில் பிடித்துக் காட்டினார். நடிப்புக் கலையின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார் நடிகர் திலகம்!
நாஞ்சில் மாநகராம், நாகர்கோவில் நமது நடிகர் திலகத்தின் கோட்டை. கோலிவுட்டைப் பொறுத்த வரை நாகர்கோவில் ஒரு பி சென்டர்.
எதிரிகளை உதிரிகளாக்கி, சவால் சவால் என சவால் விட்டவர்களின் சவால்களையெல்லாம் (சவடால்களையெல்லாம்) சமாளித்து, தவிடு பொடியாக்கி, வெற்றி கண்டு, எதிர்ச் சவால் விட்டு, சாதனைகளின் உச்சம் தொட்ட சக்கரவர்த்திக்கு சீரோடும், சிறப்போடும் என்றென்றும் வெண்சாமரம் வீசும் புண்ணிய ஸ்தலம் நாகர்கோவில்.
இத்தகைய திருத்தலத்தில் அமைந்துள்ள ராஜேஷ் திரையரங்கில் ராஜபார்ட் சிவாஜி துரையின் ராஜாங்க சாதனைகளை கண்டு களிப்பீர்!
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
[நாகர்கோவில் ராஜேஷ் அரங்கின் இட எண்ணிக்கை : 1036 இருக்கைகள்]
1. ஞான ஒளி - 11.3.1972 - 55 நாட்கள்
2. தர்மம் எங்கே - 15.7.1972 - 34 நாட்கள்
3. தவப்புதல்வன் - 26.8.1972 - 34 நாட்கள்
4. வசந்த மாளிகை - 29.9.1972 - 69 நாட்கள்
5. நீதி - 7.12.1972 - 50 நாட்கள்
6. ராஜ ராஜ சோழன் - 31.3.1973 - 69 நாட்கள்
7. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்
8. கௌரவம் - 25.10.1973 - 53 நாட்கள்
9. சிவகாமியின் செல்வன் - 26.1.1974 - 50 நாட்கள்
10. வாணி ராணி - 12.4.1974 - 50 நாட்கள்
11. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 63 நாட்கள்
12. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 56 நாட்கள்
13. அன்பே ஆருயிரே - 27.9.1975 - 27 நாட்கள்
14. டாக்டர் சிவா - 2.11.1975 - 40 நாட்கள்
15. உனக்காக நான் - 12.2.1976 - 29 நாட்கள்
16. சத்தியம் - 6.5.1976 - 29 நாட்கள்
17. உத்தமன் - 25.6.1976 - 63 நாட்கள்
18. சித்ரா பௌர்ணமி - 22.10.1976 - 28 நாட்கள்
19. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 61 நாட்கள்
20. அந்தமான் காதலி - 26.1.1978 - 51 நாட்கள்
21. என்னைப் போல் ஒருவன் - 18.3.1978 - 50 நாட்கள்
22. திரிசூலம் - 27.1.1979 - 77 நாட்கள்
23. கவரிமான் - 14.4.1979 - 48 நாட்கள்
24. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 42 நாட்கள்
25. வெற்றிக்கு ஒருவன் - 8.12.1979 - 27 நாட்கள்
26. ரிஷிமூலம் - 26.1.1980 - 55 நாட்கள்
27. தர்மராஜா - 26.4.1980 - 34 நாட்கள்
28. எமனுக்கு எமன் - 30.5.1980 - 15 நாட்கள்
29. ரத்தபாசம் - 14.6.1980 - 41 நாட்கள்
30. மோகனப்புன்னகை - 14.1.1981 - 14 நாட்கள்
31. சத்தியசுந்தரம் - 21.2.1981 - 27 நாட்கள்
32. அமரகாவியம் - 24.4.1981 - 28 நாட்கள்
33. வா கண்ணா வா - 6.2.1982 - 34 நாட்கள்
34. வசந்தத்தில் ஓர் நாள் - 7.5.1982 - 14 நாட்கள்
35. சந்திப்பு - 16.6.1983 - 68 நாட்கள்
36. வாழ்க்கை - 14.4.1984 - 55 நாட்கள்
37. நாம் இருவர் - 8.3.1985 - 14 நாட்கள்
38. லட்சுமி வந்தாச்சு - 1.11.1986 - 27 நாட்கள்
39. மண்ணுக்குள் வைரம் - 12.12.1986 - 50 நாட்கள்
40. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 54 நாட்கள்
ஆக, நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில், நமது நடிகர் திலகத்திற்கு,
100 நாட்களைக் கடந்த காவியம் : 1
9 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடிய காவியங்கள் : 6
50 நாட்கள் முதல் 62 நாட்கள் வரை ஓடிய காவியங்கள் : 13
5 வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை ஓடியவை : 8
5 வாரங்கள் வரை : 12
குறிப்பு:
1. ராஜேஷ் அரங்கில் வெளியான நடிகர் திலகத்தின் புதிய திரைக்காவியங்கள் மட்டும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
2. ராஜேஷில் வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம் மட்டுமல்ல, முதல் புதிய திரைப்படமே ஞான ஒளி தான்.
