COURTESY - FACE BOOK
புரட்சித்தலைவரின் பொன்னான வரிகள்:
இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை
http://i57.tinypic.com/2s1rnyd.jpg
1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும்.
என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது. மறைக்க ,மறக்கமுடியாத மாமனிதர் இதய தெய்வம் MGR அவர்கள்.