http://www.sivajiganesan.in/Images/2808_16.jpg
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
Printable View
http://www.sivajiganesan.in/Images/2808_16.jpg
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...cbcd77ef49ae09
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
இன்று முதல் மதுரை
மீனாட்சியில்,
நாளை முதல்
மதுரை அண்ணாநகர் அம்பிகா ac தியேட்டரில்
வீரபாண்டிய கட்டபொம்மன்
எல்லோரும் கூடுவோம்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...1872b00da9bcbb
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.
பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய் பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.
பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.
அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.
அந்தப் பெண்
திக்குகிறாள். திணறுகிறாள்.
பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.
பாடுகிறார்.
இனிக்கப் பாடுகிறார்.
இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
அப்பப்பா...!
அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?
அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?
அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?
பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?
தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல்,
உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?
ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?
பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...
..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..
அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,
அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!
https://youtu.be/mS_DsFaQl28
அன்பு நண்பர் சிவாஜிசெந்தில் சார் ,
தங்களின் சிறப்பான பணி நிறைவுக்கு என் வாழ்த்துக்கள் ! உடம்பில் ஆரோக்கியமும் , மனதில் ஆர்வமும் இருக்கும் வரை நமக்கு பிடித்த துறையில்
தொடர்ந்து பயணிக்கலாம்! தங்கள் பண்புக்கும், குணத்துக்கும் தாங்கள் மேலும் பல உன்னத நிலைகளை வாழ்க்கையில் நிச்சயம் அடைவீர்கள்!
தங்களின் முக்கிய வேலைகளை முடித்து கொண்டு வெகு விரைவில் மீண்டும் நம் திரியில் பங்கெடுக்க விரும்புகிறேன் ! தங்கள் இடத்தை வேறு யாராலும்
நிரப்ப முடியாது ! நீடூழி வாழ்க சிவாஜிசெந்தில் சார் !
DEAR FRIENDS,
All of you are already aware and has seen the Friday, Saturday & Sunday HOUSEFULL status at SATHYAM STUDIO 5 Matinee 3-45pm Show last Friday itself.
TODAY, 30-08-2015, SUNDAY
MATINEE SHOW 3-15pm
&
EVENING SHOW 6-45pm
@ SAI SHANTHI ,
NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN REGISTERED
"HOUSEFULL" !!!
NADIGAR THILAGAM ROCKS !!!!
Regards
RKS
******************
சிவாஜி பாட்டு-2
******************
"ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.
கணவன்,அமைதியாகச் சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.
*****
சமைக்கத் தெரியாத பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக் கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.
மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.
அவை அத்தனையையும் மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.
"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.
உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.
கலைப்பசியில் சுருண்டு கிடக்கும் நமக்கு இப்படி நடிகர் திலகம் போல் வேறு யாரும் நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு குளிர்வது போல, பார்ப்பவர்களின் நெஞ்சு குளிர்கிறது.
பளிங்கு போன்ற முகம்.படிய வாரிய தலைமுடி பாதி வரை மறைத்திருக்கும் நெற்றி.அதன் கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன் வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.
பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான பெண்ணொருத்தியால் களை கட்டி விடுகிறது.
"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை வளர்க்குது.. சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."
-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர கவி.அய்யா.வாலி.
'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும் போது,
பெண்கள் கூட்டமொன்று வந்து
முறைக்க,"உங்களை இல்லம்மா" என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின் நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..
பத்தாயிரம் தடவை.
******
புகைப்படத்திற்கு நன்றி...
திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு.
https://youtu.be/H8VkUxkMu8c
Sent from my GT-S6312 using Tapatalk
அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
பழைய படங்களை சிறப்பாக டிஜிட்டல் செய்து நல்ல முறையில் விளம்பரம் செய்து வெளியிட அதிக பட்சம் சுமார் 20 முதல் 22 லட்சங்கள் வரை தான் செலவாகும் ! நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை! அந்த அளவு பணத்தை செலவு செய்ய முடியாதவர்கள் அந்த காரியத்தில் ஈடுபடுவதே தவறு!
சொக்கலிங்கம் போன்றவர்கள் கையில் கட்டபொம்மன் சிக்கியிருந்தால் அதன் ரேஞ்சு எங்கோ சென்றிருக்கும்! நமக்கு கொடுப்பினை அவ்வளவு தான்!
எல்லா பழைய படங்களும் கர்ணன் போல் அமைந்து விடாது என்பதும் உண்மையே! ஆனாலும் கட்டபொம்மனை கர்ணன் போன்று எந்த குறையுமின்றி
வெளியிட்டிருந்தால் நிச்சயமாக நாம் சந்தோச படும்படியான பெரிய வெற்றியை பெற்றிருக்கும்! திருச்சி மதுரை கோவை சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நல்ல திரைஅரங்குகள் அமைய நம் ரசிகர்கள் பெரும் முயற்சி செய்து நல்லபடியாகவும் அமைந்தது! படத்தை வெளியிட்ட சாய்கணேஷ் films
திரு முரளி சிவாஜி ரசிகரும் கூட! nsc area அவர் தான் ரிலீஸ் செய்தார் ! கடலூர் , பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் கூட படத்தை வெளியிட
துப்பில்லை ! இப்படி பட்டவர்களிடம் மாட்டிகொண்டு ஆங்கிலேயர்களிடம் பட்ட கஷ்டங்களை விட அதிகமான சிரமங்களை கட்டபொம்மன் அனுபவித்தார்!
ரசிகர்கள் எவ்வளவு தான் செய்ய முடியும் ? எது எப்படி இருந்தாலும் பாசமலர் தவிர மற்ற நம் படங்கள் லாபத்தை கொடுத்தன என்பது மறுக்க முடியாத
உண்மை! பாசமலர் சென்னை கோவை தவிர மற்ற எல்லா நகரங்களிலும் மோசமான பழைய திரைஅரங்குகளில் தான் வெளியிடபட்டது! தோல்விக்கு
அதுவும் முக்கியமான காரணம் ! சென்னையில் கட்டபொம்மனுக்கு நல்ல போஸ்டர்ஸ் விளம்பரம் செய்தால் இன்னும் நன்றாக போகும்! ஆனால் நடப்பது
உங்களுக்கே தெரியும்! நாம் நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை!
நன்றி !