-
நான் ரஜினி தங்கை இல்லை ! : சினேகா
http://cinema.vikatan.com/images/art...neharajini.jpg
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் ' கோச்சடையான் ' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
முக்கிய வேடங்களில் நடிக்க சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ரஜினிக்கு தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கால்ஷீட் தேதிகள் பிரச்னையாவதால் ' கோச்சடையான் ' படத்திலலிருந்து விலகி விட்டார் சினேகா. தற்போது அந்த வேடத்தில் நடிக்க ருக்மணியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
பாரதிராஜா இயக்கத்தில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ருக்மணி. தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றில் இவரது நடனம் தான் முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.
' கோச்சடையான் ' படத்திற்கான போட்டோ ஷுட்டில் நேற்று ( பிப்ரவரி 09 ) பங்கேற்றிருக்கிறார் ருக்மணி.
' கோச்சடையான் ' படத்தில் இருந்து விலகிய சினேகா அடுத்து, 'ஹரிதாஸ்' என்ற புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருடன், 'வெண்ணிலா கபடிக்குழு' கிஷோர் நடிக்கிறார். இப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்குகிறார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
-
ஷங்கர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அசின் நாயகி !!
http://tamilcnn.com/upload-files/feb...tress-asin.jpg
ஷங்கர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
கொலிவுட்டில் நண்பன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் அல்லது தல அஜித் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அசின், இயக்குனர் ஷங்கரிடம் சிறிது நேரம் உரையாடியுள்ளார்.
அப்போது ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க, நாயகி அசினிடம் கேட்டதாக தெரிகிறது.
அதற்கு அசினும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
-
Jithan Ramesh: Had a blast at Vijay anna's house, anna gave treat to our CCL team. Thanx a lot to Vijay anna.
-
கமல் ரஜினி இணைந்து கலக்கும் மருதநாயகம் !
1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியார் சிறப்பு விருந்தினராக நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்ள… மருதநாயகம் படத்தின் தொடக்க விழா மிகச்சிறப்பாக நடந்தது.
மருதநாயகம் தொடக்க விழாவில், மருதநாயகம் தோற்றத்தில் கமல் ராணியாரையும் மற்ற சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்றார். தொடக்கவிழாவுக்கு முன்பே டிரைலருக்காக 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் கமல்! ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது.
காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவி தடைபட்டதால் படம் கிடப்பில் போடப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய். ஆனால் எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.
சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துவிட்டார் கமல். இம்முறை தனது திரையுல நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமலே மும்பை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிபடுத்தியிருகிறார்.
இதுபற்றி கமல் கூறியிருக்கும் கமல், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தாங்க! அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.
மருதநாயகம் திரைக்கதை தற்போது கமல் மேலும் மெருகேற்றியுள்ளாராம். இம்முறை மருதநாயகன் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் பங்குபெற இருக்கிறார் என்கிறார்கள்.
-
சிவகார்த்திகேயன் அடுத்த படங்கள்!
http://cinema.vikatan.com/images/art...arthikeyan.jpgவிஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தனது நகைச்சுவையான தொகுப்பால் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மெரினா' படத்தில் நாயகனாக அறிமுகமானார். தன் இயல்பான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பின் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகராக வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
'மெரினா' படத்தில் மட்டுமல்லாது, தனுஷ் நடித்து இருக்கும் ' 3 ' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
எழில் இயக்கும் 'மனம்கொத்திப் பறவை' படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' மற்றம் 'நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ இயக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகனாக 'மெரினா'வுக்கு முன்னரே ஒப்பந்தமாகிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'முகப்புத்தகம்' என்ற குறும்படம் யூடிபில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
-
லிங்குசாமி தயாரிப்பில் தனுஷ் !
http://cinema.vikatan.com/images/art.../27dhanush.jpgஇயக்குனர் லிங்குசாமி தனது அண்ணன் சுபாஷ்சந்திர போஸ் உடன் இணைந்து 'திருப்பதி பிரதர்ஸ்' பேனரில் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிறுவனம் 'வழக்கு எண் 18/9 ', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவ்விரண்டு படங்களையும் யுடிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
மேலும், விஷால் நடிக்கும் அடுத்த படத்தினையும், 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் தயாரிக்க இருக்கிறது.
