http://www.buycinemovies.com/images/...vcdsongs-3.jpg
http://upload.wikimedia.org/wikipedi...iya_Sivaji.jpg
Printable View
http://files.prokerala.com/movies/pi...sree-15452.jpg
https://fbexternal-a.akamaihd.net/sa..._DVD_Cover.jpg
http://www.findinternettv.com/images...andra_1943.jpg
http://upload.wikimedia.org/wikipedi...ama_poster.jpg
http://udhayamgold.files.wordpress.c.../anbalippu.jpg
http://ts4.mm.bing.net/th?id=H.5057084501657755&pid=1.7
http://1.bp.blogspot.com/_fzoE6P0eI4...malperumai.jpg
http://fundoomovies.com/ups/philosop...-of-sivaji.jpg
http://playtamil.files.wordpress.com...ages.jpg?w=173
http://4.bp.blogspot.com/__vnK9wWtIw...tubevidcom.jpg
http://3.bp.blogspot.com/-EK7Fr5_0dC...fee5c123-1.jpg
http://fundoomovies.com/ups/imaigal.jpg
http://2.bp.blogspot.com/-7L2tJzj1pA.../rajarishi.jpg
http://123tamilforum.com/imgcache2/2...ragatham-1.jpg
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்ட முரளி சார் அவர்களுக்குப் பாராட்டுக்கள். பெருந்தலைவரின் சாதனைகளையும் அவரது எளிமையையும் காலாகாலத்துக்கும் பேசிப்பெருமைப்படலாம். அத்தகைய சாதனை வீரர் அவர்.
சுதந்திரப்போராட்ட காலத்தில் இருபது நாட்கள் அல்ல, இருபது வாரங்கள் அல்ல, இருபது மாதங்கள் அல்ல, இருபது ஆண்டுகள் வெள்ளையனின் சிறையில் அடைபட்டுக் கிடந்த தலைவன் தன் வாழ்நாளில் ஒருமுறைகூட அதைச் சொல்லிக்காட்டியதில்லை.
(இரண்டுமாதங்கள் பாளையங்கோட்டையில் சிறையில் இருந்ததை இரண்டு தலைமுறைகளாக சொல்லிக்கொண்டிருப்பவர்களையும், திரைப்படங்களில் மட்டுமே சிறையைப் பார்த்தவர்களையும், ஊழலுக்காக கைதாகி சிறைசென்றவர்களையும் முதலமைச்சர்களாக பெற்றிருப்பது நாம் செய்த பாவமன்றி வேறென்ன) .
ஒரு பிச்சைக்காரனின் பையில் கூட 500 ரூபாய் இருக்கும் இந்நாட்டில், இறக்கும்போது வீட்டு அலமாரியில் 126 ரூபாயும் வங்கிக்கணக்கில் 460 ரூபாயும் வைத்திருந்த தலைவனை உலகெங்கும் தேடினாலும் பார்க்க முடியுமா?.
அவரைத்தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய இந்த தமிழ்நாடு என்ன சுபிட்சத்தைக் கண்டுவிட்டது?...
பெருந்தலைவரின் சாதனைகளில் ஒன்று தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'சாத்தனூர் அணைக்கட்டு'. அந்த அணை கட்டப்பட்டதிலிருந்து சமீப காலம் வரை எண்ணற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு அங்கு நடந்துள்ளது. ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் தயாரிப்பாளர் ஒரு தொகையை பொதுப்பணித்துறைக்குக் கட்ட வேண்டும். அப்படி திரைப்படங்களின் படப்பிடிப்புக்களின் மூலம் கிடைத்த வருமானம் அணைகட்டிய செலவுத்தொகையைத் தாண்டிவிட்டதாம்.
பெருந்தலைவரின் சாதனைகள் இப்படி எத்தனையெத்தனை.
ஒன்பதே ஆண்டுகளில் 8,600 பள்ளிக்கூடங்களை உருவாக்கிய தலைவனை (சராசரியாக ஆண்டொன்றுக்கு 933 பள்ளிகள்) உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாது...