3. இருபதாம் நூற்றாண்டின் ஈடு, இணையற்ற சாதனைக் காவியமான திரிசூலம், ராஜேஷ் அரங்கில் 77 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய பின்னர், யுவராஜ் அரங்கிற்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு அங்கே 28 வெற்றி நாட்களைக் கண்டது. ஆக மொத்தம், திரிசூலம் நாகர்கோவிலில் 105 வெற்றி நாட்கள்!
4. ரத்தபாசம் திரைக்காவியத்தை திரையிடுவதற்காக ராஜேஷில் இருந்து 15 நாட்களில் எடுக்கப்பட்ட எமனுக்கு எமன், யுவராஜுக்கு மாற்றப்பட்டு அங்கே 35 நாட்கள் ஓடி, ஆக 50 வெற்றி நாட்கள்.
5. எந்தவொரு திரைப்படமும், பி சென்டர்களில் 5 வாரங்கள் ஓடினாலே நல்ல ஹிட்! 50 நாட்களைத் தொட்டாலோ சூப்ப்ர் டூப்ப்ர் ஹிட்!! 9 வாரங்கள் கண்டால் மகா மெகா ஹிட்!!!
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
இத்தொகுப்பிற்கு தகவல்களை அளித்து உதவி புரிந்த நாகர்கோவில் நல்லிதயங்கள்,
திரு.கே.பி.மோகன், திரு.எம்.மார்ட்டின் ஜேம்ஸ், திரு.என்.சுப்பிரமணியன், திரு.கே.கோபால், திரு.ஜி.சங்கர், திரு.பி.குணசீலன், திரு..வி.நாகராஜன், திரு.எஸ்.கண்ணன் மற்றும் திரு.எஸ்.ராமஜெயம், திரு.எஸ்.கே.விஜயன், நமது ஹப்பர் திரு.கே.மகேஷ் ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
நமது நடிகர் திலகத்தைப் பற்றி நடிகர் மோகன்லால் கூறியுள்ள ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பதிவிட்ட காவேரிக் கண்ணன் அவர்களுக்கு கற்கண்டு நன்றிகள்!
பொக்கிஷப் புதையலுக்கும் கூடுதல் நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
இதை தமிழாக்கம் செய்தது நமது முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் தானே.Quote:
Originally Posted by kaveri kannan
அதை பிரத்யேகமாக என் வலைப்பதிவில் வெளியிட்டேன்
http://cdjm.blogspot.com/2007/11/blog-post.html
:oops: Haven't seen this post. Posted it on Facebook.Quote:
Originally Posted by joe
:DQuote:
Originally Posted by groucho070
நான் வலைப்பதிவில் வெளியிட்ட போது ,அடுத்த வாரம் தினமணிக்கதிரில் இந்த வலைப்பதிவு இணைப்போடு குறிப்பு வந்திருந்தது 8-)
பம்மலார்,
என்றும் நடிகர் திலகத்தின் கோட்டையாம் எங்கள் நாஞ்சில் நகர் ராஜேஷ் திரையரங்கு தகவல்கள் அருமை .நன்றி 8-)
சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை புத்தகத்திலிருந்து (கிழக்குப் பதிப்பகம் வெளியீடு) சில தகவல்கள்..
