-
ராகவேந்திரன் சார் - தகவலுக்கு நன்றி. இதுமாதிரி நிகழ்வுகளுக்கு அவ்வப்போது நாம் பதிலடி கொடுத்தால்தான் மீண்டும் தவறுசெய்ய பயப்படுவார்கள்.
Letter sent to Hamsadhwani through Email on 18-08-2011
அன்புடையீர்
வணக்கம்
தங்களுடைய அமைப்பின் சார்பாக இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கு விருது வழங்கும் விழா அழைப்பிதழ் கண்டேன். அழைப்பிதழின் பின்புறம் இயக்குனர் பாலச்சந்தர் பற்றிய குறிப்பில் இவர் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, நாகேஷ், முத்துராமன் போன்ற தமிழ் நடிகர்களை நடிப்பில் மேலும் மெருகேற்றியவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கு பாலச்சந்தர் மெருகேற்றினார் என்று கூறியிருப்பது - யாரோ விபரம் தெரியாதவர் எழுதித் தந்ததை அப்படியே அழைப்பிதழில் அடித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் யாராலும் மெருகேற்றப்படவில்லை. அவர் தனது நடிப்புத் திறமையால், கடின உழைப்பால்தான் முன்னுக்கு வந்தார். பல இயக்குனர்களை, பல நடிகர்களை மெருகேற்றியவர் சிவாஜி கணேசன் என்றால் அது மிகையாகாது. இனியாகிலும் உண்மை தெரியாமல் இதுபோன்ற தவறுகளை தங்களைப் போன்ற விழா நடத்துபவர்கள் நிகழ்த்தாமல் இருக்கவேண்டும், திருத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
கே. சந்திரசேகரன்
தலைவர்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநல பேரவை.
சென்னை.
-
டியர் பார்த்தசாரதி,
தங்களுடைய ஆதங்கம் நியாயமானது, அதை சரியான முறையில் அவர்களுக்குத் தெரியப் படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
டியர் சந்திரசேகர்,
தங்களுடைய அமைப்பின் சார்பில் அனுப்பப் பட்டுள்ள கடிதம் மிகவும் சரியான முறையில் உள்ளது. பல இயக்குநர்களின் தொழில் மேம்பாட்டிற்கு நடிகர் திலகம் காரணமாயிருந்தவர் என்பது நிதர்சனம். இது அறியாமல் அவசர கோலத்தில் ஏற்பட்ட பிழை என்றே நாம் கொள்வோம். இருந்தாலும் இதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சரிபார்த்திருக்கலாம். நிச்சயம் பாலச்சந்தர் அவர்களின் கவனத்திற்கு இது போயிருக்காது அல்லது அவர் இதை கவனித்திருக்க மாட்டார் என்று தான் எண்ணுகிறேன். நம்முடைய மன வருத்தத்தை நாம் எடுத்துரைத்திருக்கிறோம். இனிமேல் இதை சரி செய்ய வேண்டியது அவர்கள் கடமை.
அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
-
Hamsadhwani அமைப்புக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்...
"அன்புடையீர்,
தமிழின் சிறந்த இய்க்குனர்களில் ஒருவரான திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரம், தங்கள் அழைப்பிதழின் பின்புறம் குறிப்பிட்டிருக்கும் ஒரு மாபெரும் தவறை சுட்டிக்காட்ட வேண்டியது நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன் என்ற வகையில் என் கடமை.
கிட்டத்தட்ட 300 படங்களில் தொய்வில்லாமல் நடித்து அசுர சாதனை படைத்த ஒரு மாபெரும் கலைஞனை, அவரது சகாப்தத்தின் மத்தியில் ஒரே ஒரு படத்தை இயக்கிய (அதுவும் கூட மக்களால் வரவேற்கப்படவில்லை) ஒரு இயக்குனர் மெருகேற்றினார் என்று அபத்தமான தகவலைத் தந்துள்ளீர்கள். இதைத் தமிழ்த் திரை வரலாற்றையறிந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல திரு பாலச்சந்தர் இயக்கிய படத்தில் நடிகர்திலகம் நடித்துள்ளார் என்பதைக்கூட ஆச்சரியமாக நினைப்பார்கள்.
