வாசித்தேன். மிக்க நன்றி வாசு ஜி.
குங்குமம் தோழியில் தீபாவளி சிறப்பிதழிலும் அம்மாவின் பேட்டி உண்டு. படிக்கவும்
Printable View
நன்றி திரு. எஸ் கே ராஜா.
http://imageshack.us/a/img703/8514/sq1r.jpg
A .M. ராஜா :(1-7 -1929 To 7-4- 1989)
(ஏமத மன்மதராஜு ராஜா ) A . M. ராஜா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்!
1950, 60, மற்றும் 70 களில் தென்னக மொழிகள் ஆன தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடப் படங்களில் பாடல்களைப் பாடியவர் !
இவர் நிறைய படங்களுக்கு இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இளமைப் பருவம் :
1-07- 1929 ஆம் ஆண்டு , மன்மதராஜு - லக்*ஷ்ணம்மா தம்பதிகளுக்கு ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏ எம் ராஜா பிறந்தார்.
ஏ எம் ராஜா விக்கு மூன்று வயது இருக்கும் போதே இவருடைய தந்தையார் காலமாகிவிட, பின்பு இவரது குடும்பம் சென்னைக்கு ( ‘மெட்ராஸ்’ ) குடி பெயர்ந்தது.
ஏ எம் ராஜா, பச்சையப்பன் கல்லூரியில் B.A. படம் பெற்றார்.
இந்த காலகட்டத்தில் ராஜா, மேலை நாட்டு இசையிலும், கர்நாடக இசையிலும் , மற்றும் பியோனோ வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றார்.
திரைப் பட உலகத்தில் நுழைவு:
முதன் முதலில் பிரபல இசையமைப்பாளர் கே வி மகா தேவன் அவர்களின் இசைக் குழுவினரோடு, HMV இசைத் தட்டுக்கம்பனிக்காக தானே இசையமைத்து பாடவும் செய்தார்.
இவரது பட்டு போன்ற மென்மையான குரலைக் கேட்ட ‘ஜெமினி ஸ்டுடியோ’ அதிபர் எஸ் எஸ் வாசன் , தனது அடுத்த படமான “ சம்சாரம்” ( 1951 ) படத்திற்கு ராஜாவை பாடவைத்தார். அதன் பின்பு இந்தி மொழி முதற்கொண்டு ஏனைய தென்னிந்திய மொழிகளில் பாடி 50 களின் ஆரம்பத்திலும் இடையிலும் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார் ராஜா . இசையமைக்கும ஆர்வத்தையும் அவர் வளர்த்துக்கொண்டார். இன்னும் சொல்லப் போனால் , ராஜா இசையமைப்பாளர் ஆக 1952 ஆம் ஆண்டு. M.G.R . நடித்த “ ஜெனோவா” படத்திற்காக இன்னொரு இசையமைப்பாளர்கள் : T . A. கல்யாணம் மற்றும் M.S. ஞானமணி யுடன் அறிமுகம் ஆகவேண்டியவர் , M.S. விஸ்வநாதனின் முதல் பட சான்ஸ் க்கு ஆக, தனது வாய்ப்பை, படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புக்களை தேடின மெல்லிசை மன்னருக்கு அளித்துவிட்டு அந்த படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களையும் பாடினார்.
இசையமைப்பாளர்கள:
ஏ எம் ராஜா, பிரபல இசையமைப்பு ஜாம்பவான்களிடம் பாடி அவர்களின் பாராட்டையும் பெற்றார். அந்த ஜாம்பவான்கள் : எஸ் வி வெங்கட்ராமன், சங்கரா சாஸ்திரி,எஸ்.ராஜேஸ்வர ராவ், ஆர் சுதர்சனம் , ஜி ராமநாதன், சி ஆர் சுப்பாராமன், சி என் பாண்டுரங்கன், தட்ஷிணா மூர்த்தி, மாஸ்டர் வேணு, கே வி மகாதேவன், பெண்டியாலா நாகேஸ்வரராவ், ஆதி நாராயணராவ், திவாகர், தேவராஜன், டி ஆர் பாப்பா, சி எஸ் ஜெயராமன், கண்டசாலா, வேதா, ராமாராவ், அஸ்வதாமா, விஸ்வநாதன் - ராமமூர்த்தி, விஜயபாஸ்கர் !