* தமிழில் ஒரு படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்த முதல் படம் பராசக்தி
* வெளிநாட்டில் வெள்ளிவிழா ஓடிய முதல் படம் பராசக்தி
* பராசக்தி வெளியாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1968-ல் உயர்ந்த மனிதன் வெளியான போது வட சென்னையில் உள்ள மஹாராஜா திரையரங்கில் (இப்போதைய பாண்டியன் தியேட்டர்) பராசக்தி வெளியாகி 118 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
பன்முகப் பாவாணர் நடிகர் சிவகுமார், பல வாரங்களாக, ராணி வார இதழில், தனது அனுபவங்களை, பதிவிட்டு வருகிறார். சென்ற இதழிலும் (4.4.2010), லேட்டஸ்ட் இதழிலும் (11.4.2010), நடிகர் திலகத்தோடு தனக்கேற்ப்பட்ட சுவையான அனுபவங்கள் குறித்து சிலாகித்து சொல்லி வருகிறார். அவற்றை வாசித்து மகிழ கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்:
http://pammalar.webs.com/apps/photos...lbumid=8666282
அன்புடன்,
பம்மலார்.
:shock: :roll: odd man out !!!Quote:
Originally Posted by saradhaa_sn
yedho konjam vasana nadaya ezhudharen, irundhalum paravayillainu othukaranga endru Dharumai solra madhiri kooda ennala solla mudiyadhu :)
Anyway, thanks for your compliments :)
ஜோ,
நமது திரியின் முகப்பு பக்கத்தில் நடிகர் திலகம் - மோகன்லால் பதிவின் சுட்டியையும் கொடுத்து விடுங்கள்.
அது போல் பராசக்தியின் சாதனைகளைப் பற்றிய விவரங்கள் நமது சாதனை சிகரங்கள் திரியிலே இருக்கிறது.
சுவாமி,
நாஞ்சில் நாட்டின் ஒரு திரையரங்கிலேயே இவ்வளவு சாதனைகளா? அப்படியென்றால் மொத்த படங்களையும் அல்லது அனைத்து அரங்குகளையும் கணக்கு எடுத்தால் போட்டி போடவே ஆள் இருக்காது போலிருக்கிறதே!
சிவகுமார் எழுதும் கட்டுரையின் சுட்டியை தந்ததற்கு நன்றிகள்!
அன்புடன்
பதிவை வெளியிடும் போதே, தங்களிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். பாராட்டுக்கு மிக்க நன்றி ஜோ சார்!Quote:
Originally Posted by joe
அன்புடன்,
பம்மலார்.
மிக்க நன்றி முரளி சார்! மேலும், தாங்கள் தெரிவித்துள்ள கருத்து நிச்சயமாக நூற்றுக்கு நூறு உண்மை!Quote:
Originally Posted by Murali Srinivas
அன்புடன்,
பம்மலார்.
நமது நடிகர் திலகத்தைப் பற்றி நடிகை சச்சு:
"என்னுடைய பாட்டியும் நானுமா சிவாஜி அண்ணன் வீட்டுக்குப் போனோம்.அன்போடு என்னைப் பற்றி விசாரித்தார். அவரது 'அன்னை இல்லம்' படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சுது." (மங்கையர் மலர், மார்ச் 2010)
"சிவாஜி அண்ணன், தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகர், நடிகைகளும் நன்றாக நடிக்கணும் என்று சிரத்தை எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுப்பார்." (மங்கையர் மலர், ஏப்ரல் 2010)
சச்சுவின் பேச்சு அச்சு வெல்லம்.
அன்புடன்,
பம்மலார்.
மதிப்புக்குரிய முரளி ஸ்ரீனிவாஸ், ஜோ மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்..
மன்னிக்க வேண்டுகிறேன்.
நான் படித்த தளத்தில் மோகன்லால் பதிவை
மோகன்காந்தி என்பார் இட்டிருந்தார்.
அவர் ஆதிமூலம் சொல்லாததால்
நான் அவருக்கு (மட்டும்) நன்றி சொல்லிப் பதிந்தேன்.
அவருக்கும் சேர்த்து கூடுதல் மன்னிப்பு கோருகிறேன்.
-------------------------------------
நாஞ்சில் நகரத்தின் நாயகரின் சாதனைகளைச்
பம்மலார் சொல்லக் கேட்டு
மனம் துள்ளலில்..
----------------------------------------------
ஞாயிறு அன்று '' நெஞ்சம் மறப்பதில்லை'' பாடல் நிகழ்ச்சி ( கலைஞர் தொலைக்காட்சி)
கலாட்டா கல்யாணம் பாடல் பற்றி
இயக்குநர் ரமேஷ்கண்ணா:
'' இந்தப் படம் பார்க்கப் போனது நினைவில் இப்போதும் பசுமையாய்..
