சினிமா எக்ஸ்ப்ரஸ் -16/02/2015
-------------------------------------
http://i59.tinypic.com/aewtuo.jpg
http://i59.tinypic.com/zsl4q0.jpg
http://i59.tinypic.com/25hhnr5.jpg
http://i61.tinypic.com/2ypisrr.jpg
Printable View
சினிமா எக்ஸ்ப்ரஸ் -16/02/2015
-------------------------------------
http://i59.tinypic.com/aewtuo.jpg
http://i59.tinypic.com/zsl4q0.jpg
http://i59.tinypic.com/25hhnr5.jpg
http://i61.tinypic.com/2ypisrr.jpg
''முகராசி ''
1957ல் நடந்த தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் துவங்கிய மக்கள் திலகத்தின் தேர்தல் பிரச்சாரம் - நேற்று நடந்த ஸ்ரீரங்கம் இடைதேர்தல் வரை 58 ஆண்டுகளாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் பெயர் , அவர் சார்ந்திருந்த இயக்கம் ,பின்னாளில் அவருடைய இயக்கம் சந்தித்த தேர்தல்களில் முழுமையாக ஈடு படுத்தப்பட்டு தொடர் வெற்றிகளை சந்தித்து இருப்பது மக்கள் திலகத்தின் ஆளுமைக்கும் , அவருடைய தொண்டர்களுக்கும் , ரசிகர்களுக்கும் கிடைத்த
வெற்றி ..
மக்கள் திலகத்தின் ''முகராசி '' திரைப்படம் இன்று 49 ஆண்டுகள் நிறைவு .
1966ல் மிக குறுகிய நாட்களில் படமாக்கப்பட்டு 18.2.1966 அன்று திரைக்கு வந்து சென்னை கெயிட்டி அரங்கில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட காவியம் .
இந்த மன்றத்தில் ஓடிவரும்
by கலாப்ரியா
1966 பிப்ரவரி தேதி 18 (என்று நினைவு) நாங்கள் எங்கள் தெருவில் எம்.ஜி.ஆர் மன்றம் ஒன்றை, ‘மக்கள்திலகம் மன்றம்’ என்ற பெயரில் ஆரம்பித்தோம். அது 11 ஆவது வட்ட தி.மு.கவின் உட்கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. நகரச் செயலாளர், மார்க்கெட்டில் வாழை இலை, காய் வியாபாரம் செய்பவரான நம்பி அண்ணாச்சி தலைமையில் பூர்வாங்கக் கூட்டம் நடந்தது. அவர் தலைவர், செயலாளர், பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் எல்லோரையும் தேர்வு செய்தார்.
ஒரு, ஒரு குயர் நீள சைஸ் நோட்டை வாங்கி வரச் சொல்லி, அன்றைய நடவடிக்கைகளைப் பதிவு செய்யச் சொல்லி எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினார். அதற்குப் பெயர் ‘மினிட் புஸ்தகம்’ என்று சொன்னார்கள். அதுவரை அப்படி ஒரு ‘புஸ்தகத்தை’ கேள்விப்பட்டதில்லை. அவரும் கையெழுத்திட்டார். அதன் நகலை மாவட்டச் செயலாளரிடம் கொடுப்பதாக எடுத்துச் சென்றார். அப்போது மாவட்டச் செயலாளர், ரத்னவேல் பாண்டியன் அண்ணாச்சி, அவர்கள். 1967 தேர்தலில், சேரன் மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெறவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் தி.மு.க தோற்ற தொகுதி அது ஒன்றுதான். வலது கம்யூனிஸ்ட் தி.மு.க. கூட்டணியில் இல்லை. அதன் வேட்பாளர் வாக்குகளைப் பிரித்ததனால், காங்கிரஸ் வேட்பாளர் கோமதி சங்கர தீக்ஷிதர் ஜெயித்தார். அண்ணாச்சி முன்பே ஒருமுறை ஒரு இடைத் தேர்தலிலோ, 1962 தேர்தலிலோ ஏற்கெனவே தோற்றவர். அதனால் அவர் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர், அப்புறம் நீதிபதியாகப் போய்விட்டார்.
நாங்கள் மன்றம் ஆரம்பிக்கப் போவதற்கு முன்தினம், பாளையங்கோட்டையில் இருந்து ஒரு அம்பி வந்தார். தன்னை ‘நடிப்புச் செல்வன்’ ஜெமினி கணேசன் ரசிகர் மன்றச் செயலாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு, நாளை வெளியாகும் ‘முகராசி’ ( எம். ஜி. ஆர், ஜெமினி இணைந்து நடித்த ஒரே படம்) படத்திற்கு, இணைந்து தோரணங்கள் கட்டவோ நோட்டீஸ் அடிக்கவோ, உதவ முடியுமா என்று கேட்டார்.
எனக்குத் தெரிந்து ஜெமினி கணேசனுக்கு மன்றமிருந்ததே அது ஒன்றுதான், என்று நினைவு. ‘‘நாங்கள் ரசிகர் மன்றமில்லை, தி.மு.க உட்கிளை. நகரச் செயலாளர் அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது” என்று சொல்லி அனுப்பி வீட்டார், எங்கள் ‘செயலாளர். எங்களில் சிலருக்கு அது வருத்தமே. படம் வெளியாகும் அன்றுதான் ‘முகராசி’ ரிலீஸ், திறப்புவிழா வேலைகள் நிறைய இருப்பதால் படத்திற்கும் அன்று போகக்கூடாது, என்று சொல்லி விட்டார். இரண்டுமே என் போன்ற சிலருக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது இதனாலேயே சிலர் பிரிந்து பின்னாளில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்தோம். அதற்கு நான் செயலாளர். எம்.ஜி.ஆர் பெயரில் ஏற்ªகனவே இருந்த, கீழப் புதுத் தெரு மன்றமும், ஜங்ஷன் மீனாட்சிபுரம் மன்றமும் உட்கிளைகளாகவே செயல்பட்டன.
