True!Last week I bought a DVD of collection of 50 MGR songs .each and every song is like GOLD :DQuote:
Originally Posted by saradhaa_sn
Printable View
True!Last week I bought a DVD of collection of 50 MGR songs .each and every song is like GOLD :DQuote:
Originally Posted by saradhaa_sn
Exactly ! Very true ! I think in those times LYRICS was given more importance. Pity that nowadays it has taken a back seat. I love MGR songs pretty much for the lyrics' content and the message within !Quote:
Originally Posted by saradhaa_sn
TFMLOVER :D :clap: Expecting more
TFML Thalaivaaaaaaaaa
Super links ! :thumbsup:
Thalaivar's style of playing shuttle is unique !
Style king MGR !
Post more such wonderful links pls
thanks dear saradha selvakumar and nakeeran!
joe pls try make wmv out of your dvd and share with us if you can ?
saradha is right..techno instruments whatever..nothing can bring the same impact what the old gold gave !
for that matter all we can do is , carry on and preserve the classic and thats my idea here .
more to come selvakumar nakeeran ..
innum neraya irruku....
engE pOi vidum kaalam ? :wink:
Here , another 'makkal' phenomenon ' that led the way to a favourable outcome in Tamil film industry
presentation that you can read watch once and learn by heart then sing many many times for you to carry further
inspiring poet Makkal kavingnar pattukOttai kalyaana sunthdharam and Makkal thillagam come together in Arasilangkumari ' kadhai vasanam Kalaingar karunaanithi !!
artistic creation power enough to change the world but not alone hence this significant contribution motivates the listener and one best example how songs movies art can be used to get across worthy messages in a desired
way to reach people from all kind all age who wouldn't normally listen or read tediously protracted articles news n all
finding myself drawn to the entire concept idea behind the song , no wonder when i hear
' vEpa mara uchchiyil ninnu pEi onnu aaduthunnu vilayaadap pOgum pOthu solli vaipaanga
unn veerathai kozhunthilEyE killi vaipaanga..vezhaiyatra veenargalin moolaiyatra vaarthaigalai vEdikkaiyaaga kooda nambi vidaathE ! nee veetukkullE adainthu kidanthu vembi vidaathE nee vembi vidaathE!
how impacting that is ! on this spooky Halloween day
Tamil cinemaavil sarithiram padaitha paadal
paattu kOttaiyil TMS kodi katti parrakum vaaipugal pala thEdi thantha paadal
Tamil cinema paarkadharvargal , tamil paattu ketgathavargalai ellaam tamil cinemaavukku thisai thirupiya oru paadal oru padam
you can watch the song here ..
( song and lyrics available online too , i can give upon request .great pleasure )
http://s97.photobucket.com/albums/l2...gAnch=imgAnch1
what a treat !
then again 'You can't teach an old dog new tricks...but you can teach kids
'chinap payalE chinnapayalE sEthi kEladaa
deserves wide :clap: :clap: :clap: now too
http://s97.photobucket.com/albums/l2...asilangkumari/
Jupiterin 'Arasilankumari' Puratchi Nadigar MGR , Padmini , Rajaslotchana , MN Nambiyaar , K A Thangagavelu
Muthuraman ( arimugam i think )
A S A Saami direction first half enjiya kaatchigalai niraivu seithu thanthathu
A kaasilingam
happy Halloween folks .
Thats an o/s song TFML ! :D
with so many mixture of thoughts -
Aalum valaranum arivum valaranum adhu dhaanda valarchi ( for a student )
Unnai aasayodu eendravallukku adhuve neetharum magizchi ( what u owe to parents )
Un narambodu dhaan pinni valaranum thanmana unarchi ( motivational words )
Manidhanaga vaanzdhida venum manadhil vayyadaa ( humanitarian angle )
Valarndhu varum ulagathuke nee valadhu kayyadaa ( motivation again )
Thaniudamai kodumaigal theera thondu seyyadaa ( Socialism )
Thaana ellaam maarum enbadhu pazaya poyyadaa ( dont wait for the world to change )
Veppa mara uchiyil ninnu ..... velayatra veenargalin ...moolayatra varthaigalai vediyakayaga kooda nambividaadhey ( rationale thinking to shun religious disbeliefs )
ALL IN ONE SONG !