உடல் இளைத்த, அழகு இளைஞராய் நடிகர்திலகத்தைத் திரையில் கண்ட கணம் முதல் கைத்தட்டல்..
இரசிகர்கள் ஆரவாரம் இறுதிவரை அடங்கவே இல்லை..
ஜெயலலிதா எம்ஜிஆர் முகாமிலிருந்து முதலில் இந்தப்பக்கம் வந்ததைக் குறித்த
நல்ல இடம் நீ வந்த இடம் பாடல் வரியால்
அந்த ஆரவாரம் அதிகமானது''
முரளி சார்,Quote:
Originally Posted by Murali Srinivas
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது :D
12. நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் -முரளி ஸ்ரீனிவாஸ்
:lol: Count me in. Me? Jambavan? Too much, madam :DQuote:
Originally Posted by rangan_08
Same same here. :DQuote:
Originally Posted by rangan_08
என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க ..பரவாயில்லை .. அதை சிரமேற்கொண்டு மொழி பெயர்த்தது நமது முரளி சார் என சுட்டிக்காட்ட மட்டுமே அதை குறிப்பிட்டேன் 8-)Quote:
Originally Posted by kaveri kannan
ஆகா ..நான் மறுப்பு சொல்லாததால் நான் ‘ஜாம்பவான்’ என ஏற்றுக்கொண்டதாக அர்த்தமா ? NEVER :lol:Quote:
Originally Posted by groucho070
சகோதரி சாரதாவின் பெயரும் மற்றும் முரளி, ஜோ, மோகன், செந்தில், ராகேஷ், பாலா, உள்ளிட்ட அனைவருமே இத்திரியின் ஜாம்பவான்கள் என்பது கண்கூடு. இவ்வரிசையில் காவேரி தந்த கலைச் செல்வனாக கண்ணனும் சேர்ந்து விட்டார். தங்கள் பதிவுகளையெல்லாம் பார்த்து ரசிக்கும் ரசிகனாக அடியென் உள்ளேன் என்பதே உண்மை.Quote:
Originally Posted by saradhaa_sn
பாராட்டுக்கள்.
பம்மலார் திரையரங்கு சாதனைகளை மட்டுமே ஒரு புத்தகமாக வெளியிட்டால் குறைந்தது 500 பக்கங்களாவது தேவைப்படும்.
ராகவேந்திரன்
மேடம்,என்ன வெச்சு காமெடி கீமெடி பன்னலியே?......Quote:
Originally Posted by saradhaa_sn
தங்கள் அன்புக்கு நன்றி.
டியர் பம்மலார்,
நாஞ்சில் நகரமாம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் அண்ணன் நடிகர்திலகத்தின் திரைப்பட சாதனை விவரங்கள் அட்டகாசமானதொரு தொகுப்பு. வழக்கம்போல இந்தத்தொகுப்பிலும் தங்களின் அபார உழைப்பும், சிரத்தையும் தெரிகிறது. பட்டியலைப்பார்க்கும்போது, ஞானஒளி துவங்கி பெரும்பாலான படங்கள் (ஒரே நாளில், அல்லது சிறிய இடைவெளிகளில் வெளியானவை தவிர்த்து) அத்திரையரங்கிலேயே வெளியானதாகத்தெரிகிறது.
நாஞ்சில் நகரம் எப்போதுமே அரசியலில் பெருந்தலைவரின் கோட்டையாகவும், கலையுலகில் நடிகர்திலகத்தின் கொத்தளமாகவும் திகழ்ந்தது (திகழ்வது) கண்கூடு.
தென்கோடியில் துவங்கியுள்ளீர்கள். திருத்தணி வரை தொடரட்டும் உங்கள் திரையரங்க வெற்றி உலா.
வசந்த் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஒளிபரப்பாகிவரும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியில் நேற்றைய (07.04.2010) எபிசோடில் கலந்துகொண்டு, தன் சித்தப்பாவான நடிகர்திலகத்துடன், தன்னுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டவர் நடிகர்திலகத்தின் அண்ணன் திரு சூரக்கோட்டை தங்கவேலு மன்றாயர் மகன் (சிவாஜி மனோ என்கிற) மனோகர். (சிவாஜி புரொடக்ஷன்ஸ் படங்களின் டைட்டிலில் 'தயாரிப்பு: சாந்தி நாராயணசாமி, டி.மனோகர்' என்று இடம்பெறுமே, அவர்தான்). இதோ அவருடைய வார்த்தைகளிலேயே.....
