Quote:
தமன்னா புயலே தடதடக்க நனைகிறது!
முத்து முத்தான மழைத்துளிகள் வாழைக்கன்றில் விழுந்த இடம் தெரியாமல் வழுக்கி ஓடுகின்றன. சீசன் இல்லாத குற்றால அருவியாய் கருங்கூந்தலிலிருந்து சொட்டுச் சொட்டாய் குதிக்கின்றன மழைத்துளிகள்.
காரைக்குடியின் கனமழையில் ‘அடடா மழைடா... அடை மழைடா’ என கார்த்தி இல்லாமலே ஆட்டம் போடுகின்றன தமன்னாவின் தாமரை மொட்டுப் பாதங்கள் இரண்டும்.
மழையில நனையுறது ரொம்ப சுகம். அதுவும் ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸோட நனைஞ்ச நாட்களை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாதுல்ல. ஒரு சின்ன உதட்டுச் சுழிப்பில் தமன்னாவின் மழை சந்தோஷம் தெரிகிறது நமக்கும்.
பொங்கல் ட்ரீட் சிறுத்தை பற்றி?
‘‘தெலுங்கு ரீமேக் படம்தான். தெலுங்குப் படத்தைவிட பத்து மடங்கு பவர்ஃபுல்லா வந்துருக்கு. திரைக்கதையில நிறையவே சுவாரஸ்யங்களைக் கூட்டி ரொம்பவே அழகுபடுத்தி இருக்காங்க.
பயங்கர ஜாலியாகவும் மிடுக்காகவும் சிறுத்தை வந்துருக்கு. கார்த்தியை காதலிக்கிற வெகுளியான பொண்ணு நான்.’’
உங்க காதலன் கார்த்திக் பற்றி?
‘‘ஐயய்யோ! ‘சிறுத்தை’ பட காதல்ன்னு சொல்லுங்க? ‘பையா’ படத்தோட சாயலை ஒரு சீன்ல கூட பார்க்கலை. சின்ன லுக்கிலிருந்து எல்லாமே மாத்திட்டார். ஒவ்வொரு சீனும் பிரமாதப்படுத்திட்டார்.
கார்த்தியைப் பார்த்ததும் இம்ப்ரஸ் ஆகிட்டேன். பிக்பாக்கெட் திருடனா நடிச்சிருக்கார். ரொம்பவே எனர்ஜிட்டிக்கான கேரக்டர். முதல் சந்திப்பிலேயே பயங்கர காமெடியான ரொமான்ஸ் இருக்கும்.’’
எப்பவும் ஃப்ளைட்லேயே இருக்கீங்க! சென்னையில செட்டில் ஆகலையா?
‘‘நான் ரொம்ப ஹோம் சிக்காகவே இருக்கேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வேலையை முடிச்சுட்டு எப்படா மும்பைக்கு ஓடலாம்னுதான் நினைக்கிறேன்.
அம்மா, அப்பா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அங்கதான் இருக்காங்க. அவங்களை எல்லாம் விட்டு விலகிவர மனசே இல்லை. சென்னையில கூட வீடு எடுக்காம போனதுக்கு அதுதான் காரணம்னு சொல்லணும்.’’
சீனியர் நடிகர்களோடு எப்ப நடிக்கப் போறீங்க?
‘‘அந்த ஆசையெல்லாம் இல்லாமலா! ரஜினி, கமல் சாரோடு எல்லாம் நடிக்கணும்னு ஆசையிருக்கு. அதுக்கான வாய்ப்புகள் இன்னும் அமையலை.
மணிரத்னம், ஷங்கர், கௌதம்மேனன், சசிகுமார், ராதாமோகன் போன்ற இயக்குநர்களோட படங்கள்ல நடிக்கணும்னு ஆசைகள் நிறைய இருக்கு. இன்னும் ஐந்து வருஷம் கழிச்சு பார்க்குறப்ப நல்ல கேரக்டர்கள் பண்ணியிருக்கோம்னு மனசு சந்தோஷப்படணும்.
பாக்குற வேலை எதுவா இருந்தாலும் அதுல நிறைய சின்சியர் தேவைன்னு நினைக்குறேன்.’’
தமிழ் சினிமாவுல உங்கள்நெருங்கிய நண்பர்கள்?
‘‘பூனம்பஜ்வா, வேதிகா ரெண்டு பேருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ். நாங்க மூணு பேரும் அடிக்கடி ஷாப்பிங் போவோம். ஹோட்டல்ல சாப்பிடப் போனா பயங்கர ஜாலியா சுட்டித்தனம் செய்வோம். எனக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. நம்புங்க ப்ளீஸ்!
எல்லாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!’’.