Amazing lyrics !
If Pattukotai had survived , we would have seen more and more o/s songs through PK-MGR combination :cry:
Lovely link once again TFML
Hats off :D
எம்.ஜி.ஆர் பாடல்களும்...ஒரு பாமரனும்.
- யாழ் சுதாகர்
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை1969 இல்...'
ராஜா' தியேட்டர் இருட்டில்கண்டு பிடித்தேன்!'
ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல்எம்.ஜி.ஆர் படம்!!
- - -
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
- - -
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.
ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.
ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
- - -
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.
'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.
'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.
உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.
'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
- - -
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
- - -
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி]
இடையே..ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
- - -
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்க..
விழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
- - -
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின. தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள்ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!
'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.
- - -
'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.
இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.
போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.
- - -
உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.
ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.
- - -
இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!-
- யாழ் சுதாகர்
More here..
http://mgr-songs.blogspot.com/
A scintillating song for the week end :D
When Kavignar Vali could not get the right kind of lyrics as desired by Puratchi Thalaivar , a call was made to Kavignar Kannadasan requesting him to pen the lyrics & he also obliged with 2 numbers :
1. Odum megangale oru sol keliro
2. Adho andha paravai
The greatness of MGR is that during this phase, the 2 legends were at loggerheads politically but MGR was a hardcore professional no !
Later Kavignar explained that the lyrics were also framed in such a way that Makkal thilagam could stretch his both hands to the max. possible to show his usual mannerisms
Well well well, this song has no parallel in the annals of tfm !
Starts with a cheerful ha ha from Nambiar & mind blowing trumphets
The interludes were all trumphets trumphets & lalala
This movie also has a sad story. The greatest musical duo of TFM got split after this movie .
Now on the lyrics :
Katru nammai adimai endru vilagavilaye
kadal neerum adimai endru suduvadhillaye
vanam nammi vittu vittu vilagavillaye
Thondrumbodhu thayillamal thondravillaye
sollilamal moziyillamal pesavilaye
http://web.music.coolgoose.com/music/song.php?id=62215
TFML , pl post the video links !
Happy week end :D
"ஆயிரத்தில் ஒருவன்"
தமிழ்ப்படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு ஒரு தனிச்சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப்படங்களில் புராணப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப்படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக்கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இதுவரையாகட்டும், கடற்கொள்ளையர்களை கதைக்கருவாகக்கொண்டு வெளிவந்த ஒரே படம் 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டுமே. கதை, வசன்ம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக்களங்கள் என, ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.
இப்படத்தின் கதாநாயனான 'மக்கள் திலகம்' எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கைதேர்ந்த தையற்கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவதுபோல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச்சணடைக்காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச்சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும் படம்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை 'பத்மினி பிக்சர்ஸ்' சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கியிருந்தார். அதுவரை நடிகர் திலகத்தை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வந்த இவர், முதல் முறையாக மக்கள் திலகத்தை வைத்து தயாரித்த படம் இது. மக்கள் திலகத்தை வைத்து பின்னாளில் நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்பிள்ளை போன்ற படங்களை தயாரிக்க பிளளையார் சுழி போட்ட படம் இது. பிளையார் சுழியே மாபெரும் வெற்றிச் சுழியாக அமைந்தது. (ஆனால் 'ஆயிரத்தில் ஒருவன்' பெற்ற மாபெரும் வெற்றியை அவரது பிந்தைய படங்கள் பெறவில்லை என்பதும் உண்மை).அவர் ஏன் நடிகர் திலகத்தை விட்டுப்போனார் என்பது (கிட்டத்தட்ட) ஊரறிந்த உண்மை.
