அன்புள்ள வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் மற்றும் ராகவேந்தர் சார்....
'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நீங்கள் குறிப்பிடும் காட்சி பற்றி, சாரதா அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இடம் இதோ.....
""// ......படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும் நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ ‘கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.
எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமுவுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்' இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக்காட்டி அதையே, ஸ்ருதி மாறும்போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.
இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க்கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக்கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம். .........//""
'ராமன் எத்தனை ராமனடி'பற்றிய சாரதாவின் முழு ஆய்வுக்கட்டுரையும் படிக்க, இங்கே சொடுக்கவும்....
http://www.mayyam.com/talk/showthrea...890#post427890