"நடிகர்திலகம் எனது சித்தப்பாவாக இருந்தாலும் அவரை நான் 'அப்பா' என்றுதான் அழைப்பது வழக்கம். என்னுடைய கல்லூரிப்படிப்பை முடித்ததிலிருந்து நான் அவருடனேயே அவருடைய நிழலாக எங்கும் சென்று வருவேன். அது படப்பிடிப்பாக இருந்தாலும் அரசியல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நான்தான் அவருடன் போவேன். படப்பிடிப்புக்குப்போனால் அவருடைய ஷூட்டிங் முடியும்வரை இருந்து அழைத்து வருவேன்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இந்தி நடிகை நர்கீஸ் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டதால், மீதமுள்ள நான்காண்டுகளுக்கு அப்பாவை அந்தப்பதவியில் பிரதமர் இந்திராகாந்தி நியமித்தார். அப்போது பதவியேற்புவிழாவுக்கு நானும் கமலாம்மாவும் தான் சென்றிருந்தோம். அதன்பிறகு அப்பா ஒவ்வொருமுறை டெல்லி செல்லும்போதும் நான்தான் உடன் சென்று வந்தேன். வழக்கமாக எம்.பி.க்களுக்கு அவர்களுக்கான குவாட்டர்ஸில்தான் இடம் ஒதுக்குவார்கள். ஆனால் இந்திரா காந்தி அவர்கள் அப்பாவுக்கு ஒரு அமைச்சருக்கு உரிய அந்தஸ்தோடு தனி 'வில்லா' (பங்களா) ஒதுக்கும்படி உத்தரவிட்டார். அப்பா மீது இந்திரா காந்தி அவர்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அப்பா என்ன சொன்னாலும் சிரித்துக்கொண்டே கேட்பார். சில சமயங்களில் அப்பா சொல்வதை நான் அவர்களுக்கு மொழிபெயர்த்துச்சொல்வேன். அப்போது தேவையில்லாதவற்றை எடிட் செய்து சொல்வேன். 'நான் சொன்னதை அப்படியே சொல்லுடா' என்பார் அப்பா.
திரு சஞ்சய்காந்தி இறந்தபோது அப்பா (எம்.பி.ஆகும் முன்பு) வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்தார். அதனால் உட்னடியாக டெல்லி போகமுடியவில்லை. பின்னர் சிலநாட்களிலேயே கலைஞரின் 'மாடிவீட்டு ஏழை' படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் வழியில், மற்றவர்களையெல்லாம் காஷ்மீர் அனுப்பிவிட்டு, அப்பா, கமலாம்மா, நான் நாங்கள் மூவரும் மட்டும் டெல்லி சென்று இந்திரா அவர்களைச் சந்தித்தோம். அப்பாவைக்கண்டதும் இந்திரா அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அவர்களுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் அப்பாவும் கமலம்மாவும் சேர்ந்து அழுதனர். மனது கேட்காமல் நான் வெளியே வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து அவர்கள் மூவரும் வெளியில் வர, இந்திரா அம்மையாரிடம் விடைபெற்று நாங்கள் காஷ்மீர் சென்றோம்.
இந்திரா காந்தி அம்மா திடீரென சுடப்பட்டு இறந்தபோதும் அப்பா ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்தார். செய்தியறிந்தவுடன் சென்னை திரும்பி, உடனடியாக டெல்லி சென்றோம். டெல்லி சென்றதும் திரு ஆர். வெங்கட்ராமன் அவர்களுக்கு போன் செய்து உடனடியாக இந்திரா அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்தவேண்டும் என்று சொன்னபோது, 'இந்திரா அவர்களின் உடலை இன்னும் தீன்மூர்த்தி பவனுக்கு கொண்டுவரவில்லை. வந்ததும் நீங்க வாங்க' என்றார். பின்னர் உடல் தீன்மூர்த்திபவனுக்கு கொண்டுவரப்பட்ட செய்தி கிடைத்ததும் விரைந்தோம். உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். உள்ளே போக முடியாமல் திணறினோம். பாதுகாப்புக்காக ராணுவம் நின்றிருந்தது. அதில் ஒரு ராணுவ அதிகாரி தமிழ்நாட்டுக்காரர். அப்பாவைப்பார்த்ததும் எங்களை தனியே அழைத்துச்சென்று எல்லோரும் வெளியே வரும் வழியாக உள்ளே அழைத்துச்சென்றார். இந்திரா காந்தி அம்மையாரின் உடலைப்பார்த்து அப்பா கதறியழுதார்.
