இனிய நண்பர் ஜெய்சங்கர் சார்
மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை மிகவும் அருமை .
சென்னை - அபிராமி அரங்கில் அடிமைப்பெண் திருவிழா நிழற் படங்கள் அருமை லோகநாதன் சார் .
தேடிவந்த மாப்பிளை படத்தை அனுபவித்து பார்த்த நண்பர் சுஹாராம் பதிவு இனிமை .
Printable View
இனிய நண்பர் ஜெய்சங்கர் சார்
மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை மிகவும் அருமை .
சென்னை - அபிராமி அரங்கில் அடிமைப்பெண் திருவிழா நிழற் படங்கள் அருமை லோகநாதன் சார் .
தேடிவந்த மாப்பிளை படத்தை அனுபவித்து பார்த்த நண்பர் சுஹாராம் பதிவு இனிமை .
http://i41.tinypic.com/x3io87.jpg
நேற்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்தி.
ஆர்.லோகநாதன்
அன்புச்சகோதரர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் அறிவது :
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க அலுவல்கள் காரணமாக, பொன்மனச்செம்மல் திரியினில் நான் எனது பதிவுகளை பதிவிடவில்லை.
மக்கள் திலகத்தின் 33வது படமாகிய "கூண்டுக்கிளி" தகவலுடன் இன்று முதல் மீண்டும் தொடர்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் ஆவலுக்கு நன்றி !
மேலும் தாங்கள் பதிவிட்ட, வரலாற்று நாயகனாம் நம் புரட்சித் தலைவரைப் பற்றிய ஆங்கில கட்டுரை மிக அருமை. அதில், பிரசுரிக்கப்பட்டுள்ள நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் கம்பீரத் தோற்றம் வெகு அமர்க்களம்.
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்த ஸ்டைல் யாருக்கு வரும் ? என்று அடிக்கடி உச்சரிக்கப்படுவதை உறுதி செய்கிறார் நம் நடிகப்பேரரசர்
எம். ஜி. ஆர். அவர்கள்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
உண்மைதான் சகோதரர் வினோத் அவர்களே !
தமிழகம் மட்டுமல்ல, உலக அளவில் புகழ் பெற்ற நடிகராக நம் மக்கள் திலகம் விளங்குகிறார். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் பிறந்த நாள் வருடந்தோறும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய ஆசிய நாடுகளில் விழா எடுக்கிறார்கள்.
கடல் கடந்து, அந்நிய தேசங்களிலும் ஆதிக்கம் செலுத்தி தனது வெற்றிக்கொடியை நாட்டி சாதனை படைத்து வருகிறார் நம் பொன்மனச்செம்மல் என்றால் அது மிகையாகாது.
உலக சினிமா ரசிகர்கள் எப்போதுமே பொழுதுபோக்குடன் கூடிய சண்டைக்காட்சிகள் மிகுந்த ஜனரஞ்சகமான படங்களைத் தான் விரும்புகிறார்கள்.
உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தி கண்ணீர் வரவழைக்கும் சோகமான காட்சிகளை அவர்கள் ரசிக்க மாட்டார்கள். அதனால் தான், அவர்கள் விரும்பும் காட்சிகளும், கதையமைப்பும் கொண்ட படங்களில் நடித்த நம் பொன்மனசெம்மலை உலக சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது 1995ல் இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுத்தனர்.
குறுகிய மனப்பான்மை கொண்ட பிலிமாலயா அமுதவன் போன்ற கருத்துக்குருடர்களுக்கு, கற்பூர வாசனையும் இந்த அருமை பெருமைகளும் எல்லாம் தெரியாமல் போனது ஒன்றும் வியப்பல்ல. .
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அருமை சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :
1934ல் திருப்பூரில் நடைபெற்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா அவர்களின் முதல் சந்திப்பு தொடர்பான அபூர்வ செய்தினை அவர்களிருவரும் பிறந்த இந்த செப்டம்பர் மாதத்தில் பதிவு செய்தது சாலப் பொருத்தம்.
