And here is WTK of Simbhu ... Avanga mean pannura Love ku tamizha la Anbu nu oru vaarthai irukarathu kooda therla :banghead:
http://www.youtube.com/watch?feature...&v=VtU3PLovN4Y
Printable View
And here is WTK of Simbhu ... Avanga mean pannura Love ku tamizha la Anbu nu oru vaarthai irukarathu kooda therla :banghead:
http://www.youtube.com/watch?feature...&v=VtU3PLovN4Y
நாங்களும் பாடுவோம்ல!
http://cinema.vikatan.com/images/art...es/28surri.jpg
வி பி புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரிக்கும் படம் 'பாகன்'. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் 'அவன் இவன்' ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். முகமத் அஸ்லாம் இயக்குகிறார்.
அதிரிபுதிரி காமெடி தான் படத்தின் ஹைலைட்டாம். 'காஞ்சனா'வில் பட்டையை கிளப்பிய கோவை சரளா ஸ்ரீகாந்துக்கு அம்மாவாகவும், 'வெண்ணிலா கபடிக்குழு' சூரியும், 'அங்காடித்தெரு' பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர்.
சூரிக்கும் பாண்டிக்கும் இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல். இருவரும் 'பாகன்' படத்தில் ஒரு குத்துப் பாடலை பாடியுள்ளனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசையில்
"அவ ஏஞ்சலினா
அவ லவ்வரு நா
ஆக்சுவலா பம்பருதான்
நா மன்னருதான்
வின்னருதான்
சூப்பரான கூட்டணிதான்
கன்னி ராசி வந்த வேளைதான்
சம்பா சம்பா ராஜசிம்பா"
என்ற பாடலை பாடி, பாடகர்களாகியிருக்கின்றனர் சூரியும், பாண்டியும்.
படத்தில் ஸ்ரீகாந்த் காதலை ஜனனி ஐயர் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாடல் இடம்பெறுகிறது. கொடைக்கானலில் பிரம்மாண்டமாக செட் போட்டு இப்பாடலை படமாக்கி வருகின்றனர்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
மறுபடியும் தசாவதாரக் கூட்டணி!
https://lh3.googleusercontent.com/-W...oting_spot.jpg
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்க, அதில் கமல் ஒன்பது
கதாபாத்திரங்களாக மாறி அசத்திய படம் தசாவதாரம். கமலுக்கு கடைசியாக அமைந்த மிகப்பெரிய வெற்றிப் படம் அது. இந்தப் படதின் மூலம் ஒன்றினைந்த இந்த மெகா கூட்டணி மறுபடியும் 2012-இறுதியில் இணைய இருப்பதாக இயக்குனர் ரவிகுமார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 3டி அனிமேஷன் படமான கோச்சடையனுக்கு கதை, திரைகதை, வசனம் எழுதிவருகிறார் ரவிகுமார். இந்தப் பணி தற்போது முடிந்து விட்டதால் கமல் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியைத் தொடங்கி விட்டதாகவும், இதற்காக கமலிடம் கதையைச் சொல்லி ஒகே செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இம்முறை அக்*ஷன் த்ரில்லராக இந்தப் படத்தை உருவாக்க இருகிறார்களாம். படஜெட்டும் எக்குத்தப்பாக இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக ஊழலுக்கு எதிரான படமாக இதை உருவாக்க இருகிறார்களாம். காரணம் இந்தியன் இரண்டாம் பாகம் வேண்டாம் என்று இயக்குனர் ஷங்கரிடம் கமல் கூறி விட்டதாகவும், இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல்களை மையாமாக வைத்து இந்தக் கதையை ரவிகுமார் எழுதி வருவதாகச் சொல்கிறார்கள். விரைவில் இந்தப்படம் குறித்த தகவல்கள் தெரியவரும்!
கொலவெறி பாடிய தனுஷையும் பிரதமர் தேநீர் விருந்துக்கு அழைப்பு!
https://lh5.googleusercontent.com/-8...0/kolaveRi.jpg
தமிழகமே முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கொழுந்துவிட்டு எரியும்போது,
இந்தியத் திருநாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், கொலைவெறி பாடலால் பிரபலமாகிவிட்ட தனுஷை, ஜப்பானிய பிரதமருக்காக ஏற்பாடு செய்திருக்கும் புத்தாண்டு தேநீர் விருந்துக்கு அழைத்திருகிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தை பெருமையுன் அறிவித்திருகிறார் தனுஷ்!