அந்த ஒரே படத்தின் அனுபவத்தைப்பற்றிக்கூட கே.பி. சொல்லும்போது, 'நான் அவரிடம் இப்படிச்செய்யுங்கள் அப்படிச்செய்யுங்கள் என்று சொல்ல மாட்டேன். காட்சியைமட்டும் விளக்கி விட்டு ஒதுங்கிக்கொள்வேன். மற்றபடி அவரே நடித்து விடுவார்' என்று சொல்லியிருக்கிறார். உண்மை இவ்வாறிருக்க, திரு கே.பி அவர்களால் மெருகேற்றப்பட்ட நடிகர்கள் பட்டியல் பெரிய அளவில் வேறு இருக்க, சம்மந்தமில்லாமல் நடிகர்திலகத்தின் பெயரை அக்குறிப்பில் இணைத்திருப்பது கண்டனத்துக்குரியது.
இது குறித்து விழா அமைப்பாளர்கள், விழா மேடையிலேயே விளக்கம் அளித்து வருத்தம் தெரிவிப்பதே, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்னும் அந்த மாபெரும் கலைஞனுக்கு செய்யும் மரியாதையாகும்."
-
ஹம்சத்வனி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - இவர்கள் இழைத்த அநீதியை என்னவென்று சொல்வது?
தாங்க முடியாமல், இப்பொழுதுதான் ஹம்சத்வனிக்கு போன் செய்து வைத்தேன். திரு. கோபாலன் என்பவர் எடுத்துப் பேசினார். அவரிடம் நம் உள்ளக் குமுறல்களைச் சொன்ன போது, சார், தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள். இது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் காரர்கள் போட்டது என்றார். நான் அவரிடம் நீங்கள் இந்த விஷயத்தை திரு. பாலச்சந்தர் அவர்களிடம் காட்டினால், அவரே மேடையிலேயே விளக்கம் கொடுப்பார் என்று கூறி, எப்படியாவது இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, ஹம்சத்வனி மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்சின் மானத்தைக் காத்துக் கொள்ளுங்கள். அது அந்த இறந்தும் இறவாக் கலைஞன் நீங்கள் செய்யும் பிராயச்சித்தம் என்று கூறி வைத்தேன்.
இதே போல், இரண்டு நாட்களுக்கு முன்னர், விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்களின் பாடல்கள் சுற்றில், மெல்லிசை மன்னர் திரு. விஸ்வநாதன் அவர்கள் நீதிபதியாக இருந்தார். அவரிடம் திரு. கோபிநாத், உங்கள் முதல் பட அனுபவத்தைக் கூறுங்கள் என்ற போது, அவர் "பணம்" - நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் - படத்தைப் பற்றிப் பேசாமல், "ஜெனோவா" படத்தைப் பற்றிப் பேசி, "எனக்கு சான்ஸ் கிடைத்தது" அது இது என்று கூறினார். மற்றவர்கள் செய்த நல்லதைக் கூற வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. இவர் செய்த நல்லதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? இத்தனைக்கும், தமிழில், 76-க்குப் பிறகு, இளையராஜா அலை அடிக்க ஆரம்பித்த பிறகும், தொடர்ந்து பல வருடங்கள், நடிகர் திலகம் அவருடைய படங்களில் (அண்ணன் ஒரு கோவில், திரிசூலம், இரத்த பாசம், வா கண்ணா வா" என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.), மெல்லிசை மன்னரைத்தான் இசையமைப்புக்குப் பயன்படுத்தினார்.
ஏன் இப்படி நடக்கிறது?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
பார்த்தசாரதி சார்,
இதுபோலத்தான், பொதிகை சேனலில் வியாழன் அன்று இரவு ஒளிபரப்பாகும் 'வாலிப வாலி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் கவிஞர் வாலி, பெரும்பாலும் எம்.ஜி.ஆர். பாடல்களைப் பற்றித்தான் பேசுவார். நடிகர்திலகத்துக்கு எத்தனையோ படங்களில் (குறிப்பாக ஏ.சி.டி. இயக்கிய படங்கள்) எவ்வளவோ பாடல்கள் எழுதியிருந்தும் அவற்றைச்சொல்ல மாட்டார்.
பேட்டியெடுக்கும் கவிஞர் நெல்லை ஜெயந்தா, நடிகர்திலகத்துக்கு பாடல் எழுதிய அனுபவங்களைப் பற்றிக்கேட்டாலும், வாலி மழுப்பலாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் முடித்துக்கொள்வார். அதிலும் உயர்ந்த மனிதன் பற்றி மட்டுமே சொல்வார். பேசும் தெய்வம், பாபு, பாரதவிலாஸ், டாக்டர் சிவா, இருமலர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் மூச்சுவிட மாட்டார்.