தமிழக அரசியல் வரலாற்றில் இவ்விருவரும் ஆற்றிய பங்கு மகத்தானது. அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றி. !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சென்னையில் வெகு சிறப்பாக நடந்தேறிய இந்திய திரையுலகம் நூற்றாண்டு - விழாவில் பல திரை அரங்குகளில் திரையிடப்பட்ட பல்மொழி பழைய திரைப்படங்களில் பல நடிகர்கள்,நடிகையர்கள் நடித்ததில் மக்கள்திலகம் mgr., அவர்கள் திரைப்படங்களை தான் மிக பெரும்பான்மையோர் விரும்பி கண்டிருக்கிறார்கள்...இவை எல்லாம் இலவச டிக்கெட்கள் என்றாலும்--- மற்ற படங்களை சீண்ட ஆட்கள் அவ்வளவாக இல்லாத காரணம் என்ன ?-அதுதான் என்றைக்கும் விளங்கும் மக்கள்திலகத்தின் " charisma "-எனும் நடப்பு- உண்மையா!..... திரு பில்மலாயா அமுதவன் போன்றோர் அவர்களுக்கு தெரிந்ததை தானே கருத்து - என்ற பெயரிலே சிலரை சில நாட்கள் சமாளிக்க சொல்ல முடியும் என சக பத்திரிகை கருத்துரையாளர்கள் கருதுவார்கள்...இதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியதில்லை நண்பர்களே!!!
நம் தமிழ் உட்பட இந்திய திரைஉலகம், - மற்றும் சர்வதேச - உலக திரைப்பட வரலாற்றில் என்றுமே காதல், வீரம் - இவைதான் எப்பொழுதும் success formulae - என்று உலக திரைப்பட கருத்து களஞ்சியங்கலை உருவாக்கியோரே உருவக படுத்தியுள்ளனரே !!! அத்தகைய கதை அம்சங்கள் கொண்ட திரை படங்களே 99% வெற்றியை ருசித்துள்ளது...மாற்றாக உள்ள கதையமைப்புகள் சில படங்கள்தான் ஓடியிருக்கிறது என்பதை கடந்த,நடப்பு காலங்களிலும் கண்டோம், கண்டு கொண்டிருக்கிறோம் - இவ்வாறு இந்த evergreen formula -வை, திரு MGR அவர்கள் பயன் படுதியதாலயே அவருடைய திரைப்படங்கள் என்றும் பொது மக்களின் சிறப்பான பேராதரவை பெற்றிருக்கின்றன, எனில் அது மிகையாகாது...
courtesy - snap judgement- net
தனி முத்திரை பதித்தவர்கள்
கேட்டவுடன் நரம்பை முறுக்கேற்றும் வசனங்களை எழுதி, தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி. ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடித்து, கட்சிக்காகப் பிரசாரம் செய்துள்ளார்.
அண்ணா, ஈ.வெ.கி. சம்பத் போன்றவர்களும் நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்து, திராவிட இயக்கக் கொள்கைகளை -பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரசாரம் செய்துள்ளனர்.
"நடிப்பிசைப் புலவர்' கே.ஆர். ராமசாமி, "லட்சிய நடிகர்' எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்றவர்கள் திரைப்படங்கள் மூலமும், டி.வி. நாராயணசாமி போன்றவர்கள் நாடகங்களின் மூலமும் திமுக வளர்ச்சிக்காகப் பிரசாரம் செய்த கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.
திரைப்படங்களிலும், பிற வகைகளிலும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மேற்கொண்ட சீர்திருத்தக் கொள்கைப் பிரசாரம் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. எனினும், அது திமுகவுக்கே பெரிதும் பயன்பட்டது.
துணிச்சல் மிக்கவர்
திராவிடர் கழகத்துக்காக நடிகவேள் எம்.ஆர். ராதா மேற்கொண்ட பிரசாரங்கள் நகைச்சுவை ததும்புவதாகவும் இருக்கும்; சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும்.
தனக்கென்று தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு, அரசியல் -திரைப்பட -நாடகத் துறைகளை ஒரு கலக்கு கலக்கியவர் அவர்.
மேடைக்கு எதிரே நூற்றுக்கணக்கானவர்கள் குழுமி இருந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்தை மிகுந்த துணிவுடன் பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறுவது ராதாவின் பாணி. இதனால் சில இடங்களில் பிரச்சினைகளும், தகராறுகளும் கூட ஏற்பட்டது உண்டு.