சரவணன் இயக்க இருக்கும் படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பார் என்று பேச்சுகள் நிலவின. ஆனால் இப்படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம் தனுஷ். இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
-
டெல்லி பெல்லி - ஆர்யா, சந்தானம் !
http://cinema.vikatan.com/images/art...20aryadeli.jpg
அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
'டெல்லி பெல்லி' படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள்.
'டெல்லி பெல்லி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன. அனைத்து தகவல்களையும் யு.டிவி நிறுவனம் மறுத்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் 'டெல்லி பெல்லி' குறித்து செய்திகள் கோடம்பாக்கத்தை வலம் வர ஆரம்பித்துள்ளன.
ஆர்யா, சந்தானம் நடிக்க இப்படத்தினை இயக்க இருக்கிறாராம் கண்ணன். 'டெல்லி பெல்லி' ரீமேக்கில் முதலில் ஜெயம் ரவி நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது, 'பாஸ் (எ) பாஸ்கரன்' காமெடி கூட்டணியான ஆர்யா, சந்தானம் இருவரும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வராகவன் இயக்கி வரும் 'இரண்டாம் உலகம்' படத்தினைத் தொடர்ந்து இப்படத்தில் ஆர்யா நடிப்பார் என தெரிகிறது.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
-
செல்வராகவன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்!
http://cinema.vikatan.com/images/art...ges/18allu.jpgசெல்வராகவன் முதன் முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அல்லு அர்ஜுனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இப்படம் சிறிது நாட்களில் கைவிடப்பட்டது.
ஆர்யா,அனுஷ்கா நடிக்க 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக, பிரேசில் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார் செல்வராகவன்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
'இரண்டம் உலகம்' படத்தினை முடித்த உடன் இப்படத்தினை துவங்க இருக்கிறார் செல்வராகவன். படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1888: 2012-02-18-07-20-02&catid=903:tamil-cinema-news&Itemid=63
-
காதல் காமெடி - ஹீரோ விக்ரம் !
http://cinema.vikatan.com/images/art.../10vikraam.jpg
'மெரினா' படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்து இயக்க போகும் படம் என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை 'மெரினா' தான் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து இருக்கிறதாம். முதல் வாரத்தில் சென்னை ஏரியாவின் விநியோகஸ்தர்கள் பங்கு மட்டும் சுமார் 45 லட்சம் என்கிறார்கள்.
" நான் அடுத்து இரண்டு படங்கள் கழித்து தான் சிறுவர்களை வைத்து படம் இயக்குவேன். என்னிடம் ஏழரை வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் கதை ஒன்று தயாராக இருந்தாலும் அதை நான் இப்போதைக்கு இயக்க மாட்டேன்" என்று தெரிவித்தார் பாண்டிராஜ்.
இந்நிலையில் விக்ரமிடம் பாண்டிராஜ் ஒரு காமெடி கலந்த காதல் கதையைச் சொன்னாராம் பாண்டிராஜ். விக்ரமுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததாம். 'தாண்டவம்' படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்கலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
-
புதுப் பொலிவுடன் 'கர்ணன்' !
http://cinema.vikatan.com/images/art.../18karnann.jpgசிவாஜி கணேசன் நடிப்பில், பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான வரலாற்றுப் படம் 'கர்ணன்'.
சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் என ஜாம்பவான்கள் நடிப்பில் வந்த படம் இது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தை தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலுவுக்கு இது 100வது வருடம் என்பதால், அவரை கௌரவிக்கும் வகையில், முழுபடத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளனர். திவ்யா பிலிம்ஸ் இப்படத்தினை வெளியிட இருக்கிறது.
இன்றைய தொழில்நுட்பத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி இப்படத்தை 5.1 ஒலியமைப்புடனும், தரத்துடனும் வெளியிட இருக்கிறார்கள்.
'கர்ணன்' படத்தின் ட்ரெயிலரை பிப்ரவரி 21-ம் தேதி சத்யம் திரையரங்கில் வெளியிடுகின்றனர்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63