அதுவரை ராஜீவ்காந்திக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு பழக்கம் கிடையாது. ஓரிருமுறை பார்த்ததுதான். இதனிடையே 1984 தேர்தல் வந்தபோது, அப்பா காங்கிரஸில் தனது மன்ற ஆதரவாளர்களுக்கு இத்தனை எம்.பி.சீட், இத்தனை எம்.எல்.ஏ. சீட் கேட்டிருந்தார். ஆனால் அவர் கேட்டதில் ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. அவர் ஐதராபாத்தில் இருந்தபோது, சென்னையிலிருந்து ஒருவர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) அப்பாவுக்கு போன் செய்து, "ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக்கொடுக்க முடியவில்லை, நீயெல்லாம் ஏன்யா கட்சியில் இருக்கே?" என்று கேட்க அப்பா மனம் உடைந்துபோனார். உடனே என்னிடம் தொடர்பு கொண்டு, 'கட்சிக்காரங்க இப்படி பேசுறாங்கடா. கட்சியில் எனக்கு மதிப்பில்லை. செத்துடலாம் போல இருக்குடா' என்று வருத்தப்பட்டார். உடனடியாக அவரை சென்னைக்கு வரச்சொன்னோம். வந்ததும் டெல்லியில் வெங்கட்ராமன் அவர்களுடன் தொடர்பு கொண்டோம். அவர் 'ராஜீவ்காந்தியிடம் பேசலாம், உடனே டெல்லி வாங்க' என்றார். (இத்தனைக்கும் அவர் தனக்காக ஒருசீட் கூட கேட்கவில்லை). அன்று மாலை விமானத்தில் டெல்லிபோகிறோம் என்று தெரிந்து கட்சிக்காரர்கள் சிலர், 'சிவாஜி டெல்லி வரமாட்டார்' என்ற செய்தியை டெல்லியில் பரப்பினார்கள் (!!!!!!!!!!!!). அதைக்கேட்க வெங்கட்ராமன் மீண்டும் எங்களை போனில் தொடர்புகொண்டு கேட்க, நாங்கள் வந்துகொண்டேயிருக்கிறோம் என்று சொன்னோம். ராஜசேகரனும் அப்போது உடன் வந்தார். ராஜீவிடம் பேசியபோது, அப்பா தன் ஆதரவாளர்களூக்கு சீட் கேட்டிருந்த விஷயமே ராஜீவ்காந்தி காதுக்கு எட்டாமல் தமிழ்நாட்டுத்தலைவர்களால் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது (???). பின்னர் ராஜீவ், அப்பா கேட்டிருந்தபடியே தருவதாக உறுதியளித்தார். பின்னர் சென்னை திரும்பினோம். அப்பா சீட் கேட்டிருந்தவர்களில் பலர் அத்தேர்தலில் வெற்றியடைந்தனர்.
நடிகர்சங்க விழாவுக்காக நாடகம் போட முடிவு செய்தபோது, அப்பா 'சாம்ராட் அசோகன்' நாடகம் போட்டார். அதற்கான வசனத்தை தஞ்சைவாணன் எழுதினார். தோட்டத்தில் அதற்கான ஒத்திகை பார்த்தபோது, நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தஞ்சைவாணனிடம் வசனத்தைப்படிக்குமாறு சொன்னார். அப்போது எஸ்.ஏ.கண்ணனும் உடனிருந்தார். படித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் அப்பா கண்ணை மூடிக்கொண்டு உறங்குவதுபோல் இருந்தார். வசனம் முடிந்ததும் அவரை தட்டி எழுப்பிவிட்டோம். மீண்டும் ஒருமுறை படிக்கச்சொன்னார். அப்போதும் பாதியில் உறங்குவது போல கண்ணைமூடினார். நான் சங்கடத்துடன் இருவரையும் பார்த்தேன். தஞ்சைவாணன் தொடர்ந்து படித்து முடித்தார். மீண்டும் அப்பாவைத் தட்டி எழுப்பினோம். 'முடிஞ்சிருச்சா?' என்றவர், தஞ்சைவாணனிடம், 'சரி இப்போ வசனத்தைச் சொல்றேன். சரியா இருக்கான்னு பாரு' என்றவர் அத்தனை பக்க வசனத்தையும் ஒரு எழுத்துவிடாமல், ஏற்ற இறக்கங்களுடன் பேசி எங்களை அசரவைத்துவிட்டார்".