பிரபல இந்தி இசையமைப்பாளர் ஷங்கர் - ஜெய்கிஷன் இசையிலும் ராஜா பாடி பாராட்டைப் பெற்றார்.
ராஜாவின் திறமை:
இவருடன் பாடும் மற்ற பாடகர்கள், ராஜாவின் மென்மையான, எளிமையான குரல்- அது “Low Pitch" ஆகட்டும் , இல்லை “High Pitch” ஆகட்டும் - இந்த குரலுக்கு ஈடாக தாங்கள் பாடுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளனர் !
ஒரு குறிப்பட்ட கால கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உலகப் புகழ் பெற்ற ஒரே பாடகர் , ஏ எம் ராஜா. உண்மை! - இந்த சாதனைக்கு இணை இன்று வரை யாருமே இல்லை.
ஒப்பீடு:
இந்தியில் நடிகர் ராஜ்கபூரின் குரலுக்கு முகேஷின் குரல் எப்படிபொருந்தியதோ , அதே போல் ராஜாவின் குரல் நடிகர் ஜெமினி கணேசனுக்கு மிகப் பொருந்தியது! அதுபோல சிவாஜி கணேசனுக்கும் எம்ஜிஆருக்கும் பொருந்தி வந்தது.
ஏற்றமும் கண்டிப்பும் :
50 களின் ஆண்டுகளின் முடிசூடா மன்னன் ஆக அனைத்துத் திரை உலக நட்சத்திரங்களிடம் மிகுந்த புகழுடன் இருந்த ராஜா, பின்னர் கண்டிப்பாக இருந்து,பாடுவதைக் குறைத்துக்கொண்டார்.
ராஜா, பிறர் தன் மீது பொறாமையுடனும், பின்னால் பேசுபவர்களையும் புரிந்து கொண்டுவிட்டார். ஆனால், இதற்கெல்லாம் பிரதான தவறுக்கு தானே என்பதை உணர்ந்தார். இதனை ஏனைய் இசையமைப்பாளர்களிடம் உணர்ந்து கொண்டார். ஆனாலும் இவர் தன் நேர்மையிலும் ஒழுக்கம் தவறாமையும் கடை பிடித்து வந்தார்.
ஒரு “ டேக்” க்கு மேல் இவர் பாடி அந்த பாடல் பதிவானது என்பது வெகு அபூர்வமே. ஆனால் பண விஷயத்தில் அவர் கறார் ஆக இருந்தது உண்மையே.
ஆனால் ஆரம்பக் கால கட்டங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைத் திறனை வியந்து அவரின் நட்பு கொண்டது கூட அல்லாமல், பட்டுக்கோட்டையார் அகால மரணமடைந்த போது அன்னாரின் இறுதி ஊர்வல செலவுகள் அனைத்தும் ஏ எம் ராஜா ஏற்றுக்கொண்டது இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.
பிடிவாத குணம்:
ராஜாவின் முதல் வழிகாட்டி கே வி மகாதேவன், “ மனமுள்ள மறுதாரம் “ படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜாவை விட்டு தூர விலகிக் கொண்டார். பின்னர் எம் எஸ் விஸ்வநாதன் , இவரை தொலைவில் வைத்துக்கொண்டது , ராஜாவுக்கு ஒரு பெரிய இழப்பாகும்.
பிற இசையமைப்பாளர்களுடன் அதிலும் 50 களில், மற்றும் 60 களின் இசையமைப்பாளர்களுடன் இவர் மாறுபட்டு நடந்துகொண்டது விரும்பதக்கது அல்ல.
இதே மாதிரிதான் , ராஜா இயக்குனர் ஸ்ரீதரை பகைத்துக் கொண்டது - தனது இரண்டு படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தவர் ஸ்ரீதர் !
மேடைக் கச்சேரி:
எனினும் ஏ எம் ராஜா இசைக் கச்சேரிகளை அவர் நடத்தி வந்தார்.
வாடகை கார்கள் தொழில்களையும் அவர் இறுதிவரை நடத்தி வந்தார்.
ஓர் இசையமைப்பாளர் ஆக:
தமிழில் : “ கல்யாண பரிசு, “ தேன் நிலவு ‘ விடிவெள்ளி’” ஆடிப் பெருக்கு” etc
தெலுங்கு :“ ஷோபா”
மலையாளம் :“ அம்மா என்ன ஸ்ரீ”
தமிழில் வந்த ‘தேன் நிலவு ‘ மிகப் பிரபலம் !
