deleted
Printable View
deleted
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான தெய்வப் பிறவி, தற்போது மோசர் பேர் நிறுவனத்தால் மூன்று படத் தொகுப்பு டிவிடியில் வெளியிடப் பட்டுள்ளது. அதனுடன் அன்புக் கரங்கள் படமும் வெளியாகியுள்ளது. அன்பே ஆருயிரே, அன்புக்கரங்கள், தெய்வப் பிறவி மூன்றும் ஒரே டிவிடியில் இடம் பெற்றுள்ளன.
டிவிடி வரிசை எண் DTAFS674
ராகவேந்திரன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 55
கே: கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடல்களில் தங்களுக்கு பிடித்தமான பாடல் எது? (கே.ஆர்.பாலகுமார், காங்கேயம்)
ப: "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்ற பாடல். காதல் காட்சியில் இப்படி ஒரு அருமையான வேறு பாடலை நான் ரசித்தது கிடையாது. ஈருடல் ஓருயிர் என்ற தத்துவத்தை அப்பாடலில் அழகாக விவரித்திருக்கிறார் கவிஞர்.
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
இன்று 24.6.2010 கவியரசு கண்ணதாசன் அவர்களின் 84வது பிறந்த தினம்.
அன்புடன்,
பம்மலார்.
உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
என்று பாடி தமிழ் சினிமாவின் அப்பாவி கதாநாயகனுக்கு Template போட்டுக் கொடுத்த ரங்கன் தன் பொன் விழா வயதை நிறைவு செய்யும் நாள் ஜூன் 25. இனியும் நல்ல படங்கள் வரும். நல்ல கதாபாத்திரங்கள் வரும். இந்த படங்கள் மறந்து போகலாம். ஆனால் ரங்கன் என்றும் வாழ்வான் என்று விமர்சனம் எழுதப்பட்டதை உண்மையாக்கி காலத்தை வென்று நிற்கும் படிக்காத மேதை என்றும் நிற்பார். நீடித்த புகழோடு வாழ்வார்.
படிக்காத மேதை வெளியான நாள் - 25.06.1960.
சுவாமி வந்து படிக்காத மேதையின் சாதனைகளை பட்டியலிடுவார். அதற்கு முன் நான் எங்கள் மதுரையின் பெருமையை பறை சாற்றி விடுகிறேன்.
ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் படிக்காத மேதை. ஓடிய நாட்கள் 116. தமிழ் சினிமா வரலாற்றிலே தங்கத்தில் மூன்று 100 நாட்கள் படங்கள் கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே [மற்றவர்கள் எல்லோருக்கும் ஒரு படம் மட்டும்தான்].
அந்த மூன்று படங்களிலும் அதிக நாட்கள் ஓடிய படம் படிக்காத மேதை.[பராசக்தி- 112,கர்ணன்-108].
அன்புடன்
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், திரையிடப்பட்ட சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை, ஏழு வகைத் தமிழாக வகைப்படுத்தியிருந்தார் இயக்குநர் பரத் என்று பார்த்தோம். அந்த எழு வகைத் தமிழில், மூன்றில் இடம் பெற்றிருந்த திரைப்படங்களையும், அதன் காட்சிகளையும் நேற்று பார்த்தோம். இன்று மேலும் இரு வகைத் தமிழில் இடம்பெற்ற திரைப்படங்களையும், காட்சிகளையும் பார்ப்போம்.
4. பேச்சுத் தமிழ்
அ) பாசமலர்(1961) [வசனம் : ஆரூர்தாஸ்]
திரையிடப்பட்ட காட்சி : முதலாளி ராஜசேகரனும், தொழிலாளி ஆனந்தனும் முதலாளியின் அறையில் வாக்குவாதம் செய்யும் சிகரக் காட்சி.
ஆ) தெய்வமகன்(1969) [வசனம் : ஆரூர்தாஸ்]
திரையிடப்பட்ட காட்சி : சங்கர், கண்ணன், விஜய் மூவரும் இணையும் Blank Cheque காட்சி.
இ) சவாலே சமாளி(1971) [வசனம் : மல்லியம் ராஜகோபால்]
திரையிடப்பட்ட காட்சி : ஏழை-பணக்கார வர்க்கம் குறித்து நடிகர் திலகம் கலைச்செல்வியிடம் ஸோலோவாக உரையாடும் காட்சி.
5. வழக்குத் தமிழ்
அ) மக்களை பெற்ற மகராசி(1957) [வசனம் : அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன்]
திரையிடப்பட்ட காட்சி: சாரங்கபாணி சகிதம், சிவாஜியும் பானுமதியும் வெட்கத்தோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் காட்சி.
ஆ) பட்டிக்காடா பட்டணமா(1972) [வசனம் : பாலமுருகன்]
திரையிடப்பட்ட காட்சி : தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர் நாகரிகம் குறித்தும் சிங்கத்தமிழன் முழங்கும் கிளைமாக்ஸ் காட்சி.
இ) வியட்நாம் வீடு(1970) [வசனம் : வியட்நாம் வீடு கே.சுந்தரம்]
திரையிடப்பட்ட காட்சி : தன் மகளை தன் மகனே இழிவாகப் பேசும் நிலையில், தந்தையார் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் மகனை அடித்து அவனிடம் ஆக்ரோஷமாக உரையாடும் காட்சி.
இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
"படிக்காத மேதை" பதிவுக்கு மிக்க நன்றி!
இக்காவியத்தின் சாதனைகளை அவசியம் பதிவிடுகிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 56
கே: நடிப்பரசன் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிறேன் சரிதானா? (த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்)
ப: நீங்கள் தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ, உத்தரபிரதேசத்திலோ, வங்காளத்திலோ, இப்படி எந்த மாநிலத்தில் வசித்தாலும் இந்தியாவில் வாழ்வதாகத் தான் அர்த்தம். பாரதத்தின் விரிவான எல்லைக்கோட்டுக்குள் வாழ்கின்ற அனைத்துக் குடிமக்களும் இந்தியர்கள் என்ற அடையாளத்தைத் தொலைத்து விட முடியாது. அதுபோல் நடிகர் திலகம் தனது திறமையால் மிக விரிவான ஒரு எல்லைக்கோட்டை வரைந்துவிட்டு போயிருக்கிறார். அதை மீறுவது யாருக்கும் கடினம்.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 செப்டம்பர் 2005)
அன்புடன்,
பம்மலார்.
"எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்...
ரங்கன்...எங்கிருந்தோ வந்தான்..."
படிக்காத மேதை ரங்கனை மறக்க முடியுமா! ரங்கனை அரவணைத்த ரங்காராவை மறக்க முடியுமா!!
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் காவியப் படைப்பாயிற்றே!!!
இன்று 25.6.2010 படிக்காத மேதை ரங்கனுக்கு பொன் விழா ஆண்டு நிறைவு.
51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவரை வணங்குகிறோம்!
Happy Birthday Mr.Rangan! Many More Happy Returns!
படிக்காத மேதையின் சாதனைப் பதிவு விரைவில் வருகிறது...
அன்புடன்,
பம்மலார்.
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், திரையிடப்பட்ட சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை, ஏழு வகைத் தமிழாக வகைப்படுத்தியிருந்தார் இயக்குநர் பரத் என்று பார்த்தோம். அந்த எழு வகைத் தமிழில், ஐவகைகளில் இடம் பெற்றிருந்த திரைப்படங்களையும், அதன் காட்சிகளையும் இரு நாட்களாகப் பார்த்தோம். இன்று மீதமுள்ளவற்றில் இடம்பெற்ற திரைப்படங்களையும், காட்சிகளையும் பார்ப்போம்.
6. பாமரத் தமிழ்
அ) பலே பாண்டியா(1962) [வசனம் : மா.ரா.]
திரையிடப்பட்ட காட்சி : நடிகவேளும், ரௌடி மருதுவும் உரையாடும் காட்சி.
ஆ) படிக்காத மேதை(1960) [வசனம் : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்]
திரையிடப்பட்ட காட்சி : ரங்காராவ் ரங்கனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் காட்சி.
7. நாடகத் தமிழ்
அ) அன்னையின் ஆணை(1958) [வசனம் : முரசொலி மாறன்]
திரையிடப்பட்ட காட்சி: சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம்.
ஆ) ராமன் எத்தனை ராமனடி(1970) [வசனம் (இந்நாடகத்திற்கு மட்டும்) : கவியரசு கண்ணதாசன்]
திரையிடப்பட்ட காட்சி : சத்ரபதி சிவாஜி ஓரங்க நாடகம்.
இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...
அன்புடன்,
பம்மலார்.
Russian Cultural Centre program coverage is very good. Welldone by Mr.Pammalar. Thanks