பந்துலுவுக்கு எப்போதுமே ஒரு பழக்கம், ஒரு பிரமாண்டமான படத்தை அடுத்து ஒரு சாதாரண படத்தை தயாரிப்பார். இப்படித்தான்
'கட்டபொம்மனை' அடுத்து ஒரு 'சபாஷ் மீனா'
'கப்பலோட்டிய தமிழனை' அடுத்து ஒரு 'பலே பாண்டியா'
'கர்ணனை' அடுத்து ஒரு 'முரடன் முத்து'
'ஆயிரத்தில் ஒருவனை' அடுத்து ஒரு 'நாடோடி'
இது பந்துலுவின் பாணி.
1964ம் ஆண்டு பந்துலு தயாரித்த 'கர்ணனும்' சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த 'வேட்டைக்காரனும்' நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை வந்தது. அதில் வேட்டைக்காரன் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் வசூலில் முந்தியது. மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கர்ணனும் வெற்றிப்படமென்றாலும் கூட, அது ஒரு சாதாரண வெற்றிதான். அதன் பிரம்மாணடத்துக்கும், செலவுக்கும், நட்சத்திரக்கூட்டத்துக்கும், பாடல் காட்சிகளுக்கும் ஒப்பிடும்போது கர்ணன் கிட்டத்தட்ட ஒரு தோல்விப்படம் என்ற ரேஞ்சுக்கே அமைந்தது. தன்னுடைய படத்தை தோல்வியடையச்செய்த 'வேட்டைக்காரன்' படத்தை பந்துலுவும் பார்த்தார். அவருக்கு ஒன்று புரிந்தது. தன் படத்தில் இல்லாதது, தேவர் படத்தில் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது எம்.ஜி.ஆர்.
ஒரு சாதாரண படத்திலேயே எம்ஜியார் என்ற ஒரு ஃபேக்டர் இருந்து தன்னுடைய பிரம்மாண்ட படத்தை அடித்து விட்டது என்று சொன்னால், அதே ஃபேக்டரை வைத்து தான் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரித்தால் எப்படியிருக்கும் என்று அப்போதே கணக்குப் போட்டுக்கொண்டார். விளைவு...?. 'அந்தப்பக்கம்' செல்ல முடிவெடுத்தார். (லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் போட்டு படமெடுப்பவர்கள், பெரிய அளவில் அடி வாங்கும்போது, இதுபோன்றதொரு முடிவு எடுப்பதை யாரும் குற்றம், குறை சொல்ல முடியாது). ஆனால் இன்றைக்கும் 'கர்ணன்' படத்தைப் பார்க்கும் ஒரு தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன் கூட, 'இவ்வளவு அருமையான படமா தோல்வி அடைந்தது?' என்ற தன் ஆதங்கத்தை வெளியிடுவதைப் பார்க்க முடிகிறது.
இதற்கிடையில், ஒரு பெரிய படத்துக்குப்பின் ஒரு சிறிய படம் என்ற தன்னுடைய ஃபார்முலாவின்படி, பந்துலு நடிகர்திலகத்தை வைத்து 'முரடன் முத்து' படத்தை தயாரிக்க முடிவெடுத்தார். கர்ணன் படத்தின் தோல்வியில் தாங்களும் பங்கெடுத்துக்கொள்ள முடிவெடுத்து, கர்ணன் படத்தில் நடித்திருந்த நடிகர் திலகம், அசோகன், தேவிகா ஆகியோர் முரடன் முத்துவில் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தனர். மிகவும் சிக்கனமாக படத்தையெடுத்த பந்துலு இசைக்கு டி.ஜி.லிங்க*ப்பா போன்றவர்களைப் போட்டார். படம் வெளியாகும் நேரத்தில் பந்துலு இன்னொரு பிரச்சினையை கிளப்பினார். (முரடன் முத்து பட ஷூட்டிங் நடக்கும்போதே, 'பந்துலு எம்.ஜி.ஆர். பக்கம் போகப்போகிறார்' என்ற செய்தி கசியத் தொடங்கியது. இப்போது போல ரஜினியை வைத்து ப*டம் தயாரிக்கும் ஏவிஎம் போன்ற நிறுவனம் அடுத்து கமலை வைத்து படம் தயாரிப்பது போலெல்லாம் அப்போது கிடையாது. இவர் எம்ஜியார் தயாரிப்பாளர், இவர் சிவாஜி தயாரிப்பாளர் என்று பிரித்து வைத்திருந்தார்கள்). அதுவரை 98 படங்களில் நடித்திருந்த சிவாஜிக்கு 100 வது படம் எது என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்போது 'முரடன் முத்து', 'நவராத்திரி'ஆகிய இரண்டு படங்களும் முடிவடைந்து வெளியாக தயாராக இருந்தன. 'கர்ணன்' படத்தில் நான் அடிபட்டதால் என்னுடைய 'முரடன் முத்து' படத்தைத் தான் நூறாவது படமாக அறிவிக்க வேண்டும் என்று பந்துலு அடம் பிடித்தார். ஆனால் 'நவராத்திரி' படம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சிவாஜியின் நடிப்புத்திறமைக்கு உரைகல்லாக அமைந்த படம் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. ஒன்பது வித்தியாசமான ரோல்களில் அவர் கலக்கியிருக்கும் நவராத்திரி, ஒரு மாபெரும் கலைஞனின் நூறாவது படம் என்பதற்கான முழுத்தகுதியுடனும் அமைந்திருக்கும் நேரத்தில், ஒரு சாதாரண பட*மாக அமைந்த 'முரடன் முத்து' படத்தை சிவாஜியின் நூறாவது படமாக அறிவிக்க வேண்டும் என்ற பந்துலுவின் எதிர்பார்ப்பு ரொம்ப அதிகப் படியானது என திரையுலகில் அனைவருமே நினைத்தார்கள். முடிவு...?. 'நவராத்திரி' நடிகர் திலகத்தின் நூறாவது படமாக வெளிவந்தது. (முரடன் முத்து 99 வது படம்).
