http://i59.tinypic.com/14vodci.jpg
Printable View
திரு கோபால் சார்
மூன்று நாட்கள் அலுவல் நிமித்தமாக திருச்சி, கோவை சேலம் சென்றிருந்தேன். இன்று காலையில்தான் வந்தேன். திரியில் என்ன என்று பார்க்கலாம் என்று பார்த்தபொழுது தங்களுடைய துன்பகரமான செய்தி கண்டேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இது போல எதிர்பார்க்காத சம்பவங்கள் நம்மை பல கணம் ஆட்டிவிடுகின்றன...அசைத்துவிடுகின்றன.
எதிர்பாராமல் விபத்தில் மறைந்த அந்த புண்ணிய ஆன்மாக்கள் சாந்தி அடைந்து இறைவன் அடி சேர எனது பிரார்த்தனைகள்.
ஆறுதல் சொல்ல முடியாத துயர் ..எப்படி, என்ன கூறுவது தங்களுக்கு என்று தெரியவில்லை சார் !
Rks
ராகவேந்திரன் ஐயா சொல்வது உண்மைதான் போலுள்ளது.நடிகர்திலகம் படங்களை திறந்த மனதுடன் அணுக வேண்டியது அவசியம்தான் போலுள்ளது. 1964 இல் முதல் இரண்டு இடங்களில் வசூல் பெற்ற படங்களாக கை கொடுத்த தெய்வம் ,பச்சை விளக்கு இருந்தாலும் , எனக்கு கை கொடுத்த தெய்வம் அளவு பச்சை விளக்கின் மீது பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை.இதை நான் திருச்சி ராஜாவில் காலைகாட்சியாக அக்டோபர் 1974 இல் பார்த்தேன்.
ஆனால் நேற்று முரசுவில் பார்த்த போது அசந்து நின்றேன். என்ன ஒரு உயர்நோக்கம் கொண்ட படம்!!! குடும்ப உறவு,பிறரை நேசிக்கும் பண்பு, படிப்பில் உயர்வு -தாழ்வு பார்க்காமல் குடும்ப உறவு, பெண்ணின் படிப்பு அது சார்ந்த முன்னேற்றம், சமூக பார்வை,தியாகம் என்று போனாலும், இசை நன்றாக கை கொடுத்தாலும், படத்தின் உச்சம் நடிகர்களின் பங்களிப்பு. அவ்வளவு இயல்பு.
எஸ்.எஸ்.ஆர் ,நடிகர்திலகத்திற்கு சமமான நடிப்பை தந்துள்ளார். ரங்கா ராவ் பாத்திர படைப்பு அவ்வளவு அருமை. அவர் அதை தன் பாணியில் கையாளும் விதம் அடடா!!!(பாஸ் என்னடா பெரிய பாஸ் அவனுக்கு அப்பண்டா நான்). நடிகர்திலகம் method acting உச்சத்தில்.(ரயில் சத்தத்தில் நாகேஷுடன் உரையாடல் !!!!)அசத்துகிறார். எஸ்.எஸ்.ஆருக்கு கிராமத்தான் வேடம் அவ்வளவு பொருத்தம். அவர் நல்லிதயம் கொண்ட,உறவுகளால் புண்பட்டாலும் அவர்களை நேசித்து,கை கொடுத்து ,அவர்களை புரிந்து உதவும் பாத்திரத்தில் ,அவ்வளவு கவர்ந்து விட்டார். (தலை வணங்குகிறேன் ராஜேந்திரன்.). சௌகார்,விஜயகுமாரி,நாகையா,எம்.ஆர்.ராதா,ஏ.வீ.ராஜன்,ப ுஷ்பலதா,ரங்கராவ் வில்லன் மகன் என்று எல்லோரும் பீம்சிங் என்ற ரிங் மாஸ்டர் ஆட்டி வைத்து performance வாங்கி விட்டார்.
மூலம் வேறு மொழி போலும் . வசனம் ராம அரங்கண்ணல் (தயாரிப்பாளர் கூட), பீம்சிங் திரைக்கதை என்று அனைத்துமே நன்கு இணைந்தாலும், நடிகர்களின் அதியற்புத பங்களிப்பாலேயே உச்சம் தொடும் படம்.
திரு கோபால்
தங்கள் உறவினர்கள் கார் விபத்தில் அகால மறைவு செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன்.உறவினர்களை பிரிந்து வாடும் உங்களுக்கும் , குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .