-
'ஆசீர்வாதம்' (1972) என்று படம் வந்தது. ஜெயசங்கர், எஸ்.வி.சுப்பையா,எம்.ஆர்.ஆர். வாசு நடித்தது .
ஜெயசங்கர் தன் பிறந்தநாள் விழ்ஹ்வில் ஒரு பாடல் பாருவார். நம்ம கோவை சௌந்தரராஜன் பாடியிருப்பார். கோஷ்டி, கோரஸ் அருமை. இசை மெல்லிசை மன்னரா? அமர்க்களம்.
இந்த நாள் நல்ல நாள்
என்னை நான் கண்ட நாள்
உண்மையை எண்ணினால்
ஊமையாய் நின்ற நாள்
நிம்மதி கொண்ட நாள்.
அப்புறம் இன்னொரு சோக பாடல். பாடகர் திலகம் பாடுவார்
நெஞ்சம் நிறைய வரவேற்றான் நீ யாரென்று
அந்த நேரம் முதலே நினைக்கின்றேன் நீ யாரென்று
இன்னொரு அபூர்வப் பாடல்
சுசீலா சௌந்தரராஜன் இணைந்து பாடும்
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
அருமையான ஒரு பாடல்.
எஸ்.வி.சுப்பையா வாத்தியார். ஜெய் விஸ்வாசமான மாணவன். சொந்த மகன் சுப்பையாவுக்கு வாசு. வாசு உருப்படாமல் போவார். ஜெய் நன்கு படித்து பட்டம் வாங்குவார். இப்படிப் போகும் கதை. எம்.ஆர்.ஆர்.வாசு நன்றாக ஸ்கோர் பண்ணுவார்.
-
டியர் வாசு சார்,
'ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான்' தத்துவப்பாடல் அட்டகாசம். ஆனால் வெளியுலகத்துக்கு அதிகம் தெரியாமல் போனதுதான் சோகம். ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் படப்பாடல்கள் திலகங்களின் பாடல்களுக்கு இணையாக பிரபலமாகிய போதிலும் ஏனோ இந்தப்பாடல் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.
இந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன். நல்ல படம்தான். இருந்தும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இப்பாடலை கவியரசர் ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதியிருப்பார்.
நல்ல பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.
கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் வந்த ஜெய்யின் 'அவன் நினைத்தானா இது நடக்குமென்று' (செல்வமகள்) செம ஹிட். (ஒவ்வொருமுறையும் ரேடியோ சிலோன் உபயம் என்று சொல்ல வேண்டியதில்லைஎன்று நினைக்கிறேன். ஏனென்றால் அன்றைய திரைப்பாடல்களை பிரபலப்படுத்தியதில் சென்னை / திருச்சி வானொலிகளின் பங்கு இரண்டு சதவீதம் மட்டுமே).
-
டியர் வாசு சார்,
'ஜஸ்ட் ரிலாக்ஸ்' தொடர் துவக்கமே நன்றாக உள்ளது. ரிலாக்ஸ் பாடல்களுக்கேற்ப ஒரு நல்ல 'ரிலாக்ஸ்' இயக்குனரை தேர்ந்தெடுத்திருப்பது நல்ல ஐடியா.
காதல் டூயட் என்றாலே கேமராவை தூக்கிக்கொண்டு ஊட்டி, கொடைகானல், சாத்தனூர் டேம் என்று போய் அங்குள்ள மரம், மட்டைகளையே சுற்றி சுற்றி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரயில் பெட்டியில் பாட்டு (குமரிப்பெண்) , காருக்குள் டூயட் (நான்), சிறிய மரப்பெட்டிக்குள் டூயட் (மூன்றெழுத்து), பாத்ரூமில் டூயட் (பறக்கும் பாவை), கிணற்றுக்குள் டூயட் (தங்கச்சுரங்கம்) என்று வித்தியாசமாக சிந்தித்த இயக்குனர்.
வில்லன் மாளிகைஎன்றாலே வித விதமான் செட் போடஆரம்பித்ததும் இவர்தான். எல்லாவற்றுக்கும் சிகரம் சொர்க்கம் 'பொன்மகள் வந்தாள்' பாடலுக்கு போட்ட அதி அற்புதமான செட்.
முதல் பாடலாக ராமண்ணா பாடலில் ரவியும், "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களும் தோன்றும் பாடலை பதித்துள்ளீர்கள்.
'ரிலாக்ஸ் இயக்குனர்' வரிசையில் கண்டிப்பாக நம்ம சி.வி.ஆர் வருவார் என்று நம்புகிறேன்.
-
அன்பு கார்த்திக் சார்,
மிக்க நன்றி! நீங்களும் ஒரு நல்ல பாடலை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். செல்வமகள். நன்கு ஓடிய படமும் கூட.
ஜெய், ஸ்ரீகாந்த், ராஜஸ்ரீ, மேஜர் எல்லாம் நடித்திருப்பார்கள். பாடல்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட். இயக்கம் கே.வி.ஸ்ரீனிவாஸ்.
'குயிலாக நானிருந்தென்ன' (சுசீலா குயில் தரும் இனிமை)
'வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்' (ராட்சஸிக்காவே இன்னும் விருப்பமாக நம் கேட்கும் பாடல்)
இரண்டு பாடல்களிலும் சௌந்தரராஜன் அவர்களின் ஒத்துழைப்பு அபாரம்.
அப்புறம்
'ஏய்...பறந்து செல்லும் சிட்டுக் குருவி
பார்வையைத் திருப்பு'
டீஸிங் பாடல். எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். ('ஏ...................ஏய்' என்று சுசீலா இழுத்து இசைக்கும் அழகு இருக்கிறதே)
இந்தப் பாடலில் ஒரு வரி வரும்.
ஜெய்சங்கரின் ஓட்டை கார் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட, ஜெய் கயிற்றால் ராஜஸ்ரீயின் காரில் தன் காரைக் கட்டி இணைத்து கலாய்த்துப் பாட ஆரம்பிப்பார். ஜெய் ரோட்டில் குட்டிக் கரணமெல்லாம் அடிப்பார்.
'27 -இல் (1927) வாங்கின காரு
இதில் என்ன ஆட்டம் சொல்லுங்க சாரு'
என்று ராஜஸ்ரீ ஜெய் காரை நக்கல் அடிப்பார். ('காதல் வாகனம்' அப்படி)
http://www.youtube.com/watch?feature...&v=rONeYthlbRg
மெல்லிசை மன்னர் கோலோச்சிய இன்னொரு படம் இது. இலங்கை வானொலி மட்டுமல்லாது சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி வானொலி நிலையங்களிலும் சக்கை போடு போட்ட பாடல்கள்.
(இணையத்தில் தகவல்களில் ஏகப்பட்ட தவறுகள். இப்படத்திற்கு இசை கோவர்த்தனம் என்று சில தளங்களில் போட்டிருக்கிறார்கள். ஆசை அறுபது நாள் என்று முழுப்படமும் யூடியூபில் கொடுத்துள்ளார்கள். ஆசை ஆசையாய்ப் போய் பார்த்தால் அந்தப் படம் கடைசியில் நந்தா என் நிலா. வீட்டுக்கு ஒரு பிள்ளை முழுப் படத்தையும் 'நீதி தேவன்' என்று கொடுத்திருக்கிறார்கள். என்னத்தச் சொல்ல)
இப்போது நீங்கள் நினைவு படுத்திய அழகான பாடல் இதோ! (பியானோ பாடல் முழுதும் அற்புதமாய் விளையாடும்)
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
அவன் நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
அது யாரிடம் என்றா பார்த்து வரும்
நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறி வரும்
அது ஊர்வலம் சென்றா தேடி வரும்
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
நல்ல காவல் கொண்டாய் நீ கைகொடுத்தாய்
அவன் காத்திருந்தான் இன்னும் கனியும் என்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
உன்னைப் பார்த்தவன் மனதில் பசி இருக்க
அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க
பார்த்தவன் மனதில் பசி இருக்க
அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க
நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க
ஏன் நேற்று வந்தான் உன்னை கலங்க வைக்க
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைக்கு முன்னே பழம் பழுக்குமென்று
நினைக்குமுன்னே பழம் பழுக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
அவன் நினைத்தானா இது நடக்குமென்று
http://www.youtube.com/watch?v=wBD9aKaUj0s&feature=player_detailpage
-
சில சமயம் பிரபல இசையமைப்பாளர்களின் பாணியில் இன்னொருவரின் பாணி தென்படுவதுண்டு. மெல்லிசை மன்னராகட்டும், திரை இசைத்திலகமாகட்டும் இதில் யாருமே விதி விலக்கல்ல.