வெகுண்டார் பந்துலு. போன முறை தேவர் தனக்கு வில்லனானார், இம்முறை ஏ.பி.நாகராஜன் வில்லனாகிவிட்டார் என்று கொதித்துப்போன ப்ந்துலு, உடனே 'தினத்தந்தி'யில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டார்.
ஆம். 'முரடன் முத்து' திரையிடப்பட்ட* அன்றைக்கே தினத்தந்தி யில் 'ஆயிரத்தில் ஒருவன்' பட முழுப்பக்க விளம்பரம் வெளிவந்தது.
"ஆயிரத்தில் ஒருவன்" (PART - II)
பந்துலு எம்.ஜி.ஆரிடம் போனது பற்றி இவ்வளவு விளக்கம் தேவையா என அனைவரும் நினைக்கலாம். விவரங்கள் சுவாரஸ்யமானவை என்பதால் சற்று நீட்டி விட்டேன். இனி ஆயிரத்தில் ஒருவன் பற்றி.....
மணிமாறன் கதாபாத்திரம் எம்ஜியாருக்காகவே உருவாக்கப்பட்டது போன்ற ஒரு அருமையான படைப்பு. அவரும் அதை மிகவும் அருமையாக செய்திருந்தார். கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் BANDHULU மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதுவரை (பானுமதிக்குப்பின்) சரோஜாதேவிதான் எல்லாப்படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
'பருவம் எனது பாடல்' என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும், கோயிலின் நடு மணடபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம்போல "வெற்றி... வெற்றி..." என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித்தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும்போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இள்வரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக்கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக்காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக 'கடற்கொள்ளையனாக' சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப்போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்... இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டுமப்டியாக இருக்கும்.
கத்திச்சண்டைக்காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (MGR & ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச்சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப்பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள்சண்டை (நம்பியார்: "இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் த்லைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்"), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர்.(வழக்கம்போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப்போகும் மூன்று கத்திச்சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித்தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அதுவரை தமிழ்த்திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ்சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகி விட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா... இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1) பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
"பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்"
பல்லவியைபாடிமுடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ‘HUMMING’ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ்ஸ்தாயி வரையில் கொண்டுவர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
"இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்"
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும்.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).