-
அன்பு நண்பர்களே!
'ஹம்சத்வனி' அமைப்பிற்கு நான் அனுப்பியுள்ள மின்-அஞ்சல் விவரம்.
அன்புடையீர்,
முதற்கண் என் வணக்கங்கள். தங்களுடய 'ஹம்சத்வனி' அமைப்பின் சார்பாக 'இயக்குனர் சிகரம்' திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நடைபெற உள்ள பாராட்டு விழாவிற்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் பாராட்டு விழா அழைப்பிதழின் பின்புறம் அளிக்கப் பட்டிருக்கும் சில வரிகள் என் போன்ற ஆயிரக் கணக்கான நடிகர் திலகத்தின் ரசிகர்களை திடுக்கிட வைத்தது.
திரு.பாலச்சந்தர் அவர்கள் மிகச் சிறந்த இயக்குநர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞர் உலக அரங்கில் நம்மையெல்லாம் தலை நிமிரச் செய்தாரே, அவருடைய அருமை பெருமைகள் உங்களுடைய அழைப்பிதழ் தயார் செய்தவர்களுக்கு தெரியாமல் போனது விந்தையிலும் விந்தை!
திரு.பாலச்சந்தர் அவர்களால் மெருகேற்றப் பட்ட திரு.ரஜினிகாந்த் அவர்கள், திரு.கமலஹாசன் அவர்கள், திரு.சரத்பாபு அவர்கள் என்று பலரிருக்க, அவர்களையெல்லாம் விட்டு விட்டு நடிகர் திலகம் அவர்கள் திரு.பாலச்சந்தர் அவர்களால் மெருகேற்றப்பட்டார் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
தன் சிறு வயதிலேயே நாடகங்களில் நடித்து அனுபவப் பட்டு, 1952-இல் பல இன்னல்களுக்கு மத்தியில் பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமாகி, தன் முதல் படத்திலேயே உலக சினிமா அரங்கைத் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் திலகம். அவர் நடிப்பில் எவரெஸ்ட்-இன் உச்சியைத் தொட்ட பல வருடங்களுக்குப் பின்னரே திரு. கே.பாலச்சந்தர் அவர்கள் திரையுலகிற்கு வந்தார்.
நீலவானம் மற்றும் எதிரொலி என்ற இரு படங்களில் மட்டுமே நடிகர் திலகத்துடன் திரு. பாலச்சந்தர் பணியாற்றி உள்ளார். நிலைமை இவ்வாறிருக்க தங்கள் அழைப்பிதழில் சம்பந்தமே இல்லாமல் நடிகர் திலகத்தை சம்பந்தப் படுத்தியிருப்பது வேதனைக்குரியது.
இப்படிப்பட்ட நல்ல பாராட்டு விழாக்கள் தங்களால் நடத்தப் படும்போது இது போன்ற, தெரிந்தோ அல்லது தெரியாமலோ நடந்து விடும் சில நிகழ்வுகள்
என் போன்ற பலரை மனம் புண்படும்படி செய்து விடுவது துரதிர்ஷ்டவசமானது.
எனவே பாராட்டு விழா அழைப்பிதழ் அச்சடிக்கும் முன்னால் நல்ல அனுபவசாலிகளைக் கொண்டு, அளிக்கப்படும் விவரங்கள் சரியானதுதானா,
பிறர் மனம் சங்கடப்படும்படி ஆர்வக் கோளாறினால் தவறுகள் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா என்று ஆய்ந்து,ஆராய்ந்து, சரிபார்த்த பின்னரே அழைப்பிதழ் தயார் செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி உண்மையிலேயே திரு.பாலச்சந்தர் அவர்களால் நடிகர் திலகம் மெருகேற்றப்பட்டிருந்தால், திரு. பாலச்சந்தர் அவர்களுக்கு 'முதல் மரியாதை' செய்யும் முதல் ரசிகர் நடிகர் திலகம் அவர்களின் ரசிகராகத்தான் இருந்திருப்பார்.
