அடேங்கப்பா... இன்று மட்டும் 9 படங்கள் ரிலீஸ்
பன்றி குட்டிப் போட்ட கதையாகதான் இருக்கிறது தமிழ் சினிமா படங்களை உற்பத்தி செய்து தள்ளுவதும். இன்று மட்டும் 9 படங்கள் திரைக்கு வருகின்றன.
ஒருகாலத்தில் படம் எடுப்பது சவாலானதாக இருந்தது என்றால், இன்று படம் எடுப்பது எளிது அதனை வெளியிடுவதுதான் சிரமம். பெரிய படங்கள் வெளியாகாத நேரம் பார்த்து ஒருவார கேப்பில் சின்னப் படங்களை தள்ளிவிட தயாரிப்பாளர்கள் முயற்சிப்பதால் வெள்ளிக்கிழமைதோறும் தமிழ் சினிமா ட்ராபிக் ஜாமில் சிக்கிக் கொள்கிறது.
இந்த மாதம் 27 -ஆம் தேதி கொம்பன், வாலு படங்கள் வெளியாகின்றன. ஏப்ரல் 2 -ஆம் தேதி நண்பேன்டா உள்பட சில படங்கள். பத்தாம் தேதி உத்தம வில்லன், அதையடுத்த வாரத்தில் மணிரத்னம் படம்.
தொடர்ந்து பெரிய படங்கள் வெளியாவதால் மார்ச் 27 -க்கு முன்பு எப்படியும் வெளிவர சின்னப் படங்கள் துடிக்கின்றன. இன்று 9 படங்கள் திரைக்கு வருகின்றன. இவனுக்கு தண்ணில கண்டம், வானவில் வாழ்க்கை, மகாபலிபுரம், ஐவராட்டம், இரவும் பகலும் வரும், கதம் கதம், தவறான பாதை, சொன்னாப் போச்சு, ராஜதந்திரம் ஆகியவைதான் அந்தப் படங்கள்.