Originally Posted by RAGHAVENDRA
சரவணா திரையரங்கு என்றுமே எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களின் கோட்டை என அழைக்கப்படும் அரங்காகும். நமது ரசிகர்கள் அங்கே அதிகம் சென்றதில்லை. நிறைய பேருக்கு அந்த அரங்கம் எங்கே உள்ளது எனவும் தெரியாது. நமக்கு தெரிந்த நமது நடிகர் திலகத்தின் முதல் வெளியீ்ட்டுத் திரைப்படம் என்றால் அது நீதி மட்டும் தான். என்னைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் காலைக் காட்சியில் அதாவது 10.30 மணி, நடிகர் திலகத்தின் அபூர்வமான படங்கள் திரையிடப் படும். அப்போது பார்த்த பாக்கியவதி படம் தான் நான் அந்த திரையரங்கிற்கு கடைசியாக சென்றது. அதன் பின்னர் நேற்று தான் சென்றேன். அந்த நாளைய நினைவுகள் வந்து போயின. நல்ல வீடு, பாக்கியவதி, போன்ற அபூர்வமான படங்கள் அப்படி காலைக் காட்சியில் பார்த்தது தான்.
ராகவேந்திரன்