எனவே அசந்தர்ப்பம்மாக நடந்துவிட்ட இந்த நிகழ்விற்கு தாங்கள் தகுந்த முறையில் விழா மேடையில் விளக்கம் அளிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மறுபடியும் தங்கள் சபாவிற்கும், தங்கள் சபா மூலம் பெருமை அடையப் போகும் 'இயக்குநர் இமயம்' திரு கே. பாலச்சந்தர் சாருக்கும், என் சார்பிலும், லட்ச்சக்கணக்கான 'உலக மகா நடிகர்', ' நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் ரசிகர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
டியர் பார்த்தசாரதி சார்,
ஏன் இப்படி நடக்கிறது?...அவரும் அவர் ரசிகர்களும் என்ன பாவம் செய்தார்கள்? நல்லதையே நினைத்து, நல்லதைப் பாராட்டி, நல்லதையே செய்து திறமை யாரிடம் இருந்தாலும், எங்கிருந்தாலும் பாரபட்சமின்றி ஓடிச் சென்று பாராட்டும் சுபாவம் யாருக்குப் புரிகிறது?...தான் கடந்து வந்த பாதையை நன்றியோடு திரும்பிப் பார்க்க இந்த ஜாம்பவான்களுக்குக் கூடவா தெரியவில்லை?...சரி விடுங்கள்...ஒற்றை விரலால் சூரியனை மறைக்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டிருந்த 'ராமன் எத்தனை ராமனடி' திரைக்காவியத்தின் அந்த அற்புத சோகப் பாடலான 'அம்மாடி....பொண்ணுக்குத் தங்க மனசு...தங்க மனசு'.... தங்கமனசு.....பாடலில் அவர் அந்த தலையின் சைடில் ஸ்டைலாக இடது கையை வைத்து, லேசாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, பழைய நினைவுகளில் மூழ்கியபடியே அந்த ஸ்டிக்கை வைத்துக்கொண்டு நடக்கும் அழகை! ...... வேண்டாம் சார்.... கண்கள் குளமாகிறது.... தங்களைப் போலவே ஆயிரம் முறை அந்த குறிப்பிட்ட காட்சியை அனுபவித்து, அனுபவித்து ரசித்தவன் என்ற முறையில், என் மனதில் நீங்கா இடம் பெற்ற அந்தக் காட்சி தங்கள் மனதிலும் எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கியிருக்கும் என்று பரிபூரணமாக என்னால் உணர முடிகிறது. நன்றி சார்...
கண்களில் நீருடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
NT பற்றி KB
வரலாற்று ஆவணம் : கலைத்தென்றல் : 1986
http://i1094.photobucket.com/albums/...EDC4357a-2.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4358a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4359a-1.jpg
அந்த 'ஹம்ஸத்வனி' அருமையான ஸ்ருதிகளையும், அற்புத கிருதிகளையும் கொண்ட அபூர்வ ராகம் !
அமைப்பான இந்த 'ஹம்ஸத்வனி' அபஸ்வரமும், ஸ்ருதிபேதமும் நிறைந்த அபூர்வ ரணம் !
["எதிரொலி(1970)"யும் அப்படி ஒன்றும் படுதோல்விப் [Utter Flop] படமாக அமையவில்லை. சில சென்டர்களில் 50 நாட்களை எட்டிய படமாக, 'நல்லதொரு வெற்றி' என்ற இலக்கை நழுவவிட்ட படமாக, 'Average' BO Statusஸைப் பெற்றது].
NT Devotee,
பம்மலார்.
-
Guys,
Even though I am late to response Hamsadhwani , I still want to show my un-happiness with the invitation and sent following message to them.
Dear Sir,
I got a chance to look at your invitation about feliicitation to director KB. I am happy to know that our KB has been honored with Dadasaheb Phalke award by Indian government and Hamsadhwani is arranging a big felicitation function to KB. But same time it is shock to read back side of invitation which states that Nadigar Thillagm Sivaji Ganeshan has been improvised by KB. What a pathetic line. When NT is on the top of the sky, KB is just put his feet in the Tamil industry and you say KB has improvised NT career and activing? I hope you are joking. My first impression was you may be mistaken NT with Gemini Ganeshan. If that is case then you have responsibility to inform in the meetings itself. If you have knowledge of NT name referred in the invitation then I must say you have responsibility to say unconditional apology to every one.
I hope you will take my feedback in a positive way as Hamsadhwani is highly respected art division and people expect truthful information from you.
Thanks,
Sathish,
Australia.
-
Dear Sathish,
An apt and fitting message of yours should make them feel guilty. Human error is always possible. But they should be honest enough to make things straight and amend it. As I said, the least they could do was to express regret at the stage.
Raghavendran