விருதுகள்:
Madras Flim Fans Association - சிறந்த இசையமைப்பாளர் ஆக 1959 ஆம் ஆண்டு இவரை கெளரவித்தது.
இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் :ம்யில் வாகனன், ராஜ குரு சேனாதிபதி கனக ரத்தினம், பி எச் அப்துல் ஹமீத் போன்றவர்கள் , ராஜா பாடுவதை நிற்பாட்டினாலும் அவரைப் புகழுவதை நிற்பாட்டவே இல்லை!
பிரபல பாடகி ஜிக்கி ( பி ஜி கிருஷ்ணவேணி ) யை இவர் திருமணம் செய்துகொண்டார். “ சம்சாரம்” ( 1951 ) பட பாடல் பதிவிலே இவர் ஜிக்கியைப் பார்த்து விட்டார். பின்னர் “ மஹேஸ்வரி “ ( 1955 ) படத்தின் “ அழகு நிலா வின் பவனியிலே” பாடலில் தன் ஆசையை வெளியிட்டார். இவருக்கு 4 மகள்கள் , 2 மகன்கள். உலகம் பூரா சுற்றி வந்து இசை நிகழ்ச்சியை நடத்தி வந்தார், ஏ எம் ராஜா.
நடிகர்:
இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த :“ அடுத்த வீட்டுப் பெண்” படத்தில் தமிழில் கே ஏ தன்கவேலு செய்த வேடத்தை தெலுங்கில் ஏற்று நடித்தாராம் !
படம் : “ பக்கிண்டி அம்மாயி “ இயக்கம் : சி புல்லய்யா
மறுபடியும் ஏ எம் ராஜா:
70 களில் ராஜா வந்தார். இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், வி குமார் அவருக்கு வாய்ப்பு அளித்தனர். ஆனால் அப்போதும் பிரபலமாக இருந்த மெல்லிசை மன்னரும் கே வி எம் உம் அவரை கண்டு கொள்ளவில்லை.
அப்போது : “ வீட்டு மாப்பிள்ளை “ ( 1973 ) ” எனக்கொரு மகன் பிறப்பான்” ( 1975 )மலையாளத்தில் ” அம்மா என்ன ஸ்ரீ “ ( 1970 ) படங்களுக்கு இசையமைத்தார்.
முடிவு: கன்யாகுமாரி மாவட்டம் , கூடாலு மூடு என்கிறஊரில் இருக்கும் கோவிலுக்கு பாட வந்த ஏ எம் ராஜா , ஓடுகின்ற தொடர் வண்டியில் தவறி விழுந்து 7- 4- 1989 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 60.
ஆனால் அவரது இசையும் குரலும் இன்றும் அகில உலகை ஆளுகின்றது!இளய தலை முறையும் இவரது குரலை விரும்பிக் கேட்கிறது .
நன்றி: 2003 மற்றும் 2004 வெளி வந்த இதழ்களில் இருந்து திரட்டியவை.
காரைக்குடி நாராயணன் இந்த ஆண்டில் ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். இவர் கதை வசனம் எழுதிய நிறைய படங்கள் 1976-க்கு முன்பு நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டில் இவர் தயாரிக்க நினைத்த படத்திற்கு அச்சாணி என பெயர் சூட்டி படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார்.
அச்சாணி படத்தின் பெயரைக் கேட்டாலே எனக்கு சட்டென ஞாபகத்திற்கு வருவது இந்த விஷயம்தான். அது…
படத்தின் பூஜையன்று பாடல் பதிவு என்றும் முடிவு செய்யப்பட்டது. படத்தின் கதையை கேட்ட ராஜா இயக்குனர் கேட்டது போல இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து வாலி அவர்களை வைத்து பாடல்களும் எழுதி தயார் நிலையில் இருந்தனர்.