அடுத்த வாரமும் தொடர்வதாக சொல்லி திரு. மனோகர் விடைபெற்றார்.
1984 தேர்தலில் நடிகர்திலகத்தின் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்கப்படாதது குறித்து சிலஆண்டுகளுக்கு முன்பே நான் (சாரதா) குறிப்பிட்டிருந்தேன் (நமது திரியின் இரண்டாம் பாகத்தில் என்று நினைக்கிறேன்). பார்த்திராதவர்களுக்காக, அதில் ஒரு பகுதி மட்டும் கீழே.....
//இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.
தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.
பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட பலர் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்..//
Ana thalaivar katchi arambicha po, adikalaraj mudalanor vara villaiQuote:
Originally Posted by saradhaa_sn
Moopanaraiye Maduari yil thalaivar than introduce panninar.
nandri marandavarkar
நடிகர் திலகம் எனும் மாபெரும் மனித உள்ளத்தின் பெருந்தன்மையால் பல துரோகங்கள் மன்னிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் விட்டன. திரைத்துறையாகட்டும், பொது வாழ்விலாகட்டும், அரசியலிலாகட்டும், அவருக்கு துரோகம் செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்துத் தான் இருக்கிறார்கள், ஏதேனும் வகையில். குறிப்பாக அரசியலில் அவர் தோற்றதாக வரலாறில்லை. அவர் தேர்தலில் தான் தோல்வி கண்டாரே தவிர அரசியலிலோ பொது வாழ்விலோ அல்ல. அவர் தேர்தலில் களமிறங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அவருடைய ரசிகர்களே பெரும்பாலும் அவருடைய தொண்டர்களாகவும் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சற்றும் குறையவில்லை. அதை சோதிக்கும் தருணம் அதற்குப் பிறகு கிடைக்காததால் அவருடைய பலம் யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதற்கு அரசியல் என்று சொல்லியே எதிரிகளும் துரோகிகளும் பிரச்சாரம் செய்தார்களே தவிர, அவருடைய ரசிகர்கள் இன்றும் அவரைத்தான் தலைவராகக் கொண்டுள்ளனர். இது காலத்தால் அழியாத பாசப் பிணைப்பு.Quote:
Originally Posted by sankara70
ராகவேந்திரன்
நடிகர் திலகம் எனும் மாபெரும் மனித உள்ளத்தின் பெருந்தன்மையால் பல துரோகங்கள் மன்னிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் விட்டன. திரைத்துறையாகட்டும், பொது வாழ்விலாகட்டும், அரசியலிலாகட்டும், அவருக்கு துரோகம் செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்துத் தான் இருக்கிறார்கள், ஏதேனும் வகையில். குறிப்பாக அரசியலில் அவர் தோற்றதாக வரலாறில்லை. அவர் தேர்தலில் தான் தோல்வி கண்டாரே தவிர அரசியலிலோ பொது வாழ்விலோ அல்ல. அவர் தேர்தலில் களமிறங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அவருடைய ரசிகர்களே பெரும்பாலும் அவருடைய தொண்டர்களாகவும் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சற்றும் குறையவில்லை. அதை சோதிக்கும் தருணம் அதற்குப் பிறகு கிடைக்காததால் அவருடைய பலம் யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதற்கு அரசியல் என்று சொல்லியே எதிரிகளும் துரோகிகளும் பிரச்சாரம் செய்தார்களே தவிர, அவருடைய ரசிகர்கள் இன்றும் அவரைத்தான் தலைவராகக் கொண்டுள்ளனர். இது காலத்தால் அழியாத பாசப் பிணைப்பு.
உண்மை! எவராலும் மறுக்க முடியாதது.