ஒருமுறை ஒரு அணைக்கட்டு கட்டி முடிந்ததும் அதிகாரிகள் ஆர்வத்தில் அந்த அணைக்கு 'காமராஜ் சாகர்' என்று பெயர்வைத்துவிட்டனர். அணையைத்திறக்க வந்த பெருந்தலைவர் காமராஜ் அதைப்பார்த்து அதிர்ந்து விட்டார்.
"ஏண்ணே, எதுக்கு என்பேரை வச்சிருக்கே. என் சொந்தக்காசிலையா கட்டினேன்?. மக்களுடைய வரிப்பணத்துல கட்டுனதுண்ணே. மொதல்ல என் பேரை எடு. அப்புறம் வந்து தொறந்து வக்கிறேன்" என்று கோபத்துடன் போய்விட்டார். அவர் பெயரை நீக்கிய பிறகே வந்து அணையைத்திறந்து வைத்தார்.
(சிவாஜி, எம்.ஜி.ஆர். என்ற இரண்டு திரை ஜம்பவான்கள் இருந்தும் அவர்கள் பெயரை வைக்காமல் தன்பெயரில் 'ஜெயலலிதா திரைப்பட நகர்' என்று அமைத்து அதை வெட்கமில்லாமல் தானே திறந்து வைத்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நினைக்கிறீர்கள்?)
மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ். "ஏண்ணே, இப்போ எல்லாபசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும், தலைவர் யோசித்தார்.
"சரி இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுடறேன். வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.
இலவச சீருடை அணிந்து பள்ளிக்குச்சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம். நேற்றுவரை தங்க ஜரிகை சட்டைபோட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப்போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப் படுகிறது.
துடைத்தெரிந்தவர் எங்கள் பெருந்தலைவர்...
எத்தனை முறை திரையிடப்பட்டால் என்ன? எத்தனை முறை பார்த்தால் என்ன? அழகாபுரி சமஸ்தானத்தின் இளவரசன் அழகன் ஆனந்தை காண கசக்குமா என்ன? அதுவும் என்றென்றும் நடிகர் திலகத்தை நேசிக்கும் மதுரை மாவட்ட மக்களுக்கு?
இந்த வாரம் திருமங்கலம் - ஆனந்த், மானாமதுரை சீனிவாசா மற்றும் ராஜபாளையம் ஜெயா ஆனந்த் ஆகிய ஊர்களில் காலத்தை வென்ற காவியம் வசந்த மாளிகை வெற்றிகரமாக ஓடியது.
மாவட்டத்தின் மக்கள் மட்டும் பார்த்தால் போதுமா? அப்போது நாங்கள் மீண்டும் காண வேண்டாமா என்ற கேள்வியை மதுரை மாநகர் மக்கள் எழுப்ப, சரி அதற்கென்ன உங்களுக்கு இல்லாமலா என்று விநியோகஸ்தரும் வரும் வெள்ளி முதல் ஒன்றல்ல இரண்டு தியேட்டர்களில் வசந்த மாளிகை திரைக் காவியத்தை திரையிடுகிறார்கள்.
ஆம் வெள்ளி ஜூலை 19 முதல் மதுரை அலங்கார் மற்றும் சோலைமலை திரையரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது.
அன்புடன்
தமிழகத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு மக்கள் மதி மறந்து தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை எதிர்பார்பார்கள். தூத்துக்குடி நகரில் உத்தமனும் எங்கள் தங்க ராஜாவும் ஏற்படுத்திய தாக்கம் தொடர்கிறது. தூத்துக்குடி நகர் kspc திரையரங்கில் வரும் 19-ந் தேதி வெள்ளி முதல் ஸ்டைல் சக்ரவர்த்தியின் "ராஜா" திரையிடப்படுகிறது.
வசந்த மாளிகை மற்றும் ராஜா திரையரங்க செய்திகளை வழங்கிய ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
அன்புடன்