காங்கிரஸ் கலைஞர்கள்
காங்கிரûஸப் பொறுத்தவரை நாவலர் சத்தியமூர்த்தி, கே.பி. சுந்தராம்பாள், டி.கே. பட்டம்மாள், கே.எஸ். அனந்தராம ஐயங்கார், ராமானுஜ ஐயங்கார், கே. சுப்பிரமணியம் போன்றவர்கள் பிரமிக்கத்தக்க அளவுக்குப் பிரசாரம் செய்த கலையுலகப் பிரமுகர்கள்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் தேசிய பஜனை என்கிற பெயரில் அவர்கள் பாடிய பாடல்கள், செய்த பிரசாரங்கள் மக்களின் இதயங்களைத் தொட்டன; சுதந்திர வேட்கைக் கனலை மூட்டின.
தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் (தெ.பொ மீனாட்சிசுந்தரத்தின் சகோதரர்) கதரின் பெருமையைப் பற்றிய நாடகத்தை நடத்தினார். அந்நாடகம் லண்டனிலும் நடத்தப்பட்டிருக்கிறது.
முருகர் வேடத்தில் மயில் வாகனத்தின் மீது அமர்ந்து நாட்டுப் பற்றை ஊட்டும் பாடலைப் பாடியபடியே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸ், கே.பி.சுந்தராம்பாளின் கணவர் கிட்டப்பா போன்றவர்கள் காங்கிரஸýக்காகச் செய்த பிரசாரப் பணிகளை அளவிட முடியாது.
சுதந்திரம் அடைந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகும் துணை நின்ற கலையுலக நட்சத்திரங்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எஸ்.எஸ். வாசன், ரஞ்சன் (நீலமலைத் திருடன் போன்ற படங்களில் நடித்தவர்), நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் தந்தை ஜோசப், தன் இனிய குரலால் கவர்ந்த மகாலிங்கம், ஜெமினி கணேசனின் முதல் மனைவி புஷ்பவல்லி ஆகியோர்.
நடிகை பத்மினி கூட இளைஞர் காங்கிரஸ் மேடைகளில் சில காலம் பிரசாரம் செய்துள்ளார்.
எம்ஜிஆர் -சிவாஜி யுகம்
மருதநாட்டு இளவரசி படத்தில் கதாநாயகனாக நடித்தபோது கதர் உடுத்தி, ருத்திராட்ச மாலை அணிந்து, தேசியவாதியாக இருந்த எம்ஜிஆர், பிற்காலத்தில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் தொடர்புகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் ஐக்கியமானார்.
அதேபோல, கருணாநிதியின் எழுச்சியூட்டிய வசனங்களைப் "பராசக்தி' திரைப்படத்தில் கனல் தெறிக்கப் பேசி, திரை உலகையே குலுக்கிய சிவாஜிகணேசன், திராவிட இயக்கத்திலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாகக் காங்கிரஸின் பக்கம் சென்று, அங்கே நிலை பெற்றார்.
ஒரு காலத்தில் திமுகவை எம்.ஜி.ஆர். கட்சி என்றும், காங்கிரûஸ சிவாஜி கட்சி என்றும் அழைத்தது உண்டு.
எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருமே தாங்கள் இடம் பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இணையாக மக்களிடையே புகழ் பெற்றனர்.
ஆனால், மிகக் கவனமாகத் தனக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம், தனது செல்வாக்கையும் அரசியல் அந்தஸ்தையும் வளர்த்துக் கொண்டவர் எம்ஜிஆர். நல்ல நடிகர் என்று பெயரெடுத்த சிவாஜிகணேசன், எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடித்ததால், அத்தகைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள இயலவில்லை.
மக்கள் திலகம் மலர் மாலை -1
இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களின் சீரிய முயற்சியில் வெளிவந்து மகத்தான விற்பனை
சாதனை புரிந்த மலர் மாலைக்கு ஆதரவு தந்த - தருகின்ற - தரப்போகின்ற ரசிகப்பெருமக்களுக்கு
நன்றி .
http://i1273.photobucket.com/albums/...ps8f610845.jpg
விரைவில் வருகிறது மக்கள் திலகம் மலர் மாலை -1 மூன்றாம் பதிப்பு .