ஒரு நிகழ்சியில் பங்கேற்று கொலவெறி பாடலைப் பாட 25 லட்சம் சம்பளம் வாங்கும் தனுஷ், நேற்று முந்தினம் கொல்கத்தாவில் நோக்கியா நிறுவனத்தின் புதிய செல் போனை அறிமுகப்படுத்தி கொலைவெறியைப் பாடித்திரும்பியிருகிறார்.
அந்த நிகழ்சியில் தனது கொலவெறி பாடலின் புகழ்பாடும்போது, " எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். கொலவெறி பாடல் இவ்வளவு பிரபலமானதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.
அந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் முதல் காரணம் , அந்த வரிகளில் உள்ள எளிமை இரண்டாவது காரணம். இந்தப் பாடலின் வரிகள் எல்லாதரப்பு இளைஞர்களுக்கும் பொதுவானதாக இருப்பது முன்றாவது காரணம் என முழங்கியிருகிறார்.
பிரதமரைத் தொடர்ந்து ரத்தன் டாடா, அமிதாப் பச்சன் ஆகியோர் தனுஷை தங்கள் வீட்டு விருந்துக்கும் அழைத்திருக்கிறார்கள். விட்டால் தமிழை கொலை செய்த தனுஷுக்கு பாரத ரத்னா கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது!
வேட்டை ஹிந்தி ரீமேக்! சுறுசுறுப்பாகும் லிங்குசாமி!
http://lh4.ggpht.com/-LEjmlcl8zeo/Tu...25281%2529.jpg
ஆனந்தம் என்ற அற்புதமான ஃபேமிலி செண்டிமெண்ட் படத்தைக் கொடுத்தார் லிங்குசாமி.
ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு ரன், சண்டக்கோழி, பையா என இவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்ஷியல் பார்முலா கலவையில் ஃபாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பிய படங்கள்.
இவரது படங்கள் எல்லாமே தெலுங்கிலும் டப் மற்றும், ரீமேக் செய்யப்பட்டு ஆந்திராவையும் கலக்கி இருக்கின்றன. தற்போது வேட்டை படத்தை இயக்கி முடித்திருக்கும் லிங்குசாமியின் ரன், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.
ரன் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்து இருந்தார். தற்போது வேட்டை முடிந்ததும் விஷாலை மீண்டும் இயக்க இருக்கும் லிங்குசாமி, அதன்பிறகு வேட்டை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்.
இதற்காக தனது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமும் ஜாயிண்ட் வென்சராக முன்னனி படநிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்க இருகிறார்களாம். வேட்டை ஹிந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தை அவரே செய்ய, ஆர்யா கதாபாத்திரத்தை ரன்பீர் கபூர் ஏற்று நடிக்க இருகிறாராம். இருவருக்குமான ஜோடிகளை கறாராக பாலிவுட்டில் இருந்தே தேர்வு செய்ய இருக்கிறார்களாம்.
ஆச்சர்யம் காத்திருக்கு ! : தனுஷ்
http://cinema.vikatan.com/images/art.../27dhanush.jpg
தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் '3' படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
இந்திய பிரபலங்களையும் இப்பாடல் கவர்ந்துள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் தனுசுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்நிலையில் பிரதமர் விருந்தில் பங்கேற்கவும் அழைப்பு வந்தது.இது குறித்து அவர் கூறியிருப்பது
" WHY THIS KOLAVERI DI பாடல் என் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து பிரபலங்கள் விருந்துக்கு அழைக்கின்றனர். எல்லாவற்றையும் விட மேலாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசியவர் பிரதமர் வீட்டில் ஜப்பான் பிரதமருக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு என்னை அழைத்ததும் என்னால் நம்ப முடியவில்லை.
தொழில் அதிபர் ரத்தன் டாடாவுடன் அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டதும் மறக்க முடியாத அனுபவம். பள்ளியில் பாட புத்தகத்தில் அவரைப் பற்றி படித்து உள்ளேன். இன்று அவரோடு விருந்து சாப்பிட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. " என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது டிவிட்டர் இணையத்தில் "உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது ! " என்று கூறியுள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
தனுஷ் இல்லை.. கார்த்தி !
http://cinema.vikatan.com/images/art...03sagunini.jpgதமிழில் மட்டுமல்ல இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் கூட ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். காட்சியை தனது கேமரா கோணத்தில் அழகுப்படுத்துவதில் வல்லவர் இவர்.
சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' படத்தில் ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு பாராட்டை பெற்றது. இந்நிலையில் தனுஷ் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை இயக்க இருக்கிறார் ரவி.கே.சந்திரன் என தகவல்கள் வெளியாகின.
அத்தகவலை மறுத்தார் ரவி.கே.சந்திரன். ஆனால் தான் படம் இயக்க வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.
தான் தயாராக வைத்து இருக்கும் காதல் கலந்த ஆக்ஷன் கதைக்கு கார்த்தி பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறாராம். எனவே தற்போது 'சகுனி', சுராஜ் இயக்கி வரும் படம் என பிஸியாக இருக்கும் கார்த்தியை அணுகி, கதை சொல்லியிருக்கிறாராம் ரவி.கே.சந்திரன்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
கசியுது முகமூடி கதை!
http://lh4.ggpht.com/-IfmjuDWhLro/Tu...25284%2529.jpg
சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது முகமுடி படத்தின் படப்பிடிப்பு.
இந்தப்படத்தின் திரைக்கதை புத்தகம், ஹாலிவுட் பாணியில் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட படக்குழுவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் கதையைப் பற்றி படப்பிடிப்பு இடைவேளைகளில் சர்வசாதரணமாக பேசிக்கொள்கிறார்களாம். தற்போது படத்தின் திரைக்கதை நாயகியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டே நகர்கிறது என்கிறார்கள்.
முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே. ஜீவாவுக்கு நாயகியாக நடிக்கிறார். பத்திரிகை நிருபராக இந்தப் படத்தில் நடிக்கும் பூஜாவின் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் மொத்த முகமூடி படமுமே நகர்கிறதாம்.
மும்பை பாந்திராவில் அக்டோபர் 13-ஆம் தேதி பிறந்தவராம் பூஜா ஹெக்டே. மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 ஆம் ஆண்டுக்கான அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இவர், பரத நாட்டியம் முறையாகப் படித்திருப்பதாகவும் கூறுகிறார். “ கதையில் எனக்கு இருக்கும் முக்கியத்துவம் ஒன்றே என்னை இந்தப் படத்தை ஒப்புக்கொள்ள வைத்தது” என்று கூறும் பூஜா, இந்தப் படத்தின் கதைபடி கொல்லபடுவார் என்கிறார்கள்.
சுப்ரமணியபுரம் கதைபோல, பூஜாவைக் காதலிக்கும் ஜீவாவை, அவரது காதலியை வைத்தே எப்படி தீர்த்துக் கட்ட நரேன் திட்டமிடுகிறார் என்பதும், அதிலிருந்து ஜீவா தப்பித்து வில்லனை எப்படி பழிதீர்க்கிறார் விறுவிறுவிறுப்பான திரைக்கதை என்கிறார்கள்.
இதில் முகமுடி என்று மிஷ்கின் சுட்டிக்கட்டுவது சூப்பர் ஹீரோ ஜீவா அணிந்து சண்டைபோடும் முகமுடி அல்லவாம்! வில்லனின் சூழ்ச்சிதான் இதில் முகமுடி என்கிறார்கள்!
Nanban and Vettai will not be out on the same day
Trade sources say that Nanban and Vettai may not release on the same day after all. There is a buzz that Nanban will hit the screens on January 12th and Vettai on January 14th. This means there would be a one day gap which is very important in the current scenario to rake up the collections at the box office.
Both Nanban and Vettai are the most expected films of the year. Nanban is directed by Shankar and has Vijay, Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in important roles while Vettai is directed by Lingusamy and has Arya, Madhavan, Sameera Reddy and Amala Paul.
http://www.behindwoods.com/tamil-mov...-31-12-11.html
Time to thank for Dhanush
With the year 2011 drawing to a close, Dhanush took time to thank all those who helped him make this year a grand success. A national award, five films – Aadukalam, Venghai, Mappillai, Mayakkam Enna and Seedan (cameo), and a phenomenal hit in the form of Why this Kolaveri di has got him international recognition.
The star said that he thanks his parents for their unconditional love and motivations, his fans, God and the whole world, media persons, his brother Selvaraghavan and director Vetri Maaran.
http://www.behindwoods.com/tamil-mov...-31-12-11.html