Vaali - Great loss to TFI
RIP
http://www.youtube.com/watch?v=VL8Rs03nMFc
Printable View
Vaali - Great loss to TFI
RIP
http://www.youtube.com/watch?v=VL8Rs03nMFc
http://www.bharatstudent.com/ng7uvid...-award_029.jpg
நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் அன்புக் கரங்கள் மூலம் எழுதத் தொடங்கிய கவிஞர் வாலியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறதாய் உள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன் தான் மற்றோர் மிகப் பெரிய கவிஞரை தமிழ்த்திரையுலகம் இழந்தது. விண்ணோடும் முகிலோடும் பாடல் உள்பட பல அருமையான பாடல்களுக்கு சொந்தமான கவிஞர் ஆத்மநாதன் மறைவின் செய்தி காயும் முன் இந்த செய்தி நெஞ்சை வாட்டுகிறது.
கவிஞர் வாலியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகட்டும். அவரது ஆன்மா சாந்தியடையவும் இத்துயரைத் தாங்கும் மன வலிவை அவர் குடும்பத்தார் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.
நடிகர் திலகத்திற்கு வாலி எழுதிய முதல் படமான அன்புக் கரங்களில் மிகச் சிறந்த தத்துவப் பாடல்
http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
காவியக்கவிஞர் வாலி அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நடிகர்திலகத்தின் 83 படங்களுக்கும் மக்கள்திலகத்தின் 58 படங்களுக்கும் மற்றும் ஏராளமான படங்களுக்கும் அருமையான பாடல்களை எழுதிய சிறந்த கவிஞரை தமிழ்த்திரையுலகம் இழந்து விட்டது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்பால் அன்பு கொண்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்...
காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி
http://i1110.photobucket.com/albums/...aar/Vaali1.jpg
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 15
வாழ்வியல் திலகம் பற்றி வரகவி
வரலாற்று ஆவணம் : குமுதம் ஜங்ஷன் : 27.5.2003
http://i1110.photobucket.com/albums/...GEDC5736-2.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5736-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5744-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5740-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5741-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5742-2.jpg
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
வாழ்க்கையில் ஒரு சில மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்களிடம் பேச வேண்டும், பற்பல விஷயங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாக உள்ள எந்த ஒரு மனிதனுக்கும் இந்த உந்துதல் இருக்கும். சந்திக்க விரும்பும் நபர்கள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆனால் சந்திப்பதிலும் உரையாடுவதிலும் ஆர்வம் இருக்கும். அப்படி சந்தித்து உரையாட நினைத்த மனிதர்களில் முக்கியமானவர் வாலி.
அவரின் பல்வேறு வகையான பாடல்களைப் பற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையிசை உலகில் அவர் தனக்கென்று உருவாக்கி வைத்திருந்த தனித்துவமான இடத்தைப் பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என நினைத்திருந்த நாட்கள் பல உண்டு.
எதுகை மோனை என்ற தமிழ் இலக்கணத்தை மாணாக்கர்களுக்கு கற்று தருவதற்கு இவர் பாடல்களை எடுத்து சொன்னாலே போதும், வெகு எளிதாக் புரிந்து விடும். அந்தளவிற்கு அதில் தேர்ச்சி பெற்றவர். சில நேரங்களில் எதுகை மோனைக்காக சில ஆங்கில் வார்த்தைகளை கலந்தாலும் அவையும் ரசிக்கக் கூடிய வகையாகவே அமைந்திருப்பதுதான் அவர் சிறப்பு. சென்ற நூற்றாண்டின் முதல் முப்பதுக்குள் பிறந்திருந்தாலும் இந்த நூற்றாண்டின் இந்நாள் வரையான நிகழ்வுகளையும் அறிந்து வைத்திருந்ததுதான் அவரின் சிறப்பு.
நடிகர் திலகம் பேசும் தெய்வம் படத்தின் படப்பிடிப்பின் போது வாலியிடம் பேசும் போது சொன்னாராம்
இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் சிறு நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இந்த வரிகள் அனைத்துமே பிரமாதம். ஆனால் அதற்கு பின் எழுதியிருக்கிறாயே
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தையேது சொல்ல
அதுதான் டாப் என்றாராம். அதுதான் நம் கருத்தும்.
வாலியின் ஒரு கவிதை தொகுதியில் ஒரு சின்ன கவிதை ஒன்று வரும்
காலம் பாதி எரித்து
காமம் பாதி எரித்த பின்
மரித்த உடலை
மயான தீ என்ன செய்யும்
உண்மைதான். மயான தீ வாலியின் Mortal Remains-ஐ வேண்டுமென்றால் destroy செய்யலாம். ஆனால் அவரின் Immortal வரிகளை யாராலும் destroy பண்ண முடியாது.
உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரின் சார்பாகவும் வரகவி வாலியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புடன்
காவியக் கவிஞர் வாலிக்கு நமது இதய அஞ்சலி
நடிகர்திலகம் சிவாஜி 12 ஆம் ஆண்டு நினைவு தின பேச்சுப்போட்டி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் 14-01-2013 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும், நூற்று இருபது மாணவ - மாணவியர் இந்தப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
தேசியமும் சிவாஜியும், பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜி, திரையுலகின் முடிசூடா மன்னன் சிவாஜி, வெள்ளித் திரையில் நடிகர்திலகத்தின் வசனங்கள், நடிகர்திலகத்தின் திரையுலக சாதனைகள், நடிகர்திலகம் சிவாஜியின் சமூகத் தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் மாணவ - மாணவியர் பேச்சில் வெளுத்து வாங்கினர்.
மாணவ - மாணவியருடன் வந்திருந்த ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரும் மிகவும் ஆவலாக தங்கள் பிள்ளைகள் பேசுவதைக் கேட்டு ரசித்தனர்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆறுதல் பரிசுடன் சான்றிதழும், வரும் ஜூலை 21 ஆம் நாள், மாலை 4 மணிக்கு, திருநெல்வேலி, வானவில் திருமண மண்டபத்தில் நடைபெறும் நடிகர்திலகதின் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் திரு.S.S.ராமசுப்பு அவர்களால் வழங்கப்படுகிறது.
பேச்சுப் போட்டியைத் துவக்கிவைப்பதற்காகச் சென்ற நான், மாணவ - மாணவியரின் பேச்சுக்களைக் கேட்டு, உண்மையிலேயே வியந்துபோனேன்.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை துவக்கப்பட்டு இந்த 8 ஆண்டுகளில் நடிகர்திலகம் புகழ் பாடும் பல விழாக்களை நடத்தியிருக்கிறோம். அவற்றில் முத்தாய்ப்பாக, எனக்கு மன நிறைவினை அளித்ததாக இந்த பேச்சுப்போட்டி அமைந்தது என்றால் அது மிகையாகாது.
ஏனெனில், மற்ற விழாக்களில் எல்லாம், நாமெல்லாம் கூடுவோம், நடிகர்திலகம் புகழ் பாடுவோம். யாராவது சிறப்பு விருந்தினரும் சிறப்புரை நிகழ்த்துவார். ரசிகர்கள் கூடிக் கேட்டுவிட்டு, மகிழ்ந்து கலைவோம்.
ஆனால், அடுத்த சந்ததியினர் நடிகர்திலகத்தைப்பற்றி, அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள நாம் ஏதேனும் முயற்சி செய்யவேண்டும் என்ற சிந்தனை என் மனதில் இருந்துகொண்டே இருந்தது.
அதன் முதல் முயற்சியாக திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த பேச்சுப்போட்டி சிறப்பாக, வெற்றிகரமாக அமைந்ததில் திருநெல்வேலியில் உழைத்த நெல்லை மாவட்ட நிர்வாகிகள், நண்பர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
http://i1234.photobucket.com/albums/...pse979e0c6.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2d858fad.jpg
http://i1234.photobucket.com/albums/...psf4c18ac1.jpg
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி பல்வேறு ரசிகர்கள், ரசிகர் மன்ற அமைப்புகள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டர்கள் - பேனர்களின் நிழற்படங்கள்.
இவற்றை நமக்கு அனுப்பி வைத்த சம்பந்தப் பட்ட அமைப்பினருக்கு நமது உளமார்ந்த நன்றி.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஒன்றிய தலைமை மன்றத்தினரின் போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...ps3713c211.jpg
http://i1146.photobucket.com/albums/...psfa62b7b4.jpg
நண்பர் ஜெயகுமார் அவர்களின் சிம்மக் குரலோன் சிவாஜி நற்பணி மன்றத்தினரின் போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...psf9e2d302.jpg
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப் படும் போஸ்டர்
http://i1146.photobucket.com/albums/...ps46e6bee4.jpg
http://i1146.photobucket.com/albums/...psef256ba3.jpg
சந்திரசேகர் சார்,
நடிகர் திலகத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நீங்கள் நடத்திய பள்ளி மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டி மிகவும் பாராட்ட தக்கது. இந்த செயல் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை கொண்டு சேர்க்கும் சீரிய முயற்சி. உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு நெல்லை அனைத்து பள்ளி மாணவர்களின் overwhelming response மிகுந்த மனநிறைவை தருகிறது. அது மட்டுமல்ல கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசும் சான்றிதழும் அளிப்பது என்பது ஒரு நல்ல அணுகுமுறை. இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி அடுத்த முறை அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வழி வகுக்கும்.
இது போன்ற புதுமையான நல்ல முயற்சிகளை இனியும் தொடர்ந்து மேற்கொள்ள வாழ்த்துகள்.
அன்புடன்