அப்படி ஒரு பாடல் இடம் பெற்ற படம்
http://www.inbaminge.com/t/t/Thaliya...iya/folder.jpg
இப்படத்திற்கு இசை தாலியா சலங்கையா. கஜ்ஜெ பூஜே என்ற கன்னடப் படத்தின் தமிழ் வடிவம் என்று ஞாபகம். வாணிஸ்ரீ கதாநாயகியாக நடிக்க ராமண்ணா இயக்கிய படம். இப்பாடல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். கே.வி.எம். இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னரின் பாணி தென்படுவது வியப்பாக உள்ளது. கேட்டுப் பாருங்கள். அலமேலு மங்கை அருகே திருமாலே என்ற இப்பாடல் துவங்கும் போது கே.வி.எம். பாணியில் துவங்கி முடியும் போது மெல்லிசை மன்னரின் பாணியில் முடியும்.
http://www.inbaminge.com/t/t/Thaliya%20Salangaiya/
-
வாசு சார்
ஜஸ்ட் ரிலாக்ஸ் துவக்கமே தூள்... கார்த்திக்கைப் போல் நானும் ஆவலாய் உள்ளேன். என்னென்ன பாடல் வரப்போகிறது என.
-
கார்த்திக் சார்,
சார் நான் சும்மா ஜாலிக்காக ராமண்ணாவைப் பற்றிக் கிறுக்க ஆரம்பித்தால் அற்புதமாக ரத்தினச் சுருக்கமாக நீங்கள் இன்னும் மேலாக சுவைபட விவரங்கள் தந்து அந்தத் தொடரை அழகாக்கி முழுமைப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி!
இனி நன்கு மெருகேற்றியே நாம் இதைத் தொடரலாம். உங்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள். நான்தான் எழுத வேண்டும் என்பதில்லை. நீங்கள் என்னைவிட நிறைய விஷயங்களைத் தருவீர்கள் இன்னும் ஜாலியாக. எனவே நீங்கள் எழத, அதைப் படிக்க நாங்கள் வெகு ஆவலாய் உள்ளோம்.
கோபாலும் சேர்ந்து கொள்வார் நாம் சொல்லாமலேயே.
-
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நெஞ்சிலிருந்து நீங்காத பாடல், பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவில் குடை பிடிக்கும் ஷாஜஹானின் தாஜ்மஹல். எஸ்.பி.பாலாவும் வாணியும் பாடிய இப்பாடல் கேட்போரின் நெஞ்சில் உடனடியாக ஆட்கொண்டு விடும் தன்மை பெற்றதாகும்.
http://www.inbaminge.com/t/p/Pennai%...20kutramillai/
-
டியர் ராகவேந்திரன் சார்,
'தாலியா சலங்கையா' படத்தில் 'அலமேலு மங்கை அருகே திருமாலே' பாடலை உங்களுக்கே உரித்தான ஸ்டைலில் தந்துள்ளீர்கள். பாடலை நன்கு உற்றுக் கேட்கும்போது நீங்கள் சொல்வதும் உண்மைதான். (ம்ம்..நம் ராகதேவன் என்னென ரகளை செய்யப் போறாரோ!)
-
அடிங்......., எங்கேந்திரா மவனே ஐடியா பிடிப்பே? ஜாலி ரிலாக்ஸ் இயக்குனர் ,அதுவும் என் பிரிய ராமண்ணா? படு பிரமாத ஆரம்பம். ஆடை அழகர் ,கதாநாயகி வரிசை மாதிரி கோபித்து,தொங்கலில் விட்டு விடாதே. தொடரு.
செல்வ மகள் பாடல்கள், சிவாஜி-வேலுமணி இணைவதாக இருந்த ,பாலும் பழமும் படத்திற்கு போட்ட மீதி பாடல்களை,அடுத்ததாக இருந்த படத்தில்(முக்கியமாக குயிலாக. நான் பேச நினைப்பதெல்லாம் வேறு படத்திற்காக போட்டதை apt என்பதால் பாலும் பழமும் படத்தில் வைத்தனர்.) , உபயோக படுத்த இருந்தனராம். வேலுமணி ,செல்வமகள் படத்தில் உபயோக படுத்தி கொண்டார் தன் தயாரிப்பாக இருந்ததால். இல்லேன்னா ,இந்த மாதிரி லோ லோ பட்ஜெட் படங்களில் இந்த மாதிரி பாட்டெல்லாம் வருமா. ஏதோ ஒன்றுக்கு பட்டு குஞ்சலம் என்பார்கள்.