. எம்.ஜி.ஆர் மன்றங்களின் பெயர்ப்பலகையே தி.மு.க கொடியின் மேல்தான் எழுதப்பட்டிருக்கும். அண்ணா, கலைஞர், நாவலர் படங்கள் தவறாமல் இருக்கும். பெரியார் படம் அப்போதெல்லாம் இருக்காது. பெரியார் அப்போது தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். திராவிடநாடு, நம்நாடு, முரசொலி, காஞ்சி, சமநீதி, திருவிளக்கு, (க. ராசாராம்), முத்தாரம், புகழேந்தி நடத்திய ‘கதிர்’ (இதில் நிறைய மொழிபெயர்ப்புக் கதைகள் வரும். வைக்கம் முகம்மது பஷீரின் ‘சப்திக்குன்ன கலப்ப ஏரின் ஓசை’ மொழி பெயர்ப்பு, ஆ. மாதவனென்று நினைவு, இதில்தான் படித்தேன்) என்று கட்சிப் பத்திரிக்ககளும் தந்தி, மாலை முரசு ஆகியனவும் கிடக்கும். ‘ஹோம்லேண்ட்’, என்று அண்ணா நடத்திய ஆங்கிலப் பத்திரிக்கை, நாங்கள் மட்டும் வாங்கிப் போட்டிருந்தோம்.
சுவாமி சன்னதித் தெருவில், தெப்பக்குளம் தாண்டி, டி. எஸ். பாலையா ரசிகர் மன்றம் ஒன்று இருந்தது. எங்கள் தெருவிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகம் ஒன்று இருந்ததற்கான போர்டு ஒன்று தொங்கும். தெரு முனையில் இருந்த தி.மு.க கொடிக் கம்பத்திற்கு கலைவாணர் என்.எஸ்.கே நினைவுக்கம்பம் என்று பெயர். இதை நாவலர் நெடுஞ்செழியன் ஏற்றி வைத்தார். ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பணத்தோட்டம்’, ‘பாசம்’, ‘பெரிய இடத்துப் பெண்’ படங்களை எம்.ஏ.திருமுகமும், டி.ஆர். ராமண்ணாவும் தந்து எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை உண்டாக்கினார்கள். இதில் பணத்தோட்டம் இயக்கிய கே. சங்கர், வேலுமணி முகாமில் இருந்தவர்.
அவர் இயக்கிய முதல் எம்.ஜி.ஆர் படம் ‘பணத்தோட்டம்’. இதற்கு முதலில் வைத்த பெயர் ‘பூ விலங்கு’ இது பி.எஸ்.ராமையாவின் ‘பூவிலங்கு.’ நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதன் கதைக் களனே சுதந்திரப் போராட்ட காலமாக இருந்தது. முதலில் வந்த விளம்பரங்களில் எம்.ஜி.ஆர். ப்ரிட்டிஷ் காலத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேக் அப்பில்தான் இருப்பார். அப்புறம் மூலக்கதை மட்டும் பி.எஸ்.ராமையா ஆகிவிட்டது. ‘பாசுமணி’ திரைக்கதை வசனத்தில் கதையே மாறிவிட்டது. இதன் படப்பிடிப்பில் எம். ஜி. ஆரின் நடிப்பில் திருப்தி ஏற்படாமல் கே. சங்கர் நிறைய ரீ டேக் வாங்கினாராம். எம். ஜி. ஆர் சிரித்துக்கொண்டே அவரைத் தனியே அழைத்துப் போய், “சார், நீங்க பெரிய பெரிய நடிப்பெல்லாம் பார்த்துட்டு என்னிடமும் அதையே எதிர்பார்க்காதீர்கள், என்னால் இவ்வளவுதான் முடியும். . . மிகையாகச் செய்ய முடியாது....” என்றாராம். எம்.ஜி.ஆர் சங்கர் உறவு இத்தோடு சரி என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். அவருடைய அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் வரிசையில் சங்கரும் ஒருவராகி விட்டார்.
courtesy - kalapriya - net
17.2.1980
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியினை மத்திய அரசு கலைத்த தினம் இன்று .
மக்கள் திலகத்தின் அரசில் பங்கு பெற்றோர் சிலர் பதவி இழந்தவுடன் எதிர் அணிக்கு தாவினார்கள் . மக்கள் திலகம் சற்றும் நிலை குலையாமல் மக்கள் முன் நீதி கேட்டு மே மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அமோக வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சியினை பிடித்தார் .
CHENNAI - GAIETY THEATER- FEB-1966
http://i61.tinypic.com/b6a3o6.jpg
கெயிட்டி அரங்கத்தின் பக்கத்தில் இருக்கும்காசினோ அரங்கில் ( மக்கள் திலகத்தின் அன்பே வா) முகப்பு தோற்றம் காணலாம் .மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரும் திமுக கொடி ஏந்தி கொண்டிருக்கும் படத்தையும் , எம்ஜிஆரின் கடவுட் பின்புற தோற்றத்தையும் இந்த படத்தில் காணலாம்
http://i57.tinypic.com/2hicu3r.jpg