-
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
kaviyarasar
-
நன்றி திரு சைலேஷ் sir
http://youtu.be/s-o2FSt_Dlc
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
தமிழக தீபாவளி -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவு மிகவும் அழகாக இருந்தது .பாராட்டுக்கள் .உங்களின் புதுமையான சிந்தனைகள் - கட்டுரை வடிவங்கள் பிரமிக்க வைக்கிறது .உங்களது பதிவுகள் சிலரின் கண்களை திறந்திருக்கின்றது .வாழ்த்துக்கள் கலைவேந்தன் சார் .
-
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி சார்
அருமையான வீடியோ காட்சிகள் - பாடல்கள் . மக்கள் திலகத்தின் அனல் பறக்கும் வசனங்கள் - விடுதலை வேட்கை பாடல் . மக்கள் திலகத்தின் நடிப்பு மிகவும் அருமை .
-
-
-
-
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972
41 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .
திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .
கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .
கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி
ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்
மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை
கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி
இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .
மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்
என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .
ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று
லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .
திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு
உலக புகழ் நாயகனாக வலம் வந்த தினம் இன்று .
-
இந்த புன்னகை என்ன விலை
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
-
லோகநாதன் சார் உங்கள் பதிவுகள் சூப்பர் சார்