Quote:
5) பத்தாம் வகுப்பு:
சென்னை ஐ ஐ டி வளாகத்துள் இருக்கும் வனவாணி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் தலைமையில் மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பள்ளி, மாம்பலம் அஹோபில மடம் ஓரியன்டல் பள்ளி ஆசிரியர்கள் எழுதிய பாடநூல்.
இப்பாடநூலில் தனியொரு மாணவன் தனது கற்பனை வளத்தை, சிந்திப்பதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தவும், கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் வளர்க்கவும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
புகுந்திருக்கும் அரசியல்: வாரன் பப்பெட்டையும் பில்கேட்ஸையும் புகழ்ந்து சில பாராக்கள் எழுதப்பட்டுள்ளன.
கேட்கும் பயிற்சி & குழுவிவாத நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் உள்ளன. ஆங்கில சொலவடைகளும் பழமொழிகளும் பயன்படுத்த வேண்டிய இடங்கள் விளக்கம். சூழ்நிலையைச் சொல்லி அச்சூழலில் இடம் பெற வேண்டிய ஆங்கில உரையாடல்களை எழுதுதல்.
உலக இசை மேதைகள் பற்றிய பாடம் ஒன்றில் இளையராஜாவின் சிம்பனி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. :clap: இரட்டை கோபுர தாக்குதல், நாசி வதை முகாம்கள் பற்றிய பத்திகள் இடம்பெற்றுள்ளன.
பிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் அமெரிக்க ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பயிற்சி. (அரசு இசைக்கல்லூரி, சென்னை குறித்த கட்டுரை) அதே போல தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சியும் உள்ளது.
உலகளாவிய தண்ணீர்ப்பிரச்சினை பற்றிய பாடம் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் தொழிலில் இருப்பது பற்றிய பாடம் உள்ளது.