சவுண்டு என்ஜினியர் இந்த படத்தின் பூஜை தினத்தன்றே வேறு ஒரு படத்திற்கும் (இசையமைப்பாளர் உபேந்திரகுமார்) ரெக்கார்டிங் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் யாராவது பாடல் பதிவு முடித்துவிட்டால் மதியம் 1 மணிக்குள் அடுத்த பாடல் பதிவை வைத்துக்கொள்ளலாம் என நினைத்தாரோ என்னமோ. பூஜை தினத்தன்று இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவிற்குள் வர அங்கே வேறு இசைக்குழு இருந்தது. என்ன நிலவரம் என்பதை தெரிந்து கொண்ட இளையராஜா சவுண்டு என்ஜினியர் எஸ்.பி.ராமனாதனிடம் சென்று யார் ரெக்கார்டிங்கை வைத்துக்கொள்வது என கேட்க பதில் சொல்ல முடியாமல் சமாளித்துப்பார்த்திருக்கிறார். ஆனால் உபேந்திரகுமாரோ எது பற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கிவிட்டார்.
சரி இனி இங்கே வேலைக்காகாது என தெரிந்து கொண்ட இளையராஜா வேறு ஸ்டுடியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது. இதற்குள் மதியம் 1 மணியை நெருங்கிவிட்டதால் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோவிற்கே சென்றனர். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் எதுவும் இல்லாததால் அங்கேயே பாடல் பதிவை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து பாடல் ரிகர்சல் ஆனது.
ஜானகி வந்ததும் பாடல் ஒத்திகை பார்க்கப்பட்டு சரியாக வராததால் இரண்டு மூன்று டேக்குகள் போய்கொண்டிருந்தது. இளையராஜாவிற்கோ நிறைய சங்கதிகள் கற்பனையில் வந்துகொண்டிருக்க அவ்வப்போது ஜானகியிடம் சென்று மாற்றிக்கொண்டே இருந்தார். ஒரு டேக் நன்றாக வந்துகொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்க வேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம் கண்டக்ட் செய்த கோவர்த்தன் சார் கை காட்ட மறந்துவிட்டார்.
இளையராஜாவிற்கோ கோபம். “என்னண்ணே டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது பேக்ரவுண்ட் மியுஸிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?” என்று கேட்க அவரோ கூலாக, “பாட்டில் மெய் மறந்துட்டேன்யா” என்றிருக்கிறார். (இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருந்தியிருக்கிறார் இளையராஜா)
சரி டேக் போகலாம் என்று சொல்லி அடுத்த டேக்… ஜானகி பாடும் போது மூன்றாவது சரணத்தில்,
“பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது”
என்ற வரிகளை அழகாகப் பாடியவர் அதற்கு அப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டுவிட்டார். ஆர்க்கெஸ்டிராவிலோ எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். பொதுவாக டேக் கட் ஆனாலே “பேன் போடு” என்று சத்தம் போடுபவர்கள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் இருக்கிறார்களே என்று இளையராஜா கோவர்த்தன் சாரை பார்க்க, அவரோ வாய்ஸ் ரூமை கைகாட்டியிருக்கிறார். ஜானகி கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்க இளையராஜா என்னவென்று கேட்க, “டியூனும் வார்த்தையும் கலந்து ‘பாவத்தில்’ ஏதோ ஒன்றை உணர்த்திவிட அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்” என்றாராம். ஜானகி இப்படி சொன்னதைக் கேட்ட எல்லோரும் உருகிப்போனார்களாம்.
வாசு சார் நல்லதொரு பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி
பின்னாட்களில் இதே பாடல் பாலா இயக்கத்தில் வெளி வந்த நான் கடவுள் படத்திலும் இடம் பெற்றது .மதுமிதா அல்லது சாதனா சர்கம் குரல் என்று நினைக்கிறன்
திருச்சி விநியோகதஸ்தர்கள் 1980 ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தின் ஒரு பக்கத்தின் சிறு பகுதி
https://www.mediafire.com/convkey/f0...xuj6h9726g.jpg
Thanks Rainbow.
http://mmimages.maalaimalar.com/Arti...b_S_secvpf.gif
காரைக்குடி நாராயணன் தயாரித்து இயக்கிய "அச்சாணி'' படம், தமிழக அரசின் பரிசைப் பெற்றது. எனினும் பரிசை வழங்குவதில், எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு அகன்றது.
நாராயணனின் புகழ் பெற்ற மேடை நாடகம் "அச்சாணி.'' சிவகுமார், மேஜர் சுந்தரராஜன் நடித்த இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதன் உரிமையை பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட் வாங்கி அதே பெயரில் மலையாளத்தில் சினிமாவாகத் தயாரித்தார். பிரேம் நசீர், சுஜாதா நடித்தனர்.
இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.
காரைக்குடி நாராயணன் சொந்தமாகப் படம் தயாரிக்க முடிவு செய்தபோது, "அச்சாணி'' கதையைத்தான் தேர்வு செய்தார். இந்தக் கதையை ஏற்கனவே மலையாளத்தில் தயாரிக்க வின்சென்ட்டிடம் விற்று விட்டதால், அதன் உரிமை அவரிடம்தான் இருந்தது. எனவே, காரைக்குடி நாராயணன் ரூ.25 ஆயிரம் கொடுத்து, தன் கதையின் உரிமையை தானே வாங்கி, தமிழில் எடுத்தார்!
இந்தப்படத்தில் முத்துராமன், லட்சுமி இணைந்து நடித்தனர். ஷோபா அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார்.
படம் 1978 பிப்ரவரி 4ந்தேதி ரிலீஸ் ஆயிற்று. படம் வெற்றி பெற்றது.
இந்தப் படத்திற்கு தமிழக அரசின் 1978ம் ஆண்டுக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர். முதல்அமைச்சராக இருந்தார்.
பரிசு அறிவிக்கப்பட்ட மறுநாளே, "இந்தப் பரிசை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று கேட்டு, நாராயணனுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
"அச்சாணி கதை, மலையாள படத்தின் கதை. அதை காப்பி அடித்து நாராயணன் தமிழில் தயாரித்திருக்கிறார். எனவே, பரிசு தரக்கூடாது'' என்று, அரைகுறை ஆசாமி ஒருவர் அரசுக்கு புகார் மனு அனுப்பியதே இதற்குக் காரணம்.
இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த நாராயணன், அரசு தலைமைச் செயலாளரைச் சந்தித்து, நடந்ததை விளக்கினார். "அச்சாணி கதை, நீங்கள் எழுதியதுதான் என்பதை, ஆதாரத்துடன் 24 மணி நேரத்தில் நிரூபியுங்கள். அப்படி நிரூபித்தால், நீங்கள் பரிசு பெறலாம்'' என்று அரசு தலைமைச் செயலாளர் கூறினார்.
"24 மணி நேர கெடு''வை, ஒரு சவாலாகவும், தன்மானப் பிரச்சினையாகவும் எடுத்துக்கொண்டார், நாராயணன். "எனக்கு லட்சம் பெரிதல்ல; லட்சியம்தான் பெரிது. எப்படியும் தங்களிடம் விருது பெறுவேன். இது நிச்சயம்'' என்று எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.
"அச்சாணி'' நாடகமாக நடந்தபோது, அதை பார்த்து சிறந்த நாடகமாகத் தேர்வு செய்த நீதிபதி வழங்கிய சான்றிதழ், நல்லவேளையாக நாராயணனிடம் இருந்தது. அதை அரசு தலைமைச் செயலாளரிடம் கொடுத்தார்.
அத்துடன் அப்போது அமைச்சர்களாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து ஆகியோரும், "அச்சாணி, காரைக்குடி நாராயணன் எழுதிய நாடகம்தான்'' என்பதை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தனர்.
மறுநாள் அரசிடம் இருந்து, நாராயணனுக்கு அழைப்பு வந்தது. முதல்அமைச்சரிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொள்ளும்படி அதில் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி மறுநாள், எம்.ஜி.ஆரிடம் இருந்து விருதை பெற்றார்.
எம்.ஜி.ஆர். புன்சிரிப்புடன் விருதை நாராயணனிடம் கொடுத்து, அவரை அன்புடன் தட்டிக் கொடுத்தார்.
விருது வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை, மகிழ்ச்சிகரமாக முடிந்தது.
வாசு சார்
அச்சாணி திரைபடத்தில் ஷோபா எந்த ரோல் ? கொஞ்சம் நினைவு படுத்துங்கள்
Welcome Krishna Sir.
வாசு சார்
கொஞ்சம் வேலை பளுவினால் திரியின் உள்ளே நுழைய முடியவில்லை .
நேரம் வாய்க்கும் போது நிச்சயம் கலந்து கொள்கிறேன்
வாழ்த்திற்கு நன்றி
Gk